செவ்வாய், 16 மே, 2023

தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி ஏழு - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட தேயிலைத் தோட்டங்கள் - Passenger Ropeway அனுபவம் படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


IMMATURE PEOPLE ALWAYS WANT TO WIN AN ARGUMENT, EVEN AT THE COST OF A RELATIONSHIP; MATURE PEOPLE UNDERSTAND THAT IT’S ALWAYS BETTER TO LOSE AN ARGUMENT AND WIN A RELATIONSHIP.


******


தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி ஒன்று 


தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி இரண்டு  


தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி மூன்று 


தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி நான்கு 


தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி ஐந்து


தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி ஆறு


அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!






தில்லி பயணத்தின் போது வாரஇறுதியில் தான் சற்று தூரம் பயணித்து உலாவி விட்டு வர நேரம் இருக்குமென்பதால் ஒரு வாரம் ஹரித்வார், ரிஷிகேஷ் என்று சுற்றி விட்டு வந்தோம்! அதே போல் அடுத்த வாரம் நெருங்கிய நட்புகளையும், உறவுகளையும் பார்த்து விட்டு வரலாமே என்று கிளம்பி விட்டோம்! 


இரண்டு நாட்களுமே ஒவ்வொருவரையும் பார்த்து வர நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருந்தது! டெல்லி மெட்ரோ, உ.பி மெட்ரோ, பேருந்து, பேட்டரி ரிக்‌ஷா, ஆட்டோ என்று எல்லாவற்றிலுமே பயணித்தோம்! உறவுகளிடத்தும், நட்புகளிடத்தும் பேசிக் கொண்டிருந்ததை விட பயணத்தில் தான் நெடுநேரம் சென்றது என்று சொல்லலாம்…:)


நெடுந்தூரம் பயணிக்க மெட்ரோ ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லணும்! 20 ஸ்டேஷன்களைக் கூட அலுப்பில்லாமல் கடக்க முடிகிறது! பேருந்திலும் சிகப்பு வண்ணம் கொண்டது குளிர்வசதியுடன் நெடுந்தூரம் பயணிக்க ஏதுவாக இருக்கிறது! நீலவண்ணங் கொண்ட பேருந்து 100% Electric 0% Smoke  Switch Delhi Ecolife என்றும் உலவுகிறது! ஆனால் ஒன்று எந்தப் பேருந்தாக இருந்தாலும் மகிளாவுக்கு இலவசம் தான்! அது தான் சங்கடத்தைத் தருகிறது..🙂


பல வருடங்களுக்குப் பிறகான சந்திப்பில் அசைபோடவும், பகிர்ந்து கொள்ளவும் நிறைய விஷயங்கள் இருந்தன! இங்குள்ள வாழ்க்கை முறையும், அங்குள்ள வாழ்க்கை முறையும் ஒப்பிட்டு பார்த்து பேசிக் கொண்டோம்! நிச்சயம்! நிறைய நிறைய வித்தியாசப்படுகிறது என்று தான் சொல்லணும்! 


ஆனால் என்னால் எல்லா இடத்திலுமே ஒரே மாதிரி தான் இருக்க முடிகிறது! அப்படித்தான் இருக்கணும் என்று நினைக்கிறது என் மனது! யாருக்காகவும் என்னை நான் மாற்றிக் கொள்ளவில்லை! இது சரி தானா என்று தெரியவில்லை…:)


******


Dilli Haat












ஞாயிறு மாலை Huda city Centre செல்லும் மெட்ரோவில் பயணித்து INA marketல் இறங்கிக் கொண்டோம். இங்கு எப்போதுமே கடைகள் போடப்பட்டிருக்கும்! தவிர நிகழ்ச்சிகளும் ஏதேனும் நிகழ்ந்து கொண்டிருக்கும்!  சென்ற முறை டெல்லி வந்த போது இங்கு சென்ற போது டெல்லி எலெக்‌ஷன் என்பதால் அன்று கடைகள் எதுவும் போடப்படவில்லை! 


இந்த முறை நாங்கள் சென்ற அன்று Azadi ka Amrit Mahotsav என்ற பதாகையுடன் வண்ணமயமாய் காட்சியளித்தது அந்த இடம்! இங்கு  துணிக்கடைகள், கலைப்பொருட்கள், காதணிகள், பலவிதமான உணவுகள் என்று இருந்ததால் எங்கும் கூட்டமாய் மக்கள் உலவிக் கொண்டிருந்தனர்! 


அடுத்து அன்றைய நிகழ்ச்சியாக வடகிழக்கு மாநிலங்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தும் விதமாக நடனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன! ஒவ்வொரு நிகழ்வும் மனதை உற்சாகப்படுத்தி கைகளை தட்ட வைத்தது! 


நிகழ்ச்சி நிறைவடைந்ததும் அங்கேயே இடம்பெற்றிருந்த ஸ்டால்களில் நாங்கள்  மகாராஷ்ட்ராவினைத் தேர்ந்தெடுத்து மூவருக்கும் Aamras puri Aloo sabji with mint chutney ஆர்டர் செய்து சுவைத்தோம்! நன்றாகவே இருந்தது! இனிமையான மாலைப்பொழுதை செலவிட்ட பின்னர் அங்கிருந்து ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தோம்!


******


Honeymoon...!!


என்னடா இது சோதனை?? இத்தனை வருஷத்துக்கு அப்புறமா??? இவ தொல்லைக்கு ஒரு எல்லையே இல்லையா?? 


அப்படியெல்லாம் நீங்க நினைச்சு பதற வேண்டாம்...🙂





இந்த படத்திலிருக்கும் ஸ்வீட்டுக்கு பெயர் தான் Honeymoon. ஆமாங்க சத்தியமா இந்த இனிப்புக்கு பெயர் தான் Honeymoon..🙂


சென்ற முறை டெல்லி வந்த போது பெங்காலி ஸ்வீட்ஸில் இந்த இனிப்பை பார்த்ததும் வாங்கிப் பார்க்கலாம் என்று சொல்லியிருந்தேன். விசாரித்ததில்  கடைக்காரர் இதில் chena சேர்த்து செய்திருப்பார்கள் என என்னவரிடம் சொல்ல, அதை கடலைப்பருப்பு என்று நினைத்துக் கொண்டு எப்படி இருக்குமோ தெரியாது! நீ வேணா சாப்பிடு! என்று அப்பாவும், மகளும் எனக்கு கம்பெனி தர மாட்டேன் என்று சொல்லி விட்டார்கள்...🙂 அதனால் நானும் வேண்டாமென சொல்லிவிட்டேன்..🙂


பின்பு தான் தெரிந்தது பெங்காலியில் chena என்பது பனீர் என்று..🙂 ஹா..ஹா..ஹா..


அப்புறமென்ன!  நேற்றைய மாலைப்பொழுதில் என்னவர் சர்ப்ரைசாக வாங்கி வந்த  ஹனிமூனோடு மூவரும் ஐக்கியமானோம்..🙂  மண்குவளையில் சில்லென்று ருசித்த ஹனிமூன் வேற லெவல்...🙂 ஏறக்குறைய ரஸமலாய் போன்று ரோஸ் எசன்ஸுடன் மேலே பாதாம் flakes உடன்..!!


வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் ஹனிமூனோடு உங்களை பிணைத்துக் கொள்ளலாம்..🙂


தலைநகர் பயணக் குறிப்புகள் தொடரும். 


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


11 கருத்துகள்:

  1. யாருக்காகவும் தன்னை மாற்றிக் கொள்ளாமல் இயல்பாக இருக்க முடிவது ஒரு வரம்தான், மனோ திட்டம்தான்.  வாழ்த்துகள்.  புகைப்படங்களை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. // மனோ திட்டம்தான்.//

      மனோ திடம்தான்

      நீக்கு
    2. அப்போது அது சரி தான் என்று சொல்கிறீர்களா!!

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றிகள் ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றிகள் தனபாலன் சகோ.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. தங்களது பழைய நினைவுகளையும், அதன் இருப்பிடங்களுக்கு சென்று நட்புகளை கண்டு வந்தற்கும் மகிழ்ச்சி.

    படங்கள் அனைத்தும் அழகாக இருக்கிறது. அங்குள்ள மஹோத்ஸவ கடைகளின் படங்களும் நன்றாக உள்ளன. புது உணவை சாப்பிட்டதற்கும் மகிழ்ச்சி. நானும் பனீர் என்ற பொருளின் மற்றொரு பெயரை தெரிந்து கொண்டேன். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளின் உற்சாகங்கள் நம்மையும் தொற்றிக் கொள்ளும் அல்லவா?

    யாருக்காகவும் தங்களை மாற்றிக் கொள்ளாத தங்களது மாறாத குணத்திற்கு வாழ்த்துகள். அனைத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிச்சயமாக. அன்றைய மாலைப் பொழுதை உற்சாகத்துடன் இனிமையாக செலவிட்டோம்.

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றிகள் கமலா ஜி.

      நீக்கு
  4. ஆதி உங்கள் அனுபவங்கள் அருமையாக சுவையானதாக!! அதான் பெங்காலி இனிப்பு. chena ஆமா பெங்காலியில் பனீர். பெங்காலி இனிப்புகள் பெரும்பாலும் பால், பால் பதார்த்தங்களில்தானே செஞ்சிருப்பாங்க. பெரும்பான்மையான பெங்காலி இனிப்புகளைச் சுவைத்திருக்கிறேன். சுவைப்பது மட்டுமே! பின்னே நானே இனிமையானவளாச்சே!!!

    ரொம்பநல்லாருந்திருக்குமே! இனிப்பு.!

    தில்லியில் மெட்ரோவில் பயணிப்பது சுகம். நானும் ரயில் நிலையத்திலிருந்து Huda city Centre வரை பயணித்திருக்கிறேன்.

    INA market - ஆஹா நான் செல்ல நினைத்த ஒன்று ஆனால் செல்ல முடியவில்லை.

    மகனுக்கு மாம்பழ ரச பூரி செய்து கொடுத்தேன். நம் வீட்டில் ரொம்பப் பிடித்த ஒன்று.

    படங்கள் எல்லாம் அருமை!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த இனிப்பு மிகவும் சுவையாகவே இருந்தது! INA market - விரைவில் அந்த வாய்ப்பு அமையட்டும்!

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றிகள் கீதா சேச்சி.

      நீக்கு
  5. சுவையான பதிவு மேடம்.
    பெங்காலி இனிப்புகள் எனக்கும் பிடிக்கும்.
    ஹனிமூன் இனிப்பு விரைவில் முயர்ச்சித்து பா்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விரைவில் அந்த இனிப்பை சுவைக்கும் வாய்ப்பு அமையட்டும்!

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றிகள் அரவிந்த் சகோ.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....