ஞாயிறு, 29 செப்டம்பர், 2024

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி பதினொன்று - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து முன்னர் இந்தப் பக்கத்தில் சில பதிவுகள் வெளிவந்தது.  அந்தப் பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஒன்று 


பகுதி இரண்டு    பகுதி மூன்று  பகுதி நான்கு  பகுதி ஐந்து  

பகுதி ஆறு  பகுதி ஏழு  பகுதி எட்டு  பகுதி ஒன்பது  பகுதி பத்து


அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.


*******



அடடா என் கிரீடத்தை எங்க காணோம்? மூஞ்சூரண்ணா சீக்கிரம் கண்டுபிடிச்சு தாங்க please.டிரஸ் பண்ணிண்டு  எல்லார் வீட்டுலயும் போய் கொழுக்கட்டை வேற சாப்பிடணும். இன்னிக்கி நான் ரொம்ப busy.



*******



யாரா இருந்தாலும் என் வாய்ல இருக்கற மோதகம் வெளில வராத மாதிரி முத்தா குடுங்க.


*******




அம்மா என்னை இடது தொடை மேல வெச்சுக்கோ. அப்பாவோட necklace என் கொண்டை மேல படறது. அப்புறம் நான் தேடிண்டிருந்த sports ரிங் கிடைச்சுடுத்து.


*******



பொட்டு வெச்சுக்காம, T shirt கூட போடாம அவசரமா வந்தா ஒரு பயல காணோம்? ஆத்துத் தண்ணிய பாத்ததும் இறங்கிட்டாங்களா?


*******



நானே பஞ்சகச்சம்  கட்டிக்கிறேம்மா. (இல்லன்னா walking பத்தி lecture கேக்கணும்😟).

*******



அம்மா please ஃபோட்டோ ஷூட் ஐ சீக்கிரம் முடி. எனக்கு தொப்ப பசிக்கிறது.

*******



சொல்லுங்க மூஞ்சூரண்ணா முதாகராத்த மோதகம்.


ஐ மோதகமா எங்க எங்க


சுத்தம்.


*******


படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

29 செப்டம்பர் 2024


10 கருத்துகள்:

  1. ரசிக்கத்தக்க அழகிய படங்கள். பொருத்தமான வாசகங்கள். அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் படங்களுக்கான வாசகங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை.

    விநாயகரின் படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. அதற்கு சகோதரி விஜி வெங்கடேஷ் அவர்கள் பொருத்தமான வாசகங்களை தந்திருப்பது சிறப்பாக உள்ளது.படங்களை பார்த்து ரசித்து வாசகங்களையும் ரசித்துப் படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரரே.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவும், வாசகமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. வாசகங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. விஜி வெங்கடேஷ் சிறுமியா? அப்படியானால் இறை பக்தியோடு வாசகங்கள் இருக்க இந்த வயசிலேயே பழக்கி விடுங்கள். அது அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விஜி வெங்கடேஷ் சிறுமி அல்ல! She is young at heart. இவை நகைச்சுவை உணர்வுடன் எழுதப்பட்டவை. எல்லாவற்றையும் பூதக்கண்ணாடி கொண்டு பார்க்க வேண்டியதில்லை. அவருக்கு பக்தி உணர்வு அதிகம் - புதிதாக பக்தி உணர்வையூட்ட அவசியம் இல்லை ஜீவி ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. மிக அருமையான வாசகம்.
    படங்கள் அழகு.
    படங்களுக்கு வாசகங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம், படங்கள், படங்களுக்கான வாசகங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....