Photo
of the day Series – Part 10
கடந்த வாரத்தில் #Photo_of_the_day
என்ற தலைப்பில் முகநூலில் பகிர்ந்து கொண்ட படங்களின் தொகுப்பு இந்த ஞாயிறில் இதோ
உங்களுடன்…. இங்கேயும் ஒரு சேமிப்பாக…
படம்-1: எடுத்த இடம் – Bபேடா Gகாட், ஜபல்பூர்,
மத்தியப் பிரதேசம், ஜனவரி 2012.
இயற்கையால் மனிதனின்
தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். பேராசையை ஒரு போதும் பூர்த்தி செய்ய முடியாது –
மஹாத்மா காந்தி.
இந்தப் படம் மத்தியப்
பிரதேசத்தில் ஜபல்பூர் மாவட்டத்தின் பேடாகாட் பகுதியில் நர்மதா நதியில் செய்த படகுப்
பயணத்தின் போது எடுத்தது. இயற்கையின் எழிலை என்ன சொல்ல…
ஆனால் இயற்கை சீற்றம்
கொள்ளும் போது நம்மால் தாங்க முடிவதில்லை.
கேரளத்தின் தற்போதைய நிலை – இயற்கையின் சீற்றம் – அதில் மனிதர்களின் அரசியல்
விளையாட்டும் கலந்து கொள்ள பேரழிவு தான் மிச்சம்.
கேரள மக்களுக்கு இந்த நேரத்தில் தேவை அன்பும் அரவணைப்பும்…..
படம்-2: எடுத்த இடம் – குல்லு, ஹிமாச்சலப் பிரதேசம்
செல்லும் வழியில்….
சுயவலிமை உனக்குள் தான்
இருக்கிறது. அதை அடுத்தவன் அளந்து கொடுப்பான் என கனவு கண்டு சீரழிந்து போகாதே.
நம்பிக்கை – நம் மீது
நாமே நம்பிக்கை கொள்ளாவிட்டால் அடுத்தவர் நம்மை எப்படி நம்புவார்கள். நம்மால் முடியும்
என்ற நம்பிக்கை கொள்வோம்.
படம்-3: எடுத்த இடம் – ஏரோவில், புதுச்சேரி – மே 2018
உங்களுக்கு ஒன்று சொல்கிறேன்
– மன அமைதி வெண்டுமானால் யாருடைய குறையையும் காணாதீர்கள். உங்கள் குறைகளையே பாருங்கள்
– அன்னை சாரதா தேவி.
ரொம்பவே கஷ்டமான விஷயம்
தான் – நம் குறை நமக்குத் தெரிவதில்லையே…. தெரிந்தாலும் தெரியாத மாதிரியே இருக்கிறோம்.
படம்-4: எடுத்த இடம் – பீதம்புரா தில்லி ஹாட், தில்லி
– ஆகஸ்ட் 2018.
நட்பில்
மனஸ்தாபங்கள் வருவது இயல்பு. அதனைப் பேசித் தீர்த்துக் கொள்வது நல்லது. பேசாமல்
இருந்துவிட்டால் ஒரு நல்ல நட்பை இழக்க நேரிடும்.
படம்-5: எடுத்த இடம் – பீஷ்ம குண்ட், குருக்ஷேத்ரா,
ஹரியானா
வெற்றியோ, தோல்வியோ எதுவரினும்
கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும் போது பகைவனும்
நம்மை மதிக்கத் தொடங்குவான் – பி.ஆர். அம்பேத்கர்.
கண்களில் அப்படி ஒரு
தீர்க்கம். படம் எடுத்து சில வருடங்கள் ஆகிவிட்டன. இன்றைக்கு எப்படி இருப்பார் இச்சிறுமி.
படம்-6: எடுத்த இடம் – திருவரங்கம், தமிழ்நாடு
மகிழ்ச்சியைச்
சேமித்து வைப்பதில் எந்தப் பயனும் இல்லை, அவ்வப்போது மற்றவர்களுடன் பகிர்ந்து
கொள்ளுங்கள்.
படம்-7: எடுத்த இடம் – சூரஜ்குண்ட், ஹரியானா.
நல்லவர்களின்
நட்பைத் தேடிச் செல்லுங்கள். இதனால் மனதிலுள்ள அறியாமை நீங்கிவிடும் – ரமண
மகரிஷி.
பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்குப்
பிடித்திருந்ததா என்பதைச் சொல்லுங்களேன். படங்களில் உங்களுக்குப் பிடித்த படம்
எது, படம் பார்த்த போது தோன்றிய எண்ணம் என்ன என்பதையும் சொல்லுங்கள் – முடிந்தால்
கவிதையாகவும் எழுதலாமே – பின்னூட்டத்தில்….
இதுவரை Photo of the Day Series-ல்
வெளியிட்ட படங்கள் அனைத்தையும் பார்க்க, கீழுள்ள சுட்டியைச் சுட்டலாம்!
மீண்டும் ச[சி]ந்திப்போம்…
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.
எல்லாப் படங்களும் அருமை. முதல் படம் வெகு அருமை. இயற்கையின் அழகைக் கண்ணாரக் காண முடிந்தது. குழந்தைகள் இருவருமே பொக்கிஷங்கள். மனதை அமைதிப் படுத்தும் சிரிப்பு.
பதிலளிநீக்குஇயற்கையின் அழகு.... உண்மை. இப்படி இயற்கையை ரசிக்கவும் வேண்டும்....
நீக்குகுழந்தையின் சிரிப்பு மனதை அமைதிப்படுத்தும்... அதுவே நம் எல்லோரின் தேவையும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
படங்கள் அழகு
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குஒன்றை ஒன்று விஞ்சும் படங்கள். உங்கள் ரசனைக்கு பாராட்டுகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குபடங்கள் அனைத்தும் அழகு... அதைவிட அதன் சிந்தனைகள் சிறப்பு...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குமிக அருமையான தொகுப்பு.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
நீக்குஅருமையான படங்கள்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.
நீக்குமிக அழகான படங்கள், குழந்தைகள் படம் அருமை.
பதிலளிநீக்குகுழந்தையின் சிரிப்பு மனதை கவரும் தான்.
//மகிழ்ச்சியைச் சேமித்து வைப்பதில் எந்தப் பயனும் இல்லை, அவ்வப்போது மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.//
ஆமாம் நீங்கள் சொல்வது உண்மை,
மகிழ்ச்சி அலை பரவ கூடியது.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்குபடங்கள் அழகு என்று சொல்லத்தேவை இல்லை அழகில்லாவிட்டால்தான்சொல்ல வேண்டும் பாராட்டுகள்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
நீக்குசூரஜ்குண்ட், ஹரியானாவில் எடுத்த சிற்பம் பிரமிக்க வைக்கிறது. குனிந்து நிற்கும் அந்தக் குழந்தையை எத்தனை அழகாய் வடித்திருக்கிறார்கள்! பீஷ்ம குண்ட், ஹரியானாவில் எடுத்த அந்த சிறுமியின் புகைப்படம்! உண்மை தான்! அந்தக் கண்கள் உண்மையிலேயே தீர்க்கமான கண்கள் தான்!!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.
நீக்குபடங்கள் அருமை.
பதிலளிநீக்குஇலைகள் இல்லா மரத்தில் இரண்டு மூன்று பூக்கள் மட்டும்!
அந்த பொம்மைகளைப் பார்த்தால் தமிழ்ப் பேய்ப்படங்கள் நினைவுக்கு வருகின்றன
மாலை வணக்கம். நலம் தானே....
நீக்குதமிழ்ப் பேய்ப்படங்கள் நினைவுக்கு வந்தனவா... ஹாஹா...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஒவ்வொரு படங்களும் மிக அழகு. முதல் படம் இயற்கையின் அழகை என்னவென்று வியப்பது? குழந்தைகளின் படங்கள் மிக அழகு.. படங்களின் அடியில் எழுதியுள்ள நீதி வாசகங்கள் அருமை. நல்ல பயனுள்ள ஒரு தொகுப்பு. பகிர்வுக்கு மிக்க நன்றி.
தாமதமாக வந்து கருத்திடுகிறேன். மன்னிக்கவும்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தாமதமே இல்லை. எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம் என்பது தானே இதில் வசதி! மன்னிப்பு எல்லாம் எதற்கு! தேவையே இல்லையே. உங்களுக்கு முடிந்த போது வரலாம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!