காஃபி வித் கிட்டு – பகுதி 59
அனைத்து பதிவுலக
நண்பர்களுக்கும் இனிய
காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.
இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:
நீங்கள்
என்ன பேச வேண்டும், என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை உங்களுக்குச் சொல்லும் உங்கள்
மனதின் மெல்லிய குரலை நீங்கள் நம்ப வேண்டும்…
கொரானா
– இப்போதைய தேவை ஒற்றுமையே:
கொரானா – உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் இந்த
வைரஸ், இந்தியாவிலும் தன் கோர முகத்தினைக் காண்பிக்கத் துவங்கி இருக்கிறது. நேற்று
இந்தப் பதிவினை தட்டச்சு செய்கிற வரை, இந்தியாவில் 223 பேர் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டு
இருக்கிறார்கள் (தகவல் இந்தியாவின் சுகாதரத் துறை அமைச்சகத்தின் இணையதளத்திலிருந்து…). இந்த நேரத்தில் நாம் அனைவரும் செய்ய வேண்டிய சில
விஷயங்கள் – தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது, அரசின்/மருத்துவர்களின் வழிகாட்டுதல்கள்
படி நடப்பது, சுகாதாரம், சுத்தம் போன்றவற்றை கண்டிப்பாக கடைபிடிப்பது, பணியில் ஈடுபட்டு
இருக்கும் சுகாதாரத் துறை ஊழியர்களை மதித்து அவர்களுக்கு அநாவசிய தொந்தரவு தராமல் இருப்பது – வெளி நாடுகளுக்கு/ஊர்களுக்கு சென்று
வந்தவர்கள் தொற்றின் அறிகுறி இருந்தால் நிச்சயம் பரிசோதனை செய்து கொள்வதோடு, தொற்று
இருப்பது தெரிந்து விட்டால் யார் யாருடன் அவர்கள் தொடர்பு கொண்டார்களோ, அவர்களையும்
பரிசோதனை செய்து கொள்ளச் சொல்வது போன்ற நடவடிக்கைகள் தான்.
பலரும் பல வித காணொளிகளையும் செய்திகளையும், முகநூல், வாட்ஸப்
போன்ற Social Media Platform-களில் பகிர்ந்து கொண்டு வருகிறார்கள் – உண்மையா பொய்யா
என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே வதந்திகளையும் பரப்பி வருகிறார்கள் – இது கண்டிப்பாக
தவிர்க்கப் பட வேண்டிய விஷயம். இந்த நேரத்தில்
நாம் எல்லோருமே சுய கட்டுப்பாட்டுடன் இருந்து இந்தப் பேரிடரினை எதிர்கொள்ள வேண்டும். இந்த நேரத்திலும், அடுத்தவர்களை குறை சொல்லிக் கொண்டும்,
இந்தப் பேரிடரையும் அரசியல் நோக்கத்துடன் அணுகுவதையும் நிச்சயம் தவிர்க்க வேண்டும்
– எல்லா விஷயங்களையும் Meme போடுவதற்காக மட்டுமே பயன்படுத்துவது சரியில்லை! நிறைய தளங்களில்
உண்மையான தகவல் போலவே தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். மேலே கொடுத்துள்ள சுட்டி வழி, மத்திய அரசாங்கத்தின்
சுகாதாரத்துறை அவ்வப்போது தரும் வழிகாட்டுதல் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள், பயன்படுத்துங்கள். இந்தத் தளத்தில் அனைத்து வழிகாட்டுதல் தகவல்களும்
உண்டு – அனைத்தும் பயனுள்ளவையே. அனைவரும் ஒற்றுமையோடு
இந்தப் பேரிடரை எதிர் கொள்வோம்! நலமே விளையட்டும்… நாளை நமதே என்ற நம்பிக்கையோடு பேரிடரை எதிர்கொள்வோம்.
இந்த வாரத்தின்
விளம்பரம் – சிங்டெல்:
சிறுவர்களாக இருக்கும் போது நம் பெற்றோர் நம் மீது வைத்திருக்கும்
அன்பும் பாசமும் நமக்குப் புரிவதில்லை. அவர்களை விட்டு விலகி – மேல் படிப்பிற்கோ, பணி
நிமித்தமோ – வெளியே வரும்போது தான் அவர்களை நாம் புரிந்து கொள்கிறோம். மனதைத் தொடும் விதமாக எடுக்கப்பட்ட இந்த விளம்பரம்
பாருங்களேன் – நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு!
இந்த வாரத்தின்
ரசித்த பாடல்…
முதல் முறை தான் இந்தப் பாடலை கேட்கிறேன். ஆனாலும் மனதிற்குப் பிடித்திருந்தது இப்பாடல் –
இதுவும் அம்மா பற்றிய பாடல் தான்! கேஜிஎஃப் எனும் படத்தின் பாடலாம்! கேளுங்களேன்.
இந்த வாரத்தின்
ரசித்த கேள்வி-பதில்
கேள்வி: நீங்கள் கடைசியாக கண்களில் நீர் வரும்
அளவுக்கு ரசித்துச் சிரித்தது எப்போது? எதற்காக?
பதில் – குணசீலன் முத்துகிருஷ்ணன்: சென்னையில் பணியாற்றிய தருணத்தில் எங்கள் ஜெனரல் மானேஜர்(வட இந்தியர்), எங்க
ப்ரொஜெக்ட் சைட் ஆஃபீஸ் வந்திருந்தார். தமிழ் அவருக்கு அவ்வளவு தெரியாது. இங்கிலீஷ்,ஹிந்தி கலந்து பேசுவார். ஒரகடம் என்ற ஊரின் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் தான் எங்கள் ப்ரொஜெக்ட் ஆன கட்டிட பணி
நடந்து கொண்டிருந்தது. அங்கு அவர் மாதம் ஒருமுறை வந்து சந்திப்பு நடத்துவார். அன்றைய சமயம் மதிய நேரம் என்பதால் அங்கு நிறைய மாடுகள் வெளிய மேய்ந்து கொண்டிருக்கும். அப்போது அங்கு அழையா விருந்தாளியாக உள்ளே நுழைந்த மாடானது எங்கள் சந்திப்பு கூட்டத்தில் நுழைந்தது கூடத் தெரியாமல் வெள்ளைப்பலகையின் அருகே அந்த மாதத்தின் பணி நடப்பு குறித்து எழுதிக்கொண்டே பேசிக்கொண்டிருந்தார்.மற்ற அனைவரும் கவனித்தும் ஏதும் பேசாமல் இருந்தோம்.மாடு அங்கும் இங்குமாக சாணி போட ஆரம்பித்துவிட்டது.என் அருகேயுள்ள நண்பர் அதை கண்டு சிரித்து விட்டார். நானும் தான், கொஞ்சம் சத்தமாகவே...
உடனே
மேனேஜர், "க்யா,
குணா..ஒய் ஆர் யூ லாஃபிங்?" (என்ன
குணா,எதுக்கு சிரிக்குற?) னு கேட்டார். நானும்
சிரித்த படி,"குச் நெகி சார் ஜி,ஏக் காய்
அந்தர் குஸ்க்கே செண்டாஸ் கர்தியா ஹை"னு சொன்னேன்.
( ஒன்றும் இல்லை சார்,ஒரு மாடு உள் புகுந்து சாணி போற்றுச்சுனு)... அவர்,"க்யா போல்ராஹே தும்"..( என்ன சொல்ற நீ )னு சொன்னார்.
என்
அருகே உள்ள நண்பர், உடனே எழுந்து ,"சார் அங்குட்டு மாடு நிக்குது சாணிய மிதிச்சுட போறீங்கன்னு" னு தமிழில் சொன்னார்.
இதை சொன்னதும். என் மானேஜர்," க்யா ஹுஆ சானியா மிர்சா க்கோ" னு கேட்டார்..(சானியா
மிர்சாக்கு என்னாச்சு ன்னு)
இதைக் கேட்ட
அங்கிருந்த 20 பேரும் அந்த அறையே அதிரும் அளவுக்கு சிரித்தோம்...அவருக்கு நாங்கள் எதுக்கு சிரிக்கிறோம் என்றே விளங்கவில்லை. எனக்கு சிரித்தே கண்ணில் நீர் வந்துவிட்டது.2009 இல் நடந்த சம்பவம் இது. இன்றும் சிரிக்கிறேன்.
நல்ல மனம் வாழ்க:
கோவையின் ஆட்டோ ஓட்டுனர் ராகவேந்திரா என்பவர் தன்னுடைய
ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளுக்கு இலவசமாக முகக் கவசம் வழங்குகிறார். இலவசம் என்பதை பொதுவாக தவறென்று சொன்னாலும், இந்தப்
பேரிடர் காலத்தில் நல்ல மனதுடன் செயல்படும் திரு ராகவேந்திரா அவர்களுக்கு இந்த வாரத்தின்
பூங்கொத்து. முழுச் செய்தியும் படிக்க…
பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க:
இதே நாளில் 2011-ஆம் வருடம் எழுதிய ஒரு பதிவு – “கிடைத்தாள் கனவு ராணி” – தேர்தல் பணியாளராக
பணியாற்றிய போது கிடைத்த அனுபவங்களை அந்த நாட்களில் எழுதி வந்தேன் – ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு அனுபவம்! அப்படியான ஒரு அனுபவத்தினை இந்தப் பதிவில் எழுதி இருக்கிறேன் – படிக்காதவர்கள்
படித்துப் பார்க்கலாம்!
நண்பர்களே, இந்த
வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் ச[சி]ந்திப்போம்...
நட்புடன்
வெங்கட்
புது தில்லி
இனிய கால வணக்கம் வெங்கட்ஜி!
பதிலளிநீக்குஉங்கள் அந்தமான் தொடரை வாசித்து வருகிறேன். கருத்துதான் இட முடியவில்லை. இனி இட முடியும் என்று நினைக்கிறேன். கணவரின் கணினி கிடைக்கும் சொற்ப நேரத்தில் அவ்வப்போது வலையுலகில் உலாவ எண்ணம். பார்ப்போம்..
வாசகம் அருமை. ஆனால் மனம் தெளிவான நிலையில் இருக்கும் போது சொல்லுவதை என்று கொள்ளலாமா?
மற்றவற்றை இன்னும் வாசிக்கவில்லை அப்புறம் வருகிறேன் ஜி. இது அட்டெண்டன்ஸ் ஹா ஹா ஹா ஹா
கீதா
ஆஹா... இனிய காலை வணக்கம் கீதாஜி.
நீக்குஅந்தமான் தொடரை தொடர்ந்து வாசிப்பதில் மகிழ்ச்சி. கணினி விரைவில் கிடைக்கட்டும்.
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
முடிந்த போது வாசித்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள் கீதாஜி.
இனிமையான விளம்பரம். சிலசமயம் குழந்தைகள் வளர்ந்து விட்டார்களே என்கிற அன்புக்குறை எல்லோருக்கும் பொது.
பதிலளிநீக்குகொரானா பற்றிய தகவல்கள் உபயோகமானது, உண்மையானது. KGF படம் நீண்ட நாட்களுக்கு முன்னால் அமேசானில் பார்த்தேன். என் இளையவன் மூலம் அப்போதே பாடலை ரசித்தேன்.
விளம்பரம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குகொரானா - பல இடங்களில் தவறான செய்திகளும் வதந்திகளும் தான் வருகின்றன.
படம் நான் பார்த்ததில்லை. பாடல் சமீபத்தில் தான் கேட்டேன்.
கொரோணா வைரஸ் எதிர்ப்பு பற்றிய தகவல்களுடன் விழிப்புணர்வு பதிவு..
பதிலளிநீக்குஅருமை...
கொரானா - பல இடங்களிலும் வதந்தி. அமைச்சகத்தின் தகவல் நல்ல விஷயம், பயனுள்ளது என்பதால் இங்கே பகிர்ந்து கொண்டேன் - சிலருக்காவது உதவியாக இருக்கட்டுமே என்பதால் தான் துரை செல்வராஜூ ஜி.
நீக்குகொரானோ பற்றிய விளிப்புணர்வு தமிழகத்தில் குறைவே இதைக்குறித்து வதந்தி பரப்புவது அதை நக்கலடித்து கவிதை எழுதுபவர்களை நினைத்தால் ஆத்திரமாக வருகிறது எல்லாம் தனக்கு வந்தாலே உணர்வார்கள் போலும்
பதிலளிநீக்குஆட்டோ டிரைவரின் உயர்ந்த பணியை வாழ்த்துவோம்.
ஜி நேற்றுதான் "சானியா மிர்சா சாணியை மிதிச்சா" என்ற தலைப்பில் ஒரு நகைச்சுவை பதிவு எழுதி ட்ராப்டில் வைத்தேன் இன்று அதே விடயம் கண்டு சிரித்துக் கொண்டு இருக்கிறேன்
வதந்தி பரப்புவதை கர்ம சிரத்தையாகச் செய்பவர்கள் இங்கே நிறையவே இருக்கிறார்கள் கில்லர்ஜி. தனக்கென்று வந்தால் தான் உணர்வார்கள் என்பதும் உண்மை.
நீக்குசானியா மிர்சா சாணியை மிதிச்சா - ஹாஹா... உங்கள் பாணி பதிவினை படிக்கக் காத்திருக்கிறேன்.
நல்லதொரு விழிப்புணர்வு பதிவு...
பதிலளிநீக்குநகைச்சுவை ஹா... ஹா...
நகைச்சுவை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குஅந்த காணொளி என்னை என்னவோ செய்துவிட்டது
பதிலளிநீக்குகாணொளி - மனதைத் தொடும் விதமாக எடுத்திருக்கிறார்கள் மலையப்பன். பார்த்த சில நாட்கள் வரை மறக்க முடிவதில்லை.
நீக்குசிறந்த தொகுப்பு. விளம்பர பதிவு ரசிக்க வைத்தது.
பதிலளிநீக்குதமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 20 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
தற்போது, தங்களது காஃபி வித் கிட்டு – மனதின் குரல் – ஒற்றுமை – மா, பா – கவசம் – கனவு ராணி பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.
உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.
உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்
எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்
பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி சிகரம் பாரதி.
நீக்குகொரானா பற்றிய விழிப்புணர்வுத் தகவல்களுக்கு நன்றி ஐயா
பதிலளிநீக்குசிலருக்கேனும் இப்பதிவு பலன் தரும் என்றே பதிவிட்டேன் கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குஉங்களது பக்கத்தின் முகப்புப் படம் அருமை. பறவைகளைப் படம்பிடிப்பதிலும் பார்ப்பதிலும் சந்தோஷம் உண்டாகிறது.
பதிலளிநீக்குகொரோனாபற்றி ஆளாளுக்கு சமூகவலைதளங்களில் குப்பையை வீசிக்கொண்டிருக்க, உங்கள் பக்கம் சரியான அரசுத் தகவல்களுடன் மிளிர்கிறது. உடனே பகிர்தல் அல்ல, சரியானதா என உறுதி செய்துகொண்டு பகிர்வதே இத்தகைய நெருக்கடிக்காலத்தில் உசிதமானது என்பதை நமது ‘வாட்ஸப் மேதைகளுக்கு’ எப்படிப் புரியவைப்பது? ஒரு ‘ஃபார்வர்டை’ சரியாகக் கூடப் படிக்காமலேயே, அவசரமாக அங்கேயும் இங்கேயுமாக அனுப்பிவிட்டு, தங்களை ஒரு ‘படைப்பாளி’ கணக்காக எண்ணிக்கொள்கிறார்களோ சிலர்! ஆண்டவா ..
முகப்புப் படம் - தமிழகத்தில் சென்னையை அடுத்த முட்டுக்காடு ஏரியில் எடுத்தது. உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஏகாந்தன் ஜி.
நீக்குகொரானோ - பலரும் தவறான, உண்மைக்குப் புறம்பான செய்திகளையே பகிர்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது வருத்தமான விஷயம். வாட்ஸப் மேதைகள் - என்ன சொல்ல.
//இந்த நேரத்தில் நாம் எல்லோருமே சுய கட்டுப்பாட்டுடன் இருந்து இந்தப் பேரிடரினை எதிர்கொள்ள வேண்டும். இந்த நேரத்திலும், அடுத்தவர்களை குறை சொல்லிக் கொண்டும், இந்தப் பேரிடரையும் அரசியல் நோக்கத்துடன் அணுகுவதையும் நிச்சயம் தவிர்க்க வேண்டும் – எல்லா விஷயங்களையும் Meme போடுவதற்காக மட்டுமே பயன்படுத்துவது சரியில்லை!//
பதிலளிநீக்குஉண்மை.விழிப்புணர்வு பதிவு அருமை.
//மனதைத் தொடும் விதமாக எடுக்கப்பட்ட இந்த விளம்பரம் பாருங்களேன்//
மனதை தொட்டது. விழியோரம் கண்ணீர் வந்தது.
அனைவருக்கும் இந்த நேரத்தில் தேவையானது விழிப்புணர்வு மட்டுமே தானே கோமதிம்மா...
நீக்குவிளம்பரம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
நகைச்சுவை படித்து நானும் சிரித்தேன்.
பதிலளிநீக்குஆட்டோ ஓட்டுனர் நல்ல மனம் வாழ்க!
நகைச்சுவை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...
நீக்குஆட்டோ ஓட்டுனர் - வாழ்க வளமுடன்! இது போன்ற நல்லவர்கள் இன்றைக்கு நிறையவே தேவை.
கொரோனா விழிப்புணர்வு தகவல்கள் உண்மையான தகவல்கள் பயனுள்ளவை. ஆம் ஜி. நாங்களும் அரசின் தளத்தை தான் பார்க்கிறோம் தகவல் அறிந்து கொள்ள. சிங்க்டெல் விளம்பரம் மிகவும் ரசித்தேன். உணர்வுபூர்வமான ஒன்று. மகன் இவ்வளவு வளர்ந்துவிட்டானே என்று கொஞ்சம் மனதின் ஓரத்தில் ஒரு சின்ன செல்லமான வருத்தம் சில சமயம் ஏற்படும்!!!
பதிலளிநீக்குகேஜிஎஃப் என்று ஒரு படமா? பாடல் இப்போதுதான் கேட்கிறேன் ஜி. ரசித்தேன் ஜி.
ஆட்டோ ஓட்டுநரின் சேவை போற்றுதற்குரியது.
நான் சும்மாவே சின்ன விஷயத்திற்குக் கூட சிரித்துவிடுபவள்...ஸோ இந்த ஜோக்கை வாசித்ததும் சிரித்துவிட்டேன்...
சுவையான மணமான காஃபி!!!
கீதா
கொரோனா தகவல்கள் - பலரும் வதந்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்பதால் தான் இந்தத் தகவலை இங்கே பகிர்ந்து கொண்டேன் கீதாஜி.
நீக்குவிளம்பரம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. செல்லமான வருத்தம் - :)
நானும் இந்தப் படம் பற்றி முன்னர் கேள்விப்பட்டதில்லை கீதாஜி.
காஃபி வித் கிட்டு பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.