கேரளம் – கடவுளின் தேசம் – நண்பர் பிரமோத்
கேரளத்தினைச் சேர்ந்தவர் – தனது மாநிலம் பற்றிச் சொல்லும்போது எங்கள் ஊரில் இல்லாதது
இல்லை – அத்தனை இயற்கைச் செல்வங்களும் எங்கள் ஊரில் உண்டு – சுற்றுலா செல்ல
என்னென்ன தேவையோ அத்தனையும் எங்களிடம் உண்டு என்று பெருமையாகச் சொல்வார். அழகான
மலைப்பிரதேசங்கள், கடல், ஆறுகள், நீர் நிலைகள், கோவில்கள், காடுகள் – எதைச் சொல்ல எதை
விட – அனைத்தும் கொண்டது கேரளம். கடவுளின் தேசம் என்று சும்மாவா சொன்னார்கள். நானும்
கடவுளின் தேசத்தின் அழகினை, பேரெழிலை நேரிலே கண்டவன் என்ற முறையில், தமிழகம்,
தில்லி என்ற வரிசையில் மிகவும் பிடித்த இடமாகக் கேரளமும் உண்டு.
கடவுளின் தேசம் – ஆனால் இயற்கையின்
சீற்றத்தினால் பேரழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது கடந்த சில நாட்களாக.
தொடர்ந்து கொண்டிருக்கும் அதீத மழைப்பொழிவு – ஒரே சமயத்தில் பல அணைகளிலிருந்து
நீர் திறக்கப்பட – எங்கெங்கும் தண்ணீர்…. Water Water everywhere but not a drop
to drink என ஒரு ஆங்கிலப் பழமொழி உண்டு. அது தான் இன்றைய நிலை. குடிதண்ணீர், உணவு,
அத்தியாவசமான மருந்துகள், உடை என எதுவும் இல்லாமல் அவதிப்படும், அல்லல்படும்
மக்கள் எங்கெங்கும் நிறைந்து விட்டார்கள். ஆளும் கட்சியும், எதிர் கட்சியும்
சேர்ந்து இழப்புகளைப் பார்வையிடுகிறார்கள், வேண்டிய உதவிகளைச் செய்து
கொண்டிருக்கிறார்கள் – என்றாலும் அழிவின் ஆதிக்கம் இப்போது மிக மிக அதிகம். இந்த
நேரத்தில் கேரள மக்களுக்குத் தேவை அன்பும், அரவணைப்பும் மட்டுமே. இந்த நேரத்திலும்
அரசியல் செய்து கொண்டிருப்பதில் பலன் இல்லை. எல்லா விதங்களிலும் உதவி
தேவைப்படுகிறது அவர்களுக்கு. நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய வேண்டியது நம்
ஒவ்வொருவரின் கடமையும் கூட.
நூற்றுக்கணக்கான மனிதர்கள் தங்கள்
உயிரினை இழந்திருக்கிறார்கள். இன்னும் அந்த எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது. பல
வீடுகள் முழுவதுமாக சேதமாகி இருக்கிறது. சாலைகள், பாலங்கள், மருத்துவமனைகள் என
இழப்பின் அளவு பேரிடராக மாறி இருக்கிறது. இந்த நேரத்தில் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு
விதத்தில் பாதிக்கப்பட்ட மனிதர்களுக்கு உதவி செய்ய உதவிக் கரம் நீட்ட வேண்டும்.
தமிழகத்திலும் இப்போது சில பகுதிகள் வெள்ளத்தில் பாதிப்பினைச் சந்தித்துக்
கொண்டிருக்கிறது. இயற்கையை மதிக்க மறந்ததை, இப்படி அழிவின் மூலம் காண்பித்துக்
கொண்டிருக்கிறது இயற்கை. இயற்கையின் பலத்திற்கு முன் மனித சக்தி எம்மாத்திரம்
என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறது இயற்கை. மனிதன் இன்னமும்
மாறவே இல்லை என்பது தான் சோகம்.
தமிழகத்தின் தலைநகர் சென்னையில்
வெள்ளம் வந்தபோது எத்தனை ஈடுபாட்டுடன் செயல்பட்டு உதவிகளைச் செய்தோமோ, அதை விட
அதிக அளவில் செயல்படத் தேவை இப்போது. பலரும் பல தளங்களிலும் உதவிகளைச் செய்து
கொண்டிருக்கிறார்கள். நண்பர் மணிகண்டன், “நிசப்தம்” அறக்கட்டளையின் மூலம்
உதவிகளைச் செய்ய ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார். தகவல்கள் அவரது தளத்தில்
பதிவுகளாக வந்து கொண்டிருக்கிறது. இரண்டு பதிவுகளின் சுட்டி மட்டும் கீழே…
திருச்சி மாநகராட்சியும் பொருட்களை
அவர்கள் அலுவலகத்தில் கொண்டு கொடுத்தால் கேரளாவிற்கு அனுப்புவதாக சொல்லி
இருக்கிறார்கள். திருவரங்கத்தில் எங்கள் குடியிருப்பில் இருப்பவர்களும் பொருட்களைச்
சேகரித்து மாநகராட்சி அலுவலகத்தில் கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து
கொண்டிருக்கிறார்கள். பல மாநில அரசாங்கங்கள் கேரள அரசிற்கு உதவிக்கரம் நீட்டி
இருக்கிறார்கள். மத்திய அரசும் மொத்தம் 600 கோடி ரூபாய் உடனடி நிவாரண நிதியாகவும்,
மேலும் பல திட்டங்களின் மூலம் உதவிகளும் செய்ய உத்தரவு இட்டிருக்கிறார்கள். தவிர
இறந்தவர்களின் குடும்பத்திற்கு, பிரதம மந்திரியின் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 2
லட்சம் தருவதற்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்கள்.
பல தனியார் பத்திரிகைகள்,
நிறுவனங்கள் இந்த நேரத்தில் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பணம் சேகரிக்க
வாய்ப்பிருக்கிறது. அதனால் பண உதவி என்றால் அரசாங்கத்தின் தளங்களில் நேரடியாகச்
செய்வதே நல்லது. பண உதவி செய்ய விரும்புவர்கள் நேரடியாக கேரள அரசாங்கத்தின் Chief
Minister’s Distress Relief Fund தளத்தின் மூலம் நிதி அளிக்கலாம். அதற்கான தளம்
கீழே….
இந்த நேரத்தில் அரசியல் செய்ய
வேண்டாம்! முகநூல், வாட்ஸப் மூலம் தவறான செய்திகளைப் பரப்பி மக்களை அதிர்ச்சிக்கு
உள்ளாக்காமல், உதவி செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொள்வது மிக முக்கியம். இந்த
நேரத்தில் அவர்களுக்குத் தேவை அரசியல் அல்ல – அன்பும் அரவணைப்பும் மட்டுமே என்பதை
புரிந்து கொள்வோம். பேரிடர் காலங்களிலாவது அரசியலையும் ஆன்மீகத்தையும் விட்டுவிடுவோம்.
இப்போதைய அவசியத் தேவை – மனிதம் மட்டுமே என்பதைப் புரிந்து கொள்வோம்...
மீண்டும் ச[சி]ந்திப்போம்…
நட்புடன்
வெங்கட்
புது தில்லி.
பின்
குறிப்பு: பிளாக்கர் பாபாவின் கணக்குப்படி இந்தப் பதிவு
என்னுடைய 1700-வது பதிவு! அனைவருக்கும் நன்றி!
முதல்லே ஆயிரத்து எழுநூறாவது பதிவுக்கு வாழ்த்துகள். விரைவில் 2000 தாண்டவும் பிரார்த்தனைகள். அனைத்தும் அர்த்தமுள்ள பதிவுகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
நீக்குகேரளம், கர்நாடகாவின் குடகு மாவட்ட மக்களுக்கு இப்போது தேவையான அன்பையும், அரவணைப்பையும் எல்லாவற்றுக்கும் மேலாக உதவிக்கரங்களையும் கொடுத்து உதவுவோம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
நீக்குகுட் மார்னிங் வெங்கட்.
பதிலளிநீக்கு2015 டிசம்பரில் சென்னை பார்த்ததைவிட அதிக பேரிழப்பு இந்தக் கேரள வெள்ளம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்மாலான உதவிகள் செய்வது அத்தியாவசியம்.
கேரளா, கர்நாடகா மட்டுமன்றி வடக்கிலும் பல மாநிலங்களில் பாதிப்பு இருக்கிறது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நான் பார்த்த ஒரு காணொளியில் ஒரு நண்பர் அந்த வெள்ள நீரில் குனிந்து நிற்க, அவர் மேல் ஏறி பெண்களும் குழந்தைகளும் படகுக்குள் ஏறிக் கொண்டிருந்தார்கள். அவர் முகம் நீர் மட்டத்துக்கு வெகு வெகு அருகே...
பதிலளிநீக்குHe is a fisherman.
நீக்குஇப்படி மனதைத் தொட்ட படங்கள் நிறையவே உண்டு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
மேலதிகத் தகவலுக்கு நன்றி கீதாம்மா...
நீக்குபிரசவ வலியில் துடித்த ஒரு பெண்ணுக்கு காப்பாற்றப்பட்டவுடன் பிரசவம் நிகழ்ந்திருக்கிறது. ஒரு நடிகர் தனது திருமண ஏற்பாட்டைப் புறம்தள்ளி உதவியில் இறங்கி இருக்கிறார். இன்னொரு நடிகர் தனது வீட்டில் அடைக்கலமாக அக்கம்பக்கத்து ஏழை மக்களுக்காக அவர் வெளியே செல்லாமல், அவரே ஆபத்தில் மாட்டிக் கொண்டிருந்திருக்கிறார்.
பதிலளிநீக்குIn a Naval Hospital!
நீக்குமனிதம் வெளிப்பட்ட தருணங்கள் இப்படி எத்தனை எத்தனை. அனைவருக்கும் வாழ்த்துகள்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
மேலதிகத் தகவலுக்கு நன்றி கீதாம்மா...
நீக்குஒரு வாலிபர் துணியை வீசி ஹெலிகாப்டரைக் கீழே வரச்சொல்ல, அவர்கள் தன்னைக் காப்பாற்றும்படி கோருகிறார் என்று நினைத்து இறங்க வழியில்லாத நிலையிலும் கஷ்டப்பட்டு ஹெலியை கீழே இறக்கிச் செல்ல, அவர் தனது பாக்கெட்டிலிருந்து மொபைலை எடுத்து செல்ஃபி எடுத்துக்கொண்டு அவர்களைக் கிளம்பச் சொன்ன அவலமும் நடந்திருக்கிறது.
பதிலளிநீக்குஇப்படியும் சில எரிச்சல்கள்.... இவர்களை தண்ணீரில் தள்ளி விடலாம்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
1700 வது பதிவுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும். மென்மேலும் உயர வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்குகருத்து வேறுபாடு மறந்து இந்த தருணத்தில் உதவுவதே மனிதநேயம்.
பதிலளிநீக்குஉதவுவது தமிழனின் மரபு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குஅரசியலையும்
பதிலளிநீக்குஆன்மீகத்தையும் விட்டுவிட்டு
ஒன்றுபட்டு செயலாற்றவேண்டிய தருணம் இதுதான் ஐயா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்கு1700 வது பதிவிற்கு வாழ்த்துகள் ஐயா
பதிலளிநீக்குதொடரட்டும் தங்களின் அற்புதப் பதிவுகள்
தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குஅரசியலையும் ஆன்மீகத்தையும் விட்டுவிடுவோம். இப்போதைய அவசியத் தேவை – மனிதம் மட்டுமே என்பதைப் புரிந்து கொள்வோம்... என்பது நூற்றுக்கு நூறு நாம் உணரவேண்டியது. 1700க்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குபல குழந்தைகள் தங்களின் சிறுசேமிப்பு பணத்தை எல்லாம் அனுப்பி உள்ளார்கள்... இரக்க குணம் வளரட்டும்...
பதிலளிநீக்கு1700 பதிவிற்கு வாழ்த்துகள்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்கு1700வது பதிவுக்கு வாழ்த்துகள் வெங்கட்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நீக்குபடங்கள் அனைத்தும் மனதை பிசைய வைக்கின்றன! மனிதாபிமானம் எங்கும் தொடரட்டும்!!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.
நீக்கு1700வது பதிவிற்கு இனிய வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் மேடம்.
நீக்குஇடருறும் பேர்களுக்கு உதவுகிறோம் என்று சொல்லி பழைய ஆடைகளைக் கொடுக்கிறார்கள் அவற்றைப் பெரும் மக்கள் அதை உபயோகிஇக்க விரும்புவார்களா என்பதயும் சிந்திக்க வேண்டும் பெரிஷபிள் பொருட்களைத் தவிர்க்கலாம் கூடியவரை ப்ணமாகக் கொடுக்கலாம் தேவைப்பட்டபடி அதைஉபயோகிக்கும் பொறுப்பு நிர்வகிப்பவர்களுக்கு இருக்கிறது என்று நம்புவோம் எனக்கு சில வாட்ஸாப் செய்திகள் வந்தது முல்லைப்பெரியாராணை உடிந்தால் ஏற்படும் விபரீதங்களை அதீத கற்பனையோடு எழுதி இருந்தார்கள் பயமுறுத்தல்கள் இவற்றை ஃபார்வார்ட் செய்வதை தவிர்க்கலாம்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
நீக்கு1700 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குஇயற்கையின் சீற்றம் எப்போது குறையுமோ!
இறைவனிடம் வேண்டுவோம்.
மனிதநேயம் மிக்க அன்பர்கள் உதவிக்கு நன்றிகளும், வாழ்த்துக்களும்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
நீக்குகேரளாவில் வெள்ளம் வடிந்து வரும் வேளையில் வீடு முழுக்க சேறு, வீட்டுக்குள் பாம்பு மாதிரியான விச ஜந்துகள்ன்னு பார்க்கும்போதே மனம் பதறும் வேளையில், ஓடும் தண்ணியிலும் சாராய வியாபாரம் ஜோரா நடக்குது. அதை பத்திய காணொளியும் இணையத்தில் வருவதை பார்க்கும்போது மனசு வேதனைப்படுது சகோ
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.
நீக்கு