ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2018

கதம்பம் – புரியாத புதிர் – கத்திக்கல்ல – கீகீ சேலஞ்ச்



ஒண்ணும் கத்திக்கல்ல…

அலுவலகத்தில் இருக்கும் Coffee Board உழைப்பாளி பற்றி ஏற்கனவே ஒரு முறை எழுதி இருக்கிறேன். எந்தப் பதிவில் என்பதைத் தேட வேண்டும் – நிறைய பதிவுகள் எழுதினால் இது ஒரு பிரச்சனை! :) சமீபத்தில் எனது பக்கத்தில் எழுதிய முந்தைய பதிவுகளைப் படித்த போது எனக்கே பிரமிப்பாக இருந்தது – இவ்வளவு எழுதி இருக்கிறேனா என! சரி விஷயத்துக்கு – காஃபி போர்ட் உழைப்பாளிக்கு வருவோம்.


நேற்று காஃபி அருந்தச் சென்றபோது, அங்கே அடுத்த டேபிளில் இருந்த ஒருவர் இருமிக் கொண்டே இருந்தார். எனக்கு காஃபி கொடுக்க வந்த உழைப்பாளி, “அவன் நிறைய பீடி குடிப்பான் – அதனால தான் இருமல்” என்றார். அவரது தாய் மொழி கன்னடம் என்றாலும் தமிழிலும் பேசுவார் – கன்னடம் கலந்த தமிழில்! நான் எதுவுமே கத்திக்கல்ல என்றார் – ஓ கற்றுக் கொள்ளவில்லை என்பதைத் தான் இப்படிச் சொல்கிறார் எனப் புரிந்தது. ”பீடி, சிகரெட், தண்ணி, பொண்ணுங்க” இப்படி எந்தப் பழக்கமும் நான் கத்திக்கல்ல…. என்ன நல்லா துண்ணுவேன் – மிருகங்களைக் கூட! நல்ல விஷயம்… “இனிமேலும் அதெல்லாம் கத்துக்காதீங்க” என்று சொல்லி அவரை வாழ்த்தினேன்.

புரியாத புதிர் – படம்-1:


ஃபோட்டோ புடிக்கிறாராம்...

தலைநகரின் பிரதான, மிக முக்கியமான ராஜ பாட்டை…. தினம் தினம் இங்கே வருபவர்கள் – சுற்றுலாப் பயணிகள் ஆயிரக் கணக்கில்! அதுவும் மாலை நேரங்களில் அதிகமான சுற்றுலாப் பயணிகளைப் பார்க்க முடியும். இரண்டு நாட்கள் முன்னர் அலுவலகத்திலிருந்து வரும்போது அங்கே பார்த்த ஒரு காட்சி – சில சீக்கிய இளைஞர்கள் – அவர்களில் ஒருவர் நடு சாலையில் படுத்துக் கொண்டிருக்கிறார். கால்களில் ஒரு கால்பந்து. இரண்டு கால்களிலும் பந்து இருக்கும்படி படம்/காணொளி எடுக்க வேண்டும் என்பது தான் அவர் விருப்பம். அவரது நண்பரும் படுத்துக் கொண்டு/உட்கார்ந்தபடி என பிரம்மப் பிரயத்தனம் செய்து படம் எடுக்கிறார். வாகனப் போக்குவரத்து இருக்கும் ஒரு சாலையில் இப்படி நடுச்சாலையில் வித்தைகள் காண்பிப்பது விபத்துகளை உண்டாக்கும் என்பதைப் புரிந்து கொள்வதில்லை இவர்கள்.  

அப்படி பார்த்த வேறு ஒரு காட்சி தான் இன்றைய படப் புதிரில் முதலாவது – நடுச்சாலையில் இப்படி கக்கா போகும் மாதிரி அமர்ந்து கொண்டு படம் எடுக்கிறார்! பின்னாடி வேகமாக வரும் வாகன ஓட்டுனர் சாலையில் அமர்ந்திருந்தவரைப் பார்த்து Sudden Break போட வேண்டியிருந்தது.  உட்கார்ந்த நிலையிலேயே மேலே போயிருக்க வேண்டியது! இவர்களை என்ன சொல்ல!

கீகீ சேலஞ்ச்:

இணையத்தில் சில நாட்களாக வைரலாக பரவி வரும் ஒரு விஷயம் – இந்த கீகீ சேலஞ்ச் – என்னது கீகீயா… கிளி மாதிரி கத்தணுமான்னு யோசிக்கக் கூடாது. அது என்ன கீகீ சேலஞ்ச்? Kiki do you love me எனும் ஆங்கிலப் பாடல் கேட்டு இருக்கிறீர்களா? கேளுங்களேன்….




கார், ஆட்டோ போன்ற வாகனங்களை ஓட்டிக் கொண்டு போகும்போது, ஓடும் வாகனத்திலிருந்து இறங்கி சாலையில் நடனமாட வேண்டும்! அதன் பிறகு மீண்டும் வாகனத்தில் ஏறிக்கொள்ள வேண்டும் – இத்தனை நேரமும் வாகனமும் ஓடிக் கொண்டிருக்கும். ஆடும்போது வாகனத்திலிருந்து மேலே உள்ள பாடல் ஒலிக்கும். அது தான் கிகி சேலஞ்ச். வெளி நாடுகளில் மட்டுமல்ல, இந்தியாவின் பல இடங்களிலும் இந்த கிகி சேலஞ்ச் இப்போது வேகமாக பரவி வருகிறது. பல விபத்துகளும் இதனால் ஏற்படுகிறது. Youtube-ல் இந்த கீகீ சேலஞ்ச் பற்றிய காணொளிகள் நிறையவே இருக்கிறது இப்போது. அப்படி ஒரு காணொளி கீழே… என்ன ஒரு ஆட்டம் பாருங்களேன்.



நல்லதோர் உடற்பயிற்சி – புரியாத புதிர் – படம் – 2:

சமீபத்தில் எனது அலுவலக தோழி ஒருவர் ஒரு நகைச்சுவையுடன், காணொளியை ஒன்றை அனுப்பி வைத்திருந்தார். தன் உடல் எடை அதிகரித்து விட்டதற்காக, ஜிம் போகப் போவதாக மருமகள் சொல்ல, மாமியார் இதைச் செய்தால் போதும், என்று சொல்லி விட்டாராம். அப்படி என்ன செய்ய சொன்னார் அந்த மாமியார்.  கீழேயுள்ள முகநூல் இணைப்பிற்குச் சென்றால் பார்க்கலாம்!


என்ன நண்பர்களே, இன்றைய கதம்பம் பகிர்வினை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.

மீண்டும் ச[சி]ந்திப்போம்…
 
நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


38 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  2. புதிர் படத்தில் ஒரு விடை சரியாக சொல்லிவிட்டேன்.
    நடு ரோட்டில் இப்படி படம் எடுப்பது ஆபத்துதான்.
    காணொளிகள் பார்த்தேன். இரண்டாவது காணொளியும் ஆபத்துதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கிகி - ஆபத்தான விளையாட்டு. செய்பவர்களுக்கு புரிவதில்லை....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

      நீக்கு
  3. ஹ ஹா ரசித்தேன் அண்ணா, சூப்பர்...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய்.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  5. கதம்பம் வழக்கம்போல் மணத்தது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  6. என்ன, நல்லா துண்ணுவேன்...இயற்கையாக இருந்த உரையாடல். அதிகம் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  7. அயல் நாட்டுப் பழக்கங்கள் அதி விரைவில் இந்தியாவில் பரவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அயல்நாட்டு மோகம் சினிமா மோகம்... இப்படி பல மோகங்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  8. கிகிகி சேலஞ்ச் நடனத்தால் உயிரே போயிருக்குன்னு ட்விட்டர்ல படிச்சேன்.
    நேற்றைய புதிரில் முதல் கேள்விக்கு சரியாதான் பதில் சொல்லி இருக்கேன். இன்னொரு புதிருக்கு சரியான விடையான்னு பார்த்துட்டு வரேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் இதுவரை பல விபத்துகள் நடந்து விட்டன - வெவ்வேறு நாடுகளில். ஆனாலும் இதன் மீது மோகம் பல இளைஞர்களுக்கு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

      நீக்கு
  9. அப்பாடா...! விடைகளை அறிந்தேன்... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  10. //கத்திக்கல்ல// என் புக்ககத்தில் கற்றுக்கொள்வதை, "கத்திக்கிறது" என்றே சொல்வார்கள். கல்யாணம் ஆன புதுசில் முழிச்சிருக்கேன். அதே போல் பள்ளிக்கூடம் என்பதை "பள்டம்" என்பார்கள்! பள்டம் என ஏதோ ஒரு ஊர் என்றே நினைத்திருந்தேன். அப்புறமாத் தான் புரிஞ்சது! பரவாக்கரை ஊர்ப் பெயர் அவங்க பேச்சில் ,"பராரை" என்றே வரும்! இப்போவும் சிவப்புக் கலர் என்பதை சேப்பு அல்லது ரோஸ் எனச் சொல்லுவது உண்டு. இப்போல்லாம் பழகி விட்டது. :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். நம் ஊரில் சிலர் கத்திக்கிறது என்று சொல்வதுண்டு. பள்டம் - கேட்டிருக்கிறேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  11. முகநூல் இணைப்புக்குப் போக முடியலை. அநேகமா அம்மியில் அரைப்பதோ அல்லது தயிர் கடைவதோ அல்லது உரலில் இடிப்பதோ இருக்கும் என நினைக்கிறேன். கிகி சாலஞ்ச் பற்றி இப்போத் தான் தெரியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போக முடிகிறதே.... உங்களால் ஏன் இணைப்பில் உள்ள காணொளியைப் பார்க்க முடியவில்லை என்பது ஸ்ரீராம் பாஷையில் சொன்னால் அபுரி!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
    2. //என்பது ஸ்ரீராம் பாஷையில் சொன்னால் அபுரி!/

      ஹிஹிஹி... அது சுஜாதாவின் கதை மாந்தர் ஆத்மா, நித்யா சொல்வது!

      நீக்கு
    3. எங்களுக்கு ஆத்மா நித்யாவினை விட நீங்கள் பயன்படுத்தியது தான் அதிகம் தெரியும்! அதனால் ஸ்ரீராம் பாஷையில்!

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    4. இணையம் அப்போ டான்ஸ் ஆடிட்டு இருந்ததில் பார்க்க முடியலை போல! இப்போ டான்ஸைப் பார்த்தேன். :)))) கிட்டத்தட்ட நான் சொன்னது தான். :)

      நீக்கு
    5. ஆஹா உங்கள் இணையம் டான்ஸ் ஆடியதில் இந்த டான்ஸ் பார்க்க முடியவில்லையா....

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  12. கிகி சேலஞ் பற்றி செய்திகளில் பார்த்தேன். எரிச்சலாக இருந்தது. பெயர் தெரியாத தமிழ் நடிகை ஒருவரும் இதைச் செய்திருந்தார்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயர் தெரியாத தமிழ் நடிகை ஒருவரும்.... வேதனை.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  13. அந்த வடநாட்டு உடற்பயிற்சி ஸூப்பர்! உண்மையிலேயே பயன் அளிக்கும்தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம். நல்லதொரு உடற்பயிற்சி அது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  14. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  15. ஜி இம்முறை நான் புதிரில் கலந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்...விடை பார்த்தேன் இப்ப..தயிர் கடைதல் நல்ல உடற்பயிற்சி. நான் பள்ளி செல்லும் வரை வீட்டில் என் ட்யூட்டி தயிர் கடைவது. சுவற்றில் கம்பிகள் இருக்கும் அதில் மத்தை நுழைத்து, கயிறு சுற்றி, பெரிய பரணியில்/பீங்கான் ஜாடியில் தயிர் கெட்டி மோராகி வைத்திருக்க அதில் கடைவதுண்டு. கடைந்து வெண்ணை எடுத்து...மீண்டும் நிறைய தண்ணீர் விட்டுத்தான் எங்களுக்கெல்லாம் விடுவார்கள் பள்ளி செல்லும் முன் நான் கடைந்து எடுக்க வேண்டும் என் ட்யூட்டி அது. ஆனால் உட்கார்ந்த நிலையில்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் வீட்டில் தயிர் கடைந்ததுண்டு. பிறகு பாட்டிலில் விட்டு குலுக்கிக் குலுக்கியே வெண்ணை எடுப்பார்கள். அதுவும் செய்ததுண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி!

      நீக்கு
    2. நானும் வீட்டில் தயிர் கடைந்ததுண்டு. பிறகு பாட்டிலில் விட்டு குலுக்கிக் குலுக்கியே வெண்ணை எடுப்பார்கள். அதுவும் செய்ததுண்டு. //

      யெஸ் யெஸ் ஜி அதுவும் செய்ததுண்டு...சமீப காலம் வரை இப்போதுதான் செய்வதில்லை...

      கீதா

      நீக்கு
    3. இப்போதும் வீட்டில் இப்படி குலுக்கல் முறையில் தான் வெண்ணை எடுக்கிறார்கள் - அம்மாவும், மனைவியும்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  16. துளசி: கத்தில்லா அர்த்தம் அறிந்தேன். இதற்கு ஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு அர்த்தம். கிகி வீடியோ இதுவரை அறிந்ததில்லை. அட தயிர் கடைவது கூட உடற்பயிற்சி. பார்த்தால் நம் பண்டைய காலத்து பல வேலைகள் உடற்பயிற்சிதான் இப்போது வெவ்வேறு விதத்தில் வந்துள்ளன.

    கீதா: விளக்கு கத்திக்குக என்பார்கள் மலையாளத்தில். கத்திச்சு என்றால் விளக்கு பொருத்தியாச்சு.

    துளசியின் உடற்பயிற்சி கருத்தைப் பார்த்ததும் தோன்றியது....இப்போது ஜிம்மில் இருப்பவை பல நான் அந்தக் காலத்தில் செய்திருக்கிறேனே என்று தோன்றியது. எங்கள் வீட்டில் தோசைக் கல்லைத் தேய்க்க கொல்லைப்புறத்தில் போட்டு மண்ணில் வைத்து அதன் மேல் மண் போட்டு தண்ணீர் தெளித்து, இரு கால்களையும் அதன் மேல் வைத்து வலது புறம் இடது புறம் ட்விஸ்ட் செய்ய வேண்டும் நம் முன் பாதம் நன்றாகத் தேய்த்து தோசைக் கல்லின் விளிம்பில் இருக்கும் பிசுக்கு எல்லாம் போய் கல் புதியதாய் வாங்கியது போல இருக்கும். பின்புறமும் அப்படித்தான் இருக்கும். இடுப்பிற்கு நல்ல பயிற்சி இப்போது இப்படியான ஒரு பயிற்சி ஜிம்மில் கண்ட நினைவு. அது போல் கிணற்றில் தண்ணீர் இறைத்தல் இரு தோள்களுக்கும், உரலில் மாவு அரைத்தல் இயந்திரத்தில் அரிசி பொடித்தல், இப்போது அதே உடற்பயிற்சியாகக் இரு கால்களையும் அகலமாக விரித்துக் கொண்டு இரு கைகளாலும் மாவு குழவியைச் சுற்றுவது போல் உடம்பை முன் பக்கம் வளைத்துச் சுற்றி அரைத்தல் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு மிகச் சிறந்த உடற்பயிற்சியாகச் சொல்லப்படுகிறது. நானும் செய்து வருகிறேன்!!!!!! விழுந்து கும்பிடுவது என்று பல சொல்லலாம்...இல்லையா ஜி??!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜிம்மில் இருக்கும் பல உபகரணங்கள் - நாம் முதலில் செய்த விஷயங்கள் தான்... ஆனால் இப்படி செய்வது தான் மாடர்னாக இருப்பதாக இப்போது நினைக்கிறார்கள் :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா/துளசிதரன் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....