நண்பர்களுக்கு, இனிய
காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.
மழை பெய்வதை தடுக்க முடியாது, ஆனால் குடை
இருந்தால் உங்களை நீங்களே காப்பாற்றிக் கொள்ளலாம். அதே போல பிரச்சனைகளைத் தடுக்க முடியாது,
ஆனால் தன்னம்பிக்கை இருந்தால் பிரச்சனைகளை வென்று வாழ்வில் வெற்றி காணலாம்.
காலச்சக்கரம் - 10 மார்ச் 2020:
18 வருடங்களுக்கு
முன்பு…
மனுஷன் காலைல ஆஃபீசுக்கு
போயிட்டு இப்பத் தான் வரேன். இன்னிக்கு என்ன பண்ணினீங்க!! லஞ்ச் சாப்பிட்டீங்களா!! இன்னைக்கு நாள் எப்படி
இருந்ததுன்னு ஏதாவது கேட்கறீயா!!! ம்ம்ம்!! ம்ம்ஹூம்ம்! ஓ! அப்படியா! இதைத் தவிர வேற
ஏதாவது உனக்கு பேசத் தெரியுமா!!!
(இன்று)
ஹலோ! ஹலோ!! லைன்ல
இருக்கீங்களா???
இங்கயே தான் இருக்கேன்..:)
ஏதாவது சொல்லக்கூடாதா??
லைன் கட் ஆகி நானே பேசிக்கிறேனோன்னு ஒரு டவுட்...:)
எனக்கு எங்க வாய்ப்பு
கெடைக்கறது!!!
என்ன????
அது வந்து!! அன்னிக்கு
என் ஃப்ரெண்ட் கூடச் சொன்னார்!!
என்ன சொன்னார்???
நமக்கெல்லாம் இந்த
ம்ம்ம்..ம்ம்ஹூம்ம்.. இதைத் தவிர பேச வாய்ப்பு கிடைக்கறதில்லைன்னு சொன்னார்!!
ஏன் அப்படிச் சொன்னார்??
உன்கிட்ட பேசும் போது
அங்க தான் இருந்தார்!!
உங்களை யாரு அங்க
இருந்து பேசச் சொன்னது!!!
_ _ _ _ _ _ _ _
_ _ ம்ம்ம்ம்...அது வந்து.....:))))
ஹா..ஹா..ஹா..ஹா...
கல்லாமணி வடு – 10 மார்ச் 2020:
திருச்சியில்
கிளிமூக்கு மாங்காயை கல்லாமணி என்பார்கள்.. ஒரு கிலோ வாங்கி சுத்தம் செய்து எண்ணெயும்,
உப்பும் போட்டு வைத்திருக்கிறேன். நாலைந்து நாட்கள் கழித்து காரம் சேர்க்கணும்.
வெங்கி மாமா – 15 மார்ச் 2020
நம்ம வீட்டில் நான்கு
மாதங்களுக்கு வரிசையாக பிறந்தநாள், திருமண நாள் கொண்டாட்டங்கள் இருக்கே!! அதனால் இன்று
மலைக்கோட்டை வரை சென்று ஷாப்பிங் செய்யும் வேலை இருந்தது. வழக்கம் போலவே பொதுமக்களின்
உயிரை துச்சமாக எண்ணும் பேருந்து ஓட்டுநர் :( அசுர வேகம் :(
கடைத்தெருவில் கொரோனா
பீதியால் மக்கள் வெள்ளம் குறைவாகவே காணப்பட்டது. மாஸ்க்குடன் சிலர். மகளுக்கு துணியெடுக்கச்
செல்லப் போகிறேன் என்றதும் "அதுக்கு முன்னாடியே உனக்கும் பிறந்தநாள் வருதே"
"பிடிச்சதை வாங்கிக்கோ" என்று தலைநகரத்தில் இருந்து உத்தரவு:)
புடவை செக்ஷனில்
ஒரு ரவுண்ட் வந்து எதை வாங்குவது என்று யோசித்த தருணம் கண்ணில் பட்ட ஒரு புடவை.
"Venky
Maama collection"
பதினைட்டு வருடங்களாக
ஒரு வெங்கி மாமாவோடு தான் குப்பை கொட்டறேன் என்றால், புடவையிலுமா!!!
விடாது கருப்பு போல
:) ஹா...ஹா...ஹா...
புடவை எடுத்து காண்பிப்பவர்
சற்றே சிடுசிடுப்புடன் காணப்பட்டதால் ஃபோட்டோ எல்லாம் எடுக்கலை :)
'Venky maamaa' நடிகர்
நாக சைதன்யா நடித்திருக்கும் தெலுங்கு படம் என மகள் எடுத்துச் சொன்னாள் :)
தலையே வாங்கிக்கோ
என்று சொன்னதால் "அப்பா பர்ஸின் கனத்தை குறைப்போம்! வெச்சு தீட்டுவோம்' என்று
மகள் கலாய்த்தாள் :) ஆனாப் பாருங்க! எனக்கு பிடிச்சது எல்லாமே சிம்பிள் சாரீஸ் தான்
:) ஒட்டுவது தானே ஒட்டும் இல்லையா!!!
மகள் தன் சேமிப்பிலிருந்தும்
ஒரு புடவை வாங்கிக் கொடுத்தாள். அப்பா ஒன்று! மகள் ஒன்று! ஜமாய் தான் :)
வெளியே வந்ததும் பதின்
பருவத்தில் ஒரு சிறுவன். அக்கா! அம்மாவும் நானும் சாப்பிடவேயில்ல. சாப்பாடு வாங்கி
குடுக்கா :( என்று சொன்னான். நீயே வாங்கிக்கோ தம்பி! என்று பணத்தை கொடுத்து விட்டு
வந்தேன் :(
மங்கள் & மங்களில்
நம்ம குக்கிங்குக்கு தேவையான சாக்லேட் மோல்ட், குக்கீஸ் கட்டர் என சிலவற்றை வாங்கிக்
கொண்டு ஜில் ஜில் ஜிகர்தண்டா வையும் ருசித்து விட்டு வீடு திரும்பினோம்.
இன்றைய நாள் இனிதாகவே
சென்றது.
ஆதியின் அடுக்களையிலிருந்து… - மாவடு – 16 மார்ச்
2020:
நாட்டு
வடு!!!
இரண்டு
நாட்களுக்கு முன் கடைத்தெருவில் நாட்டு வடுவும், ருமானி வடுவும் கண்ணில் தட்டுப்பட்டது.
ருமானி வடு கிலோ 300க்கும், நாட்டு வடு 250 க்கும் விற்பனை செய்து கொண்டிருந்தார்கள்.
ருமானி வடு பெரிது பெரிதாக இருந்ததால் காணாது என்பதால் நாட்டு வடுவை வாங்கினேன்.
தண்ணீரில்
இருமுறை அலசி, துணியில் போட்டு ஈரம் போக காயவைத்து, இம்முறை உப்பு, மிளகாய், கடுகு,
மஞ்சள் போன்றவற்றை உடனே அரைத்து சேர்த்து விட்டேன். நீட்டு வடுவில் மிளகாய்த்தூள் சேர்த்தேன்.
இதில் மிளகாயையே அரைத்து சேர்த்திருக்கிறேன். மஞ்சளும் நான் முன்பு வாங்கிய பசுமஞ்சளை
நறுக்கி காயவைத்து அரைத்தது தான்.
இந்த
வருட மாவடு கோட்டா முடிந்தது. உறவுகளுக்கும், நட்புகளுக்கும் கொடுக்கத் தயார் நிலையில்
உள்ளன.
கொரோனா – 16 மார்ச் 2014
காலை நேரத் தும்மல்
எனக்கு சகஜம். ஆனால் அதை இப்போ கொரோனா என்று ஓரம் கட்டி விடுவார்களோ என்று அச்சம்.
கூறு கெட்டவளே! அதைத் தொட்டு இதைத் தொடலாமா!! என்று பாட்டியின் அசரீரி குரல் அச்சுறுத்துகிறது!
முன்னோர்களின் முத்தான சொற்கள் எல்லாவற்றையும் மறந்துட்டோம். விட்டு விட்டோம். வெளியே செல்வதை தவிர்க்க முடியாதே. என்ன செய்யலாம்?
நாம் எப்போதும் இருப்பதை
விட இன்னும் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். சுத்தமும், சுகாதாரமும் மிகவும் முக்கியம்.
நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட உணவுகளை உட்கொண்டால் நலம். சற்றே உடல் நலம் குன்றினாலும் மருத்துவரிடம் செல்வது
நல்லது. அவ்வப்போது கைகளை சோப்பால் சுத்தம் செய்வதும், இருமும் போதும் தும்மும் போதும்
முகத்தை மூடிக் கொள்வது அவசியம். இவை கேலி செய்ய வேண்டிய விஷயமல்ல.
கூட்ட நெரிசல் உள்ள
இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல் சிறப்பு. நம்மையும் நமது குடும்ப உறுப்பினர்களையும்
கவனமுடன் பார்த்துக் கொள்வோம். நல்லதே நடக்கும்!
கத்தரிக்காய் கஷ்ணம் – 16 மார்ச் 2020
டெல்லியில் எங்கள்
குடியிருப்பில் பஞ்சாபி, பெங்காலி என ஒரு மினி இந்தியா போல தான் வசித்தோம். எங்கள்
வீட்டுக்கு நேர் கீழே கொங்கன் பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு அருகில் பெங்காலிகள்.
இவர்கள் இருவருக்குமே அசைவம் இல்லாமல் அன்றைய பொழுது புலராது :) நாங்க வெஜிடேரியன்
என்று சொன்னாலும் ”அப்போ மீன் சாப்பிடுவீங்க இல்லையா?” என்பார்கள் :)
அதிலும் கொங்கன் பகுதியைச்
சேர்ந்தவர்களுக்கு dry fish இல்லாமல் உணவே இறங்காது. இரவு தினமும் அதை வறுத்த பின்
தான் உணவே :) சாதாரணமாகக் கூட சமாளித்தேன். கருவுற்ற போது தினமும் உவ்வேவேவே :))
சரி!! இந்த கதையெல்லாம்
எதற்கு!!! சுமார் எட்டு வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அந்த வாடை:) இன்று சந்தையில்,
ஒரு டெம்போவில் விதவிதமாக வைத்து விற்பனை :)
வாங்கம்மா!! வாங்க! இராமேஸ்வரம் கருவாடு!! கோயமுத்தூர் கருவாடு!! என்று கூவி
கூவி வியாபாரம் :) ஓட்டமும் நடையுமாக காய்கறிகளையும், பழங்களையும் வாங்கிக் கொண்டு
நடையக் கட்டினோம்.
என்ன நண்பர்களே, இந்த
நாளின் கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப்
பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே!
மீண்டும் சந்திப்போம்…
சிந்திப்போம்…
நட்புடன்
ஆதி வெங்கட்.
வாசகம் வழக்கம்போல அருமை. மாவடு இந்த வருடம் போடவில்லை. அதேபோல தஞ்சாவூர் குடைமிளகாயும் வாங்கவில்லை, போடவில்லை. மாவடுக்களின் படங்கள் கவர்கின்றன. பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பற்றி பேஸ்புக்கில் படித்தேன்.
பதிலளிநீக்குகருவாடு வாசனை! - ஹா.. ஹா.. ஹா...
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குதஞ்சாவூர் குடைமிளகாய் - அதை வைத்து என்ன செய்வீர்கள்? மோர் மிளகாய்?
மாவடுக்களின் படங்கள் - மகிழ்ச்சி.
கருவாடு வாசனை - பிடிக்காதவர்களுக்கு தான் கஷ்டம். சாப்பிடுபவர்களுக்கு மகிழ்ச்சி!
கதம்பம் எனில் சொல்லவும் வேண்டுமோ!...
பதிலளிநீக்குகதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.
நீக்குகதம்பம் அருமை.
பதிலளிநீக்குமாவடு - வித விதமா... நாக்கில் எச்சிலூறுது. ஐ மிஸ் சென்னை.... அங்க அட்டஹாசமா வடு வரும். ருமானி வடு - அட்டா. அருமையா இருக்கும்.
மீன் - அந்த வாசனை பிடிக்காதவர்களுக்கு நரகம்தான். மதுரையில் கல்லூரி காலத்தில் பஸ் ஸ்டான்டை ஒட்டிய இடத்தில் மீன் பஜ்ஜி இரவு செய்துகொண்டு இருப்பார்கள்... அதைக் கடப்பதற்குள் போதும் போதும் என ஆகிவிடும். பிற்காலத்தில் பிலிப்பினோஸ் மீன்களை வறுப்பதும் குடலைப் பிடுங்கும்.
கதம்பம் பகிர்வு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.
நீக்குமாவடு - விதம் விதமாக - இப்போதெல்லாம் வரத்து குறைவு தான். விலையும் அதிகரித்துக் கொண்டே போகிறது என்று சொல்கிறார்கள் திருவரங்கத்தில்.
மீன்/கருவாடு - பிடித்தவர்களுக்கு நல்ல வாசம். பிடிக்காதவர்களுக்குக் கடினமே!
நெல்லை சென்னையை மிஸ் செய்ய வேண்டாம். இங்கும் காந்திரோடு போனீங்கனா நல்ல மாவடு கிடைக்கும். அல்லது கே ஆர் புரம், மல்லேஸ்வரம் மார்க்கெட்டில் ஸ்ரீரங்கம் அந்தக் கிளிமூக்கு/கல்லாமணி வடுவும் ருமானி நாட்டு மாவடுவும் கிடைக்கும். டிசம்பர் ஜனுவரியில். போனவருடம் போட முடிந்தது. இந்த வருடம் அங்கு போகாமல் விட்டுவிட்டேன். போடமுடியாமல் போனது.
நீக்குகீதா
பெங்களூருவிலும் மாவடு - தகவல் உங்களுக்கு பயன்படும் நெல்லைத் தமிழன்.
நீக்குதகவலை இங்கே பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி கீதாஜி.
தில்லையகத்து கீதா ரங்கன் - நன்றி.
நீக்குபுதன், சனி மட்டும் காய்கறி வண்டி (அரசு நிறுவனம்) இந்த வளாகத்துக்குள் வரும். இன்று செவ்வாய், வந்துவிட்டது. இனி சனிக்கிழமைதானாம். இப்போ பார்த்து ஆட்டா மாவு இல்லை. வெளியில் (வளாகத்தை விட்டு) செல்ல வாய்ப்பே இல்லை போலத் தெரியுது. இன்றைக்கு 1 மீட்டர் இடைவெளியில் காய்கறிக்காக நிற்கும்போதே 7-8 பேருக்கு பிரச்சனைனு தெரியுது.
இதுல காந்திபஜார் போவது எப்படி? மாவடு போடுவது எப்படி?
சரி..சரி... தில்லி இரயில் நிலையத்தில் சிலர் சந்தித்ததுபோல, மெஜஸ்டிக் பேருந்து நிலையத்தில் சிலரை எப்போவாவது சந்தித்து, மாவடு ஜாடி பெற்றுக்கொள்ள வேண்டியதுதான். இல்லைனா, கிளிமூக்கு வடு படம் பளிச் என்று படத்தில் தெரிவதுபோல திருவரங்கத்தில் போட்டிருந்தால், அங்கு செல்லும்போது ஒரு சிறிய டப்பா வாங்கிக்கொள்ள வேண்டியதுதான்.
ஹாஹா... கொஞ்சம் பொறுங்கள் நெல்லைத் தமிழன். அடுத்த வருடம் வாங்கிக் கொள்ளலாம்!
நீக்கு//பதினைட்டு வருடங்களாக ஒரு வெங்கி மாமாவோடு தான் குப்பை கொட்டறேன் என்றால், புடவையிலுமா//
பதிலளிநீக்குஹா.. ஹா.. ஸூப்பர் படங்கள் மிகவும் அழகு.
ஹாஹா... ம்ம்.. அனைவரும் இன்புற்றிருக்கட்டும்! மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குஆதி அருமையான கதமபம்.
பதிலளிநீக்குதலைப்பைப் பார்த்ததுமே உங்க வீட்டு வெங்கிமாமா தான் நினைவுக்கு வந்தார் ஹா ஹா ஹா...நீங்க வேற அவரைக் கலாய்த்ததும் சிரித்துவிட்டேன்.
மாவடு வாவ்! இம்மும்றை போட முடியவில்லை. போன வருடம் போட்டேன். போட்டது எல்லாம் டிஸ்ட்டிப்யூட்டும் ஆகி எங்களுக்குக் கொஞ்சமே கொஞ்சம் தான் இருந்தது அதில் பச்சடியும் செய்து எல்லாம் தீர்ந்து போய்...இந்த வருடம் இங்கு கிடைக்கும் இடங்களுக்குப் போகமுடியாமல் போனதால் போடவில்லை. ஸ்ரீரங்கத்தில் கிமூ மாங்காய் வடு நிறைய கிடைக்கும். எனக்கு இந்த வடு ரொம்பப் பிடிக்கும் ஆனால் பச்சடி செய்வதற்கு நாட்டு வடு அல்லது ருமானி வடு பெஸ்ட் ஏனென்றால் அது நன்றாக ஸாஃப்டாக வரும் சீக்கிரம்.
சாக்கலேட் மோல்ட் குக்கீஸ் கட்டர் சூப்பர்.
வாசகம் அருமை!!! மிகவும் ரசித்தேன். உண்மை
கவனமாக இருங்கள். எனது பாட்டியும் பேப்பரை, பத்திரிகைகளைத் தொட்டாலே கை கழுவச் சொல்வார்கள். பேப்பரில் மாவு சலிக்க மாட்டார்கள். தலையைத் தொட்டால், முகத்தைத் தொட்டால் எங்கேனும் வாயில் கை பட்டிருக்குமோ என்று எதையும் தொட விடமாட்டார்கள். கையை நன்றாகக் கழுவியபின் தான். குளிக்காமல் அடுக்களைக்குள் செல்லக் கூடாது இப்படிப் பல உண்டு.
கதம்பம் நன்றாக இருக்கிறது
கீதா
இன்றைய கதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.
நீக்குவெங்கி மாமா - மீ பாவம்! :)
மாவடு - இங்கே கிடைக்காது - ஊரிலிருந்து எடுத்து வர முடிவதில்லை! அதனால் ஊருக்குச் செல்லும்போது சுவைப்பதோடு சரி.
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
கவனமாக இருப்போம் - கொரோனாவிலிருந்து நம்மையும் நம்மைச் சார்ந்தவர்களையும் காப்போம்.
முட்டையை போல் மீனையும் வெஜ் ஆக்கி விட்டார்களோ... ஹா... ஹா...
பதிலளிநீக்குகதம்பம் அருமை...
முட்டையைப் போல மீனையும் - ஹாஹா... பெங்காலிகள் பலரும் மீன் சாப்பிடுவது உண்டு.
நீக்குகதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
வீட்டில் இருக்க சொன்னால் சந்தடி மிக்க கடைத்தெருவுக்கு செல்வது சரியில்லை, சந்தடி சாக்கில் பிறந்த நாள் மற்றும் கல்யாணம் ஆகி 18 வருடங்கள் என்ற விவரங்களையும் தெரிவித்து விட்டீர்கள். வெங்கட் அவர்கள் எப்படி டில்லியில் வீட்டில் இருந்து வேலை (சமையல் + ஆபீஸ்) செய்கிறாரா? அல்லது எப்படி ஆபீஸ் போகிறார்?
பதிலளிநீக்குஅலுவலகம் இன்னும் விடுமுறை தரவில்லை என்பதால் சென்று கொண்டிருக்கிறேன். விரைவில் சூழல் சரியாக வேண்டும்.
நீக்குவருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.
கதம்பம் சிறப்பு
பதிலளிநீக்குகதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குகதம்பத்தில் அனைத்தும் அருமை. அதுவும் மாவடுவைப் பார்த்ததும் நாக்கில் எச்சில் ஊறியது. கொரோனா பற்றிய தகவல் ஒரு நினைவூட்டல்.
பதிலளிநீக்குமாவடு - பலருக்கும் பிடித்ததே....
நீக்குகதம்பம் உங்களுக்கும் பிடித்தில் மகிழ்ச்சி வே. நடனசபாபதி ஐயா.
//தன்னம்பிக்கை இருந்தால் பிரச்சனைகளை வென்று வாழ்வில் வெற்றி காணலாம்//
பதிலளிநீக்குநல்ல வாசகம்.
கதம்ப செய்திகளை முகநூலில் படித்தேன்.
மாவடு இந்த ஆண்டு கிடைக்கவில்லை.
அனைத்தும் அருமை.
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...
நீக்குமாவடு - திருவரங்கத்திலும் குறைவே...
கதம்பத்தின் பகுதிகளை ரசித்தமைக்கு நன்றி.
கதம்பம் கலக்கலாய்...
பதிலளிநீக்குமாவடு ஈர்க்கிறது...
மாவடு - பலருக்கும் பிடித்த விஷயம் குமார்.
நீக்குகதம்பத்தின் பகுதிகளை ரசித்தமைக்கு நன்றி.
கோவையில் எங்கள் நண்பன் வீட்டிற்குச் சென்றிருந்தபோது மாவடுவினை இவ்வாறாக வைத்துத் தந்தார்கள். ருசித்து ருசித்து சாப்பிட்ட நினைவு வந்தது.
பதிலளிநீக்குமாவடு - பலருக்கும் பிடித்தது. நீங்களும் ரசித்துச் சுவைத்ததை சொன்னதில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குகிளிமூக்கு மாங்காயை இவ்ளோ குட்டியாக நான் பார்த்ததே இல்லை... இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. எது வாங்கினாலும் மூன்றாக வாங்குவதுதானே நல்லது:)) அதனால இன்னொரு சாறியும் வாங்கிக்கோங்க.. டெல்லி வொலட் ல இருந்து கார்ட் நம்பரை வாங்கி:))
பதிலளிநீக்குசின்னச் சின்னதாய் கிளிமூக்கு மாங்காய் - மாவடு போட இப்படியான சின்னச் சின்ன மாவடுக்கள் தேவை அதிரா.
நீக்குஇன்னுமொரு Saree! வாங்கிக்கலாம்! கார்ட் நம்பர் எதுக்கு - கார்டே அவங்க கிட்ட தானே இருக்கு! :)
மாவடு ஊறுகாய் நாக்கில் எச்சி ஊற வைக்குது.
பதிலளிநீக்குஹாஹா... உங்க ஊரில் கிடைக்குமே ராஜி. வாங்கி செய்து கொள்ளலாமே...
நீக்குஆதியின் பதிவுகளை முக நூலில் படித்தேன். மாவடு அபாரம்.
பதிலளிநீக்குஇங்கே போட முடியவில்லை.
வெங்கி மாமா ஜோக் சூப்பர்.
உங்கள் மூவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
குழந்தையின் பொது அறிவு வியக்க வைக்கிறது. நம் ஊருக்கு உரித்தான புத்திசாலித்தனம்.
மனம் நிறை ஆசிகள்.
முகநூலில் எழுதியவை இங்கே ஒரு தொகுப்பாக...
நீக்குமாவடு - அங்கே கிடைக்காதேம்மா...
வெங்கி மாமா - :))) மகிழ்ச்சி வல்லிம்மா.
மார்ச், ஏப்ரல், மே, ஜூன் என வரிசையாக பிறந்த நாள், திருமண நாள் வருகின்றன.
கதம்பம் பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கான தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய முயற்சியில் களத்தில் இறங்கியிருக்கிறது நமது வலை ஓலை வலைத் திரட்டி. நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய வலைத்தளங்களும் விரைவில் இணைத்துக் கொள்ளப்படும்.
பதிலளிநீக்குஎமது வலைத் திரட்டிக்கு உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.
உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்
எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்
இதேவேளை, வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு
வலை ஓலை, எழுத்தாணி - நல்ல முயற்சி. உங்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
நீக்குரோஷி பிறந்தநாள் 4/4இல்லையா?? ஆதி அண்ணிக்க்2/4 ஓ!! இரண்டு பேருக்கும் எனெ Advance wishes.வழக்கம் போல நட்புக்குடும்பத்தில் விருந்தாடிய உணர்வு அண்ணா!!நன்றி
பதிலளிநீக்குமுதலாவது சரி! இரண்டாவது தவறு! இன்றைக்கு (25/3) தான் ஆதியின் பிறந்த நாள்!
நீக்குநீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை - மகிழ்ச்சி மைதிலி.
கதம்பம் அருமை.
பதிலளிநீக்குகதம்பம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.
நீக்கு