திங்கள், 9 ஏப்ரல், 2018

குஜராத் போகலாம் வாங்க – காந்தி பிறந்த மண்ணில்….



இரு மாநில பயணம் – பகுதி – 23

இப் பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!


சத்யமும் அஹிம்சையும் எனக்குப் பிடித்த பாதை...


த்வாரகாவிலிருந்து சோம்நாத் - வரைபடம்...
இணையத்திலிருந்து....


த்வாரகா நகரில் மதிய உணவாக குஜராத்தி தாலி சாப்பிட்ட பிறகு அங்கிருந்து புறப்பட்டோம். எங்களது இலக்கு மாலைக்குள், சோம்நாத் சென்று சேர்வது. அங்கே தரிசனம் செய்து கொண்டு இரவுத் தங்கலுக்கு அடுத்த மாநிலம் செல்வது என்பது தான் திட்டம். த்வாரகா நகரிலிருந்து சோம்நாத் கிட்டத்தட்ட 250 கிலோமீட்டர் தொலைவு. நாலரை மணி நேரத்தில் சென்று விடலாம் என்றாலும் இந்தப் பாதையில் இருக்கும் ஊரான – காந்தி பிறந்த மண்ணான – போர்பந்தர் செல்லாமல் செல்வது சரியில்லை என நண்பர்கள் சொல்ல, சோம்நாத்திற்கு, போர்பந்தர் வழியே செல்ல முடிவெடுத்தோம். த்வாரகா நகரில் புறப்பட்ட ஓட்டுனர் முகேஷ் அடுத்ததாக நிறுத்திய இடம் போர்பந்தர்.  


வண்டியின் மேலமர்ந்து பயணிக்கும் கிராமியப் பெண்மணிகள்...


அயலகத்திலிருந்து வந்திருக்கும் பறவைகள் கூட்டம்...
பயணித்தபடியே எடுத்த காட்சி....



த்வாரகாவிலிருந்து சோம்நாத் செல்ல கடற்கரை ஓரமாகவே வழியுண்டு என்றாலும், ஓட்டுனர் முகேஷ் தேர்ந்தெடுத்த பாதை மாநில நெடுஞ்சாலை – பல கிராமங்களின் வழியே செல்லும் பாதையில் கொஞ்சம் நேரம் அதிகமாக எடுக்கும் என்றாலும், காட்சிகள் மிக அழகானவை. கிராமியக் காட்சிகளைப் பார்த்தபடியே வாகனத்தில் சென்று காந்தி பிறந்த மண்ணை அடைந்தோம். வாகனத்தினை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு, காந்திஜியின் வீடு இருக்கும் குறுகிய சாலைக்குள் நடந்து சென்றோம். அங்கே பார்த்தால் ஒரு திருமண ஊர்வலம். மாப்பிள்ளை சிரித்தபடியே வந்து கொண்டிருந்தார். கையில் ஒரு பெரிய கத்தி வேறு! வீரத்தின் அடையாளம்! அப்படியே தனது அலைபேசியில் ஒரு செல்ஃபி எடுத்துக் கொண்டார்! ”Videographer-உம் Cameraman-உம் எத்தனை ஃபோட்டோ எடுத்தாலும் நானே எடுத்துக் கொண்ட மாதிரி இருக்குமா?” என்ற எண்ணம் அவருக்கு இருந்தது போலும்!


கீர்த்தி மந்திர் சாலையில் ஒரு மாப்பிள்ளை அழைப்பு...

காந்திஜி பிறந்த வீடும் அதன் அருகே இருக்கும் ஒரு கட்டிடமும் சேர்த்து, இன்றைக்கு “கீர்த்தி மந்திர்” என்ற பெயரில் அருங்காட்சியகமாக அமைக்கப்பட்டுள்ளது. அவர் பிறந்த அறை, அவர் படித்த அறை, அந்த வீட்டின் சமையல்கட்டு, மற்ற அறைகள் என அனைத்தும் அருங்காட்சியகம் தான். ஒவ்வொரு இடமாகப் பார்த்துக் கொண்டே வந்து ஆங்காங்கே புகைப்படங்களும் எடுத்துக் கொள்ளலாம். நிறைய சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் இடமாக இருக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளும் நபர்கள் – மற்றவர்களுக்குத் தொல்லை தருபவர்கள் – இவர்களது தொல்லைகளையும் மீறி புகைப்படங்களை – எங்களுக்குத் தேவையான புகைப்படங்களை எடுத்துக் கொள்வது சிரமமாக இருந்தது.


காந்தி பிறந்த அறை...


அழகான ஜன்னல்கள்....

கீர்த்தி மந்திர் பற்றிய சில வரலாற்றுக் குறிப்புகளைப் பார்க்கலாம். காந்தி பிறந்த இந்த வீட்டினை 1777-ஆம் ஆண்டு அவரது முப்பாட்டன் காலத்தில் வாங்கி இருக்கிறார்கள்.  திரு ஹரிவன்ஜி ராஹிதாஸ்ஜி காந்தி அவர்கள் மன்[B]பாய் என்பவரிடம் வாங்கிய இவ்வீட்டினை காந்தியின் தாத்தா உத்தம்சந்த்ஜி அவர்கள் காலத்தில் சில மாற்றங்களைச் செய்து ஒரு மாடியும் கட்டி இருக்கிறார்கள். 1869-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி காந்தி பிறந்த சமயத்தில் இவ்வீட்டில் தரைத் தளம் தவிர இரண்டு மாடிகளும், 22 அறைகளும் இருந்ததாக இங்கே இருக்கும் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன.


கீர்த்தி மந்திர் - வீட்டின் ஒரு பகுதியிலிருந்து எடுத்த படம்...


நுழைவாயில் அருகே நண்பர்கள்...

காந்திஜியின் நினைவாக காந்தி பிறந்த வீட்டிற்கு அருகே கீர்த்தி மந்திர் என்பதை நிர்மாணிக்க முடிவு செய்து 1947-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. காந்திஜி இருக்கும்போதே அவரிடமிருந்தும் அவரது மற்ற உறவினர்களிடமிருந்தும் இவ்வீட்டினை சேட்ஜி நான்ஜிபாய் காளிதாஸ் மேஹ்தா என்பவர் வாங்கி இருக்கிறார்.  ”கீர்த்தி மந்திர்” என்ற பெயரில் மஹாத்மா காந்தியின் நினைவில்லமும் பக்கத்திலேயே கட்டப்பட்டது. இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் 27-05-1950 அன்று திறந்து வைத்திருக்கிறார் என்பதை இங்கே இருக்கும் குறிப்புகளில் இருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. சாலையிலிருந்து உள்ளே நுழையும் போது ஒரு பெரிய வாயில்.  அதில் கதவுகள் சற்றே மூடி ஒரு சின்ன வாயில்.


காந்தி பிறந்த வீட்டில் - அடியேன்...

போர்பந்தர் நகரின் பழைய [B]பாட்டியா பஜார் என அழைக்கப்படும் இடத்தில் கஸ்தூரிபா சாலையில் அமைந்திருக்கும் இந்த கீர்த்தி மந்திர் தினமும் காலை 07.30 மணி முதல் மாலை 07.00 மணி வரை திறந்திருக்கும். போர்பந்தர் நகருக்கு அம்தாவாத், ராஜ்கோட், மும்பை போன்ற இடங்களிலிருந்து ரயில் வசதிகளும் உண்டு.  மேலும் குஜராத் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலிருந்து பேருந்து வசதிகளும் உண்டு.


கீர்த்தி மந்திர் அமைந்திருக்கும் சாலை...


கீர்த்தி மந்திர் - அறிவிப்புப் பலகை...

இப்படியாக மஹாத்மா காந்தி அவர்களின் நினைவிடத்தினைக் கண்டு அங்கிருந்து புறப்பட்டோம். நாங்கள் அடுத்ததாய்ச் சென்ற இடம் சோம்நாத். வழியில் பார்த்த காட்சிகள், ஓட்டுனர் முகேஷ் சொன்ன ஒரு ஸ்வாரஸ்ய மருத்துவக் குறிப்பு போன்றவற்றை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்….
 
நட்புடன்

வெங்கட்
புதுதில்லி.

30 கருத்துகள்:

  1. மகாத்மாவின் வீடு நல்ல பெரியதாக அழகாக இருக்கிறது. அந்த நடு முற்றம் ரொம்ப அழகு. 22 அறைகள்! ஹப்பா எப்படி பராமரித்தார்களோ!! புதிய தகவல்கள் அறிய முடிந்தது.

    ஆமாம் ஜி பல இடங்களில் மக்கள் தங்களைப் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களும் எடுப்பதில் தவறு இல்லை ஆனால் மற்றவர்க்ளுக்கும் வழி விட வேண்டுமே என்று நகர மாட்டார்கள். நாம் எடுப்பது மிகவும் சிரமமாக இருக்கும்...

    அடுத்து சென்ற இடம் பற்றி அறிய தொடர்கிறோம்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 22 அறைகளை எப்படி பராமரித்தார்களோ - நிறைய வேலையாட்கள் இருந்திருக்கலாம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  2. படங்களையும் பதிவையும் ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  3. காந்தி பிறந்த வீட்டில் தாங்கள் நிற்பது பெருமையான விடயம் ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  5. காந்தி பிறந்த இடத்திற்கு எங்களை அழைத்துச் சென்றுவந்தமைக்கு நன்றி. அங்கு செல்லும் ஆவலை உண்டாக்கியது உங்கள் பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது சென்று வாருங்கள் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  6. வெங்கட்ஜி! உங்கள் வழியாக காந்தியின் பிறந்த இடம் மற்றும் வீட்டையும் கண்டாயிற்று. படங்களும் தகவல்களும் அருமை. தொடர்கிறோம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

      நீக்கு
  7. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில்கிளாஸ் மாதவி.

      நீக்கு
  8. மஹாத்மா காந்தி அவர்களின் நினைவிடத்தை கண்டு மகிழ்ந்தேன்.
    பயணத்தின் போது எடுத்த படங்கல் எல்லாம் அழகு.
    திருமண ஊர்வலத்தில் அலங்கார குடையும், ஸ்பிக்கரும் இருக்கே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்பீக்கரில் பாட்டு! :) அலங்கார குடை இங்கே ஊர்வலங்களில் உண்டு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

      நீக்கு
  9. சிறப்பான இடத்திற்கு சென்று வந்துள்ளீர்கள் ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  10. /கீர்த்தி மந்திர் பற்றிய சில வரலாற்றுக் குறிப்புகளைப் பார்க்கலாம். காந்தி பிறந்த இந்த வீட்டினை 1777-ஆம் ஆண்டு அவரது முப்பாட்டன் காலத்தில் வாங்கி இருக்கிறார்கள். திரு ஹரிவன்ஜி ராஹிதாஸ்ஜி காந்தி அவர்கள் மன்[B]பாய் என்பவரிடம் வாங்கிய இவ்வீட்டினை காந்தியின் தாத்தா உத்தம்சந்த்ஜி அவர்கள் காலத்தில் சில மாற்றங்களைச் செய்து ஒரு மாடியும் கட்டி இருக்கிறார்கள். 1869-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி காந்தி பிறந்த சமயத்தில் இவ்வீட்டில் தரைத் தளம் தவிர இரண்டு மாடிகளும், 22 அறைகளும் இருந்ததாக இங்கே இருக்கும் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன./இத்தனை பழைய வீடு மாற்றங்கள் பல கண்டிருக்கும் அதில் காந்திஜி பிறந்த அறை அப்படியேவா இருக்கும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  11. வணக்கம் நண்பரே.. !

    உங்களது பதிவு http://gossiptamil.com/aggre/ இல் பகிரப்பட்டுள்ளது, பார்வையிடவும். தமிழுக்கான புதிய திரட்டியாக http://gossiptamil.com/aggre/ வெளிவந்துள்ளது. உங்களது இணையத்தளங்களின் பதிவினை இத் திரட்டியினூடாக பகிர்ந்து கொள்ளவதன் மூலம் உங்கள் பதிவுகள், உணர்வுகள், சுவாரசியங்கள் மற்றவர்களையும் சென்றடையச் செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

    நன்றி
    http://gossiptamil.com/aggre/

    பதிலளிநீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    சிறப்பான இடத்திற்கு தாங்கள் சென்று வந்தது மட்டுமின்றி எங்களையும் உடன் அழைத்துச் சென்று விபரங்களை கூறியமைக்கு மிக்க நன்றி. பெரிய வீடு. அழகான படங்கள் அத்தனையும் பகிர்ந்து அளித்ததை கண்டு மகிழ்ச்சியடைந்தேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

      நீக்கு
  13. காந்தி பிறந்த வீட்டையும் பார்த்துவிட்டீர்கள். நிறைய பயணம் செல்கிறீர்கள். வாழ்த்துகள். அதற்கு நிறைய அட்ஜஸ்ட்மென்ட் தேவை. (கூடச் செல்பவர்கள், உணவு, தங்குமிடம், சிலவற்றை நாம் இன்னும் பார்க்க நினைப்போம், சிலருக்கு சில இடங்களில் ரசனை இருக்காது போன்றவை)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. Adjustment - முக்கியத் தேவை - பயணத்தில் மட்டுமல்ல வாழ்க்கையிலும்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  14. புண்ணிய பூமியில் எங்கள் கால்கள் படலைன்னாலும் கண்ணாற கண்டோம்.

    பகிர்வுக்கு நன்றிண்ணே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!

      நீக்கு
  15. கீர்த்தி மந்திருக்கு நாங்க போனப்போ எல்லாம் எழுத்தாளி (!!!) ஆவேன்னு தெரியாது. ஆகையால் படங்கள் எடுக்கவில்லை. அதோடு நாங்க பார்த்தது 90களிலே! அதுக்கப்புறமா எத்தனை மாற்றங்களோ!

    அது சரி, குசேலரோட வீட்டுக்குப் போகலையா?????????????????????

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. போகவில்லை....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....