அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு
பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட டைகர் ஹில் - சூரிய உதயம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக
நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம்
வாருங்கள்.
A
TRUE TEACHER WOULD NEVER TELL YOU WHAT TO DO; BUT HE WOULD GIVE YOU THE
KNOWLEDGE WITH WHICH YOU COULD DECIDE WHAT WOULD BE BEST FOR YOU TO DO.
******
தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி ஒன்று
தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி இரண்டு
சென்ற இரண்டு பகுதிகளில் என்னுடன் பயணித்து என்னை உற்சாகப்படுத்திய
அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். உங்கள் உற்சாகமூட்டும் கருத்துகளால் நானும்
மிகவும் சந்தோஷமாகவே வானில் சிறகுகள் கொண்ட இயந்திரப் பறவையில் பறந்தேன்..
இந்தியத் தலைநகரில் நாங்கள் வந்து சேர்ந்த சமயம் (ஏப்ரல் 8, 2023) சில்லென்ற சூழல்
நிலவியது! மகளும் நானும் குளிர்கிறது என்று சொல்லிக்கொண்டு இருந்தோம்! தண்ணீரும்
சிலீரென்று இருந்தது! தலைநகர் அனுபவங்கள் சிலவற்றை இப்பகுதியிலிருந்து உங்களுடன்
பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். அனுபவங்கள் ஒவ்வொன்றாக வர இருக்கிறது!
******
கூலர்ஸ்...கூலர்ஸ்... சோ ரூப்யா.. சோ ரூப்யா. தீன் பீஸ் சோ ருப்யா…
நூர் ரூபா...நூர் ரூபா ...நூர் ரூபா..கூலர்ஸ் கூலர்ஸ் .ஒண்ணு நூர் ரூபா.. நல்லா இருக்கு..நல்லா இருக்கு
பேக்...பேக்..(bag)
வரிசையாக பேருந்துகளில் வந்திறங்கிய சுற்றுலாப் பயணிகளைக் கவர அவரவரின்
மொழியில் புகுந்து விளையாடும் வியாபாரிகள்..
வீட்டின் அருகில் உள்ள பிர்லா மந்திருக்கு நேற்றுச் சென்ற போது பார்த்த
காட்சி இது!
நாங்கள் நிதானமாக அங்கிருக்கும் ஓவியங்களையும் பார்வையிட்டு விட்டு,
அருகில் இருக்கும் பூங்காவுக்கும் சென்று விட்டு, வீட்டிற்கு தேவையான மளிகைப்
பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு வந்தோம்.
இரவு உணவுக்கு அப்படியே காலாற நடந்து சென்று kaleva family restaurant ல்
chole with paneer stuffed kulcha உண்டு வந்தோம். அதிக காரம் இல்லாமல் அருமையாக
இருந்தது! Choleல் பனீரும் சேர்த்து செய்திருந்தார்கள்.
பின்பு இனிப்பில்லாத உணவா!! அருகிலிருந்த Bengali sweets & spicesல்
Rabdi Rasmalai நாவிற்கு சுவையைக் கூட்டின!
அன்றைய பொழுது இனிமையானதாக அமைந்தது!
******
ஒரு நாள் மாலைப்பொழுது கரோல்பாகில்..! திங்கட்கிழமை ஆதலால் Monday marketல்
சற்று உலாவி விட்டு வரலாம் என பேருந்தில் புறப்பட்டோம்.
எல்லாரும் ஏறி விட்டார்களா என பார்க்காமலேயே பேருந்தை எடுத்து
விடுகிறார்கள்! மூவிங்கில் தான் நான் ஏறினேன்.. ரைட்! ரைட்! என்று சொல்ல வேண்டிய கண்டக்டரும் தன் இருக்கையை விட்டு இங்கு
எழுந்திருப்பதில்லை! அலட்சியம் தான்!!!
இங்கு எந்த பேருந்தில் ஏறினாலும் மகிளாவுக்கு இலவசம் தான்..
ஏ கித்னே கா ஹை (B)பையா?
மகளுக்காக காதணிகள் சிலவற்றை பார்த்து விலை கேட்டேன்!
Fifty rupees!
இன்னொன்றையும் பார்த்து விலை 50 தானா எனக் கேட்டேன்!
ஏ பி பச்சாஸ் கா ஹை??
Yes..yes என்றார்..
இன்னொரு வியாபாரி என்னிடம் kerchief இருக்கா? இருக்கா? என்றார்!
முகத்தை பார்த்தாலே நம்ம விவரம் தெரிஞ்சிடும் போல..
சாலை முழுவதும் நம்மை நசுக்கிக் கொண்டு செல்லும் அளவு கும்பல்! இந்த
மாதிரியான கும்பலில் திருடர்களும் உலாவுவார்கள் என்பதால் நம்முடைய கவனம் முழுவதும்
வேடிக்கை பார்ப்பதிலும், விலை பேசி வாங்குவதிலும் மட்டும் இருந்து விடக்கூடாது!
ஒருவழியாக நாங்களும் அந்த கும்பலில் புகுந்து நீந்தி கரையேறினோம்! ஒரு
ரவுண்ட் வந்து வேண்டியவற்றை வாங்கிக் கொண்டதால் நேராக இரவு உணவை சாப்பிடச் சென்றோம்!
Bikanerwala Angan restaurantல் Self service என்பதால் மூவருக்கும் Onion
kulcha with Dal makkani and boondhi raita ஆர்டர் கொடுத்து விட்டு பேஜருடன்
அமர்ந்திருந்தோம்! நம்முடைய ஆர்டர் தயாராகிவிட்டால் நம் டேபிளில் உள்ள பேஜர்
கத்துகிறது!
சுவையான குல்ச்சாவை உண்டதும் ஆளுக்கொரு Chocolate Nut Sundae வும் ஆர்டர்
செய்து ருசித்தோம்! இரண்டு ஸ்கூப் ஐஸ்க்ரீமுடன், 50 கிராம் அளவு முந்திரியை
போட்டுத் தருகிறார்கள்..
சில நாட்களாக டயட்டும், நடைப்பயிற்சியும் பின்பற்றிக் கொண்டிருந்தேன்...
இப்போது அதெல்லாத்தையும் மூட்டை கட்டி பரணில் போட்டாச்சு.. ஊருக்குத் திரும்பிய
பிறகு அவற்றை பார்த்துக்கலாம் என
எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டேன்... தலைநகர் பயணம் குறித்த இற்றைகள் இனியும்
தொடரும். பயணத்தில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுகிறேன்.
******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.
விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
ஆதி வெங்கட்
உங்கள் சுவாரஸ்யமான டெல்லி அனுபவங்களை எங்களுடனும் பகிர்ந்து கொள்வதற்கு நன்றி.
பதிலளிநீக்குதங்கள் அன்பிற்கு நன்றி ஶ்ரீராம்.
நீக்குடெல்லி அனுபவம் சுவாரஸ்யமாக செல்கிறது....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
நீக்குஅருமை...
பதிலளிநீக்குதங்கள் அன்பிற்கு நன்றி தனபாலன்.
நீக்குசுவாரசியம்
பதிலளிநீக்கு