நான் எடுத்த புகைப்படங்களைப்
பகிர்ந்து அவை என்ன என்ற புதிர் பதிவாக இதுவரை நான்கு பதிவுகள் வெளியிட்டு
இருக்கிறேன். அந்தப் பதிவுகளின் சுட்டி கீழே….
புதிர்-1-விடைகள்: படமும் புதிரும் – சரியான விடைகள்
புதிர்-2: கண்டுபிடிங்க பார்க்கலாம்
புதிர்-2-விடைகள்: லாலுவுக்கும் புதிருக்கும் சம்பந்தம்
புதிர்-3: என்னன்னு சொல்லுங்க….
புதிர்-3-விடைகள்: என்னன்னு சொல்லுங்க - விடைகள்
புதிர்-4: அடுத்த புகைப்படப் புதிர் – ஐந்து படங்கள்
புதிர்-4-விடைகள்: அடுத்த புகைப்பட புதிர் – விடைகள்
இதோ இன்று புகைப்படப் புதிர் ஐந்து
– இரண்டே இரண்டு படங்கள் மட்டுமே. அதனால் சுலபமாச் சொல்லிடலாம்!
படம் - 1: இது என்ன, எதற்குப் பயன்படும்?
படம் - 1: இது என்ன பூ?
பாருங்க… படத்தைப் பாருங்க.
சொல்லுங்க… விடை சொல்லுங்க!
வழக்கம் போல படங்களுக்கான சரியான
விடைகள் நாளை சொல்கிறேன்.
மீண்டும் ச[சி]ந்திப்போம்…
நட்புடன்
வெங்கட்
புதுதில்லி.
இனிய காலை வணக்கம் ஜி!! பார்த்துவிட்டேன்..விடைகள் இதோ மீண்டும் பார்த்துட்டு சொல்லுகிறேன்...
பதிலளிநீக்குகீதா
மாலை வணக்கம்! உங்கள் பதில்கள் வந்து சேர்ந்தன! நாளை வெளியிடுகிறேன்! :) விடைகளும்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
முதல் படம் குடை வடிவில் இருப்பது மேலே இருப்பது அலங்கார விளக்கு போல உள்ளது. லாம்ப் ஷேட் ஆக இருக்கணும் இல்லை அது அலங்காரக் குடை திருவிழாக்களில் பயன்படுத்தப்படுவதாக இருகக்ணும்...இன்னும் யோசிக்கிறேன் ...
பதிலளிநீக்குகீதா
நல்ல முயற்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
முதலில் சொன்ன விடை இல்லை ஜி...முதல் படம் குடை வடிவம் ஏதோ கூடையின் மீது மூடி போன்று உள்ளது...ஆனால் அந்தக் கூடைக்குள் என்ன இருக்கும் என்று தெரியலை...யோசிக்கிறேன்
பதிலளிநீக்குகீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
நீக்குகாலை வணக்கம் வெங்கட்...
பதிலளிநீக்குஐயோ புதிரா? ஒருதடவை கூட நான் சரியா சொல்ல முடியலையே....
மாலை வணக்கம் ஸ்ரீராம்!
நீக்கு//ஒரு தடவை கூட நான் சரியா சொல்ல முடியலையே.....//
இதே தான் எனது எண்ணமும் - உங்கள் புதன் புதிர் பதிவுகள் வரும் சமயத்தில் என்னுள்ளும் இருந்தது! :)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
1. குடை [பிடிக்க பயன்படும்!
பதிலளிநீக்கு2. ரோஜாப்பூவையே உத்து உத்து பாத்துதான் கண்டுபிடிப்பேன்... இதை எப்படி!
குடை மாதிரி தான்!
நீக்குரோஜாப்பூவையே உத்து உத்து பார்த்து - ஹாஹா....
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
முதல் படம் கோவில் திருவிழாக்களில் பயன்படுத்தும் குடைகள்.
பதிலளிநீக்குஇல்லை ஜி! சரியான விடை நாளை வெளியிடுகிறேன்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
புதிரென்றாலே ஓட்டம்தான்.
பதிலளிநீக்குஹாஹா.... நானும் உங்களைப் போலத்தான்! ஓட்டம் தான்! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
சரியான விடையை அறிய காத்திருக்கிறேன்...
பதிலளிநீக்குநாளை விடைகளைச் சொல்கிறேன்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
அந்த குடை போன்ற மூடியின் மேலே இருப்பது அலங்கார விளக்கு அதிலிருந்து ப்ளக் அல்லது தொங்கவிடுவதற்கானதாகவும் ஒன்று இருப்பது தெரிகிறது...
பதிலளிநீக்குகீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
நீக்குஇரண்டாவது படம் நிஜப் பூவா எம்று தோன்றுகிறது அப்புறம் வாழைப்பூவை உள்ளே சிறிய வெள்லைப் பகுதி வரை எடுத்துவிட்டு இறுதிப் பகுதியில் அந்தக் கள்ளன் பகுதி மட்ட்டும் விட்டு மற்றதெல்லாம் எடுத்து அலங்காரம் செய்தது போலவும் உள்ளது...யோசிக்கிறேன்...வேறு ஏதாவது இருக்குமா என்று...
பதிலளிநீக்குகீதா
இலைகளும் இருந்ததால் கொஞ்சம் க்ராப் செய்து பெரிதாக்கியதில் கொஞ்சம் குழப்பம் வந்திருக்கலாம் - நிஜப்பூவா என்று!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
தாமரைப் பூவை இதழ்களை எலலம் எடுத்துவிட்டால் உள்ளே கூட இப்படித்தான் இருக்கும்...ஆனால் படத்தில் உள்ள பூவின் கலர் வித்தியாசமாக இருக்கு...
பதிலளிநீக்குகீதா
தாமரை - நல்ல கற்பனை - நீங்க பிஜேபின்னு சொல்லிடப் போறாங்க!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
முதல் படம் குடைகள் தான் திருவிழா, இப்போது கல்யாணங்க்களிலும் பயன்படுத்த படுகிறது.
பதிலளிநீக்குநடுவில் கம்பு அப்புறம் பொருத்துவார்கள்.
அடுத்து பூ காம்புடன் இருக்கிறது அதை அழகான பலகையில் வைத்து இருக்கிறார்கள்.
நீங்கள் போட்ட கருத்துரை வந்திருக்கிறதே கோமதிம்மா.... கருத்துரைகள் மட்டுறுத்தம் செய்திருந்ததால் வரவில்லை என நினைத்து விட்டீர்களோ....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
முதல் படத்தில் இருப்பது கேரளா கோவில் விழாக்களில் யானை மேல் கொண்டு வரும் குடைன்னு நினைக்கேன். ‘
பதிலளிநீக்குரெண்டாவது படத்திலிருக்கும் பூ சூப்பரா இருக்கு,. ஆனா என்ன பூன்னுதான் தெரில
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!
நீக்குDecoration lamps used in the tents (shamiana tents)- rajan
பதிலளிநீக்குதங்களது முதல் வருகையோ ராஜன் ஜி? மகிழ்ச்சி....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
2. Daisy flower- rajan
பதிலளிநீக்குவிடைகள் நேற்று இரவு வெளியிட்டு இருக்கிறேன். பாருங்கள்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜன் ஜி!
1. Chandelier lamps used in tents- rajan
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜன் ஜி!
நீக்குமுதல் படம் பிள்ளையார் சதுர்த்திக்கான பிள்ளையார் குடைகளா?
பதிலளிநீக்குவிடைகள் வெளியிட்டு இருக்கிறேன் பாருங்கள்...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
விடையை முன்னாடியே பார்த்தாச்சே, ஆதலால் நோ வடை!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....
நீக்கு