வியாழன், 18 மே, 2023

தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி எட்டு - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட மலை இரயிலில் ஒரு பயணம் படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


ACCEPT YOUR PAST WITHOUT REGRETS; HANDLE YOUR PRESENT WITH CONFIDENCE; FACE YOUR FUTURE WITHOUT FEAR.


******


தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி ஒன்று 


தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி இரண்டு  


தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி மூன்று 


தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி நான்கு 


தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி ஐந்து


தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி ஆறு


தலைநகர் நோக்கி ஒரு பயணம் - பகுதி ஏழு


அனைவருக்கும் இனிய காலை வணக்கம்!


Janpath road!





ஒரு மாலைப்பொழுதில் பேருந்தில் ஒரு உலா வரலாம் எனப் புறப்பட்டோம்!  பேருந்தில் மகளும், நானும் அருகருகே அமர்ந்திருக்க எங்களின் பின்னே ஒரு இளைஞன் நின்று கொண்டு எங்களைப் பார்த்தவாறே ஹிந்திப் பாடலொன்று  பாடிக் கொண்டிருந்தான்! நல்ல குரல்வளத்துடன் பாடலும் கேட்க இனிமையாகவே இருந்தது! 


சிறிதுநேரம் இப்படியே பாடிக் கொண்டிருந்தவன் எங்களிடமிருந்து எந்த ரெஸ்பான்ஸும்  கிடைக்காமல் போகவே அந்த இடத்திலிருந்து  கிளம்பி பேருந்தின் பின்புறமிருந்த  இருக்கைக்கு சென்று விட்டான்...🙂 பேருந்தை விட்டு இறங்கிய பின்னர் என்னவரிடமும் இதைச் சொல்லி சிரித்துக் கொண்டேன்..🙂


சரி! எதற்காக புறப்பட்டோம்? எங்கு சென்று இறங்கினோம்?


பேருந்தில் நாங்கள் சென்று இறங்கிய இடம் ஜன்பத் ரோட்!  இங்கு தான் திபெத்தியன் மார்க்கெட் இருக்கிறது! துணிக்கடைகள், கைவினைப் பொருட்கள், bags, clutch, காதணிகள் என்று ஏராளமானவை இங்கு விற்பனைக்கு உள்ளன!


ஒரு ரவுண்ட் வந்து எல்லாவற்றையும் பார்வையிட்டு, வேண்டியவற்றை வாங்கிக் கொண்டு திரும்பினோம்!








டெல்லி வந்த பின் நிறைய விதமான  இனிப்புகளை ருசி பார்த்தேன். ரப்டி ரஸமலாய், கேஸர் ரஸமலாய், குஜியா, ஹனிமூன், ராஜ்போக் மற்றும் Gகூட் ரஸகுல்லா (வெல்லம் சேர்த்து செய்தது)  அளவான இனிப்பில் அனைத்துமே சுவையாக இருந்தது! வாய்ப்பு கிடைக்கும் போது நீங்களும் சுவைத்துப் பாருங்களேன்.


******


Talkatora Garden!






குடியிருப்பிலிருந்து நடக்கும் தொலைவில் இந்த மிகப்பெரிய கார்டன் மற்றும் ஸ்டேடியம்! பாக்ஸிங், கிரிக்கெட், டென்னிஸ் என்று எல்லாவற்றுக்கும் இங்கே பயிற்சி செய்கிறார்கள்! அங்கேயே சில MPக்களின் குடியிருப்பும் அமைந்துள்ளது! கார்டனின் நுழைவாயில் அருகே கெளதம் கம்பீரின் குடியிருப்பு இருந்தது! 


இந்த கார்டனில் 90 வயதைக் கடந்த அடர்வான மரங்களும், சீசனுக்கேற்ற படி பூக்கும் பூக்களும், நீரூற்றுகளும், புல்வெளிகளும் என வெகு அழகாக உள்ளது! இந்த கார்டனை ஒரு ரவுண்ட் அடித்தால் நீங்கள் 2 1/2 கி.மீ நடந்ததாக எடுத்துக் கொள்ளலாம்!


இந்த வெயில் சீசனிலும் பூத்திருந்த பூக்களை படம் பிடித்துக் கொண்டு வலம் வந்தோம்! அங்கிருந்து வீட்டுக்குத் திரும்பும் வழியில் Kali bari காளி கோவிலுக்கும், அருகிலிருந்த புத்தா கோவிலுக்கும் சென்று விட்டு வந்தோம்!




மாலை நல்ல காற்றுடன் லேசான மழை! பேருந்தில் பயணித்து Pusa road அருகே இறங்கிக் கொண்டோம்! Haldiramன் Family restaurant இங்கு தான் அமைந்துள்ளது! சென்ற முறை கொரோனாவுக்கு முன் நாங்கள் டெல்லி வந்த போது இங்கு இரண்டு மூன்று முறை சாப்பிட்டிருக்கிறோம்! அருமையாக இருக்கும்!


மூவரும் Chole bhature ஆர்டர் செய்து சுவைத்தோம்! அதே சுவை! மாற்றமில்லை! இனிப்புக்காக நாங்கள் தேடி வாங்கி ருசித்தது Gajra bahaar ! மல்லிப்பூ செண்டு என்பது போல அர்த்தம்! மேலே கோவா போன்றும் அடியில் ரஸகுல்லா போன்றும் மிகவும் சுவையாக இருந்தது! பெயர் தான் மனதில் நிற்கவில்லை! ஜவஹரா?? என்று கேட்டு பின்பு என்னவரை கேட்டு தான் இதை  எழுதுகிறேன்...🙂 ஹா..ஹா..ஹா..!


******


தலைநகருக்கு டாடா…!




தலைநகரில் இனிமையாக 20 நாட்களை செலவிட்ட நாங்கள் இதோ என்னவருக்கும், டெல்லிக்கும் பை பை சொல்லி  இங்கிருந்து கிளம்பி விட்டோம்! நாட்கள் கடந்து சென்றதே தெரியவில்லை! கிடைத்த நேரத்தில் சுற்றிப் பார்த்து, நட்புகளையும், உறவுகளையும் கண்டு மகிழ்ந்து என்று மிகவும் இனிமையாக செலவிட்டோம்!


இப்போது அடுத்து செய்ய வேண்டிய வேலைகள் தான் கண்முன்னே நிற்கின்றன!! மகளை கல்லூரியில் சேர்க்கணும்! அவளுக்காக செய்து கொடுக்க வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன! அவற்றையெல்லாம் கவனிக்க வேண்டும்! இந்த எண்ணங்களுடன் தலைநகரிலிருந்து புறப்பட்டோம்.  இந்த முறை விமானத்தில் இல்லாமல் இரயிலில் பயணம்.  பயணம் எப்படி இருந்தது என்று அடுத்த பகுதியில் சொல்கிறேன்.  தொடர்ந்து பயணத்தில் இணைந்திருக்க வேண்டுகிறேன். 


******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

16 கருத்துகள்:

  1. நீங்கள் புகைப்படம் எடுப்பதை அந்த போன் பெண்ணும், விற்பனையாளரும் முறைத்துப் பார்க்கிறார்கள்!  அந்தப் பெண் மாஸ்க்குடன் இருப்பது வியப்பு!!!   படங்கள் யாவும் சுவாரஸ்யம்.  பாடிய அந்த இளைஞனுக்கு ஒரு ஐந்து ரூபாய் போட்டிருக்கலாம்!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாடிய இளைஞன் கல்லூரியில் பயில்பவன் சார்..:) தன் சகாக்களோடு சேர்ந்து நிற்காமல் எங்களிடம் வந்து நின்று பாடிப் பார்த்தான்..:) ரூட் விட்டான் என்று சொல்லலாம்..:) ஹா..ஹா..ஹா.

      தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றிகள் ஸ்ரீராம் சார்.

      நீக்கு
    2. அது புரிந்துதான் நானும் அப்படி சொன்னேன்!

      நீக்கு
    3. ஹா..ஹா..ஹா.. நான் தான் சரியாக புரிந்து கொள்ளலை சார்...:)

      நீக்கு
  2. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. படங்கள் அனைத்தும் அழகாக உள்ளன. இனிப்புகள் பார்க்கவே சாப்பிடத் தோன்றுகிறது. விடுமுறையில் தலைநகரில் தங்கள் மகளுடன் மனதுக்கு பிடித்தமானதாக நாட்களை கழித்தமைக்கு மகிழ்ச்சி. அடுத்த பகிர்விலும் தொடர்ந்து வருகிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள் கமலா ஜி.

      நீக்கு
  3. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள் தனபாலன் சகோ.

      நீக்கு
  4. ஆதி அப்ப ஸ்ரீரங்கம் வந்தாச்சா...ஆமாம் மகளின் கல்லூரி சேர்க்கை வேலைகள் பல இருக்குமே.

    ஜன்பத் - எனக்கு ரொம்பப் பிடிக்கும். பார்த்துக் கொண்டே நடப்பதே ஒரு சுகம் விதம் விதமான பொருட்கள். கரோல்பாக் - இதுவும் பிடிக்கும். புகைப்படங்கள் எல்லாம் செம.

    பேருந்து அனுபவம் - ஹாஹாஹாஹா....அப்ப நீங்க ரொம்ப இளமையா இருக்கீங்கன்னு சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம்!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் திருவரங்கம் திரும்பி இரண்டு வாரங்கள் ஆச்சு. மகளை கல்லூரியிலும் சேர்த்தாச்சு.

      பேருந்து அனுபவம்....ஹா..ஹா..ஹா.

      தங்களின் வருகைக்கும், கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள் கீதா சேச்சி.

      நீக்கு
  5. பதிவு அருமை.
    மகளின் கல்லூரிப் படிப்புக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மகளுக்கான வாழ்த்துகளுக்கும் பதிவு குறித்த தங்களின் கருத்திற்கும் மிக்க நன்றிகள் அரவிந்த் சகோ.

      நீக்கு
  6. மகள் நல்ல கல்லூரியில் சேர்ந்து நன்றாகப்படிக்கவும், கல்லூரி போட்டிகளில் பங்கேற்று வாகை சூடவும் வாழ்த்துகள்.

    சோளே பட்டூரா-ஹால்திராம்ஸில் சாப்பிட்ட நினைவு வந்தது. இனிப்புகளெல்லாம் மிக அழகு. படம் போட்டு பொறாமைப்பட வைத்துவிட்டீர்களே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்துகளுக்கும், பதிவு குறித்த தங்களின் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள் நெல்லை சார்.

      நீக்கு
  7. அனைத்தும் இங்கும் படித்து, பார்த்து மகிழ்ந்தேன்.
    ரோஷ்ணிக்கு வாழ்த்துக்கள். அவள் விருப்பப்பட்ட படிப்பு சிறப்பாக அமைய வாழ்த்துகள், வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....