இரு மாநில பயணம் –
பகுதி – 26
இப்
பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu
இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!
சென்ற பகுதியினை முடிக்கும் போது
இப்படி முடித்திருந்தேன். அன்றைய இரவு சோம்நாத் நகரில் தங்குவதாக எங்கள் திட்டத்தில்
இல்லை. அங்கிருந்து சுமார் 85 கிலோமீட்டர் தொலைவுள்ள ஒரு இடத்திற்குச் சென்று
அங்கே தங்குவதாகத் திட்டம். சோம்நாத் நகரிலிருந்து 06.45 மணிக்குப் புறப்பட்டோம்.
சரியாகச் சென்றிருந்தால் 08.00 மணிக்குள் எங்கள் இலக்கை அடைந்திருகலாம். ஆனால்
திட்டமிட்டபடி செல்ல முடிந்ததா? பயணித்தபோது சந்தித்தது என்ன என்பதை அடுத்த
பகுதியில் சொல்கிறேன்.
சோம்நாத் நகரிலிருந்து மாலை ஆறேமுக்கால்
ம்ணிக்குப் புறப்பட்ட முகேஷ் சீரான வேகத்தில் வாகனத்தினைச் செலுத்திக்
கொண்டிருந்தார். வாகனத்தினை எங்கள் பயணத்தினைத் தொடங்குவதற்கு முன்னர் தான்
Service Centre கொண்டு சென்று பராமரிப்புப் பணிகளைச் செய்திருந்தார் என்றாலும்
தியு நகருக்குச் செல்லும்போது பாதி வழியில் Gear விழாமல் ரொம்பவே சேட்டை செய்யத்
துவங்கியது! Gear மாற்றும்போது விதம் விதமான சப்தங்கள், வண்டியின் இஞ்சின் வேறு
சூடாக ஆரம்பித்திருந்தது. முகேஷ் கொஞ்சம் டென்ஷனாக இருந்தார். நடு வழியில் நின்று
விட்டால் ரொம்பவும் கஷ்டம் ஆயிற்றே. என்னதான் வண்டி பற்றி கொஞ்சம்
தெரிந்திருந்தாலும் இந்த மாதிரி பிரச்சனைகள் என்றால் ஓட்டுனர்களால் பல பிரச்சனையைச்
சரி செய்ய முடிவதில்லை.
இரவு நேரம் என்பதால் நாங்கள்
பயணித்த பாதையில் வாகன பராமரிப்பு நிறுவனங்களும் மூடியிருந்தன. வழியில் இருந்த ஒரு
சிறு Mechanic-இடம் காண்பிக்க, அவர் எனக்கு இந்த வண்டியைச் சரி பார்க்கத்
தெரியாது, மாருதி வண்டியாக இருந்தால் சரி செய்திருப்பேன் எனச் சொன்னார்!
வாகனத்தினை தொடர்ந்து அப்படியே ஓட்டிக்கொண்டு சென்றால் பெரியதாக ஏதேனும் பழுது
ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் முகேஷுக்கு. வண்டியின் உரிமையாளர்/நிறுவனத்தின் முதலாளி
திரு தர்ஷன் Bபாய் அவர்களை அலைபேசியில் அழைத்து பிரச்சனையைச் சொல்ல, அவர்
வண்டியைப் பற்றிய கவலை வேண்டாம், மெதுவாக ஓட்டிக் கொண்டு தியு வரை சென்று
விடுங்கள். அதற்குள் நான் ஏதாவது மாற்று ஏற்பாடு செய்ய முடியுமா பார்க்கிறேன்
என்று சொல்ல, அந்தப் பிரச்சனையுடனேயே வாகனத்தினை மேலே ஓட்டிச் சென்றார்.
வாகனத்தில் பிரச்சனையோடு ஓட்டிச்
செல்லச் சொல்வது கொஞ்சம் கஷ்டமான விஷயம் தான். நம் ஊராக இருந்தால் அங்கேயே
நிறுத்தி விடு, வேறு வண்டியில் ஏற்றிவிடு என்று தான் சொல்லி இருப்பார்கள்.
வடக்கில் பெரும்பாலும் இப்படிச் சொல்வதில்லை. டயர் பஞ்சர் ஆனாலும் மெதுவாக
ஓட்டிக்கொண்டு அடுத்த பராமரிப்பு நிலையம் வரை சென்று விடும் பலரைப்
பார்த்திருக்கிறேன். இப்படியாக கொஞ்சம் மிதமான வேகத்தில் 85 கிலோமீட்டர்
தொலைவினைக் கடந்து தியு சென்று சேர்ந்தோம். இந்தப் பயணத்தில் குஜராத் மற்றும் தியு
[தாமன் மற்றும் தியுவில் ஒரு பகுதி] இரண்டு மாநிலங்களுக்கும் செல்வதாகத்
திட்டம். தியு ஒரு தீவு என்றாலும் பாலம்
அமைத்து சாலை வசதி செய்திருப்பதால் சாலை வழிப் பயணம் செய்ய முடிகிறது.
தியு சென்று சேர்ந்த போது இரவு
08.45 மணி! அங்கே தான் நாங்கள் தங்குவதற்கு முன்னேற்பாடு செய்து வைத்திருந்தோம்.
தியு அரசாங்கத்தின் City Circuit House-ல் எங்களுக்கான இரண்டு அறைகளை நண்பர் மூலம்
பதிவு செய்திருந்தோம். அரசாங்க அலுவலர்கள் அலுவல் சம்பந்தமாகச் செல்லும்போது
தங்கும் இடம் இது. என்றாலும், அரசு அலுவலர்கள், தங்கள் சொந்த வேலைகளுக்காகச்
செல்லும் போதும் இங்கே தங்கிக் கொள்ளலாம்! ஆனால் அதற்கான கட்டணம் அதிகமாக
இருக்கும். நாங்களும் அதிகக் கட்டணத்தினைச் செலுத்தித் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தோம்.
தியு நகரில் தனியார் தங்குமிடங்களுக்கான வாடகை ரொம்பவே அதிகம் என்பதால் இந்த
ஏற்பாடு! தியு நகரின் முக்கிய கடைவீதிக்கு அருகிலேயே இருக்கிறது இந்த City Circuit
House.
முன்பதிவு செய்திருந்த விவரங்களைச்
சொன்னதும் இரண்டு அறைகளையும் காண்பித்தார் – ஒன்று கீழே, மற்றது முதல் மாடியில்.
பெரிய அறை, வசதிகளும் நன்றாகவே இருந்தது. அலுவல் சம்பந்தமாக வந்தால் அதற்கான
கடிதம் காண்பித்தால், வாடகை ரொம்பவே குறைவு! ஆனால் சொந்தப் பயணமாக வந்ததால்
நாங்கள் தங்கிய ஒரு அறைக்கு வாடகை 600 ரூபாய் மட்டுமே. ஒவ்வொரு மாநிலத்திலும் இந்த
மாதிரியான தங்குமிடங்கள் உண்டு என்றாலும் பல இடங்களில் பராமரிப்பு சரியாக இருக்காது.
அலுவல் சம்பந்தமாகப் பயணம் செய்யும் போது இங்கே தங்குவதை விட வெளியே தங்குவதே மேல்
எனத் தோன்றும். ஆனால் தியுவில் இருந்த தங்குமிடம் நன்றாகவே பராமரிக்கப்பட்டு
வந்தது தெரிந்தது.
தங்குமறையில் உடமைகளை வைத்து, ஒரு
குளியல் போட்ட பிறகு இரவு உணவுக்காக வெளியே சென்றோம். என்ன சாப்பிட்டோம்,
குஜராத்திற்கும் தியுவிற்கும் உள்ள ஒரு பெரிய வித்தியாசம் என்ன என்பதை அடுத்த
பகுதியில் சொல்கிறேன்.
தொடர்ந்து பயணிப்போம்….
நட்புடன்
வெங்கட்
புதுதில்லி.
தியு தாமன் எல்லாம் லிஸ்டில் உண்டு ஜி! எப்போது வாய்ப்பு கிடைக்குமோ தெரியவில்லை....
பதிலளிநீக்குபரவாயில்லையே வண்டியில் பிரச்சனை என்றாலும் ஓட்டிச் செல்கின்றனரே...நல்ல விஷயம்.
தியு தீவு நிலத்திலிருந்து இணைக்க சாலை வசதி அப்போ கடல் இருபக்கமும் இருந்திருக்கும் இல்லையா? ராத்திரி காட்சிகள் தெரிந்திருக்காது..அறிய ஆசை...
சாப்பாடு வித்தியாசமாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது...குஜராத்திற்கும் தியுவிற்கும் சரியா?!! ஜி!!? தியு பற்றி அறிய மிகவும் ஆசை...தொடர்கிறோம்
கீதா
நாங்கள் தியு மட்டுமே சென்றோம். தியுவிலிருந்து தாமன் சுமார் 700 கிலோமீட்டர் தூரம்!
நீக்குசாப்பாடு பெரும்பாலும் அசைவம் தான். வரும் பதிவுகளில் சொல்கிறேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
காலை வணக்கம் ஜி!!
பதிலளிநீக்குகீதா
காலை வணக்கம் கீதா ஜி!
நீக்குநம் ஊரில் உடனே மாற்று வண்டிகள் அனுப்பி விடுவார்கள் என்று சொல்லி இருப்பது ஆச்சர்யமாய் இருக்கிறது. நாம் அவ்வளவு தேவலாமா?
பதிலளிநீக்குகுட்மார்னிங் வெங்கட். தொடர்கிறேன்.
ஹாஹா... மாற்று வண்டிகள் அனுப்புவது சிலர் மட்டுமே.
நீக்குகாலை வணக்கம் ஸ்ரீராம்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
உண்மை ஶ்ரீராம், நம்ம ரங்க்ஸின் சஷ்டிஅப்தபூர்த்திக்காகத் திருக்கடையூர் சென்ற போது சென்னையை விட்டுக் கொஞ்ச தூரம் போனதும் வண்டி மக்கர்! எவ்வளவோ முயன்றும் வண்டி மீண்டும் கிளம்பலை. நாங்கள் சுமார் 15 இல் இருந்து 20 பேர் வரை. அப்போ அதிகம் அலைபேசிப் பயன்பாடும் இல்லை. என்றாலும் என் தம்பி எப்படியோ அவன் அலைபேசி மூலம் ட்ராவல்ஸைத் தொடர்பு கொண்டு சொல்லி வேறே வண்டி அனுப்பச் சொல்லிக் கேட்க அனுப்பி வைத்தார்கள். சுமார் ஒன்றரை மணி நேரம் தாமதமாகப் போய்ச் சேர்ந்தோம். நல்லவேளையாக டிஃபன் சாப்பாடு கையில் எடுத்து வந்திருந்ததால் பிரச்னை ஏதும் இல்லை.
நீக்குஉங்கள் அனுபவங்களையும் இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதாம்மா..
நீக்குதொடர்கிறேன்
பதிலளிநீக்குதொடர்வது அறிந்து மகிழ்ச்சி மதுரைத் தமிழன்.
நீக்குதொடர்கிறேன் ஐயா
பதிலளிநீக்குதொடர்ந்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது கரந்தை ஜெயக்குமார் ஐயா. நன்றி.
நீக்குஆட்டோமேட்டிக் கியர் பாரின் ஸிஸ்டத்தில் (P) உள்ளதே ?
பதிலளிநீக்குஇந்தியாவிலும் சில வாகனங்களில் உண்டு. மேலே கொடுத்துள்ள படம் இணையத்திலிருந்து.... நாங்கள் சென்ற வாகனத்தினுடையது அல்ல.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
Very interesting read!!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.
நீக்குஆர்வமாகப் படிக்கிறேன். இதுதான் டையூ, டாமன் என்று சிறுவயதில் படித்த இடங்களா?
பதிலளிநீக்குஅதே டையூ தான்! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
ஆவலுடன் தொடர்கிறேன்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குநீங்கள் சோம்நாத் என்று குறிப்பிடும் இடம் முகலாயர்களால் அழிக்கப்பட்டதாக சொல்லும்கோவில் இருக்கும் இடமா
பதிலளிநீக்குசோம்நாத் பல இயற்கைச் சீற்றங்களுக்கும், படையெடுப்புகளுக்கும் உட்பட்ட கோவில். பலமுறை புனர் நிர்மாணம் செய்யப்பட்ட கோவில். தற்போது இருக்கும் கோவில் சர்தார் வல்லபாய் பட்டேல் காலத்தில் புனரமைக்கப்பட்ட கோவில்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குசுவாரஸ்யமான பயணம். ஆனால் வண்டி சரியில்லாத போது மனசு பயணத்தை கொஞ்சம் ரசிக்காமல் போகும். ஒரு வழியாக திட்டமிட்ட இடத்தை சென்றடைந்து விட்டீர்கள்.. அதன்பின் எங்கு சென்றீர்கள்... தீவின் அழகிய தோற்றங்கள.. இவைகளை காண ஆவலோடிருக்கிறேன். தொடர்கிறேன்..
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!
நீக்குதியூ அனுபவங்களுக்குக் காத்திருக்கேன். கலாசாரமே வேறே என நினைக்கிறேன். பார்க்கலாம்.
பதிலளிநீக்குகலாச்சாரமே வேறே - உண்மை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...