ஞாயிறு, 1 செப்டம்பர், 2024

சென்னைக்கு ஒரு பயணம் - இறுதி பகுதி - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 




******


மும்பை வாசியாக இருந்த எனது உறவினர் திருமதி விஜி வெங்கடேஷ் அவர்கள் தமிழகத்திற்கு வந்து சேரும் முன்னர் சென்னைக்கு வந்த ஒரு பயணம் குறித்த அனுபவங்களை இங்கே நம்முடன் பகிர்ந்து கொண்டிருந்தார். முதல் பகுதியை படிக்காதவர்கள் இங்கே சென்று படிக்கலாம்.  குறும்பயண அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் அவருக்கு மனம் நிறைந்த நன்றி.  ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.


******


சென்னை பயணம் - final part



எத்தனையோ முறை சென்னை போயிருந்தும் மகாபலிபுரம் போகவில்லை என்பது வெட்கப்படக்கூடிய விஷயம். அதுவும் கல்கியின் தீவிர ரசிகையாய் இருந்து கொண்டு உருகி உருகி சிவகாமியின் சபதம் படித்துவிட்டு ஆயன சிற்பியின் (கற்பனை கதாபாத்திரமாக இருந்தாலும்) கை வண்ணத்தை, தன் பெண் சிவகாமியையே மாடலாக பல நாட்டிய முத்திரைகளில் நிற்க வைத்து செதுக்கியதை கல்கியின் எழுத்து வாயிலாக படித்து சிலிர்த்து கற்பனையில் கண்டு (ஓவியம் மூலமாகவும் பார்த்து) மகிழ்ந்த பின்னும் பார்க்கவில்லை என்றால் அது மன்னிக்க முடியாத குற்றம்! ஆகவே இம்முறை பார்த்தே ஆவது என்று தீர்மானித்து கிளம்பினோம். ஆயன  சிற்பி தன் பெண்ணுக்கு திருஷ்டி விழுந்துவிடும் என்று நினைத்தாரோ என்னவோ அன்று G20 மகாநாடு அங்கு ஏற்பாடு பண்ணப்பட்டு எல்லோரையும் about turn அடித்து திரும்பச் சொன்னார்கள் காவல் அதிகாரிகள்! நான் மும்பையிலிருந்து இதற்காகவே வந்தேன் என்று அவர்களிடம் பிட் போட்டும் பயனில்லை. 


பின்னர் மூங்கில் தடுப்பு போட்டு மறைக்கப்பட்ட பாறை குகைவரை கோவில்கள் சிற்பங்களை எட்டி இருந்தபடியே உள்ளே அறை குறை இருட்டில் தெரிந்த சிற்பங்களைப் பார்த்து அட பிரமாதம், உனக்குத் தெரியல? என்று கூட இருந்தவர்களிடம் அலப்பறை செய்து திருப்தி அடைந்தேன். நல்ல வேளை ஒரே பாறையில் செதுக்கிய யானைகள், அர்ஜூனன் தவம் ஆகியவற்றை மூங்கில் தடுப்பு மறைக்க முடியவில்லை. என்ன அழகு சிற்பங்கள். யானைகளின் கண்கள்,கால் நகங்கள் முதற்கொண்டு தத்ரூபமாக. எத்தனை திறமை & பொறுமை இருந்திருக்கணும் சிற்பிகளுக்கு! Hats off🫡. இன்னொரு துணுக்கு செய்தி - அந்த சிற்பி எந்த நேரத்தை அதில் சித்தரித்திருந்தான் என்று மகாபெரியவா ஒரு பக்தரைக் (பரணிதரன் என்று ஞாபகம்) கேட்க அவர் முழிக்க பின்னர் அவரைப் போய் நன்றாக பார்த்துவிட்டு வா என்று சொல்ல அவர் வந்து பார்த்துவிட்டு  வியப்பின் உச்சிக்கே போனாராம். அதாவது அந்த யானைகள் செதுக்கப் பட்ட பாறையிலேயே அருகில் அர்ஜூனன் தவம் (தவத்தால் அர்ஜூனன் எலும்பும் தோலுமாக ஆனதைக் கூட தத்ரூபமாக வடித்திருந்தார் சிற்பி). அதற்கு சற்று கீழே ஒரு பிராம்மணர் மாத்தியாநீகம் (நடுமதியம் செய்யும் சந்தியாவந்தனம்) செய்துவிட்டு தன் இரு கைகளைக் கோர்த்து அந்த இடுக்கு வழியாக மேலே சூரியனை நோக்குவதை சிற்பி வடித்திருந்தார்! அதை எப்போது மகாபெரியவா கவனித்தார் என்பது அந்த தெய்வத்துக்கே வெளிச்சம்! 


பின்னர் அதன் முன்னால் நின்று (கிட்டத்தட்ட யானைகள்  மறைந்து போகுமள விற்க்கு!😜) நின்று கொண்டு ஃபோட்டோ எடுத்துக் கொண்டோம். மொபைலை எங்களை கண்ணியமாக (please சீக்கிரம் கிளம்புங்க madam, எங்களுக்கு problem ஆகும்) விரட்டிய போலீஸிடமே குடுத்து ஃபோட்டோ எடுக்கச் சொன்னோம்! மற்ற சிற்பங்களை எட்டி நின்று புகைப்படம் எடுத்தோம். சமீபத்து சிற்பங்களும் இருக்கின்றன. சற்று நடந்து கடலில் கால் நனைத்தோம். சிவகாமியையும் ஆயனச் சிற்பியையும் அந்த சிற்பங்களை வடிக்கச்சொன்ன மகேந்திர பல்லவரையும் சிவகாமியை உயிராய்க் காதலித்த இளவரசர் நரசிம்ம பல்லவரையும் விட்டுவிட்டுத் திரும்ப மனம் வரவில்லை. (தயவு செய்து மணிரத்தினம் காதில் இதைப் போடாதீர்கள்).


மறுநாள் காலை காஞ்சீபுரம் போய் சங்கர மடம் போய் மகாபெரியவா பிருந்தாவனம் போய் நிற்க,மஹா பெரியவாளுக்கு பாலாபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. 


பிரதோஷம்! மனதில் இருந்த அழுக்குகள் கண்களின் வழியாக வழிந்தோடியது. கூப்பிட்டு கூப்பிட்டு தரிசனம் குடுக்கும் தெய்வம்!காருண்ய வடிவம். இன்றும் சூக்ஷமமாக அங்கு இருந்து பக்தர்களுக்கு அருள் மழை பொழியும் தெய்வம்.எதையும் வேண்டிக் கொள்ளத் தோணாமல் சற்று நேரம் கண்ணை மூடி  உட்கார்ந்து விட்டு ப்ரதக்ஷிணம் செய்துவிட்டு கிளம்பினோம். ஏகாம்பரேஸ்வரர் & காமாக்ஷி கோவில்களில் திவ்ய தரிசனம். சிரிக்கும்அம்பாள் முன் ஆதி சங்கரர் பிரதிஷ்டை செய்த ஶ்ரீசக்கரம். 2500 வருடங்களுக்கு முன்னால் போனதுபோல் ஒரு நினைவு! பிராகாரம் முழுக்க side இல் கல் மேடை ஓரத்திலெல்லாம் எங்கு பார்த்தாலும் குங்குமம். சூழும் அதன் மணம்! ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் இன்றும் ஒற்றை (ஏக மா) மாமரம் பச்சையாக உயிர்ப்புடன்.காஞ்சியில் எந்த ஈசுவரன் கோவிலிலும் அம்பாள் சன்னதி கிடையாது. காமாக்ஷி கோவிலில் மட்டுமே அம்பாள் அருள் பாலிக்கிறாள்!


மாலை மெரீனா கடற்கரை(மிளகாய் பஜ்ஜியை நினைத்து) சென்று நன்றாக கால் நனைத்து பஜ்ஜி,ஆவி பறக்கும் தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல் சாப்பிட்டோம். மற்றும் குறைந்த வயிற்றுக்கு சூடான வேகவைத்த வேர்க்கடலை ஈயப் பட்டது. உலகிலேயே இரண்டாவது இயற்கையான மிக அழகான கடற்கரையாம். சொல்ல வருத்தமாக இருக்கிறது. maintenance படு மோசம். ஒரே கச கச வென்று கடைகள், வயதான குதிரையைப் பிடித்துக்கொண்டு குதிரைக்காரன். பலூனை துப்பாக்கியால் சுடச் சொல்லும் கயவன் (பின்னே! ஒரு பலூன் கூட சுட முடியலை😏). gasket ஐ சோப், பவுடர் மேலே விட்டெறிந்து அது சரியாக விழுந்தால் அந்தப் பரிசு எனும் ஏமாற்றுக் காரன் (correct நீங்கள் நினைப்பது - அதுவும் விழலை.சுத்த fraud☹️). இதெல்லாம் இருந்ததில் கடல் அலைகள் எங்கோ தொலைவில் போய் விட்டன. இருந்தும் கால் நனைக்கவும் மாலை நிலவொளியில் கடலலை பின்னணியில் ஃபோட்டோ எடுத்துக் கொள்ள நாங்கள் மறக்கவில்லை.


அங்கிருந்து கபாலீஸ்வரர் கோவில். ஈசுவரனையும் கற்பகாம்பாளையும் நன்கு தரிசித்துவிட்டு கிளம்பினோம். ஒரு பக்தையை மஹாபெரியவா நீ எங்கிருக்கே என்று கேட்க அவர் மயிலாப்பூர் என்று சொல்ல, அப்படியா அங்கு விட்டு எங்கும் போகாதே, கற்பகாம்பாள் கற்பகத் தரு போல் அவள் முன்னே நின்று என்ன கேட்டாலும் குடுப்பாள் என்றாராம்! அதன் அருமை எல்லாம் பின்னால் தான் தெரிகிறது!


இப்படியாக சென்னைப் பயணம் இனிதாக நிறைவடைந்தது. போய்விட்டு வந்த பின்னும் பல நாட்கள் அந்த பாஷையை (பூ விலையை சற்று குறை என்று கேட்டதற்கு - பூ வாங்கற மூஞ்சியப் பாரு சாவுகிராக்கி! போம்மே அங்கிட்டு😖 - ரிக்க்ஷாகாரனின் ஏறி குந்துமே) நினைத்து ரசித்து,  பார்த்த இடங்களை  மனதில் அசை போட வைத்தது இந்தப் பயணம். என்னைப் பொறுமையாய் எல்லா இடங்களுக்கும் அழைத்துச் சென்ற என் மாமன் மகள் வசந்திக்கு ஒரு ஸ்பெஷல் thanks🙏🏻👍🏻


மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திக்கும் வரை…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

1 செப்டம்பர் 2024


12 கருத்துகள்:

  1. உங்கள் மகிழ்ச்சியில் நாங்களும் பங்கு கொண்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. காலை வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. ரசித்தேன்.

    சகோதரி விஜி வெங்கடேஷ் அவர்களின் சென்னை பயண கட்டுரை நன்றாக உள்ளது. மாபல்லபுரம் சிற்ப பகிர்வும் கிடைத்து மகிழ்வடைந்தேன். படம் நன்றாக உள்ளது.

    மெரீனா கடற்கரை, கபாலீஸ்வரர் ஆலய தரிசனம் பார்த்த, பெற்ற உணர்வை அடைந்தேன்.

    சகோதரியின் கட்டுரையை படித்ததும், எங்கள் திருமணத்துக்குப் பிறகு மயிலையில் பதினைந்து வருட வாசம் மறக்க முடியாத அந்த நாட்கள் எல்லாம் நினைவுக்கு வந்தன.நன்றி சகோதரிக்கும்.

    பகிர்வுக்கு உங்களுக்கும் என் அன்பான நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவும் பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  3. மாமல்லபுரம் சிற்ப படம் சூப்பர்!!! அதுல கீழ அந்த
    //தன் இரு கைகளைக் கோர்த்து அந்த இடுக்கு வழியாக மேலே சூரியனை நோக்குவதை சிற்பி வடித்திருந்தார்//

    சிற்பத்தையும் பார்த்தேன். ஹப்பா எப்படி பெரியவர் கண்களில் பட்டிருக்கு!

    எப்படியோ போய் வந்து மெரினா பஜ்ஜியையும் சுண்டலையும் கூட விடாம, சென்னை பாஷையையும் விடாம சுமந்து கொண்டு!!! சென்னையின் குறும்பயணம் குறும்படம் போல!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. பதிவுக்கு வந்ததும் டக்குன்னு இன்று ஞாயிறுதானேன்னு சரிபார்த்துக் கொண்டேன் இல்லைனா முன்னாடி பதிவு ஏதாச்சும் விட்டுப் போச்சோன்னு!!!! ஞாயிறு உலா இன்னைக்கு பயணமாக !

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா.... சில நாட்களுக்கு நிழற்பட உலா வர வாய்ப்பில்லை - பயணங்கள் குறைந்து விட்டன என்பதால் படங்களும் இல்லை கீதா ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. வாசகம் அருமை. விஜி அவர்கள் பகிர்ந்த சென்னை பயண நினைவுகள் அருமை.
    பயண அனுபவங்களை நன்றாக நகைச்சுவை, பக்தி உணர்வு, எல்லாம் கலந்து இருக்கிறது.

    //மாலை நிலவொளியில் கடலலை பின்னணியில் ஃபோட்டோ எடுத்துக் கொள்ள நாங்கள் மறக்கவில்லை.//

    நிலவொளியில் கடலை எடுத்த படம் பகிர்ந்து இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் மற்றும் பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  6. படித்து ரசித்து கருத்துக்கள் பதிவிட்ட அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.Vankat ற்கு ஸ்பெஷல் thanks.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து எழுதுங்கள் விஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....