காஃபி வித் கிட்டு – பகுதி 60
அனைத்து பதிவுலக
நண்பர்களுக்கும் இனிய
காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.
இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:
There
are so many things that can make you happy. Don’t focus too much on things that
make you sad.
தற்போதய சூழலுக்கு இந்த வாசகம் பொருத்தமாக
இருக்கும் எனத் தோன்றியது. நமக்கு மகிழ்ச்சி
தரக் கூடிய விஷயங்களையே பேசுவோம், அதையே யோசிப்போம். நலமே விளையட்டும்.
கொரானா
– ஓவரா யோசிச்சா உடம்புக்கு ஆகாது:
பலரும் மருத்துவ நிபுணர்களாகவும் ஆராச்சியாளர்களாகவும்
ஆகிக் கொண்டிருக்கிறார்கள். 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு – நேற்றோடு முதல் மூன்று நாட்கள்
வெற்றி கரமாக முடிந்து விட்டது – ஆனால் அதற்குள் எத்தனை எத்தனை செய்திகள், காணொளிகள்,
ஒலிப்பேழைகள், படங்கள் – என தொடர்ந்து பகிர்ந்து கொண்டே இருக்கிறார்கள். தென்னிந்தியாவிலிருந்து வருவது போல, எனக்கு வட இந்தியாவின்
பல பாகங்களிலும் இருந்து தகவல்கள் வந்த வண்ணமே இருக்கிறது – குறிப்பாக வட மாநிலங்களிலிருந்து
ஹிந்தி மொழியில் காணொளிகள். சில பார்க்கும்போதே
சிரிக்க வைப்பவை. மாதிரிக்கு ஒரு காணொளி இந்தப்
பதிவில் சேர்க்கிறேன் – வீட்டினுள் அடைண்டு கிடக்கும் சர்தார்ஜி வீட்டை விட்டு வெளியே
செல்வேன் என அடம் பிடிக்க, அவர் கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டு படுக்க வைத்திருக்கிறார்கள்
– கெஞ்சுகிறார் – என்னை வெளியே விடுங்கள் என. வீட்டுக்குள்ள இரு, சமையல் செய், வீட்டை
க்ளீன் பண்ணு, ஆனா வெளியே மட்டும் போகக்கூடாதுன்னு சொல்கிறார்கள் மனைவியும் குழந்தைகளும்!
பாருங்களேன்.
இந்த வாரத்தின்
காணொளி:
ஒவ்வொரு உடைக்குப் பின்னரும் ஒரு கதை உண்டு – அப்பா தன்
மகள் கேட்ட ஒரு உடையை வாங்கித் தருவதற்காக செய்த விஷயங்கள்… பாருங்களேன். நிச்சயம்
உங்கள் மனதைத் தொடும் இந்த காணொளி…
இந்த வாரத்தின்
ரசித்த பாடல்…
இந்த வாரத்தின் ரசித்த பாடலாக ஒரு காஷ்மீரி
பாடல். கேட்க இனிமையாகவே இருக்கிறது. கேட்டுப் பாருங்களேன்.
இந்த வாரத்தின்
ரசித்த கேள்வி-பதில்
கேள்வி: அண்மையில் நீங்கள் எதற்காக சிரித்தீர்கள்?
பதில்: கவிதா மேரி - சமீபத்தில் நானும் என் நாத்தனாரும் வீட்டில் ரவா லட்டு செய்ய முயற்சி செய்து கொண்டு இருந்தோம். அது ஒரு மாலை நேரம். இருள் கவிய தொடங்கி விட்டது. என் குழந்தைகள் சேட்டை அதிகமானதால், அவர்களை மொட்டை மாடியில் மேய்க்கச் சொல்லி கணவரிடம் கொடுத்து அனுப்பினேன். அவர்கள் அங்கு விளையாடிக் கொண்டிருந்தனர்.
இது முதல்முறை
என்றாலும் நானும் என் தம்பி மனைவியும் ஓரளவு நன்றாகவே ரவா லட்டு செய்திருந்தோம். இரவு உணவையும் தயார் செய்துவிட்டு கணவரையும் பிள்ளைகளையும் அழைத்து வர மாடிக்கு சென்றேன்.
அங்கு அவர்கள் விளையாட்டு சுவாரஸ்யத்தில் இருந்தார்கள்.
அப்பொழுது என்
கணவருக்கு ஒரு அலுவலக அழைப்பு வரவே அவர் தொலைபேசியில் மும்முரமாக பேசிக்கொண்டிருந்தார். என் இளைய மகன் (10 மாதம்) என் மீது ஏறி விளையாடிக் கொண்டிருந்தான். என் மூன்றரை வயது மூத்த மகன் ஓடி விளையாடிக் கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில்
மூத்தவன் அமைதியாக ஒரு இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். சந்தேகப்பட்டு அவனை அழைத்து பார்த்தபோது அவன் பவுடர் டப்பாவில் பவுடரைக் கொட்டி விளையாடிக் கொண்டிருந்தான். நான் அழைத்ததும் அவசர அவசரமாக கைநிறைய பவுடரை கொட்டிக் கொண்டு வந்து என்னிடம் வந்து காட்டி மொத்தமும் அவனுக்கு பூசி விடுமாறு கேட்டான். அவனிடமிருந்து அவற்றை வாங்கி கொஞ்சம் மட்டும் கையில் வைத்துக்கொண்டு மீதியை வெளியில் தூக்கி எறியுமாறு என் கணவரிடம் கொடுத்தேன்.
அவர் பேச்சு
சுவாரஸ்யத்தில் கவனிக்காமல், உடைந்த ரவா லட்டு தான் கொடுக்கிறேன் என்று எண்ணி வாயில் போட்டுக் கொண்டார். அது பொடியாக இருப்பதை முதல் தடவை நாங்கள் செய்த ரவா லட்டு-ன் தரம் என்று
எண்ணி வாயில் போட்டு விட்டார்.
கையிலிருந்த பவுடரை
பையனுக்கு பூசி விட்டு விட்டு திரும்பி பார்த்தால் என் கணவர் அது என்ன என்று என்னிடம் கேட்டுக் கொண்டிருந்தார். அவரை உடனடியாக வெளியில் துப்ப சொல்லி பின்னர் வாய் கொப்பளித்து வர சொல்லி அனுப்பி
வைத்துவிட்டு நான் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தேன்.
அவர் பாவமான
முகத்துடன் திரும்பி வந்து உட்கார்ந்து கொண்டிருந்தார். என் சமையல் திறமையை இவ்வளவு கேவலமாக எடை போட்டதற்கு உங்களுக்கு தேவை தான் என்று நான் அவரை கலாய்த்துக் கொண்டிருந்தேன். பேச முடியாமல் கண்ணில் நீர் ததும்ப நான் அப்படி வெகு காலத்திற்குப் பிறகு சிரித்தது எனக்கே மகிழ்ச்சியாக இருந்தது.
இன்றைக்கு ஒரு விளையாட்டு:
அனைவரும் வீட்டில் முடங்கிக் கிடக்கிறோம்.
இந்தச் சமயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் பலரும் திண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
இந்த சமயத்தில் நிறைய விதமான பொழுதுபோக்கு
விஷயங்கள் வாட்ஸ் அப் வழி வந்து கொண்டிருக்கிறது. அப்படி வந்த ஒரு விஷயம் கீழே.
HOME WORK 26th March 2020
Write
your name in Japanese language, pls dont spoil the fun!!! Lets laugh a
bit by writing your name in JAPANESE ALPHABET:
A= ka,
B= tu, C= mi, D= te,
E= ku, F= lu, G= ji,
H= ri, I= ki, J= zu,
K= me, L= ta, M= rin,
N= to, O= mo, P= no,
Q= ke, R= shi, S= ari,
T= chi, U= do, V= ru,
W= mei, X= na Y= fu,
Z= zi.
Pls send your funny names!
This will ease out the stress now!
என்னுடைய பெயர் – வெங்கட் என்பதை இப்படி எழுதணுமாம்! –
Rukutomekachi! உண்மையில் இது ஜப்பானிய மொழியா என்பது எனக்குத் தெரியாது. உங்கள் பெயர் எப்படி எழுதுவீர்கள் என்பதை பின்னூட்டத்தில்
சொல்லலாமே!
பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க:
2014-ஆம் ஆண்டு ஃப்ரூட் சாலட் என்ற தலைப்பில் எழுதி வந்த
தொகுப்பில் ஒன்று இதே நாளில் எழுதியது – படிக்காதவர்கள் வசதிக்காக… இங்கே மீண்டும்!
படித்துப் பார்க்கலாமே!
நண்பர்களே, இந்த
வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்...
நட்புடன்
வெங்கட்
புது தில்லி
வணக்கம் வெங்கட். இணைத்திருக்கும் குட்மார்னிங் படமும், வாசகமும் நன்றோ நன்று. நான் தொலைக்காட்சிச் செய்திகள், வாட்சாப் பார்வேர்டுகள் ஆகியவற்றைப் பார்ப்பதை நிறுத்தி விட்டேன்.
பதிலளிநீக்குகாலை வணக்கம் ஸ்ரீராம். படமும் வாசகமும் உங்களுக்கும் பிடித்திருப்பதில் மகிழ்ச்சி.
நீக்குசெய்திகள், தகவல்கள் பார்க்காமல் இருப்பது நல்லதே. ரொம்பவே படுத்துகிறார்கள். ஒரே செய்தி பதினைந்து இருபது முறை வருகிறது! :(
ஜப்பான் மொழி பார்வேர்ட் வாட்சாப்பிலோ பேஸ்புக்கிலோ பார்த்தேன். வீட்டில் அனைவரும் உறங்கி கொண்டிருப்பதால் காணொளிகள் அப்புறம்தான்! அனைத்தையும் ரசித்தேன். பழைய பதிவில் என் டிரேட்மார்க் எழுத்துப்பிழை கமெண்ட்டையும் படித்து வந்தேன்!
பதிலளிநீக்குஎனக்கும் வாட்ஸப் வழி தான் இந்த ஜப்பானிய மொழி பதிவு வந்தது.
நீக்குகாணொளிகளை முடிந்த போது பாருங்கள்.
பழைய பதிவும் உங்கள் கருத்தும் - :))) தட்டச்சு பிழைகள் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது!
கதம்பப் பதிவுக்கு ரின்டோஷிகாடகியின் பாராட்டுகள். ரசிக்கும்படி இருந்தது.
பதிலளிநீக்குகதம்பம் பதிவு ரசிக்கும்படியாக இருந்ததில் மகிழ்ச்சி ரின்டோஷிகாடகி (நெல்லைத்தமிழன்).
நீக்குகதம்பம் அருமை ஜி சர்தார்ஜி காணொளி கண்டேன்.
பதிலளிநீக்குகுறும்படம் பிலிப்பைன்ஸ் மொழி ஜி
குறும்படம் - ஃபிலிப்பைன்ஸ் மொழி - ஆமாம் கில்லர்ஜி. பதிவில் குறிப்பிட விடுபட்டுவிட்டது. உங்களுக்கு குறும்படம் பிடித்திருக்கும் என நம்புகிறேன்.
நீக்கு//நமக்கு மகிழ்ச்சி தரக் கூடிய விஷயங்களையே பேசுவோம், அதையே யோசிப்போம். நலமே விளையட்டும்.//
பதிலளிநீக்குஅருமை. நலமே விளையட்டும்.
வீட்டில் இருக்க சொல்லும் காணொளி, காஷ்மீர் பாடல் , சிரிப்பு, விளையாட்டு எல்லாம் நன்றாக இருக்கிறது.
பழைய நிலைமை திரும்பி வர ஆசையை சொல்கிறதோ பாடல். உணர்ச்சிகள் நிறைந்த பாடலாக இருக்கே!
காலை வணக்கம் கோமதிம்மா...
நீக்குபதிவின் அனைத்து பகுதிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
பொழுதை நல்லமுறையில் கழிக்க இது அனைவருக்கும் ஒரு வாய்ப்பு. அதில் ஒரு உத்தியை நீங்கள் தந்தவிதம் அருமை.
பதிலளிநீக்குபொழுதை நல்ல முறையில் கழிப்போம். அது மட்டுமே இப்போதைய தேவை முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குபதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
ரசிக்கத் தக்க கதம்பம் ..
பதிலளிநீக்குஎப்போதும் நன்மைகளைச் சிந்தித்துக் கொண்டு இருப்பதும் நலம் தான்...
வாழ்க நலம்..
பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.
நீக்குநல்லதையே சிந்திப்போம்.
நலமே விளையட்டும்.
கொரானா தொடர்பானச் செய்திகளைப் படிக்காமல் பார்க்காமல் இருப்பது நல்லதுதான் ஐயா
பதிலளிநீக்குகொரோனா - ஆமாம் ரொம்பவே அதிகமாக பகிர்ந்து கொள்கிறார்கள் - அதுவும் பல தவறான செய்திகள். படிக்காமல் இருப்பதே மேல் கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குதமிழ் வலையுலகில் கொட்டிக்கிடக்கும் நூற்றுக் கணக்கான தமிழ் வலைப்பூக்களை ஒன்றிணைக்கும் ஓர் அரிய முயற்சியில் களத்தில் இறங்கியிருக்கிறது நமது வலை ஓலை வலைத் திரட்டி. நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. ஏனைய வலைத்தளங்களும் விரைவில் இணைத்துக் கொள்ளப்படும்.
பதிலளிநீக்குதற்போது, தங்களது காஃபி வித் கிட்டு – சோகம் – உடம்புக்கு ஆகாது – உடை – காஷ்மீரி – மகிழ்ச்சி பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
எமது வலைத் திரட்டிக்கு உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.
உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்
எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்
இதேவேளை, வலைச்சரம் வலைத்தளம் போன்று வலைப் பதிவர்களை ஒருங்கிணைக்க எழுத்தாணி எனும் தளத்தையும் நாம் உருவாக்கியுள்ளோம். இந்த தளத்தில் தங்கள் சுய அறிமுகத்துடன் தாங்கள் விரும்பிய பதிவுகளை பதிவிடலாம். வலைச்சரம் போன்று வாரம் ஒரு ஆசிரியருக்கு வாய்ப்பு வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: தொடர்பு
உங்கள் சிறப்பான முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துகள் சிகரம் பாரதி.
நீக்குகொரோனா இன்னும் என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறதோ?!
பதிலளிநீக்குமகள் கேட்ட உடையின் வரலாறு மனதை நெகிழ வைத்தது.
இன்னும் பலவும் செய்யலாம் - நலமே விளையட்டும் என பிரார்த்தனை செய்வது தவிர வேறு வழியில்லை. தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வோம் ராஜி.
நீக்குகாணொளி பிடித்ததில் மகிழ்ச்சி.
முதல் காணொளி ஹா... ஹா...
பதிலளிநீக்குஇரண்டாவது காணொளி நெகிழ்ச்சி...
கேள்வி பதில் ரசித்தேன்...
இப்படிக்கு :
டேகிடோடேகிஜிடோட (TekitoTekijidota) てきとてぃじじどう
டெரிகாடோகாடுகடகடோ (Terikatokatukatakato) テリカトカカタカト
பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குஜப்பானிய மொழியில் உங்கள் பெயர் பயங்கர கடமுடா! ஹாஹா...
ஹா... ஹா... இதனால் வீட்டிலும் சந்தோச தருணம்... நன்றி ஜி...
நீக்குவீட்டிலும் சந்தோஷ தருணம் - ஆஹா... எங்கும் மகிழ்ச்சி நிலவட்டும் தனபாலன்.
நீக்குArishikirinkatakakifukanonokato இதான் என்னுடைய பெயர்
பதிலளிநீக்குநீளமான பெயராக இருக்கிறதே உங்களுக்கு! ஹாஹா.. படிக்கவே கொஞ்சம் நேரம் எடுக்குமே மலையப்பன்.
நீக்குஒரு முரை நண்பன் ஒருவனின் தந்தையார் தேங்காய் எண்ணையை லெமன் ஜூஸ் என்று குடித்தது நினைவுக்கு வந்தது
பதிலளிநீக்குதேங்காய் எண்ணையை லெமன் ஜூஸ் என குடித்து விட்டாரா.... ஹாஹா... பாவம் தான் ஜி.எம்.பி. ஐயா.
நீக்குஇங்கிருக்கும் பரபரப்பில் பல விஷயங்கள் படித்துவிட்டுக் கருத்துச் சொல்ல மறந்துவிட்டேன். சிங்க் வீட்டு ஜோக் நல்ல நகைச்சுவை.
நீக்குஜப்பானிய மொழியில் எழுத பிறகு முயற்சிக்கிறேன்.
வீட்டில் அடைந்து கிடப்பது எனக்கு சுலபமே. இளையவர்கள் சிரமப்படுகிறார்கள்.
எப்பொழுது பார்த்தாலும் துடைத்து கைகழுவி என்று வேலைகள்
தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
பாவம் மகளும் மாப்பிள்ளையும்.
உங்கள் வாசகங்கள் தெம்பூட்டுகின்றன். ஒரு நாளாவது விடுதலையும் ஓய்வும்
கிடைத்தால் நல்லது.
கஷ்மீரி பாடல் மிக அருமை. காஷ்மீர் வளம் பெறட்டும். உணர்ச்சிகளைப் புரிந்து கொள்ள முடிந்தது.
நன்றி வெங்கட். எல்லாமே அருமை.
கதம்பமாக வெளியிட்ட இப்பதிவில் உள்ள அனைத்து விஷயங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா...
நீக்குகஷ்மீரி பாடல் பாடும் பெரியவர் முகத்தில் எத்தனை சோகம். நலமே விளைய வேண்டும்.
தற்போதைய சூழலுக்கு மிக மிக ஏற்ற வாசகம் ஜி. அருமை
பதிலளிநீக்குஆம் ஜி நிறைய காணொளிகள் வருகின்றன…டிக்டாக் என்று பல ஆப் களில் மக்கள் எடுத்து விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
காணொளி மனதைத் தொட்டது.,
காஷ்மீரி பாடல் நன்றாக இருக்கிறது.
கேள்வி பதில் ரசித்தேன்
இந்த விளையாட்டு எனக்கும் வாட்சப்பில் வந்தது ஜி..
Jikukuchika
Haa haa haa haa
Memorinkakika இது எனது இன்னொரு பெயர்!!!!!!!!!!!
கீதா
வாசகம், பதிவின் பகுதிகள் அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.
நீக்குஜப்பானிய மொழியில் உங்கள் பெயர் - ஜிகுகுசீக்கா! ஹாஹா... நன்றாக இருக்கிறது! மெமொரின்ககிகா! இதுவும் நன்றாகவே இருக்கிறது!
காணொளி அனைத்தும் அருமை. கேள்வி பதில் ரசித்தேன்.
பதிலளிநீக்குபதிவின் பகுதிகளை நீங்களும் ரசித்ததில் மகிழ்ச்சி சொக்கன் சுப்ரமணியன்.
நீக்குசுவாரஸ்யமான தொகுப்பு.
பதிலளிநீக்குபதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.
நீக்குஅனைத்தும் நன்று.
பதிலளிநீக்குபதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.
நீக்கு