இரு மாநில பயணம் –
பகுதி – 20
இப்
பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “இரு மாநிலப் பயணம்” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu
இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே!
இன்னிக்கு மீன்கள் சிக்குமா? காத்திருக்கும் மீனவர்...
த்வாரகாதீஷ் மற்றும் ருக்மணி
கோவில் இரண்டிலும் தரிசனம் செய்த பிறகு எங்கள் வாகனம் bபேட்t த்வாரகா நோக்கிச்
சென்றது. Okah எனும் இரயில் நிலையத்திற்கு அருகே இருக்கும் நிலப்பகுதியிலிருந்து
கடல் வழியே படகுகளில் பயணித்து பேட் த்வாரகா செல்ல வேண்டியிருக்கிறது.
த்வாரகாவிலிருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவு பயணிக்க வேண்டும். ஒரு மணி
நேரத்திற்கும் சற்றே அதிகமாக நேரம் எடுக்கும் இந்தப் பயணம் படகுத்துறை அருகே
முடிவடைகிறது. வழியெங்கும் மீன்பிடி படகுகளும், பிடித்த மீன்களை கொண்டு செல்லும்
ஜுஹாட் வண்டிகளும், சிறு சிறு கடைவீதிகளும் பார்க்க முடிகிறது. எங்கு பார்த்தாலும்
மீன் மீன் தான்! What do you mean? I mean what I mean கதை தான்.
மூன்றே படகுகள் என்றாலும் எத்தனை கொடிகள்......
எண்ணிச் சொல்ல முடியுமா?
பட்டொளி வீசிப் பறக்கும் மூவர்ணக் கொடி...
இப்படியான சாலைக்காட்சிகளைப்
பார்த்தபடியே பயணித்து படகுத்துறைக்கு வந்து சேர்ந்தோம். வாகன
நிறுத்துமிடத்திலிருந்து சற்றே நடக்க வேண்டியிருக்கிறது. அப்படி நடந்து வந்தால்
படகுகளில் ஏறிக்கொள்ள வசதியாக படகுத்துறை. படகுத்துறைக்கு வரும் படகுகளைச்
செலுத்தும் படகோட்டிகள் அவரவர் இஷ்டத்திற்குச் செயல்படுகிறார்கள். மக்கள்
கூட்டத்தினை ஒழுங்குபடுத்த சிலர் இருந்தாலும், அவர்கள் பேச்சை மக்களும் கேட்பதில்லை,
படகோட்டிகளும் கேட்பதில்லை! எந்தப் படகு முதலில் போகும் என்பதிலும் பிரச்சனை. கூட்டத்தில்
கோவிந்தா போல யார் என்ன பேசுகிறார்கள், என்ன சொல்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள
முடிவதில்லை! எல்லோரும் படகில் ஏறும்போது நாமும் ஏறிக்கொள்ள வேண்டியது தான்!
படகோட்டி...
எங்கெங்கும் படகு... தூரத்தில் குருத்வாரா....
சற்றே கூட்டம் குறையட்டும் என
ஓரமாக நின்று புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தோம். பேட் த்வாரகா பகுதியில்
கோவில் தவிர சிறு கிராமங்களும் உண்டு என்பதால், அந்தக் கிராமங்களுக்குச் செல்லும்
மக்களை அழைத்துச் செல்ல ஒரு படகு முதலில் வந்தது. அதில் சுற்றுலாப் பயணிகளை
ஏற்றிக் கொள்ள மாட்டேன் என தகராறு செய்தார் படகோட்டி. கிராம மக்கள் அனைவரும்
ஏறிக்கொண்ட பிறகு போனால் போகிறதென, சுற்றுலாப் பயணிகளையும் ஏற்றிக் கொள்ள அந்த
படகோட்டி முதியவர் சம்மதிக்க நாங்களும் படகில் ஏறி உட்கார்ந்து கொண்டோம். படகுப் பயணம்
– பத்தே ரூபாயில் - கொஞ்சம் ஸ்வாரஸ்யமான விஷயம் தான் – இங்கே இப்படி மக்களை நிறைய
ஏற்றிக்கொண்டு, தேவையான பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் செல்வது வழக்கமாக இருக்கிறது!
ஸ்ஸப்பா.... இந்த முதுகு நோவுக்கு என்ன செய்ய?......
படகுத்துறையில் நண்பர்களோடு...
ஒரு வழியாக படகில் அமர்ந்து கொண்ட
பிறகு சில புகைப்படங்கள் எடுக்க ஆரம்பித்தேன். படகில் இருந்த மூத்த படகோட்டி, வேறு
ஒரு முதியவர் என படம் எடுக்க ஆரம்பித்தேன். இப்படி கும்பலில் படம் எடுக்கும்போது
சில பிரச்சனைகள் உண்டு – ஆண்களும், பெண்களும் இருக்கும் கூட்டத்தில் புகைப்படம்
எடுக்கும்போது சிலர் அவர்களை படம் எடுப்பதை விரும்புவதில்லை. கொஞ்சம்
ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டியிருக்கிறது! அதிலும் பெண்கள் இருக்கும் பகுதி
என்றால் – நல்ல photogenic face-ஆக இருந்தாலும், ஸ்வாரஸ்யமான காட்சி என்றாலும்
புகைப்படம் எடுப்பதைத் தவிர்க்க வேண்டியிருக்கிறது! அன்றும் அப்படியே. எடுத்த சில
படங்களை இங்கே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்….
படகுப் பயணத்தின் போது நம் கூடவே
நூற்றுக்கணக்கில் பறவைகள் வருகின்றன. அவைகளுக்குப் போடுவதற்காக தின்பண்டமும்
[பொரி, கோதுமை உருண்டைகள்] கரையிலேயே வாங்கிக் கொள்ளலாம். நாம் தீனியை வீச, பறந்தபடியே
அவற்றைப் பிடித்துக் கொள்கின்றன. சில நீரில் விழுந்த பிறகு கொத்தி எடுத்துக்
கொள்கின்றன. தொடர்ந்து வரும் பறவைகள் – நல்லதொரு காட்சி! நிறைய புகைப்படங்களை
எடுத்தோம் – கூடவே ஒரு காணொளியும் இம்முறை எடுத்துக் கொண்டேன். அந்தக் காணொளி
முன்னரே பகிர்ந்திருந்தாலும், மீண்டும் இங்கே ஒரு முறை – நல்ல காட்சியைப்
பார்ப்பதில் தவறில்லையே!
அழகான காட்சிகள், படகுத் துறை
முழுவதும் நங்கூரம் பாய்ச்சி நின்று கொண்டிருக்கும் படகுகள், அவற்றில் பட்டொளி
வீசிப் பறக்கும் கொடிகள், பேட் த்வாரகா பகுதியில் இருக்கும் கோவில், குருத்வாரா,
என அனைத்தையும் படகிலிருந்து ரசித்தபடியே பயணித்து சில நிமிடங்களில் பேட்
த்வாரகாவின் படகுத்துறையில் சேர்கிறோம். படகில் ஏறுவதற்கு எத்தனை பிரம்மப்
பிரயத்தனம் செய்தோமோ, அதே அளவு இறங்குவதற்கும் செய்ய வேண்டியிருந்தது!
எல்லோருக்கும் தானே முதலில் இறங்க வேண்டும் என்ற அவசரம்! விட்டால் கடலுக்குள்
மற்றவர்களை தள்ளிவிட்டு தாங்கள் செல்வார்கள் போலும்! நின்று நிதானித்து
படகுத்துறையில் இறங்கினோம். இங்கேயும் கடைவீதிகள் வழியேதான் நடந்து செல்ல வேண்டும்
– கோவிலுக்கு.
படகுத்துறை அருகே...
அப்படி நடந்து சென்ற போது பார்த்த
காட்சிகள், கோவிலில் தரிசனம், மற்ற நிகழ்வுகள் பற்றி அடுத்த பகுதியில் சொல்கிறேன்.
தொடர்ந்து பயணிப்போம்….
நட்புடன்
வெங்கட்
புதுதில்லி.
வாவ்! படங்கள் வெகு அருமை அதுவும் அந்த ஒன்றுமட்டும் நீந்துகிறதே அது அட்டகாசம் என்றால் கூட்டமாகப் பறக்கும் சீகல்கள் செம!!! பறப்பவனவற்றை எடுப்பது அதுவும் படகில் பயணித்துக் கொண்டே எடுப்பது அழகாக வந்துள்ளது...
பதிலளிநீக்குகீதா
படகில் பயணித்த போது நிறைய படங்கள் - பறவைகளையும், படகுகளையும் எடுத்துக் கொண்டிருந்தேன். சில படங்கள் மட்டுமே இங்கே பகிர்ந்து கொண்டேன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
நாங்கள் எத்தனை கொடிகள் என்று சொன்னால் உங்களால் சரிபார்க்க முடியுமா!!!!
பதிலளிநீக்கு:)))
ஹாஹா நல்ல எதிர் கேள்வி! என்னால் முடியும் என்று சொன்னால், உங்கள் பதில் என்ன?
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
// என்னால் முடியும் என்று சொன்னால், உங்கள் பதில் என்ன?//
நீக்குஉங்களால் முடியும் என்றால் நீங்கள் சொல்லுங்கள். நான் எண்ணியது சரியா என்று பார்த்துக் கொள்கிறேன்!!!!!!!
:))))
நல்ல விளையாட்டு! நீங்கள் சொன்னால் சரியா தவறா என்று நான் சொல்கிறேன்! :) குத்து மதிப்பாக ஒரு தொகையைச் சொல்லி விட்டு விடலாம்! :)
நீக்குதங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
முதிய அந்தப் படகோட்டி (முதல் படம் பார்த்தால் முதுகு வலிக்காரர் அல்ல!) தத்துவார்த்தமான சிந்தை கொண்டவர் போலத் தோன்றுகிறது!
பதிலளிநீக்குஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஒரு தத்துவவாதி ஒளிந்து இருக்கிறார்! ஆனால் வெளிப்படுவதில்லை! அந்த நிலையில் இவருக்குள்ளும்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
பொரிகளை வாயில் கவ்வ பறந்து சுற்றும் பறவைகளின் க்ளிக் சூப்பர். ஆனால் இப்படிச் செய்தால் பறவைகள் தானே இரைதேடுவதை மறந்து விடாதோ....!
பதிலளிநீக்கு//பறவைகள் தானே இரை தேடுவதை மறந்து விடாதோ.... //
நீக்குநல்ல கேள்வி! பல இடங்களில் அனைவரையுமே - மனிதர்களையும் சேர்த்து தான் - இலவசமாகக் கொடுத்துக் கொடுத்து சோம்பேறிகளாக ஆக்கி வைத்திருக்கிறோம்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
ஆமாம் ஜி சில சமயங்களில் ஸ்வாரஸ்யமாக இருந்தாலும் சிலரைப் படம் எடுக்க முடியாது....
பதிலளிநீக்குஇந்த இடம் கட்த் பகுதியே தீவுதான் இல்லையா...இதுவும் தீவுதான் இல்லைஅய...அங்கும் கிராமங்கள் இருக்கின்றனவா? கொஞ்சம் பெரிய தீவோ? பயமில்லாமல் இருக்கின்றனரே மக்கள்!!! துவாரகாவே கடலுக்கடியில் மூழ்கியது என்று சொல்லப்படுகிறது இல்லையா...
ஆம் காணொளி முன்பு பார்த்த நினைவு இருக்கிறது...மீண்டும் பார்த்தேன் அழகு! சீகல் படங்கள் பார்த்ததும் முன்பு நீங்கள் குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வந்தது...
படகுப் பயணம் எவ்வளவு நேரம் ஜி?
இன்னும் ஸ்வாரஸ்யம் அறியத் தொடர்கிறோம் ஜி...
கீதா
ஆமாம் கீதா ஜி! இந்தப் பகுதி தீவு தான். தீவுக்குள்ளும் கிராமங்கள் உண்டு.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
நானும் உங்களுடன் இறங்கி தொடர்ந்து வருகிறேன்!
பதிலளிநீக்குவாருங்கள்.... கோவிலில் என்ன நடந்தது என்பதைப் பார்க்கலாம்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
அந்தப் படகோட்டி செமையா இருக்காரே...!
பதிலளிநீக்குஅப்புறம் கொடிகள் எண்ணிப் பார்த்தேன் ஹா ஹா ஹா ஹா...
கீதா
கொஞ்சம் கோபக்காரராகவும் இருந்தார்!
நீக்குஆஹா நீங்களும் எண்ணிப் பார்த்தீங்களா? எனக்கும் ஸ்ரீராமுக்கும் இப்பத்தான் டீல் முடிந்தது! :)
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!
படங்கள் அழகு காணொளி கண்டேன் ஜி
பதிலளிநீக்குசிலர் தன்னை பிறர் படமெடுப்பதை விரும்புவதில்லை இதுவும் நல்ல பழக்கமே...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
நீக்குஉண்மை தான். பலருக்கும் இப்படி புகைப்படம் எடுக்கப்படுவது பிடிப்பதில்லை. அதனால் எடுப்பதில்லை!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!
அருமை அருமை ஐயா
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குபடங்கள் வழ்க்கம் போல அருமை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
நீக்குபடங்கள் அழகு.. படகோட்டி படகைப் பார்க்காமல் வானத்தைப் பார்க்கிறாரே:) அப்போ படகு கவிழ்ந்திடாது?:) கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).
பதிலளிநீக்குஅப்போ படகு கவிழ்ந்திடாது! :) நல்ல சந்தேகம். படகோட்டிகளில் அவரும் ஒருவர்! இன்னும் சிலர் உண்டு!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.
படங்களும், காணொளியும் மிக அருமை.
பதிலளிநீக்குபயணம் இனிமை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....
நீக்குஅருமை... பயணத் தொடர் உங்களுக்கே சாத்தியம்... என்ன ரசனை....
பதிலளிநீக்குபடங்கள் (குறிப்பாக பறவைகள்) அழகோ அழகு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.
நீக்குகன்னியாக்குமரில விவேகானந்தர் பாறைக்கும், ஒகேனக்கல் பரிசல்ல போனதும்தான் நீர்வழி பயணம் செஞ்சது.. படகுச்சவாரியும் என் ஆசைகளில் ஒன்று
பதிலளிநீக்குவிரைவில் படகுச் சவாரி அமையட்டும்....
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி!
அழகான படங்கள் நிறைய விஷயங்கள் கூறும் படகுகளில் அதன் அளவுக்கு மேல் ஏற்றி விபத்து நேர்வதைத் தடுக்க இயாலாதுஅல்லவா
பதிலளிநீக்குஅளவுக்கு அதிகமாக ஏற்றுவதால் விபத்து ஏற்படுவது உண்மை தான். எல்லாம் காசு செய்யும் வேலை!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.
அருமை... அருமை...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபயணம் இனிமை. படகு சவாரியில் தாங்கள் எடுத்த படங்கள் அதை விட இனிமை. அழகானவை. பறவைகளின் படங்கள் மிகவும் நன்றாக இருக்கின்றது. படகுப் பயணம் சுவாரஸ்யமானதுதான். அடுத்து கோவில் பயணத்திற்கும் காத்திருக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!
நீக்குபடகில் பயணம் செய்யும்போது ஆட்களை ஏற்ற ஏற்ற திக் திக் என்றே இருக்கும். அதனாலேயே இந்தப் பயணங்களைத் தவிர்க்கத் தோன்றும்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.....
நீக்கு