ஞாயிறு, 24 நவம்பர், 2024

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி பதினேழு - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து முன்னர் இந்தப் பக்கத்தில் சில பதிவுகள் வெளிவந்தது.  அந்தப் பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி ஒன்று 


பகுதி இரண்டு    பகுதி மூன்று  பகுதி நான்கு  பகுதி ஐந்து  

பகுதி ஆறு  பகுதி ஏழு  பகுதி எட்டு  பகுதி ஒன்பது  பகுதி பத்து

பகுதி பதினொன்று  பகுதி பன்னிரண்டு  பகுதி பதிமூன்று  

பகுதி பதினான்கு பகுதி பதினைந்து  பகுதி பதினாறு



அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.


*******



இந்த matching பூவை வெக்கரதுக்கும் தலைல கொஞ்சம் இடம் விட்டிருக்கலாம் ராதா, திருட்டுத்தனமா பறிச்சதுதான் மிச்சம்.


*******



அம்மா, நீங்கல்லாம் சேர்ந்து group photo எடுத்துக்கறதுல எனக்கொண்ணும் ஆட்சேபணை இல்ல. ஆனா அந்த ஜோர்ல என்ன நழுவ விட்டுடாத. swimming கத்துக்கல இன்னும்.


*******



தா தை தத்தித் தை… super கிருஷ்ணா.


அந்தக் கதவை சாத்தி வை. வெய்யல் காலைப் பொசுக்குது. நீ வேற.


*******



மலை அழகா? இந்தச் சிலை அழகா? எல்லாம் அழகுதான் ஆனா கீழ வழுக்குது பாத்துக்கோ.



*******



Super ஆ இருக்க ராதா.ஃபோட்டோ எடுத்தாச்சு. எண்ணை தீர்றதுக்குள்ள அந்த விளக்கை கொஞ்சம் கீழ வெச்சுட்டு எல்லோர்க்கும் Greetings சொல்லு பாப்போம் 🪔🎇 Happy Diwali!


*******



இந்த மாதிரி குச்சி சொருகி கொண்டை போடறதெல்லாம் பழைய fashion ராதா பேசாம கிளிப் போட்டுக்கோ. நல்லா இருக்கும். உனக்கு போட வரலைன்னு சொல்லு கிருஷ்ணா.


*******



என்னது வீடு திறந்திருக்கு? கதவத் தொட்டா அலாரம் அடிக்குமோ? எதுக்கும் கொஞ்சம் உஷாரா இருப்போம். ஒரு நாள் வெண்ணெய் சாப்பிடலேன்னா என்ன?



*******


படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களும் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.  மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

24 நவம்பர் 2024

9 கருத்துகள்:

  1. படங்களும் வரிகளையும் ரசித்தேன்

    நீங்க பகிரும் படங்கள் எல்லாம் கண்ணையும் மனதையும் கவர்கின்றன

    ஏய் கிச்சா நீ சும்மா பொய் சொல்லாத பறிச்சுட்டு வந்தேன்னு எங்கோ கடைலருந்து எடுத்துட்டு வந்த பொக்கே போல இருக்கே ஹாஹாஹாஹா!!!

    கீதா



    பதிலளிநீக்கு
  2. மலை அழகா இந்தச் சிலை அழகா - இந்த வரி ...சிரித்துவிட்டேன்

    கீதா

    பதிலளிநீக்கு
  3. வாசகம் நல்லா இருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  4. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை.

    படங்களும், அதற்கேற்ற வாசகங்களும், இன்றும் எப்போதும் போல் அருமையாக உள்ளது. ரசித்தேன். குட்டி, குட்டியாய் கிருஷ்ணாவும், ராதையும் அவ்வளவு அழகு.

    குருப் போட்டோ எடுக்கிற மகிழ்வில் இருக்கும் தன் தாயை பார்த்து சொல்வது வெகு ஜோர். மிக, மிக ரசித்தேன்.

    அது போல் கதவின் முன் தனியாளாக நிற்கும் கிருஷ்ணரின் சந்தேகம்... எல்லாமே நன்றாக உள்ளது. படங்களை பார்த்தும், வாசகங்களை படித்தும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  5. படங்களுக்கு பொருத்தமாக மனதில் தோன்றிய வரிகளை சுவாரஸ்யமாக தொடுத்திருக்கிறார் VV. அருமை.

    பதிலளிநீக்கு
  6. அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.உங்கள் ரசனை என் உற்சாகம்.
    விஜி.

    பதிலளிநீக்கு
  7. படங்களும் வரிகளும் அருமை. தா தை தத்தி தை .... ரசித்தேன்:).

    பதிலளிநீக்கு
  8. படங்களும் வரிகளும் அழகு.
    'குச்சி சொருகி கொண்டைபோடுவது ....உனக்கு போட வரலை ரசனை.

    உசாரா இருக்கணும் அலாரம்....ஒருநாள் வெண்ணை சாப்பிடாட்டால் என்ன?......ஹா...ஹா

    பதிலளிநீக்கு
  9. படங்களும் வரிகளும் அருமை. தா தை தத்தி தை .... ரசித்தேன்:).

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....