ஞாயிறு, 7 மே, 2023

வாசிப்பனுபவம் - உன்னில் உறைந்தவன் நானே - ராஜேஸ்வரி.டி.


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

IF SOMEONE MAKES YOU HAPPY, MAKE THEM HAPPIER. 


******



 

சஹானா இணைய இதழின் வாசிப்புப் போட்டிக்காக, நான் படித்த, முகநூலில் கருத்துரை பகிர்ந்து கொண்ட ஒரு மின்னூல் ராஜேஸ்வரி.டி. அவர்கள் எழுதிய “உன்னில் உறைந்தவன் நானே” எனும் மின்னூல். மின்னூல் குறித்து இன்றைய பதிவில் பார்க்கலாம் வாருங்கள்! 

 

வகை: நாவல்

வெளியீடு: அமேசான் கிண்டில்

பக்கங்கள்: குறிப்பிடப்படவில்லை

விலை: ரூபாய் 350/-

மின்னூல் தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே:

 

உன்னில் உறைந்தவன் நானே.. (Tamil Edition) eBook : D, Rajeswari: Amazon.in: Kindle Store

 

******* 

 

குடும்பம், காதல், மோதல், சூழ்ச்சி, நட்பு என அனைத்தும் கலந்த ஒரு குடும்ப நாவலை மின்னூலாக வெளியிட்டு இருக்கிறார் நூலாசிரியர்.  வழக்கம் போல மோதலில் ஆரம்பிக்கிறது கதாநாயகி பூர்ணி என்கிற பூர்ணிமா மற்றும் ரஞ்சனின் காதல்.  பூர்ணியின் குடும்பத்தில் மொத்தம் மூன்று சகோதரிகள், அம்மா அப்பா!  ரஞ்சனின் குடும்பத்தில் அவனும் அவனது சகோதரியும் மட்டும். பெற்றோரை விபத்தில் பறிகொடுத்தவன்.  ரஞ்சன் - பூர்ணி - மோதல்/காதல் ஒரு புறம் இருக்க இன்னும் சில காதல் ஜோடிகள் கதையில் உண்டு! ஒவ்வொருவரின் காதலும் ஒவ்வொரு ரகம். ஐந்து விரல்களும் ஒன்று போல இருப்பதில்லையே! அதே போல ஒவ்வொரு காதல் ஜோடியும் ஒவ்வொரு ரகம்! 

 

பொதுவாக காதல் மோதலில் ஆரம்பித்தாலும், அந்தக் காதல் ஜெயிக்க வேண்டும் என்பதே வாசிப்பவருடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்தக் கதையிலும் அப்படியே ஒரு எதிர்பார்ப்புடன் தான் படித்துக் கொண்டு வந்தேன்.  காதலர்களின் பொருளாதர நிலையில் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கும் போது அந்தக் காதல் ஜெயிக்காது என்ற நிலையே பெரும்பாலும் இருக்கிறது! இந்தக் காதல் ஜெயித்ததா?  சூழ்ச்சிகள் பலவற்றை செய்த வில்லியாக சித்தரிக்கப்பட்டு இருக்கும் ரஞ்சனின் அத்தையின் சூழ்ச்சிகள் பலித்ததா?  போன்ற கேள்விகளுக்கான பதிலை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் மின்னூலை வாசித்துத் தெரிந்து கொள்ளலாமே!

 

பொதுவாக நான் படிக்கும் பல மின்னூல்களில் வரும் விஷயத்தினை இந்த மின்னூலிலும் கண்டேன்.  இதைச் சொல்ல வேதனையாக இருந்தாலும் சொல்லி விடுகிறேன் - ஏகப்பட்ட எழுத்துப் பிழைகள்! “கொள்கிறேன்” என்பதை “கொல்கிறேன்” என்று தட்டச்சு செய்து வாசிப்பவரைக் கொல்கிறார்! ”ழ” வரும் பல இடங்களில் “ல” வருகிறது! - வம்பிழுக்கிறேன் - வம்பிலுக்கிறேன்! இப்படி பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.  வழமை போல நானும் ஊதுகிற சங்கை ஊதிவிடுகிறேன்.  தட்டச்சு செய்த பிறகு வாசித்துப் பார்த்து பிழைகளை சரி செய்வது உத்தமம்.  வேறு யாரிடமாவது பிரதியைக் கொடுத்து எழுத்துப் பிழைகள், தட்டச்சுப் பிழைகளை சரி செய்வது அதி உத்தமம்.  இந்த மாதிரி எழுத்துப் பிழைகளோடு படிக்கும்போது வாசிப்பவருடைய கவனம் சிதறி விடுவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. வாசகர்கள் மேலே படிப்பதை நிறுத்தியும் விடலாம் என்பதால் கவனம் தேவை.  

 

நூலாசிரியருக்கு வாழ்த்துகள். வாசிக்கப் போகும் உங்களுக்கு பாராட்டுகள். 

 

*******

 

எங்களது இல்லத்திலிருந்து, நான், எனது இல்லத்தரசி மற்றும் நண்பர் சுப்ரமணியன் என மூவரும் எழுதி இதுவரை வெளியிட்ட மின்னூல்களுக்கான சுட்டி கீழே.  முடிந்தால் எங்களது நூல்களை தரவிறக்கம் செய்து வாசிப்பதோடு, உங்கள் வாசிப்பனுபவங்களையும் பகிர்ந்து கொண்டால் மகிழ்ச்சி!  

 

சந்தித்ததும் சிந்தித்ததும்: மின்புத்தகங்கள்...

 

மீண்டும் ஒரு வாசிப்பனுபவத்துடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….

 

10 கருத்துகள்:

  1. விமர்சனம் அருமை, குறைகளை சொன்னால் தான் திருத்தி கொள்ள முடியும்.
    நிறைகளை சொல்லி ஊக்கப்படுத்த வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  2. பிழைகள் பற்றிச் சொல்லி இருப்பது சிறப்பு. சற்று கவனம் எடுத்திருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  3. நூலாசிரியருக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  4. விமர்சனம் அருமை சார்.
    இப்போது பிழை திருத்தும் மென்பொருள்களும் பெருகிவிட்டன.
    நூலை விரைவில் வாசிக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....