அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து முன்னர் இந்தப் பக்கத்தில் சில பதிவுகள் வெளிவந்தது. அந்தப் பகுதிகளுக்கான சுட்டி கீழே!
அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஒன்று
பகுதி இரண்டு பகுதி மூன்று பகுதி நான்கு பகுதி ஐந்து
பகுதி ஆறு பகுதி ஏழு பகுதி எட்டு பகுதி ஒன்பது
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.
*******
ஆமா, அம்மாவோட ஜிமிக்கிதான். என் கண்ணை விட பெருசா இருக்கு. வேண்டாம்னா கேட்டத்தானே! இதுல புருவத்துக்கு மேல டிக்லி வேற! திருஷ்டி விழாதாம்!
*******
மோகனம் போதும் காப்பி ராகம் பாடு கிருஷ்ணா
ஏன் காப்பி ஞாபகம் வந்துடுச்சா ராதா
*******
குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும் குறையேதும் எனக்கேதடி?
உனக்கில்ல எனக்கிருக்கு வந்து கொஞ்சம் குடை பிடி.
*******
பரவாயில்லையே நான் சொன்ன ஜோக்குக்கு உடனே சிரிச்சிட்டியே
இல்ல நீங்க போன வாரம் சொன்ன joke ஞாபகம் வந்துது
கிழிஞ்சுது போ
*******
அம்மா நான் இங்க இருக்கேன் மேல என்ன பாக்கற?
மேலயும் உன்னைத்தான் பாக்கறேன் கிருஷ்ணா
*******
*******
*******
படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
22 செப்டம்பர் 2024
வாசகம் அருமை. படத்தேர்வும் படங்களுக்கு அழகான வாசகங்களும் அருமை.
பதிலளிநீக்கு//உனக்கில்ல எனக்கிருக்கு வந்து கொஞ்சம் குடை பிடி.//
இந்த படம் எனக்கு மிகவும் பிடித்து இருக்கு , கண்ணன் குழல் ஊதல் அழகு.
வாசகம், படங்கள் மற்றும் படங்களுக்கான வரிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
இன்றைய வாசகம் மிக அருமை.
பதிலளிநீக்குகடைசிப்படத்துக்கான உங்க வரிகள் - சிரித்துவிட்டேன்!!!
விரல்கள் 6 - ஹாஹஹாஹா ஒரு வேளை ஒரு சிலருக்கு 6 விரல்கள் இருக்குமே அப்படி நினைத்துவிட்டாரோ என்னமோ...அது போல குடை பிடி அதுவும் சிரிப்பு வந்துவிட்டது.
டிக்லி வைச்சாலும் அழகுதான்!!
மோகனம் மயக்குது மயக்கத்துல நான் கண் மூடினதும் நீ ஓடிடுவே. அதனால காபி!!
படங்கள் அனைத்தும் அழகு உங்க வரிகளும்.
கீதா
வாசகம், படங்கள் மற்றும் படங்களுக்கான வரிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
படங்கள் அருமை .அதற்கான வரிகளும் அருமை.
பதிலளிநீக்குபோனவார ஜோக்குக்கு இந்த வாரம் சிரிக்கும் ஜோக் அருமை. என் உடன் வேலை செய்த பெண்மணி ஒருவர் இதேபோல என்னிடம் பேசி இருக்கிறார் !!எனக்கு அந்த அனுபவம் உண்டு!
படங்கள் மற்றும் படங்களுக்கான வரிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
முதல் மூன்று படங்களை பார்த்தவுடனே சில சினிமா பாடல் வரிகள் நினைவுக்கு வந்தன எல்லாவற்றிற்குமே அதுபோல முயற்சி செய்து என்னுடைய வர்ஷனையும் இங்கு தருகிறேன்...!!!
பதிலளிநீக்குஒன்று. : மின்மினியை கண்மணியாய் கொண்டவனை என்னிடமே தந்தாள், உன் அன்னை -உன்னை...
இரண்டு : புல்லாங்குழல் ஒலி தமிழ் தமிழ் தமிழ் என பூவை இதழ் முத்து சிமிழ் சிமிழ் சிமிழ் என
மூன்று. : மூங்கிலிலே பாட்டிசைக்கும் காற்றலையை தூது விட்டேன்
நான்கு : சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே
ஐந்து : கண்ணன் வந்தான் இங்கே கண்ணன் வந்தான் ஏழை கண்ணீரை கண்டதும் கண்ணன் வந்தான்
படங்கள் தங்களுக்கு நினைவூட்டிய பாடல்கள் நன்று ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
ஆறு : புன்னகையில் கோடி உன் கவிதை பாடி
பதிலளிநீக்குஏழு : ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
படங்கள் தங்களுக்கு நினைவூட்டிய பாடல்கள் நன்று ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. இன்றைய அழகான படங்களை தந்து, அதற்கேற்ப வாசகங்களை நகைச்சுவையாகவும், கருத்துள்ளதாகவும் தந்த சகோதரி விஜி வெங்கடேஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். நன்றிகள்.
படங்கள் ஒவ்வொன்றும் மிக அழகாக இருக்கிறது. எங்கிருந்து இவற்றை தேர்வு செய்தார் என்ற விபரம் அறிய ஆசைப்படுகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குபதிவு வழி பகிர்ந்து கொண்ட வாசகம், படங்கள் மற்றும் படங்களுக்கான வரிகள் தங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
படங்களையும் வரிகளையும் ரசித்தேன்
பதிலளிநீக்குதுளசிதரன்
பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்கள் மற்றும் படங்களுக்கான வரிகள் தங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.