நெய்வேலியிலிருந்த வரை வீட்டில்
அனைவரும் சேர்ந்து தான் சினிமாவிற்குப் போவோம். நண்பர்களுடன் சினிமாவிற்குப் போனது
கைவிட்டு எண்ணி விடலாம்! குடும்பத்துடன் போவதால், என்ன படம் என்பது அப்பா/அம்மா
தான் முடிவு செய்வார்கள். ஒரு முறை கூட பாக்யராஜ் மற்றும் டி. ராஜேந்தர் படம்
பார்த்ததில்லை. பாடல்கள் மட்டும் ரேடியோவில் கேட்டிருக்கிறேன். அப்படி கேட்ட சில
பாடல்களில் இன்றைக்குப் பார்க்கப் போகும் மௌன கீதங்கள் படத்திலிருந்து “மூக்குத்தி
பூ மேலே….” பாடல் தான். கே.ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி குரல்களில் பாக்யராஜ் மற்றும்
சரிதாவின் நடிப்பில்! பாடல் வரிகள் வாலி.
இசை கங்கை அமரன்!
நடனப் புயல் பாக்யராஜ் அவர்களின்
நடனம் பார்க்கும் தைர்யம் இருப்பவர்கள் காட்சியைப் பார்க்கலாம். இல்லை என்றால்
பாடலை கேட்க மட்டும் செய்யலாம்! பாடல் பார்க்க/கேட்க….
பாடல் வரிகள்:
மூக்குத்தி பூமேலே காத்து
உக்காந்து பேசுதம்மா.... ம்ஹூம்
அது உக்காந்து பேசையிலே
தேனு உள்ளூர ஊருதம்மா... ஆஹா..
அது ஏந்தான் புரியலையே
அதை நான் தான் அறியலையே
ஒரு மோகம் ஒரு தாகம்
இங்கு உன்னாலே இன்னேரம் உண்டானது
மூக்குத்தி பூமேலே காத்து
உக்காந்து பேசுதய்யா.... ஆஹா
அது உக்காந்து பேசையிலே
தேனு உள்ளூர ஊர்றுதய்யா... ஓஹா..
அது ஏந்தான் புரியலையே
அதை நான் தான் அறியலையே
ஒரு மோகம் ஒரு தாகம்
இங்கு உன்னாலே இன்னேரம் உண்டானது
மூக்குத்தி பூமேலே காத்து
உக்காந்து பேசுதம்மா...
மேற்க்காலே போகின்ற மேகங்களே
மண்ணில் வாருங்களேன் மழை
தாருங்களேன்
உடல் சூடாச்சி பாருங்களேன்
மேற்க்காலே போகின்ற மேகங்களே
மண்ணில் வாருங்களேன்
மழை தாருங்களேன்
உடல் சூடாச்சி பாருங்களேன் [2]
மழை மேகம் நானாகவா மலர் தேகம்
நீராட்டவா
மடி ஏந்தி தாலாட்டவா மனமார
சீராட்டவா
வெறும் ஏக்கம் ஆகாதம்மா விட்டு போகாதம்மா
நான் கொஞ்சாம தீராதம்மா.....
ஆமா....
மூக்குத்தி பூமேலே காத்து
உக்காந்து பேசுதய்யா
கல்யாணம் கச்சேரி ஊர்கோலமும்
ஒரு பூமாலையும்
சிறு பொன்னூஞ்சலும்
அடி நான் காண நாளாகுமோ [2]
திருநாளும் தானே வரும்
உனைதேடி தேனே வரும்
வரும்போது ஓலை வரும்
அது வந்தா மாலை வரும்
அட நானும் உன்போலத்தான்
அத கொண்டாடத்தான்
எதிர்பார்த்தேனே நன்னாளை தான்...
ஆமா..
மூக்குத்தி பூமேலே காத்து
உக்காந்து பேசுதம்மா…
இதே பாட்டுக்கு ஒரு பேதோஸ்
வர்ஷனும் இருக்கு. ஆனா மகிழ்ச்சியான பாடலையே கேட்போமே…. காலங்காத்தால எதுக்கு ஒரு
சோகம்!
என்ன நண்பர்களே, ரசித்த பாடலில்
பகிர்ந்து கொண்ட இந்தப் பாடல் உங்களுக்கும் பிடிக்குமா, பாடல் பற்றிய உங்கள்
எண்ணங்கள், நினைவுகளைச் சொல்லுங்களேன் – பின்னூட்டத்தில்!
மீண்டும் ச[சி]ந்திப்போம்…
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.
குட்மார்னிங் வெங்கட்... பதிவு இரண்டு முறை பேஸ்ட் செய்யப்பட்டிருக்கிறது.
பதிலளிநீக்குகாலை வணக்கம் ஸ்ரீராம்.
நீக்குசரி செய்து விட்டேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
அப்பா அம்மாவோடு படம் பார்ப்பது பற்றிச் சொல்லும்போது ஒரு அனுபவம். ஒரு தலை ராகமும், சங்கராபரணமும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆனது என்று நினைவு. அதற்கு டிக்கெட் கிடைக்காதபோது வேறு என்ன படம் போகலாம் என்று அப்பா கேட்க, நான் இந்தப் படத்தைப் பற்றி நண்பர்கள் ஆஹா ஓஹோ என்று பேசுவதாகச் சொல்ல, அவர்கள் இருவரும் அந்தப் படத்துக்குச் சென்று வந்து... முறைத்த முறைப்பு இருக்கிறதே...!
பதிலளிநீக்குஹாஹா... முறைப்பு இன்னிக்கு நினைத்தாலும்...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
கவர்ஃபோட்டோவில் உள்ள மாளிகை எது? மலைச்சாரலில் மாளிகை! அருமையாக உள்ளது.
பதிலளிநீக்குஉதய்பூர் லேக் பேலஸ்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
இந்தப் பாடல் "பட்டிக்காடா பட்டணமா? ரெண்டுங்கெட்டான் லட்சணமா? பாடலிலிருந்து பாடல் டியூனிலிருந்து எடுக்கப்பட்டது என்று கங்கை அமரன் ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார்! இதன் சோக வெர்ஷன் எஸ் பி பி பாடி இருப்பார்.
பதிலளிநீக்குஆமாம் சோக வெர்ஷன் எஸ்.பி.பியின் குரலில். அதுவும் நன்றாகவே இருக்கும்.
நீக்குஆஹா - அந்த ட்யூனிலிருந்து எடுத்ததா.... தகவலுக்கு நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
இனிமையான பாடல்...
பதிலளிநீக்குநடனப் புயல் போல் ஆடினால், நமக்கு நல்லதொரு உடற்பயிற்சி...!
உடற்பயிற்சி! ஹாஹா...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
"நடனப்புயல்" ஹா.. ஹா.. ஹா.. ஒரு நடிகனை இப்படியும் அசிங்கப்படுத்த முடியுமா ?
பதிலளிநீக்குநடனமாடியதால் மகிழ்ச்சியாக்குகிறாரே.... இது நல்ல விஷயம் தானே...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
பாக்கியராஜ் நடனமாடியிருக்கிறாரா அங்குமிங்கும் போகிறார் வருகிறார் வருகிறார் நடனமேதுமில்லையே
பதிலளிநீக்குஹாஹா... அது தான் நடனம்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
இந்தப் படம் எண்பதுகளில் வந்ததுனு நினைக்கிறேன். அப்போத் தான் சிகந்திராபாதில் இருந்து மறுபடி சென்னைக்கு மாற்றலாகி வந்திருந்தோம். கூட்டம் கூட்டமாக மக்கள் இந்தப் படத்தைப் போய்ப் பார்த்தார்கள். அப்போதெல்லாம் பாக்யராஜ் என்றாலே எல்லாரும் படத்துக்கு முன்பதிவு செய்து கொண்டு போய்ப் பார்ப்பார்கள். நாங்க ராஜஸ்தானிலும் சிகந்திராபாதிலும் ஆர்மி தியேட்டரில் படம் பார்ப்போம்! :)))) ஒரு ரூபாயோ என்னமோ எங்களுக்கு! அதிகாரிகள் என்பதால். ராணுவ வீரர்கள் அவங்க குடும்பத்துக்கு டிக்கெட் எல்லாம் கிடையாது. நகருக்குள் உள்ள தியேட்டர்களில் நாங்க படம் பார்க்கச் சென்றாலும் 20 ரூ டிக்கெட் (அப்போ பால்கனி 20 ரூ) எங்களுக்கு 5 ரூ. தான். அவங்க என்ன படம் போடறாங்க என்பதே சஸ்பென்ஸா இருக்கும். தமிழ்ப் படம்னு போயிட்டு கன்னடமோ, தெலுங்கோ பார்த்ததும் உண்டு. பல சமயங்களில் தமிழ்ப்படங்களைத் தலைகீழாய்ப் போட்டுப்பார்த்ததும் உண்டு! அந்த அனுபவங்கள் எல்லாம் ரசிச்சு அனுபவிச்சுட்டு இங்கே கூட்டத்திலே இடிச்சுப் பிடிச்சுண்டு போறாங்களேனு ஆச்சரியமா எங்க குழந்தைங்க பார்ப்பாங்க! அவங்க தியேட்டரே பார்த்ததில்லை அது வரைக்கும்! :)))) ராணுவத் தியேட்டர்கள் எல்லாம் டூரிங் மாதிரித் தான்! :)))) ராத்திரி எட்டு மணிக்குத் தான் படம் ஆரம்பிக்கும்.
பதிலளிநீக்குஉங்கள் அனுபவங்களையும் இங்கே பகிர்ந்தது சிறப்பு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
பெண்கள் எம்.ஜி.ஆருக்குப் பின்னர் மிகவும் ரசித்துப் பார்த்த நடிகர் பாக்யராஜாகத் தான் இருக்கும். எம்.ஜி.ஆர். மற்றும் ஹிந்தியில் ராஜ்கபூர் ஆகியவர்களைப் போலத் தான் பாக்யராஜும். ஜிவாஜி மாதிரி எல்லாம் நெகடிவான கதாபாத்திரங்களில் நடிக்க மாட்டார். நல்லவனாக மிக நல்லவனாக ஒரு தியாகியாகத் தான் நடிப்பார். ஆனால் அப்பாவியாக இருப்பார். அதோடு தன்னைப் பற்றி ஓர் அனுதாப அலையை உருவாக்கிப்பார். இதில் எம்.ஜி.ஆருக்குப் பின்னர் தமிழில் பாக்யராஜ்! ராஜ்கபூரைப் போல் ஹிந்தியில் வேறே யாரும் இல்லைனு நினைக்கிறேன்.
பதிலளிநீக்குபாக்கியராஜுக்கு அப்போதே ஒரு டூப்ளிகேட் இருந்தார் தெரியுமோ அக்கா? அப்படியே பாக்யராஜை இமிடேட் பண்ணி நடித்து சில படங்கள் வெளிவந்தன. யோகராஜோ என்னவோ பெயர்!
நீக்குஓஓ, அப்படியா? தெரியாதே! என்ன படங்கள்?
நீக்குபடம் பெயர் எல்லாம் நினைவில்லை அக்கா... ஆனால் பார்க்கக் கடுப்பாய் இருக்கும்! அந்தப் படங்களும் ஓடின!
நீக்குஆஹா பெண்களுக்குப் பிடித்த நடிகரா இவர்.... அப்படி என்றால் நான் அடக்கி வாசிக்க வேண்டும்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
பாக்யராஜுக்கு ஒரு டூப்ளிகேட் வேற இருந்தாரா.....
நீக்குஎத்தனை தகவல்கள் உங்களிடம்.... வியப்பாக இருக்கிறது ஸ்ரீராம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஆஹா நான் கேட்க நினைத்தேன். நீங்கள் கேட்டாச்சு....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
அட உங்களுக்கும் நினைவில்லையா.... அந்தப் படங்கள் ஓடினவா! நம் ஊரில் எல்லா படமும் ஓடும்! சினிமா மோகம் அப்படி!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
இந்த பாடலை என் மகன் மலழை மொழியில் பாடுவான், அப்புறம் இன்னொரு பாடல் , டாடி டாடி என்ற பாடல் அதுவும் இந்த படத்தில் தான். தாத்தா, பாட்டி எல்லாம் சிரிப்பார்கள் அவன்பாட்டை கேட்டு.
பதிலளிநீக்குஇந்த படம் வந்த சமயம் இப்படி யாராவது நடனம் ஆடுவார்களா என்று பேசி கேலி செய்தார்கள். பத்திரிக்கை விமர்சனங்களில்
கோமதி, ஆரம்பகாலத்து சூர்யாவும், விஜயும் டான்ஸ் ஆடிப் பார்த்திருக்கீங்களா? சகிக்காது. விஜயின் ஆட்டத்தைப் பற்றிக் குமுதம் விமரிசனம் படிச்ச எஸ்.ஏ. சந்திரசேகர் அப்புறமா எஸ்.ஏ.பியைத் தொடர்பு கொண்டு மன்னிப்புக் கேட்க வைத்தார் என்பார்கள். நிஜமா என்ன எனத் தெரியாது. சூர்யாவைக் கல்கி கன்னாபின்னாவென விமரிசனம் செய்ய அவர் அதை ஒரு சவாலாக ஏற்று முறையாக நடனம் பயின்று பின்னர் அதே கல்கி வாயால் சபாஷ் வாங்கியதை கல்கியிலே அவரது நினைவுகள் பத்தி எழுதின தொடரில் குறிப்பிட்டிருந்தார். பாக்யராஜ் ஆடினால்! வேணாம்,வேணாம், நான் அந்த வீடியோவைப் பார்க்கவே இல்லை! :))))
நீக்குஹாஹா... இந்தப் பாடல் உங்கள் நினைவுகளையும் மீட்டெடுத்து இருக்கிறது. மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
விஜய், சூர்யா - ஆரம்பக் கால படங்கள் - என்ன சொல்ல. இப்போது வரைக்கும் எனக்கு ஏனோ விஜய் படங்கள் பிடிப்பதில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா..
vijay first padam , naalaya theerpu athukku thaan Kumudam review 1 page Vijay padam pottu " intha moonjia ellam kaasu kuduthu paakanuma " appadinnu one line review ....
பதிலளிநீக்குhttp://www.behindwoods.com/tamil-movies-cinema-fans-column/why-vijay-reigns-supreme-over-other-actors-of-this-generation.html
சரவ்.... உங்கள் முதல் வருகையோ? மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇந்தப் பாடல் அடிக்கடி கேட்டிருக்கிறேன். பாடல் ஒரளவு நன்றாக இருக்கும். நடிகர் பாக்கியராஜ் படங்கள் சில அவரது நடிப்புக்காவும், கதைக்காகவும் காமெடிக்காவும் நன்றாக ஓடியது. அந்த மாதிரி படங்களில் இதுவும் ஒன்றான நினைக்கிறேன். நீங்கள் சொன்னபடி தைரியத்துடன் இப்போதும் இப்பாடலை கண்டும் கேட்டும் ரசித்தேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!
நீக்குஎனக்கு பிடிச்ச பாட்டு. சரிதா அழகா இருப்பாங்க இந்த படத்தில்..
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
நீக்குஅழகான பாடல் அண்ணா...!
பதிலளிநீக்குநான் இந்த பாடலை ரசித்துள்ளேன்.!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அஜய்.
நீக்குஅருமையான பாடல் வெங்கட்ஜி....ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் கேட்கிறேன்
பதிலளிநீக்குகீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
நீக்கு