திங்கள், 2 செப்டம்பர், 2024

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஏழு - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட சென்னைக்கு ஒரு பயணம் - இறுதி பகுதி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து முன்னர் இந்தப் பக்கத்தில் சில பதிவுகள் வெளிவந்தது.  அந்தப் பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


கண்கவர் படங்களும் அதற்கேற்ற சில வரிகளும் 


அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி இரண்டு


அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி மூன்று


அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி நான்கு


அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஐந்து


அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஆறு


அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.



ஏன் late-ன்னு கேட்டா கிருஷ்ணன் புது கதை சொல்லுவான். அதைக் கேட்டு கோபம் வராம இருக்கணும் பகவானே 🙏🏻


*******



என்னங்க திரிசூலம் குட்டியா இருக்கு.


மறந்து போய் குழந்தைகள்  விளையாடறதை  எடுத்துட்டு வந்துட்டேன். பரவாயில்லை. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.


நல்லா சமாளிக்கிறீங்க.


*******



சீக்கிரம் வா யாரோ வர மாதிரி இருக்கு. பானையை எங்க ஒளிச்சு வெக்கறதுன்னு தெரியலையே


*******



என்ன நாதா நம் சின்னப் புள்ளைய காணோம்?


Gana சமத்து. கொழுக்கட்டை ஆசை காட்டி கூட்டி வந்துட்டேன். சின்னவன் IPL பாத்துக்கிட்டிருக்கான் நாம வரும்போது ஐஸ்கிரீம் மட்டும் வாங்கிட்டு வரணுமாம்! நல்லா வளத்திருக்க.


*******



உங்க இசையைக் கேட்டா பறக்கர மாதிரியே ஒரு feeling கிருஷ்ணா.


Thanks. அப்படியே இரு. நான் சொன்னப்புறம் கண்ண திற.


*******



Dress க்கு match ஆ அழகா பூ வெச்சுட்டு திருஷ்டி பொட்ட என் மூக்கு மேல வெச்சிட்டா அம்மா. கன்னத்துல வெக்கப்படாதோ. எல்லாம் நான் சொல்லித் தர வேண்டியிருக்கு


*******



இத்தனை செல்வத்தையும் என் குழந்தைகளான உங்களுக்கு வாரி குடுப்பதை நினைத்து ஆனந்தத்தில் பூரித்து ஒரு சுற்று பெருத்தமாதிரி feeling.


*******


படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

2 செப்டம்பர் 2024


10 கருத்துகள்:

  1. படங்களையும் வரிகளையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. படங்களும் வரிகளும் சூப்பர். ரசித்தேன்...

    கிருஷ் கதை சொல்லியே டபாய்ச்சுட்டுருக்கார் போல!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  3. மாயக் கண்ணனுக்கே பானைய ஒளிச்சு வைக்கத் தெரியாமலா!!! Tricky boy!!!

    முருகனுக்கு தேனும் தினைமாவையும் காட்டி கூட்டி வந்திருக்கலாமே!...நான் போய் கூட்டிட்டு வரேன்!

    அதென்னவோ எப்பவுமே அப்பாக்கள் அம்மாக்களை "நல்லா வளர்த்திருக்கன்னு" நக்கலா சொல்றாங்க! அப்பாக்களுக்குப் பொறுப்பில்லாதது போல!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நாகேந்திர பாரதி ஜி.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. இன்றைய படங்களையும் அதற்கேற்ற வாசகங்களையும் தொகுத்து தந்திருக்கும் சகோதரி விஜி வெங்கடேஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். படங்ளும், ஒவ்வொன்றின் வாசகங்களையும், ரசித்துப் படித்தேன். சூப்பர். நன்றாக உள்ளது.

    திருஷ்டிப் பொட்டை மூக்கில் வைத்துக் கொண்டாலும், அதை அவ்வளவு பெரிய குறையாக எண்ணாமல், அழகுடன் சிரிக்கும் குட்டி கிருஷ்ணன் படம் மனம் கவர்கிறது. (நான் மானசீகமாக அந்த பட்டு கன்னத்தில் திருஷ்டிப் பொட்டு ஒன்றை வைத்து விட்டேன்.) எல்லாமே நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....