ஞாயிறு, 17 நவம்பர், 2024

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி பதினாறு - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******



வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து முன்னர் இந்தப் பக்கத்தில் சில பதிவுகள் வெளிவந்தது.  அந்தப் பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஒன்று 


பகுதி இரண்டு    பகுதி மூன்று  பகுதி நான்கு  பகுதி ஐந்து  

பகுதி ஆறு  பகுதி ஏழு  பகுதி எட்டு  பகுதி ஒன்பது  பகுதி பத்து

பகுதி பதினொன்று  பகுதி பன்னிரண்டு  பகுதி பதிமூன்று  

பகுதி பதினான்கு பகுதி பதினைந்து



அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.


*******



பூ இருக்கட்டும் நான் இறங்கறதுக்குள்ள மாடு நகராம பாத்துக்கோ கிருஷ்ணா


*******



கிருஷ்ணா வெண்ணையைத் திருடி தின்னதுமில்லாம கீழ சிந்தி அது மேல நடந்திருக்க. உன்ன...


கிருஷ்ண ஜெயந்திக்கு கால் போட பழகினேம்மா.


*******



வேண்டாம் கிருஷ்ணா எடுக்காத.

சும்மா தொட்டுப் பாக்கறேம்மா.

வேணாம், நீ இதுவரைக்கும் தொட்டு பாத்ததெல்லாம் தெரியும்.


*******



கிருஷ்ணா என் makeup, dress எப்படி?

சூப்பர் ராதா ஆனா ஆத்துல குளிக்க இது கொஞ்சம் ஜாஸ்தி.



*******



அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி....

யசோதா மகனிடம்னு பாடு ராதா உடனே வரேன், இங்கதான் இருக்கேன்…



*******



அம்மா நான் என்ன cleopatra வா கழுதைப் பால்ல குளிக்க?
அசடு இது பசும்பால் கிருஷ்ணா ஸ்கின் னுக்கு நல்லது.
ஆனா பிச்சுக் பிக்சுக்குனு இருக்கு. கொஞ்சம் liquid soap ஐக் கல.

*******



நீ சொல்லிக் குடுத்த மாதிரிதான வாசிக்கிறேன் கிருஷ்ணா? முகத்தை ஏன் சோகமா வெச்சுக்கற?
அது சோகம் இல்ல ராதா நெகிழ்ச்சி (சமாளிப்போம்).

*******


படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

17 நவம்பர் 2024

13 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் மிக அருமை.

    இன்றைய படங்களையும், அதற்கு பொருத்தமான வாசகங்களையும் மிகவும் ரசித்தேன். படங்கள் ஒவ்வொன்றும் அழகென்றால், அதற்கான வாசகங்கள் அந்த அழகிற்கு அழகு சேர்க்கின்றன.

    படங்களுக்கு ஏற்றபடி இப்படியெல்லாம் யோசிக்கும் திறன் படைத்த சகோதரி விஜி வெங்கடேஷ் அவர்களுக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி அக்கா.இப்படி ரசிப்பவர்கள்தான் எங்கள் தூண்டுகோல்.
      விஜி.

      நீக்கு
  2. சங்கரலிங்கம்17 நவம்பர், 2024 அன்று 7:18 AM

    படங்களுக்கு ஏற்ற கருத்துக்கள் சூப்பர்

    பதிலளிநீக்கு
  3. நல்ல வாசகங்களை, அதைத் தயாரிப்பவர்கள், எழுத்துப் பிழை இல்லாமல் எழுதினால்தான் என்ன?!

    பதிலளிநீக்கு
  4. ​யசோதா மகனிடம் - நல்ல கற்பனை.

    படங்களும் அதற்குப் பொருத்தமான வ்ரித்தேர்வும் சிறப்பு. ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  5. மாடு உயரம்தான். ஆனால் யசோதா இருக்கும் உயரத்துக்கு ஏணியும் தேவை இல்லை, கிருஷ்ணனும் தேவை இல்லை போல இருக்கே....!!!

    :))

    பதிலளிநீக்கு
  6. ரசனையான வசனங்கள் அனைத்தும் ரசிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
  7. வாசகங்கள் ரசனை .

    கிஷ்ண ஜயந்திக்கு கால் போட பழகுவதும், வெண்ணை தொட்டுப் பார்க்கிறேன் படத்துவாசகமும் நல்ல பொருத்தம்.

    பதிலளிநீக்கு
  8. கிச்சா பாலில் குளிக்கிறதே!! திருநெல்வேலிக்கே அல்வாவான்னு கேட்பது போல் கிச்சாவையும்....

    படங்களும் அதுக்கான வரிகளும் செம ரொம்ப ரசித்தேன்

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....