வெள்ளி, 20 ஏப்ரல், 2018

தியு போகலாம் வாங்க – நாகாவ் கடற்கரை – கடலைப் பார்த்தபடி காலை உணவு



இரு மாநில பயணம் – பகுதி – 28

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


நாகாவ் கடற்கரை....

முதல் நாள் இரவு உணவுக்குப் பிறகு அறை திரும்பும்போதே இரவின் இரண்டாம் பாதி துவங்கி இருந்தது. அறைக்கு வந்து அந்த நாளின் கணக்கு வழக்குகளைப் பார்த்தபிறகு உறக்கம் தான்! அதிகாலையில் எழுந்திருந்து அறையைக் காலி செய்து விட்டு தியு நகரத்தினைச் சுற்றிவருவது தான் திட்டம். அதிகாலையில் எழுந்து தங்குமிடத்தில் தேநீர் கிடைக்குமா எனப் பார்த்தால் எட்டு மணிக்குத் தான் கிடைக்கும் என்கிறார் சிப்பந்தி! இது சரி வராது, வெளியே சென்று தேநீர் அருந்தலாம் என புறப்பட்டபோது இரண்டு நண்பர்கள் சேர்ந்து கொண்டார்கள். பொடிநடையாக காலைக் காற்றைச் சுவாசித்த படி மார்க்கெட் பகுதிக்கு வந்தோம்.



நாகாவ் கடற்கரை....


கடற்கரையோரத்து மரமொன்று!
நாகாவ் கடற்கரை.... 

நாங்கள் தங்கியிருந்த City Circuit House அருகிலேயே ஒரு காய்கறி மார்க்கெட் – காலியாக இருந்தது! நமது ஊர் போல, காலை நேரத்திலேயே காய்கறி மார்க்கெட் திறக்க மாட்டார்களா எனக் கேட்க, எட்டு மணிக்கு மேலாகும் என்கிறார் திறந்திருந்த ஒரு தேநீர்கடை உரிமையாளர். ஒரு கோப்பை தேநீரின் விலை பதிமூன்று ரூபாய்! நன்றாகவே இருந்தது. உள்ளூர்காரர்கள் பொறுமையாக எழுந்திருப்பவர்கள் – கடைக்கு வந்த அனைவருமே வெளியூர் – சுற்றுலாப் பயணிகள் தான். தில்லியிலிருந்து வந்திருந்த ஒரு வட இந்தியக் குடும்பத்தினரும் பார்த்தோம் – நம் ஊர்காரர்களுக்கு காலைக் காப்பி எவ்வளவு முக்கியமோ, அதே அளவு வட இந்தியர்களுக்கு காலை நேரத் தேநீர்! சிலர் அது இல்லாமல் இருக்கவே மாட்டார்கள்!


தியு - தங்குமிடத்தின் உள்ளே....

தேநீர் பருகிய பிறகு தங்குமிடம் நோக்கி நடந்தோம். நேற்று அங்கே வரும்போது இரவு என்பதால் சுற்றுப்புறச்சூழல் எப்படி என்று பார்க்கவில்லை. காலை நேரத்தில் பார்த்தால் தங்குமிடம் சுற்றிலும் மரங்கள் – சப்போட்டா, பாதாம், தென்னை, பப்பாளி, வேப்பிலை போன்ற மரங்களும், நிறைய பூச்செடிகளும் அங்கே இருந்தன. ரம்மியமான சூழல். ஓட்டுனர்களுக்கும் தனி அறைகள் – குளியலறை வசதியோடு இருந்ததால் ஓட்டுனர் முகேஷும் வாகனத்தினை சுத்தம் செய்து குளிக்கக் காத்திருந்தார்.  நாங்களும் அறைக்குச் சென்று தயாராகி புறப்பட்டோம். அப்போது நேரம் காலை ஒன்பதரை மணி! வழியில் காலை உணவு சாப்பிடலாம் எனப் பார்த்தால் எந்த உணவகமுமே திறந்திருக்கவில்லை. சரி இன்றைக்கு காலை பட்டினி தான் போலும் என நினைத்தபடியே பயணித்தோம்.






தியு - சாலை சந்திப்புகளில் இருந்த சிலைகள்.... 

நாங்கள் முதலாவதாகச் சென்றது தியுவின் நாகாவ் கடற்கரை! அழகிய கடற்கரை. இந்தக் கடற்கரையில் எடுத்த சில புகைப்படங்களை முன்பு இங்கே பகிர்ந்திருக்கிறேன். நாங்கள் தங்கியிருந்த இடத்திலிருந்து சற்றே தொலைவில் இருந்தது இந்த இடம் என்பதால் முதலில் இங்கே சென்று, வரும்போது மற்ற இடங்களைப் பார்க்கலாம் என்பது எங்கள் திட்டம். தியு நகரில் ஒவ்வொரு சாலை சந்திப்புகளிலும் கடல் சம்பந்தப்பட்ட விஷயங்களை – சங்கு, கடற்கன்னி, மீன்கள் என கடல் சம்பந்தமான விஷயங்களையே சிலைகளாகச் செய்து வைத்திருப்பது சிறப்பான விஷயம் – அரசியல்வியாதிகளின் சிலைகளை விட இப்படியான சிலைகள் நகருக்கு அழகு சேர்க்குமே! குஜராத்தில் கூட பால் உற்பத்தி அதிகமாக இருக்கும் மெஹ்சானா மாவட்டத்தில் பால்கேன்கள் சிலையாக வைத்திருப்பார்கள் என்பது நினைவுக்கு வருகிறது.


கால்கள் நேராக நடந்தது உணவகத்திற்குத் தான்!
நாகாவ் கடற்கரை....


காலை உணவாக பூரி சப்ஜி!....

நாகாவ் பீச் எதிரே இருக்கும் Richie Rich Bar and Restaurant-ல் காலை உணவு! பூரி சப்ஜி – தேநீர் என சிம்பிள் ஆக காலை உணவு. அங்கேயும் உணவகம் திறந்திருந்ததே தவிர உணவிற்காக நிறையவே காத்திருக்க வேண்டியிருந்தது.  உணவு உண்ட பிறகு கடற்கரையில் நீண்ட உலா! பொதுவாக மாலை நேரத்தில் தான் கடற்கரைகளில் கூட்டம் அதிகமிருக்கும். நாங்கள் சென்ற காலை நேரத்தில் மக்கள் கூட்டம் இல்லை! அதனால் கடலுடன் நீண்ட நேரம் உரையாட முடிந்தது. கடற்கரை ஓரமாக நின்று கொண்டு கடலலைகளோடு பேசிக் கொண்டிருக்கலாம் – ”உனக்கு மட்டும் அலுப்பே வராதா?”  அங்கே வேறு ஒரு பெண்ணும் கையில் பாயோடு நின்று கடலுடன் உரையாடிக் கொண்டிருந்தார்!







நாகாவ் கடற்கரையில்....

நெல்லைத்தமிழன் அவர்களின் Favorite Actress – தமன்னா ஒரு படத்தில் “ஏ கடல் மாதா! சுரேஷ் [சுரேஷோ ரமேஷோ!] இல்லாத வாழ்க்கையை என்னால நினைச்சுக்கூடப் பார்க்க முடியல!” என வசனம் பேசுவாரே அது நினைவுக்கு வந்தது! ஒரு வேளை நேரா கடல்ல பாஞ்சுடுவாரோ? என்று நினைத்தபடியே நின்று கொண்டிருந்தேன். கடற்கரை எத்தனை நேரமானாலும் அலுப்பதில்லை – கடலையும் கடலைப் பார்க்க வரும் மக்களையும் [!] வேடிக்கை பார்ப்பது ஒரு சுகம்! இங்கேயும் தின்பண்டங்கள் விற்பவர்களைப் பார்க்க முடிந்தது. வாங்கிக் கொரித்தாலும் நம் ஊர் போல அழுக்கான, குப்பைகள் நிறைந்த கடற்கரையாக இல்லாமல் சுத்தமாகவே இருந்ததில் மகிழ்ச்சி. சுத்தமாக வைத்துக் கொள்வது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களின் கடமையும் கூட!


நாகாவ் கடற்கரை அருகே உள்ள தங்குமிடத்தின் வெளிப்புறத் தோற்றம்....


நாகாவ் கடற்கரை - வாகனத்துடன் காத்திருந்த ஓட்டுனர் முகேஷ்.....

கடற்கரையிலிருந்து விலகி வர மனதே இல்லை. இருந்தாலும் அடி மேல் அடிவைத்து வெளியே வந்தால் – அழகிய தென்னை மரங்கள் இரு பக்கங்களிலும் இருக்க கடைகள், உணவகங்கள், தங்குமிடங்கள் என நிறைய உண்டு. இந்தக் கடற்கரையோர தங்குமிடங்களுக்கான வாடகை ரொம்பவே அதிகம்! வெளியே பார்க்கும்போதே உள்ளே சென்றால் எப்படி இருக்கும் எனத் தோன்றியது! நுங்கு போலவே வேறு ஒரு மரமும் காய்களும் இருந்தன. எல்லாக் காட்சிகளையும் பார்த்தபடி வாகன நிறுத்துமிடம் வர, முகேஷ் வாகனத்தின் அருகே நின்று கொண்டிருந்தார். வாகனத்தில் அமர்ந்து கடற்கரையிலிருந்து புறப்பட்டோம். அடுத்ததாய் நாங்கள் சென்ற இடம் என்ன, அங்கே என்ன சிறப்பு என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்!

தொடர்ந்து பயணிப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.

26 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. காலை வணக்கம் ஸ்ரீராம்! - ஒரு நாள் கழித்து வந்து சொல்கிறேன்... ஹாஹா...

      நீக்கு
  2. அந்தந்த நாள் கணக்கை ஆண்ட்ரே பார்த்து முடித்து விடுவீர்களா? அவ்வப்போது பணம் போட்டுக் கொள்வீர்களா? அல்லது முன்னரே அட்வான்ஸாக ஒருவரிடம் பணம் கொடுத்து அவர் மெயின்டெயின் செய்வாரா? பொதுவாக ஒரு டூர் ப்ரோக்ராம் எப்படி அமைக்கிறீர்கள் என்பதை ஆரம்பம் முதல் ஏற்பாடுகள் அனைத்தையும் ஒரு பதிவாக (ஒருவேளை முன்னரே இட்டிருந்தாலும் மறுபடி) இடுங்களேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தந்த நாள் கணக்கை அன்றே எழுதி வைத்துக் கொள்வேன். அடுத்த நாளுக்குத் தேவையான பணமும் வாங்கி/எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.

      ஏற்பாடுகள் அனைத்தும் பதிவாக - எழுதுகிறேன் - விரைவில்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. தேநீர்க் கடைகளே எட்டு மணிக்குதான் திறக்கும் என்றால் உணவகங்கள் பதினோரு மணிக்குதானா?!! ஹா... ஹா... ஹா... அந்த பூரிக்கள் நாங்கள் செய்யும் பூரி போல இருக்கின்றன!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பல இடங்களில் ரொம்பவே லேட்டாகத் தான் திறக்கிறார்கள். நாஸ்தா [காலை உணவு] மட்டும் கிடைக்கும் சில கடைகள் எட்டு மணிக்கு திறப்பதுண்டு.

      பூரி - ஹாஹா! பலருக்கு உலக வரைபடத்தின் பகுதிகள் போலத்தான் வருகிறது பூரியும் சப்பாத்தியும்! வட்டமாக வருவதே இல்லை! பழகினால் சுலபம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. எனக்கென்னவோ சாலைகளில் அரசியல்வாதி, இயற்கை கடவுள் என்று எந்தச் சிலைகளுமே வேண்டாம் என்று தோன்றும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலைகள் இல்லாமல் இருப்பதும் நல்லது - வைத்துவிட்டு அதைப் பராமரிக்காமல் இருப்பதும் வேதனை! இங்கே பல சிலைகள் புறாக்களின் எச்சங்களோடு நாற்றம்! :) வருடத்திற்கு இரு நாட்கள் - பிறந்த நாள், இறந்த நாள் மட்டும் சுத்தம் செய்து மாலை போட்டுவிட்டால் வேலை முடிந்தது! அப்புறம் பறவைகளுக்கு கழிப்பறை இந்த சிலைகள்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. இடங்களும் இடங்களின் படங்களும் அழகு. தமன்னா எந்தப் படத்தில் அப்படி வசனம் பேசுவாரோ... நெல்லைக்கே வெளிச்சம்!!! முகேஷ் "தெளிவா"கத்தான் இருக்கார்!!!!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தமன்னா என்றாலே நெல்லை தான்! உங்களுக்காக அனுஷ்கா பற்றி ஒரு பதிவில் எழுத வேண்டும்! :)

      முகேஷ் தெளிவாகவே இருந்தார்! இரண்டு பெக் மட்டுமே உள்ளே சென்றது காரணமாக இருக்கலாம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
    2. veவெங்கட்ஜி நோட் பண்ணிட்டீங்களா ஹா ஹா ஹா ஹா....தமனா பத்திச் சொன்னதும் நைசா அனுஷ் பத்தி நீங்க சொல்லலை....சொல்லணும்னு ஸ்ரீராம் கமென்ட் ஹா ஹா ஹா ஹா ஹா

      கீதா

      நீக்கு
    3. ஹாஹா.... அனுஷ்கா பற்றி ஒரு பதிவில் ... வந்து கொண்டிருக்கிறது!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  6. காலை வணக்கம் வெங்கட். கடலை யாருக்குப் பிடிக்காது.
    அற்புதம் மா. பூரி பார்க்க சூப்பர். கடற்கரை ரிசார்டுல்லு வருபவர்கள் பத்து மணிக்கு மேலே எழுந்திருக்க மாட்டாரர்கள்.
    நானும் பெரிய மகனும் காமிராவும் கையுமாகப் போய் நிற்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் - நிறைய பேர் பயணம் போவதே Relax செய்ய மட்டுமே! நாலு இடங்களைப் பார்க்க வேண்டும் என அவர்களுக்குத் தோன்றுவதில்லை.

      ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு எண்ணம்...

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...

      நீக்கு
  7. பூரியை அழகாக படம் எடுத்து இருக்கின்றீர்கள் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா... அலைபேசி மூலம் எடுத்தது இந்தப் படம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  8. கடற்கரைப் படங்கள் மிகவும் இயற்கையாக இருந்தன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  9. ஆம் கடலையும் யானையையும் பார்த்டுக் கொண்டே இருக்கலாம் அலுப்பு வராது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி சில விஷயங்கள் அலுப்பே தராதவை - நீங்கள் ரசிக்கும் யானையும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  10. வணக்கம் சகோதரரே

    கடற்கரை படங்கள் மிகத்தெளிவாக அழகாக இருந்தது. இயற்கை எழிலுக்கு நாம் அனைவரும் அடிமைதானே.. சிற்றுண்டியும் அதற்கு செல்லுமிடமெல்லாம் கூட அழகாக இருக்கிறது. சாலை சந்திப்பு சிலைகளும் அழகு. எனக்கும் கடற்கரைக்கு சென்றால், கடல் அலைகளை விட்டு பிரிய மனமே வராது. தங்கள் பதிவை படித்து வருகையில், " இங்கே" என்ற இடத்துக்கு சென்று அங்கும் அலைகளை கண்டு களித்து விட்டு வந்திருக்கிறேன். தொடருங்கள். நானும் சென்றவிடங்களை காண ஆவலோடிருக்கிறேன். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடல் என்றைக்குமே அலுக்காத விஷயம் தான். முந்தைய பதிவினையும் படித்தமைக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  11. அட இந்த நாகாவ் கடற்கரை படங்கள் என்ன அழகு….நீங்கள் தங்கியிருந்த இடம் கூட அழகாக இருக்கிறதே….பூரி ஏன் புஸ்ஸென்று இல்லையோ…
    ஹப்பா முகேஷ் கார் ஓட்டத் தகுதியுடன் நிற்கிறார் முந்தைய இரவின் சுவடு இல்லாமல்….
    ரிசார்ட் என்றாலே எல்லாமே லேட் தானோ? நான் கேள்விப்பட்டவரை அப்படித்தான் இருக்கிறது. ரிஷிகேஷ் ரெசார்ட் கூட அப்படித்தான் என்று கேள்விப்பட்டேன்.
    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பூரி ஏன் புஸ்ஸென்று இல்லை! :)))))

      ரிசார்ட் என்றாலே லேட் தான்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  12. படங்களும் தகவல்களும் மிக மிக அருமை ஜி. அழகான சிலைகள் ரோட்டின் சந்திப்பு நடுவில்.
    துளசிதரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....