இவர் அவர் அல்ல!
படம்: இணையத்திலிருந்து...
CHசாய்வாலா – அரசியல்
புண்ணியத்தில் இந்த ஹிந்தி வார்த்தை இந்தியா முழுவதும், பட்டிதொட்டிகள், மொழி,
மதம், இனம் என எந்த வித்தியாசமும் இன்றி எல்லோருக்கும் தெரிந்த ஒரு ஹிந்தி
வார்த்தையாக மாறி இருக்கிறது. ஹிந்தி மொழியில் பெரும்பாலானவர்களுடன் இந்த “வாலா”
வாலாக ஒட்டிக்கொள்ளும் – கூடா வாலா [குப்பை எடுப்பவர்], DHதூத்DH வாலா [பால்
காரர்], ஆட்டோ வாலா, ரிக்ஷா வாலா, ப்ரெஸ் வாலா [இஸ்திரி செய்பவர்], சப்ஜி வாலா
[காய்கறி விற்பவர்] என பல வாலாக்கள். வாலாக்களுக்கு இங்கே குறைவே இல்லை. எங்கும்
நிறைந்திருக்கிறார்கள் இந்த ஹிந்தி வாலாக்கள்! இன்றைக்கு அப்படி ஒரு வாலாவைத் தான்
நாம் பார்க்கப் போகிறோம்.
எங்கள் வீட்டின் அருகே ஒரு CNG
Pumping Station இருக்கிறது. அங்கே தான் CNG-ல் இயங்கும் பல ஆட்டோக்களும்
கார்களும் வரிசையாக நின்று Gas நிரப்பிச் செல்வார்கள். எப்போதுமே ஐம்பதுக்கும்
அதிகமாக வாகனங்கள் நின்று கொண்டிருக்கும் இடம். இப்படியான இடம் வியாபாரத்திற்கு
ஏற்ற இடம் – ஆட்டோவாலாக்கள் கொஞ்சம் ஓய்வெடுக்கவும், உண்ணவும், தாகசாந்தி செய்து
கொள்வதற்கும் ஏற்ற இடம். சாலையின் இருமருங்கிலும் இருக்கும் நடைபாதையில் ஒரு
ஸ்டவ், கொஞ்சம் பாத்திரங்கள் வைத்து, ஒரு தற்காலிக தேநீர் கடை போட்டு விடலாம்.
நல்ல விற்பனையாகும் இடம். இங்கே மோர் விற்பவர்கள், சின்னச் சின்ன முக்காலிகளில்
ஒரு கூடை வைத்து அதில் சமோசா, வடை, பருப்பில் செய்த லட்டு, குல்ச்சா என பலதும்
விற்பவர்கள் வருவதுண்டு.
நடைபாதையில் இருக்கும் கடை ஒன்றின்
உரிமையாளர் தான் இன்றைக்கும் நாம் பார்க்கப் போகும் கதை மாந்தர். பீஹார்
மாநிலத்தினைச் சேர்ந்தவர். அவர் மட்டுமல்லாது, குடும்பமே உழைக்கிறது இந்தக்
கடையில் – மனைவி, மக்கள் என ஆறேழு பேர் இங்கே கடையில் உழைக்கிறார்கள் – கடை என
பெரிதாக ஒன்றுமில்லை. நடைபாதை ஓரத்தில் ஒரு பெரிய காலி இடத்தின் சுற்றுச் சுவர் –
சுவர் வரும் இடத்தில் ஒரு மரம் இருப்பதால், சுவர் திருப்பிப் போட்ட “ப” வடிவில்
இருக்கும். அந்த இடைவெளியில் தான் இவர் கடை. தினமும் காலை ஆறரை மணிக்கு வந்தால்
இரவு கடையை மூடி வீடு செல்வார்கள். காலையில் நடை முடித்து வீடு வரும்போது தான்
தனது சாய் கடையை விரிக்கத் துவங்குவார். இரவு நான் நண்பர்களோடு வரும்போது கடையை
கட்டிக் கொண்டிருப்பார்.
காலையில் வந்து
இடத்தினைச் சுத்தம் செய்து பைகளில் கொண்டு வந்திருக்கும் பொருட்களை ஒவ்வொன்றாக
அடுக்குவார். Pump Stove பற்ற வைத்து, இஞ்சி, ஏலக்காய்,
சர்க்கரை, தேயிலை, பால் என எல்லாம் வாகாக வைத்துக் கொள்வார். சின்னச் சின்ன
பைகளில் தேநீர் உடன் சாப்பிட – பிஸ்கெட், மட்டி, ஃபேன் என பலவும் உண்டு. பல முறை
அவரை பார்த்தபடியே, தேநீர் வாசத்தினை முகர்ந்தபடியே சென்றாலும் ஏனோ அங்கே தேநீர்
இதுவரை குடித்ததில்லை – வாசத்தினை நுகரும் போது தேநீர் நன்றாக இருக்கும் போல என்று
நினைத்துக் கொள்வதுண்டு! அந்த குட்டி இடத்தில் காலை வீட்டு வேலைகளை முடித்துக்
கொண்டு அவருடைய மனைவியும் வந்து அமர்ந்து வேலைகளைப் பங்குபோட்டுக் கொண்டு
செய்வார்கள்.
நாள் முழுவதும் உழைப்பு. அவர் பயன்படுத்தும்
பாத்திரம், அடுப்பு என அனைத்தும் சுத்தமாக வைத்துக் கொள்கிறார் – தினமும் கடை
கட்டும் சமயம் எல்லா பாத்திரங்களும் சுத்தமாகத் தேய்த்து கழுவி பைகளுக்குள் வைத்து
வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அந்த இடத்தில் எதையும் வைத்துச் செல்ல
முடியாது. கடை அடைக்கும் சமயத்தில் இடம் முழுவதும் சுத்தம் செய்து, ஊதுவத்தி ஏற்றி
பூஜையெல்லாம் முடித்து, அந்த இடத்தினைச் சுற்றி Plastic Sheet கொண்டு கட்டி
வைத்துச் செல்வார்கள் – இல்லை என்றால் மக்கள் அங்கே அசுத்தம் செய்து விடுவார்கள் –
நம் மக்களுக்கு சுவர் கிடைத்தால் போதுமே! எத்தனை கழிப்பறைகள் கட்டினாலும் சுவரின்
மீது சிறுநீர் கழிப்பதில் பலருக்கு ஆனந்தமும் பொங்கி வருகிறது!
அவர்கள் ஏற்றி வைக்கும்
ஊதுவத்தியின் மணம் பற்றிச் சொல்லாமல் சிறுநீர் கழிப்பது பற்றிச் சொல்லிக்
கொண்டிருக்கிறேன்! பெரும்பாலான நாட்களில் இரவு உணவு முடித்த பிறகு வீட்டின்
அருகில் இருக்கும் திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் கோவிலுக்குச் சென்று திரும்பி
வரும் வேளையில் தான் இந்த கடை மூடல் நடக்கும் சமயம். கடை மூடிய அவர்கள், அந்த
கடைக்கு முன்னர் ஏற்றி வைக்கும் ஊதுவத்தியின் மணம் பற்றி ஒவ்வொரு நாளும் நாங்கள்
பேசத் தவறியதில்லை. அப்படி ஒரு மணம் – அந்தப் பகுதி முழுவதுமே வாசம் வீசும். நாள்
முழுவதும் உழைத்து, அன்றைய தினத்தினை நிறைவாக முடித்து வீடு திரும்பும் அந்த
உழைப்பாளிக் குடும்பம் கைகளில் பைகளுடன் பேசிய படியே வீடு திரும்புவார்கள்.
பக்கத்தில் இருக்கும் பால்
டிப்போவில் தான் பால் வாங்கிக் கொள்கிறார்கள் – ஒரு நாளுக்கு பத்து இருபது லிட்டர்
பாலாவது வாங்கலாம் என நினைத்தால், நண்பர் சொல்கிறார் – ஐம்பது லிட்டர் பால்
வாங்குகிறார்களாம்! உடனே நமது மனம் கணக்குப் போடத் துவங்கி விடுகிறது – அப்ப
எவ்வளவு ஸேல்ஸ் ஆகிறது, எவ்வளவு லாபம் என! அவர்களின் உழைப்பு நம் கண்ணுக்குத்
தெரிவதில்லை! நாள் முழுவதும் உழைக்கிறார்கள், உழைப்பிற்கு தகுந்தாற்போல
சம்பாதிக்கிறார்கள் – ஒரு பெரிய குடும்பமே பிழைக்க வேண்டுமே! நன்றாக
இருக்கட்டும்……
வேறொரு பதிவில் வேறு ஒரு கதை
மாந்தரோடு சந்திக்கும் வரை….
நட்புடன்
வெங்கட்
புது தில்லி
இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!! வந்துவிட்டேன்!! வந்துவிட்டேன்!!!
பதிலளிநீக்குகீதா
ஆஹா... கீதா ஜி.... welcome back!
நீக்குகாலை வணக்கம்.
இணைய இணைப்பு சரியாகி விட்டதா?
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
ப்ரெஸன்ட் நு சொல்லியாச்சு...இங்கு சாயா...நான்..காபி ஆத்திவிட்டு வரேன்!! ஹா ஹா
பதிலளிநீக்குகீதா
இங்கே தேநீர் தான்! காபி இல்லை... வாங்க வாங்க காப்பியை ருசிச்சு ரசிச்சு குடித்த பிறகு வாங்க! விடுபட்ட பதிவு நிறைய இருக்கே....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
குட்மார்னிங் வெங்கட். (ஊதுபத்தி) (உழைப்பின்) மணம் வீசும் பதிவு!
பதிலளிநீக்குகாலை வணக்கம்.
நீக்குஉழைப்பின் மணம் வீசும் பதிவு! உண்மை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
அந்த இடத்தின் புகைப்படங்களை ஐஹ்த்துப் போட்டிருக்கலாமோ? ஒரு நாளாவது அங்கு தேநீர் சுவையுங்களேன்... ஏன் இன்னும் சுவைக்காமல் இருக்கிறீர்கள்?!!
பதிலளிநீக்கு// புகைப்படங்களை ஐஹ்த்துப் //
நீக்குபுரியாத மொழிக்கு மன்னிக்கவும்! புகைப்படங்கள் எடுத்து என்று படிக்கவும்! அவசரம்... ஆறு மணியாகும் அவசரம்!!!!
அந்த இடத்தின் புகைப்படங்களை எடுத்துப் போட்டிருக்கலாமோ? லாம்.
நீக்குதேநீர் அங்கே சுவைக்க வேண்டும். விரைவில்.... முடிந்தால் இன்றைக்கே.
ஏன் சுவைக்கவில்லை - நல்ல கேள்வி! பதில் தான் சொல்லத் தெரியவில்லை!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
//புகைப்படங்களை ஐஹ்த்துப்// உங்கள் பாஷையில் சொன்னால் அபுரி! சில சமயங்களில் இப்படித்தான் படுத்திவிடுகிறது!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நான் காபியுடன் வாசித்தேன் ஹா ஹா ஹா ஹ
பதிலளிநீக்குஇந்த வாலா இங்கு எங்கள் வீட்டில் பற்றிக் கொண்டதில் என் மகன் சிறிய வயதில் டீச்சர் வாலா, அப்பா வாலா அம்மா வாலா மாமாவாலா என்று எல்லாவற்றிற்கும் வாலா சேர்த்துச் சொல்லியது நினைவுக்கு வந்தது. நானும் அவனுடன் சேர்ந்து சில வாலாக்கள் சேர்த்து விளையாடுவேன். இப்போதும் கூட அவனிடம் அந்தப் பழக்கம் இருக்கிறது எனக்கும் தான் ஹா ஹா ஹா
பாவம் இப்படியானவர்களும் பிழைக்க வேண்டுமே! ,,மிகவும் பிடித்தது அவர் சுத்தமாகச் செய்வதும் இடத்தைச் சுத்தமாக வைப்பதும். அவர் பிழைக்கட்டும் வாழ்த்துவோம் அந்த உழைப்பாளியை. நிஜமாகவே கதை மாந்தர்தான்
கீதா
டீச்சர் வாலா, அப்பா வாலா, அம்மா வாலா, மாமா வாலா! ஹாஹா.....
நீக்குகுறிப்பாக “அப்பா வாலா, அம்மா வாலா!” அப்பாவிடம் கேட்டால் அம்மா நிச்சயம் வால் தான் என்றும், அம்மாவிடம் கேட்டால் நிச்சயம் அப்பா செம வால் என்றும் பதில் கிடைக்கலாம் நம் ஊரில்! :)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
தேநீர் அங்கு குடித்துவிட்டு அதையும் சொல்லுங்கள்!! ஜி
பதிலளிநீக்குகீதா
அங்கே தேநீர் குடித்து விட்டு நிச்சயம் சொல்கிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
O, May 1 St is nearing!! Uzaippe uyarvu
பதிலளிநீக்குமே ஒன்று - அதற்காக என்று எழுதவில்லை - அமைந்துவிட்டது.....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மிடில் கிளாஸ் மாதவி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. தாங்கள் குறிப்பிட்ட குடும்பத்தின் சுறுசுறுப்பும், பொறுப்பும் சுத்தமும் வியக்க வைக்கிறது. அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். காலை எழுந்தவுடன் நல்லவர்களை பற்றிய நல்ல செய்திகள். பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
சுறுசுறுப்பு - வியக்க வைக்கும் சுறுசுறுப்பு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி.....
உண்மை இப்படி அமைதியாக நிறைய சம்பாரிப்பவர்களும் உண்டு ஜி.
பதிலளிநீக்குநம்மில் பலரும் ஸ்டார் ஹோட்டல் கட்டினால்தான் சம்பாரிக்கலாம் என்ற நினைப்பில் காலத்தை இழந்து விடுகின்றார்கள்.
காலத்தை இழக்கின்ற பலருக்கு நடுவே இப்படி சில உழைப்பாளிகள்.... உண்மை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
உழைப்பாளிகளைப் பற்றிய பதிவு அருமை. எந்த வேலை செய்தால் என்ன. உழைப்பு வாழ்க்கையை நல்லவிதமாக ஓட்டச் செய்யும். அந்தக் கடையின் படம் எடுத்துப்போடுங்கள். (ஞாயிறு புகைப்படத்திலாவது)
பதிலளிநீக்குஅந்தக் கடையின் புகைப்டம் - எடுத்த உடன் வெளியிடுகிறேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.
நல்ல உழைப்பாளி .
பதிலளிநீக்குகுடும்பம் உறுதுணையாக இருக்க கவலை இல்லை.
நலமோடு, வளமோடு வாழ வேண்டும்.
குடும்பம் உறுதுணையாக இருப்பது பெரிய பலம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..