வியாழன், 11 மே, 2023

தலைநகர் நோக்கி ஒரு பயணம் - சில அனுபவங்கள் - பகுதி நான்கு - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காலை உணவு - சிவப்பு பாண்டா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


காலத்திற்கு பேசும் சக்தி கிடையாது; ஆனால் காலம் அனைத்திற்கும் பதில் சொல்லும்.


******


தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி ஒன்று 


தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி இரண்டு  


தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி மூன்று 


சென்ற மூன்று பகுதிகளாக என்னுடன் பயணித்து என்னை உற்சாகப்படுத்திய அனைவருக்கும் என் அன்பான நன்றிகள். தலைநகர் குறித்த இற்றைகள் தொடர்ந்து வெளியிடுவதில் எனக்கு மகிழ்ச்சி.  படிக்கும் உங்களுக்கும் இந்தத் தகவல்கள் பயனுள்ளதாக இருக்கும் என்றே எண்ணுகிறேன்.  வாருங்கள், எங்களது தலைநகர் தில்லி பயணத்தில் பார்த்த, ருசித்த சில விஷயங்களை குறித்து பார்க்கலாம்!  


******


Blinkit...!!




இங்கே வந்ததிலிருந்து அவ்வப்போது வீட்டுக்குத் தேவையான மளிகைப்பொருட்கள், பால், தயிர் போன்றவற்றை Blinkit App மூலம் ஆர்டர் செய்து கொள்கிறோம். நாம் ஆர்டர் செய்த பத்து நிமிடங்களில் டோர் டெலிவரி செய்யப்படுகிறது!


நாம் ஆர்டர் செய்தவுடன் 'நான் உங்கள் டெலிவரி பார்ட்னர்' ' இன்னும் 8 நிமிடங்களில் டெலிவரி செய்து விடுவேன்' என்றும் மெசேஜ் வந்துவிடுகிறது! சொன்னது போலவே அழகான பேப்பர் பேக் ஒன்றில் பொருட்களை வைத்து தந்து விடுகிறார்கள்!


நார்மல் Sanitary pads ஆர்டர் செய்த போது அதனுடன் இரண்டு விதமான biodegradable pads sampleக்காக போட்டுத் தந்திருந்தார்கள்!  மாற்றத்தை இப்படி ஒவ்வொரு இடத்திலும் கொண்டு வந்தால் இந்த புவிக்கும் நல்லது தானே!!


******


Phool makkana!




இங்கே எல்லாக் கடைகளிலுமே இந்த மக்கானா கிடைக்கிறது! தாமரை விதைகளை phool makkana என்று இங்கு சொல்லப்படுகிறது! இதைப் பற்றி முன்பே கேள்விப்பட்டிருக்கிறேன்!


உடலுக்கு நன்மை செய்யக்கூடிய பல குணங்கள் இந்த மக்கானாவில் இருக்கிறதாம்! இதை மாலைநேர snack ஆகவும் சாப்பிடலாம்! இதை வைத்து சப்ஜியும் கூட இங்கு செய்கிறார்கள்! ஒரு பாக்கெட் வாங்கி வந்து உப்பு, காரம் சேர்த்து கடாயில் ஐந்து நிமிடம் பிரட்டி எடுத்து சாப்பிட்டோம்! ஏறக்குறைய பாப்கார்ன் சாப்பிடுவது போலவே இருந்தது!


நேற்றைய மாலைப்பொழுதில் அருகே இருக்கும் Paharganj என்ற இடத்துக்கு ஒரு வேலையாக பேட்டரி ரிக்‌ஷாவில் சென்று வந்தோம். இந்த இடம் Old delhi என்பதால் நெரிசலாக பல கடைகளும், ரிக்‌ஷாக்களும் என ஜன சந்தடி மிகுந்திருந்தது!


******


தமிழ் புத்தாண்டு தினத்தில் ஒரு பயணம்



இந்த வருடத்தின் தமிழ் புத்தாண்டு தினத்தில் New Delhi - Dehradun Shatabdi expressல் ஹரித்வாரை நோக்கி நாங்கள் பயணித்துக் கொண்டிருந்தோம்! வார இறுதியை கங்கைக்கரையில் செலவிடலாம் என நினைத்து புறப்பட்டு விட்டோம்! எங்களுடன் நீங்களும் என் எழுத்தின் வழி பயணம் செய்யலாம்! வாருங்கள்!


குளிரூட்டப்பட்ட ஷதாப்தியில் தமிழும், மலையாளமும் ஒன்று சேர பயணித்துக் கொண்டிருக்கிறோம்! ஆம்! முன்னிருக்கையில் மலையாளிகள்! பின்னிருக்கையில் தமிழர்கள்! ஹரித்வார் மற்றும் ரிஷிகேஷ் அனுபவங்கள் தொடர்ந்து வர இருக்கின்றன.  தலைநகர் பயணம் குறித்த இற்றைகள் இனியும் தொடரும். பயணத்தில் தொடர்ந்து இணைந்திருக்க வேண்டுகிறேன்.


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

6 கருத்துகள்:

  1. மூன்று குறுந்தகவல்கள்...  ஒன்று...  இந்த App சென்னை போன்ற நகரங்களிலும் இருக்கிறதா, தெரியவில்லை.  இரண்டு..  Pool Makkana மிகச் சமீபத்தில்தான் எனக்கு அறிமுகமாகியது.  பதினைந்து நாட்களுக்கு முன்பு.  மூன்றாவது படத்தில் இருக்கும் கோப்பையில் இருப்பதைப் பார்த்தால் தேங்காய் சட்னி போலவே இருக்கிறது!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சென்னையிலும் இருக்கலாம். பெங்களூருவில் இருக்கிறது ஶ்ரீராம். Phool Makana உடம்பிற்கு நல்லது. மூன்றாம் கோப்பையில் இருப்பது ஐஸ் க்ரீம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஶ்ரீராம்.

      நீக்கு
    2. Blink It - ன் சேவை சென்னையிலும் உள்ளது. முன்பு Grofers என்ற பெயரில் இருந்தது. அதை இப்போது Zomato நிறுவனம் கையகப்படுத்தி பெயரை மாற்றி சேவையை தொடர்ந்து வருகிறது.

      நீக்கு
    3. Grofers தான் இப்போது Blinkit...... ஆமாம். தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தகவல் பயனுள்ளதாக இருந்தால் மகிழ்ச்சி. தங்கள் அன்பிற்கு நன்றி தனபாலன்.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....