செவ்வாய், 14 ஆகஸ்ட், 2018

கதம்பம் – மிளகுக் குழம்பு – ஷாஹி பனீர் – அணில் கூடு - நாயன்மார்கள்



இறைவனின் படைப்பில்…

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முகநூலில் எழுதியது – மார்க் நினைவூட்டியதால் இங்கே…







இன்று காலை முதல் எனக்கு ஒரு சுவாரசியமான விஷயம் பார்க்கக் கிடைத்தது. எதிர் வீட்டில் ஒரு அணில் கூடு கட்டிக் கொண்டிருந்தது.

ஆள் நடமாட்டமில்லாத வீடுகளில் உள்ள பாத்ரூமின் ventilation ஜன்னல்களில் , நூல்கள், சணல், காய்ந்த இலைகள், பேப்பர் என தேவைக்கேற்ற பொருட்களை ஒவ்வொரு முறையும் அலுக்காமல் சலிக்காமல் கொண்டு வந்து, அவற்றை பிரித்து, கம்பிகளுக்கிடையே நுழைத்து, அவற்றுக்கு இறுக்கம் தந்து என வேலைகள் மும்முரமாய் நடக்கின்றன....:)

முதலில் சப்தம் கேட்டால் ஒதுங்கியது...பின்பு தன் வேலையில் மூழ்கிப் போனது..நானும் எங்கள் வீட்டு பால்கனியில் துவைத்த துணிகளை காயப் போட்டுக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தேன்...

அவர்களுடைய இடத்தைத் தான் நாம் அனுமதியின்றி ஆக்கிரமிப்பு செய்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சி தான் மேலிடுகிறது...

தன் குழந்தைகளுக்கென எத்தனை மெனக்கெடல்...ஆண்டவனின் படைப்பில் தான் எத்தனை அற்புதங்கள்!!!

ரோஷ்ணி கார்னர்:

ரோஷ்ணிக்கு கிடைத்த அன்பளிப்பு….



தூணிலும் இருப்பான்!
துரும்பிலும் இருப்பான்!!
செல்ஃபோன் பவுச்சிலும் இருப்பான்.

ஷாஹி பனீர்…

வாங்க சாப்பிடலாம்!!



சப்பாத்தியும், ஷாஹி பனீர் சப்ஜியும்.

ஷாஹி பனீர் செய்முறைக்கு.


பாம்பே ஹல்வா/ கராச்சி ஹல்வா!



முதன்முறையாக செய்து பார்த்தது. Corn Flour வைத்து செய்யும் முறையை Hebbers Kitchen எனும் தளத்தில் பார்த்தேன். அப்படிப் பார்த்ததைச் செய்து பார்க்க கிடைத்தது ருசியான ஹல்வா!

ரோஸ்மில்க் குல்ஃபி….



குல்ஃபி மோல்ட் சமீபத்தில் வாங்கியது. அதில் ரோஸ்மில்க் விட்டு குளிர வைக்க, கிடைத்தது ரோஸ்மில்க் குல்ஃபி!

மிளகுக் குழம்பு….



சென்ற வாரம் மிளகுக் குழம்பு பற்றி எழுதிய போது மனோ சாமிநாதன் மேடம் எப்படிச் செய்ய வேண்டும் என்ற குறிப்பு கேட்டிருந்தார்கள். இதோ எப்படிச் செய்ய வேண்டும் என்ற குறிப்பு.

மிளகு, சீரகம், தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு எல்லாம் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து காரத்துக்குத் தகுந்தாற்போல் வரமிளகாய் சேர்த்து வெறும் வாணலியில் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து எலுமிச்சையளவு புளியை கரைத்து விட்டு, பொடியும் உப்பும் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வைத்திருந்து இறக்கவும்..

இளையான்குடி மாறநாயனார்...



இரண்டு வருடங்களுக்கு முன்னர் மகளுக்குச் சொல்வதற்காக நாயன்மார்களின் கதைகளைத் தேடிச் சொன்னதோடு, முகநூலிலும் பகிர்ந்து கொண்டேன். அப்படிப் பகிர்ந்த ஒரு கதை….

இஷ்டப்பட்டு, கஷ்டப்பட்டு அதனால் மேன்மை நிலையடைந்தவர்களான நாயன்மார்களில் இன்று நாம் பார்க்கப் போகிறவர் இளையான்குடி மாறநாயனார்...

இளையான்குடியில் பிறந்த மாறனார் உழவுத்தொழிலில் ஈடுபட்டு வந்தார்...செல்வச் செழிப்புடன் இருந்த இவர் ஈசனின் பால் கொண்ட பக்தியும், சிவனடியார்களை வரவேற்று அமுது படைக்கும் குணமும் கொண்டவர்..

செல்வச் செழிப்புடன் இருந்தாலும், வறுமையில் வாடினாலும் தான் செய்யும் தொண்டிலிருந்து மாறாதவர் என்ற உண்மையை உலகுக்கு உணர்த்த எண்ணிய ஈசன், தன் திருவிளையாடலை நிகழ்த்தினார்..

செல்வத்தை இழந்து வறுமையில் வாடினார் மாறனார்...கடைசியாக இருக்கும் விதை நெல்மணிகளை வயலில் விதைத்திருந்தார்...நல்ல மழைக்காலம்..நள்ளிரவில் ஈசன் அடியார் வடிவில் வருகை தந்தார்..

அவரை அமரச் செய்து விட்டு, அடுக்களைக்கு சென்று மனைவியிடம், தான் இப்போது வருவதாகச் சொல்லி, ஒரு கூடையில் விதைத்த நெல்மணிகளை அள்ளி எடுத்து வந்தார்..

மனைவியும் கீரை பறித்து வர, நெருப்பு மூட்ட விறகில்லையே என்றதும், தன் வீட்டு கூரையில் இருந்த கட்டையை உருவிக் கொடுத்தார்..

மனைவியும் நெல்லை வறுத்து, குத்தி பக்குவமாக சமைத்துத் தர இருவரும் அடியாரை உபசரிக்க சென்றனர்...அங்கு ஜோதிப் பிழம்பாக ஈசன் ரிஷப வாகனத்தில் உமையாளோடு காட்சிக் கொடுத்தார்..

நிறைந்த செல்வங்களை அளித்து அடியார்களுக்கு தொண்டு செய்யும் படி வரமளித்தார்...

விரைவில் வேறு சில கதம்பச் செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

ஆதி வெங்கட்

35 கருத்துகள்:

  1. குட்மார்னிங் திரு அண்ட் திருமதி வெங்கட். அணில் கட்டிய வீடு அற்புதம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாலை வணக்கம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. ஓ... செல்ஃபோன் பவுச்சா அது? நன்றாய் இருக்கிறது.

    ஹல்வாவும், ஷாஹி பனீரும் சுவை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் செல்ஃபோன் பவுச்-ஆகவும் பயன்படுத்தலாம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. மிளகு குழம்பு பார்க்கவே அழகாய் இருக்கிறது. சுவைக்கும் ஆவலும் வருகிறது. என் அம்மா மறைவதற்கு ஆறுமாதங்களுக்கு முன் மதுரை சென்றிருந்த எனக்கு செய்து கொடுத்து அனுப்பினார். அதன் சுவையும் அம்மாவின்அன்பும் இன்னும் என் மனக்கண்ணில். அது நினைவுக்கு வந்துவிட்டது. )இதை முக நூலிலேயே சொல்ல நினைத்தேன். பின்னர் பதிவில் வருமே, அப்போது கமெண்ட் அடிக்க தேவையாய் இருக்குமே என்று விட்டுவிட்டேன்!!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அம்மாவின் நினைவினை உண்டாக்கி விட்டதா இப்பகிர்வு. அம்மாவின் கைப்பக்குவம் ஒரு வகை... திருமணம் வரை அம்மாவின் கைகளால் சமைத்த உணவு கிடைப்பது ஒரு சுகம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. அருமை அண்ணா...1

    அணிலை பார்க்கும்போதுதான் பழைய ஞாபகம் வருகின்றது,
    சில வருடங்களுக்கு முன்னால் 22 அணில்கள் வளர்த்தோம்,
    ஆனால் அத்தனையும் கூண்டில் வளர்த்தோம்,
    சுதந்திரமாய் சுற்றித்திரிந்ததை
    கூண்டில் அடைத்து வைத்ததை எண்ணி கூண்டை திறந்தும் வைத்தோம் ,
    கொஞ்சநாள் வீட்டிலே சில தங்கின,சில ஓடியே போயின..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா.... உங்கள் வீட்டில் கூண்டில் வைத்து வளர்த்தீர்களா அணில்களை.... எனக்கு ஏனோ கூண்டில் வளர்ப்பது பிடிப்பதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  6. சுவைகள் பலவிதம்... ரசித்தேன்...

    ரோஷ்ணிக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்...

    இளையான்குடி மாறநாயனார் கதை அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. இப்போதான் சாப்பிட்டு முடித்தேன். இருந்தாலும் படங்கள் பார்க்க மீண்டும் பசி வருகிறது. ஹா ஹா. படங்கள் நன்றாக இருக்கு. புதிய தளத்தையும் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட நீங்கள் அந்த தளத்தினைப் பார்த்ததில்லையா? ஓ முகநூலில் இல்லை என்பதால் உங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. அங்கே நிறைய காணொளிகள் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  8. அணில் கூடு பற்றிய விவரங்கள் அருமை! எந்த ரூபமென்றாலும் தாய்மை தாய்மை தானே?

    மிளகுக்குழம்பு குறிப்பு வெளியிட்டதற்கு அன்பு நன்றி ஆதி! செய்து பார்த்து விட்டு சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது செய்து பாருங்கள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  9. அணிலின் இடத்தை நாம்தான் பறித்துக் கொண்டோம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  10. அனைத்தும் அருமை.
    படங்கள் எல்லாம் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  11. வீட்டு மரத்தில் நிறைய அணில்களைக் கண்டாலும் அவற்றின்கூடு பார்த்ததுஇல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அணில் கூடு - பார்ப்பது கொஞ்சம் கடினம் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  12. அணில்கள் எல்லாம் அம்பத்தூர் வீட்டுக்குப் பின்னர் அதிகம் பார்க்கலை. இங்கே ஜன்னல் வழி பார்க்கையில் குதித்து ஓடிக் கொண்டிருக்கும். அதுங்க எங்க சமையலறை ஜன்னலில் தான் எப்போவும் கூடு கட்டும். இதுக்காகவே சமையலறை ஜன்னலைத் திறக்கவே மாட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜன்னல்கள் மீது தான் கூடு கட்டும் பெரும்பாலும்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  13. மற்றவை எல்லாம் முகநூலில் பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  14. இப்போ அநேகமா எல்லா டிபார்ட்மென்டல் ஸ்டோரிலும் பனீர் கிடைக்கிறது. புலிமண்டபம் ரோடில் எங்க வீட்டிலிருந்து சென்றால் வலப்பக்கம், நீங்க வந்தா இடப்பக்கம் அமுல் ப்ரான்ட் பொருட்கள் விற்கும் கடையே இருக்கு! அங்கே பனீர் கிடைக்கும். எங்க வீட்டுக்குக் கீழே இருக்கும் டிபார்ட்மென்டல் ஸ்டோரிலும் பனீர், சீஸ் போன்றவை கிடைக்கிறது. ஆவின் பூத் போலீஸ் ஸ்டேஷன் எதிரே அங்கே கேட்டுப் பார்க்கவும். எனக்குத் தெரிந்து ஆவினில் சீஸ், பனீர் போன்றவை இருப்பதில்லை. ஆனால் இங்கே ஶ்ரீரங்கத்தில் பனீர் கிடைக்கிறது. நேத்திக்குக் கூடச் சீஸ் சான்ட்விச் தான் செய்தேன் காலம்பர!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீரங்கத்தில் இப்போதெல்லாம் நிறைய கடைகளில் கிடைக்கிறது. வீட்டில் பல சமயங்களில் பனீர் செய்வதுண்டு. சில சமயங்களில் இப்படி கடையில் வாங்கிக் கொள்கிறார்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  15. நல்ல பாலாகக் கிடைத்தால் பனீர் வீட்டிலேயே தயாரிக்கலாம். நான் அதெல்லாம் வடக்கே இருக்கிறச்சே செய்தது. இங்கே அவ்வளவு தேவை இல்லை என்பதால் எப்போதேனும் வாங்கறது தான்! புலிமண்டபம் ரோடில் என எழுதிட்டேன். அந்த ரோடில் நுழையும்போது இடப்பக்கம் உள்ள கடையில் அமுல் பொருட்கள் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீட்டில் அவ்வப்போது செய்வதுண்டு. நம் ஊர் பால் அத்தனை நன்றாக இருப்பதில்லை. இங்கே உள்ளது போல! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  16. மிளகு குழம்பு செய்து பார்த்தேன் அருமை.
    அடுத்து பாம்பே ஹல்வாவை செய்யனும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா செய்து பார்த்தாச்சா.... நல்லது. பாம்பே ஹல்வாவும் செய்து பார்த்து சொல்லுங்க.....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  17. வணக்கம் சகோதரி

    அணில் கூடு அழகாய் ஈர்த்தது. என்ன ஒரு அம்சமான வேலைப்பாடு. கடவுளின் படைப்புத் திறனை பாராட்ட வேண்டும். வியந்தேன்.

    ரோஷ்ணியின் பரிசு கவர்ந்தது.
    மிளகு குழம்பு பார்க்க மிக அழகாய் இருந்தது. தங்கள் செய்முறைபடி ஒருநாள் செய்கிறேன்.
    இனிப்புகள் செய்முறையும் நன்றாக சுவையாக இருக்கிறது.
    இளையான்குடி நாயனார் கதை ஏற்கனவே அறிந்திருந்தாலும், மீண்டும் புதிதாக தங்கள் பதிவில் வாசித்தேன்.அவர்கள் பக்தியின் சிறப்பை எத்தனை தடவை வேண்டுமானாலும், பார்த்து கேட்டு தரிசிக்கலாம் அல்லவா? கதம்பம் இனித்தது. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  18. really so nice article ...very helpful. Indian recipe are really so good ... but making good all need best kitchen appliances thanks for share this article..

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....