வியாழன், 9 ஆகஸ்ட், 2018

சாப்பிட வாங்க – காஞ்சிபுரம் இட்லி




காஞ்சிபுரம் இட்லி உலக ப்ரசித்திப் பெற்றது. பெருமாளுக்கு அன்றாடம் பூக்குடலையில் செய்து நிவேதனம் செய்வார்களாம். இதுவரை காஞ்சிபுரத்துக்கும் சென்றதில்லை, காஞ்சிபுரம் இட்லியும் ருசித்ததில்லை! ஆனால் தெரிந்த ஒரு மாமியிடமிருந்தும், இணையத்தில் பார்த்தும் கற்றுக் கொண்டு இன்று செய்தாச்சு.

பூக்குடலையிலும், விறகு அடுப்பிலும் செய்து பெருமாளுக்கும் அர்பணிப்பதால் அதன் சுவை கூடுதலாக இருக்கும்.

நான் எனக்குத் தெரிந்த முறையில் செய்துள்ளேன். செய்முறையும் மிகவும் எளிது. சுவையும் அபாரம். நீங்களும் வாய்ப்பு கிடைத்தால் முயற்சி செய்து பார்க்கலாம்.



செய்முறை:-

பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்து மூன்றும் சம அளவில் எடுத்து ஊறவைத்து அரைக்கவும். கொஞ்சம் ரவை பதத்தில் அரைத்து எடுக்கவும். உப்பு போட்டு கரைத்து 8 மணி நேரம் புளிக்க விடவும்.

மாவில் சுக்குப் பொடி 1 ஸ்பூன் அளவு சேர்க்கவும். சிறிதளவு நெய்யில் மிளகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் மாவில் கொட்டவும். கலந்து இட்லி தட்டிலோ, கிண்ணங்களிலோ 20 நிமிடம் ஆவியில் வைத்து எடுக்கவும். சட்னி, சாம்பார் மற்றும் மிளகாய்ப்பொடியுடன் பரிமாறலாம்.

விரைவில் வேறு ஒரு பதிவில் மீண்டும் ச[சி]ந்திப்போம்….
 
நட்புடன்

ஆதி வெங்கட்

26 கருத்துகள்:

  1. குட்மார்னிங் வெங்கட்... சமீபத்தில் ஒரு நண்பர் காஞ்சிபுரம் இட்லி கொடுத்தார். எனக்குப்.......!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்.

      ஆஹா உங்களுக்குப்.... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. இங்கு சொல்லி இருக்கும் வழிமுறையும், படத்தில் காணப்படும் இட்லிகளும் கண்ணைக் கவர்ந்து, நாவில் சுவை நரம்புகளை சோதிக்கின்றன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவை நரம்புகளைச் சோதிக்கின்றன! செய்து பார்த்துவிட வேண்டியது தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. இப்போக் கொஞ்ச நாட்களாப் பண்ணலை. இன்னிக்கு வேணா நனைச்சு வைக்கலாமானு யோசனை. இதில் மிஞ்சும் மாவில் இஃகி, இஃகி, இப்போச் சொல்ல மாட்டேனே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா.... இன்னிக்கு செய்யப் போறீங்களா.... ஓகே ஓகே...

      ஹா ஹா திப்பிசம்... I am waiting to know what you did with the remaining மாவு! :)

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. காஞ்சிபுரம் ஹோட்டலில் சாப்பிட்டு இருக்கிறேன். அடுத்தமுறை கவனிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது சாப்பிட்டு பாருங்கள் கில்லர்ஜி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  7. இதுக்கு எதைத் தொட்டுக்கொண்டால் நல்லாருக்கும்? அல்லது எப்போதும்போல் இட்லிப் பொடியா?

    படம் நல்லா தொகுத்திருக்காங்க

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெங்காயம் சாப்பிடுவீங்கன்னா வெங்காயம் போட்ட கொத்சு! அல்லது கத்திரிக்காய், வெங்காயம் போட்ட கொத்சு! இரண்டுமே நல்ல காம்பினேஷன். சட்னி, மி.பொடி எல்லாம் இரண்டாம் பக்ஷம் தான்! :)))) ஆனால் பருப்பைப் போட்டு சாம்பார் மாதிரிப் பண்ணக் கூடாது! ஆமா, சொல்லிட்டேன்! கொத்சுன்னா கொத்சு மாதிரியே பருப்பில்லாமல் பண்ணணும்! :))))

      நீக்கு
    2. எனக்கு இட்லிப் பொடிதான் பிடித்திருந்தது - நண்பர் வீட்டில் சாப்பிட்ட போது!

      படம் நல்லா தொகுத்திருக்காங்க! - நன்றி - அவர்களுக்கு நேரமில்லை. தொகுத்தது நாந்தேன்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
    3. கொத்சுன்னா கொத்சு மாதிரியே பருப்பில்லாமல் பண்ணணும்.... ஹாஹா... நிறைய பேர் பருப்பு சேர்த்து விடுகிறார்கள்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  8. செம ருசி. பார்க்கவே அழகா இருக்கு . கிண்ணத்தில் சிலது ஊற்றினீர்களா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் கிண்ணங்களில் தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தேனம்மை சகோ.

      நீக்கு
  9. காஞ்சீபுரம் இட்லி நான் அவ்வப்பொழுது செய்வேன். பு.அரிசி, ப.அரிசி இரண்டையும் ஒன்றாக ஊற வைத்து அரைக்கலாம். உளுத்தம் பருப்பை தனியாக ஊற வைத்து கொடகொடவென்று அரைக்க வேண்டும். தாளிக்கும் பொழுது இட்லி மாவில் நெய் ஊற்ற வேண்டும். குடலைக்கு பதிலாக நான் தொன்னைகளில் ஊற்றி வேக வைப்பேன். தொட்டுக்கொள்ள கொத்துமல்லி சட்னி நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலதிகத் தகவல்கள் சிறப்பு. காஞ்சிபுரம் இட்லி - கொத்துமல்லி சட்னியுடன் - இதுவரை சாப்பிட்டதில்லை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன் ஜி!

      நீக்கு
  10. கஞ்சிபுரம் இட்லிகளின் வார்க்கும் தட்டுகள் பெரிதாய் இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தட்டிலே வார்ப்பதில்லை காஞ்சிபுரம் இட்லிகள்! குடலையில் வார்ப்பார்கள். குடலை இட்லி என்றே பெயர். இப்போல்லாம் குடலையில் யாரும் பண்ணுவது இல்லை என்பதால் அதற்கெனத் தனி டம்பளர்கள் விற்கின்றன. அவற்றில் வார்ப்பார்கள்! நீளமாகச் செவ்வக வடிவில் அல்லது சிலிண்டர் வடிவில் இருக்கும். நறுக்கித் தருவார்கள் காஞ்சிபுரம் ஓட்டல்களில்.

      நீக்கு
    2. அதே தட்டுகளில் தான் வார்க்க வேண்டியதில்லை. கிண்ணங்கள், தொன்னைகளில் கூட வார்க்கலாம்! கீதாம்மாவின் பதில் விரிவாக இருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
    3. ஆமாம். விதம் விதமான வடிவங்களில் இப்போதெல்லாம் கிடைக்கிறது. இட்லி தட்டில் கூட வட்ட வடிவங்கள் மட்டுமன்றி வேறு சில வடிவங்களிலும் கிடைக்கிறது இப்போது....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
    4. //கீதாம்மாவின் பதில் விரிவாக இருக்கிறது. //
      ஹிஹிஹி, நமக்குத் தான் சுருக்கமா எதையும் சொல்லத் தெரியாதே! :)))))

      நீக்கு
    5. ஹாஹா...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....