நண்பர்களுக்கு, இனிய
காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.
இறப்புக்கு பின் வாழ்வு இருக்கிறதா என்பது கேள்வி அல்ல, இறப்பதற்கு முன் உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்தீர்களா என்பதே கேள்வி – ஓஷோ.
ரன் – காதலன் சினிமா - 29 மே 2020:
ஒரு திரைப்படத்தைப் பார்க்கும் போது அந்த கதை, இயக்கம், நடிகர், நடிகை, காமெடி இவற்றையெல்லாம் தாண்டி நம் கண்முன் தோன்றும் காட்சிகள் என்னவென்றால் எந்த தியேட்டரில் பார்த்தோம்! எப்போ ரிலீஸாச்சு! யாரோடு பார்த்தோம் போன்ற செய்திகள் தான் இல்லையா!!!
அப்படி இரண்டு நாட்களுக்கு முன் சங்கரின் இயக்கத்தில் 1994ல் வெளியான 'காதலன்' படத்தை சிறிது நேரம் பார்த்தோம்..காதல், விறுவிறுப்பு, சண்டை, பாடல்கள், நடனம் என்று எல்லாம் கலந்த கலவையாக அருமையாக படைத்திருப்பார்.
இந்த படம் வெளியான போது நான் ஏழாம் வகுப்பு மாணவிபள்ளிச்சீருடையுடன் school bag, lunch bag ஐ தூக்கிக் கொண்டு கோவையின் அவினாசி சாலையில் பள்ளிக்கு நடந்தே செல்வோம். கோவையின் அப்போதைய வியர்வையே இல்லாத க்ளைமேட்! காலையும், மாலையும் சிலுசிலுவென்ற மழைத்தூறல்!! பள்ளிக்குச் செல்லும் சாலையில் B.J Bakery ல் ஒலிக்கும் புத்தம் புது பாடல்கள். அப்போது கேட்ட ஞாபகம் இன்னும் பசுமையாய்
நேற்று 2002ல் வெளியான மாதவன், மீரா ஜாஸ்மின் நடித்த 'ரன்' திரைப்படம். நானும் என் கணவரும் சேர்ந்து பார்த்த முதல் திரைப்படம். திருச்சியின் பிரபலமான 'மாரீஸ்' தியேட்டரில் அப்போதைய பால்கனி டிக்கெட் (AC) எடுத்து பார்த்தோம். படம் ஆரம்பித்த பிறகு தான் தெரிந்தது பால்கனியில் நாங்கள் இருவர் மட்டும் தான் என்பது
திருமணமாகி திருச்சிக்கு வந்த மறுநாள் என் கணவர் என்னை முதன்முதலாக கல்லணைக்கு அழைத்துச் சென்றார் போகும் வழியில் திருவரங்கத்தில் தான் ரன் படத்தின் காட்சிகள் படமாக்கப் பட்டுக் கொண்டிருந்தது. மாதவனை பிடிக்கும் என்றாலும், அருகேயே பார்த்தும் கடந்து சென்று விட்டேன்!! படப்பிடிப்பை நின்று பார்க்கவில்லை
ஏங்க!! கொஞ்சம் நின்னு பார்த்துட்டு போலாமேன்னு சொல்ற தைரியம் அப்போ இல்லை
ம்ம்ம்... ம்ம்ஹும். ஓ! அப்படியா! போன்ற வார்த்தைகள் தான் அப்போது என்னிடமிருந்து வெளிவரும் ஒருவருக்கொருவர் புரிதல் இல்லை
அது போக படப்பிடிப்பை பார்க்காதது அப்போது ஒரு பெரிய விஷயமாகவும் தோன்றவில்லை ஏன் என்றா கேட்கிறீர்கள்???
என்னுடன் தான் 'என் ஹீரோ' வருகிறாரே!! இவரை விடவா மாதவன் எல்லாம்!! என்ன சொல்றீங்க??? சரி தானே
புகையிலையினால் ஏற்படும் கெடுதலைப் பற்றி எவ்வளவோ பேர் எடுத்துச் சொன்னாலும், கண்ணெதிரே பார்த்தாலும் அதை விட்டொழிக்க தயங்குபவர்களே இங்கு அதிகம்!
புகைப்பழக்கம் குடும்பத்தையே சீரழிக்கக்கூடியது..அந்த நேரத்தில் உங்கள் கவலைகளை மறக்கவும், டென்ஷனை குறைக்கவும், இன்பம் தரக்கூடியதாக இருக்கின்றது என்று நினைக்கலாம்!
ஆனால் புகைப்பிடிக்கும் ஒவ்வொருவரின் மனக்கட்டுப்பாடு மட்டுமே அவர்களின் டென்ஷனையும், கவலையையும் எதிர்த்து நிற்கக்கூடிய வலிமையைத் தரும் என்பது மட்டும் தான் உண்மை!
ஊரடங்கு 5.0 - 2 ஜூன் 2020:
சமூகப்பரவலாக மாறி விட்ட கொரோனா! பேருந்துகளும், ஆட்டோக்களும் ஓடத் துவங்கி விட்டன..கடைகளும் திறந்திருக்கின்றன...நம்முடைய பாதுகாப்பு நம் கையில்! முகக்கவசம் அணிவதும் எங்கு சென்றாலும் பாதுகாப்புடன் செல்வதும் அவசியம்!
முகக்கவசத்தை மூக்குக்குக் கீழே அணிவது, தாடைக்கு கீழே அணிவது என்று ஒரு சிலர் அடுத்தவர்களுக்காக அணிவதாக நினைத்துக் கொள்கிறார்கள்... பொது இடத்தில் எச்சில் துப்புபவர்களையும், முகக்கவசம் அணியாதவர்களையும் தண்டித்தால் மட்டுமே மாற்ற முடியும்!
Maths miss பேசறேன்!
நேற்று ஒரு அழைப்பு..ரோஷ்ணி வீடு தானே! நா அவ மேத்ஸ் மிஸ் பேசறேன்! அவளிடம் கிளாஸ் எப்படியிருந்ததுன்னு பேசணும்!! ஆடியோவும், வீடியோவும் சரியா இருந்ததா?? புரிஞ்சதா? இன்னும் நாலு பேர் சொல்லும்மா! அவங்ககிட்டயும் கேட்கறேன்! என்று சொன்னார்..
ஆசிரியர்களும் தங்களால் முடிந்த அளவு சிறப்பாக நடத்தத் தான் நினைக்கின்றனர்!! மாணாக்கர்களும் முடிந்த அளவு கவனித்தும் வருகின்றனர்.! ஒரு சிலர் வீடியோவையோ, ஆடியோவையோ அணைத்து வைத்தும் வருகின்றனர்..
இசைஞானி!
எங்கும் எப்போதும் இவரின் பாடல்கள் நமக்கு சந்தோஷத்தையும், புத்துணர்வையும், உற்சாகத்தையும் தருகிறது. சிறுவயது முதலே ராஜா சாரின் பாடல்களை கேட்டு வளர்ந்தவள்..ரேடியோவிலும், பேருந்து பயணத்திலும், தனியே இருக்கும் போது கேஸட்டிலும், தொலைக்காட்சியிலும் என எந்தவொரு சூழ்நிலைக்கும் ஏற்றதாக இருக்கும் பாடல்கள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ராஜா சார்!
தேன்குழல்!
நேற்று கடையில் வாங்கிய அரிசிமாவு 1 கப், ரேஷன் அரிசியில் அரைத்த மாவு 1 கப் ( என்னிடம் ரேஷன் கார்ட் இல்லை, மாமியார் தந்த அரிசி! கோலம் போடுவதற்காக கொஞ்சமாக வாங்கிக் கொள்வேன் ) பொட்டுக்கடலை மாவு 1 கப், ஆவின் பாலில் வீட்டில் எடுத்த வெண்ணெய் சேர்த்து செய்த தேன்குழல்!! ப்ளெயின் அச்சு இல்லாததால் முள்ளு முறுக்கு அச்சு.. கரகர மொறுமொறு தேன்குழல்!!
திருவரங்கத்தில் வீதீ உலா – 3 ஜூன் 2020:
மாதம் பிறந்துவிட்டதே மளிகை சாமான் வாங்கணும்! அதோடு இன்னும் சில வேலைகளும் இருக்கவே இன்று வெளியே சென்று வந்தோம்.. ஓலாவிலிருந்து வேறு தினமும் மெசேஜ் வந்து கொண்டிருந்தது! 5 விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்கிறோம்! நம்பி வாங்க! சந்தோஷமா போங்க! என்று கெஞ்சாத குறை.. இன்று அதில் தான் சென்று வந்தோம்! மாஸ்க் அணிவது கட்டாயம், ஏறும் போதும், இறங்கிய பின்னரும் சேனிடைஸ் செய்வது கட்டாயம், இருவருக்கு மட்டுமே அனுமதி, அறிகுறிகள் இல்லாமல் இருந்தால் மட்டுமே ஏறலாம் என்று புக் செய்யும் போது ரூல்ஸ் சொல்லியது ஓலா! ஆனால் டிரைவரே தாடைக்கு கீழ் தான் மாஸ்க் அணிந்திருந்தார்... சென்ற இடங்களிலும் பாதிப் பேர் மாஸ்க்கே அணியவில்லை! நாங்கள் இருவரும் ஏறியவுடனும், இறங்கியவுடனும் கைகளை சேனிடைசரால் சுத்தம் செய்து கொண்டோம்!
வழக்கமாக வாங்கும் மளிகைக்கடை தான்! லிஸ்ட் எழுதி கொடுத்து விடுவேன்! இன்று சமூக இடைவெளிக்காக சிறிது நேரம் வரிசையில் நின்று கொடுத்து விட்டு, இன்னும் சில பொருட்களையும் எடுத்து போட்டுவிட்டு வந்தோம்.. பழங்களும், இன்னும் சில பொருட்களும் வாங்கிய பின்னர் வீடு திரும்பினோம்..கிளம்பி ஒரு இடத்துக்கு சென்று வருவதை விட கடினமானது வீடு திரும்பி குளித்து, வாங்கி வந்த பொருட்களை சுத்தம் செய்து எடுத்து வைப்பது தான்... முடிந்தவரை வீட்டிலேயே இருப்போம்! நோய்த்தொற்றை தடுப்போம்!
மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…
நட்புடன்
ஆதி வெங்கட்.
//என்னுடன் தான் 'என் ஹீரோ' வருகிறாரே!! இவரை விடவா மாதவன் எல்லாம்!!//
பதிலளிநீக்குஹா... ஹா... ஹா... சூப்பர். மாதவனை விட "உயர்ந்த" ஹீரோ!
உயர்ந்த ஹீரோ தான்...:) தங்களது வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்..
நீக்குஎன் ஆட்டோக்காரர் முதுகில் குத்தி கழுத்தறுத்துவிட்ட நிலையில் ஊபரில்தான் பணிக்குச் சென்று வருகிறேன். இப்போது 17 முதல் 30 வரை என்ன செய்வது என்று தெரியவில்லை. திண்டாட வைக்கிறார்கள். ஊபர் டிரைவர்கள் சிலரும் மாஸ் அணியாமல் தொங்கவிட்டு, தனியாக வைத்து என்று வந்தால் அதை அணியச் சொல்லி விடுவேன். ஏ ஸி வேண்டாம் என்று சொல்லி ஜன்னலைத் திறந்து விட்டு விடுவேன்.
பதிலளிநீக்குஅலுவலகம் செல்பவர்கள் பாடு திண்டாட்டம் தான்..:( ஓட்டுனர்களே இப்படியிருந்தால் என்ன செய்வது...:( தங்களது வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.
நீக்கு@ஸ்ரீராம், அந்தப் பக்கம் செல்பவர்கள் 2,3 நபர்கள் சேர்ந்து மாதாந்திர வாடகைக்கு ஒரு வாடகை வண்டி எடுத்து வைத்துக் கொண்டால் தினசரி வண்டி பிடிக்கணுமே என்னும் கவலையும், பிரச்னையும் குறையும். பணமும் குறைவாகச் செலவு ஆகும்.
நீக்குசபாஷ் ரோஷ்ணி.
பதிலளிநீக்குமகளை பாராட்டியதற்கு மிக்க நன்றி சார்.
நீக்குமுதல் சினிமா என்றதும்
பதிலளிநீக்குஉலகத்தின் முதல் சினிமாவைப் பற்றியதோ -
என்று நினைத்து விட்டேன்...
ஹா..ஹா..ஹா..அவ்வளவு தகவல்கள் எனக்கு தெரியாது சார்..நாங்கள் பார்த்த முதல் சினிமாவைப் பற்றித் தான் இங்கு குறிப்பிட்டுள்ளேன்..என் உலகம் மிகச்சிறியது...:)
நீக்குரோஷ்ணியின் கைவண்ணம்
பதிலளிநீக்குஅழகு.. அருமை!..
வாழ்க.. வளர்க...
மகளைப் பாராட்டியதற்கு மிக்க நன்றி சார்.
நீக்குசுய அறிவு என்பதும் இல்லாமல் தான் பலரும்
பதிலளிநீக்குஅடுத்தவர் நலத்துக்கு வேட்டு வைத்துக் கொண்டிருக்கின்றனர்...
தற்காப்பு நடைமுறைகளை மீறும் ஜந்துக்களின்
செவுளைப் பெயர்த்தாலும் தப்பில்லை என்று தோன்றுகிறது...
செவுளைப் பெயர்த்து விட்டு வீட்டுக்கு வந்து மஞ்சள் வேப்பிலை கொதித்துக் குளிர்ந்த நீரில் கையைக் கழுவிக் கொள்ளலாம்...
ஆமாம் சார்..அடுத்தவர் நலனில் தான் வேட்டு வைக்கிறார்கள்..தங்களது வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜ் சார்.
நீக்குஅணைத்து பதிவுகளும் அருமை. புகை நிச்சயம் அணைவருக்கும் பகை தான். சமூக பரவல் குறித்து அரசு இன்னும் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொள்ளவில்லை. எனவே, அதை குறிப்பிட்டு எழுதாமலேயே மக்களுக்கு தேவையான் ஆலோசனைகளை வழங்கவும்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி அர்விந்த் சார்.
நீக்குஓவியம் மிகவும் அருமை...
பதிலளிநீக்குரன் பாடல்கள் மிகவும் பிடிக்கும்...
இன்றைய சூழலின் தீவிரம் இங்கும் பலருக்கும் தெரியவில்லை...
மகளைப் பாராட்டியதற்கு மிக்க நன்றி...தங்களது வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ..
நீக்குபொன்மொழி நன்று
பதிலளிநீக்குபழைய நினைவுகளை அசை போடுவது நல்லதே...
ஓவியம் சிறப்பாக இருக்கிறது வாழ்த்துகள்.
கொரோனா பயம் மக்களிடம் இல்லை.
அனைத்து பகுதிகளையும் வாசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி கில்லர்ஜி சார்..
நீக்குஅருமையான கதம்பம்.
பதிலளிநீக்குமகளுக்கு வாழ்த்துகள்.
தங்களது வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஐயா.
நீக்குஆன்லைன் வகுப்புகளுக்கு நம் குழந்தைகள் இன்னும் பழக்கப்படவில்லை என்பதே உண்மை. என் பிள்ளைங்க கேமராவை ஆஃப் பண்ணிட்டு மத்த வேலைகளை கவனிப்பாங்க. இது தப்புன்னு சொன்னால், வகுப்பில் மனம் ஒன்றலைன்னு சொல்றாங்க.
பதிலளிநீக்குதேன்குழலை இங்க கொஞ்சம் பார்சல் பண்ணுறது....
ரோஷிணிக்கு வாழ்த்துகள்
இங்கே மாணக்கர்களின் முகத்தை பார்த்து, கேள்விகளை கேட்டே வகுப்புகள் நடக்கிறது ராஜி..ஆஃப் பண்ணி வைத்தால் வீட்டிற்கு அழைத்து சொல்கிறார்கள்..
நீக்குதேன்குழல் அனுப்பி வைத்து விட்டேன்..ரோஷ்ணியிடம் அத்தையின் வாழ்த்துகளையும் சொல்லி விட்டேன்..
தங்களது வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ராஜி.
மலரும் நினைவுகள் அருமை.
பதிலளிநீக்குதேன்குழல் அருமை.
ரோஷ்ணி ஓவியத்திற்கு பாராட்டுக்கள்.
//உங்களுக்காக அழகான குடும்பமும், இந்த புவியும் இருக்கிறது என உணருங்கள்!//
உணர்ந்தால் மகிழ்ச்சி.
அனைத்து பகுதிகளையும் வாசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி கோமதிம்மா..
நீக்குகதம்பத்தை ரசித்தேன்.
பதிலளிநீக்குமுள்ளு முறுக்குக்கு (தேன்குழலுக்கும்) உளுந்து மா வேண்டாமா? நீங்கள் அரிசி மாவும் பொட்டுக்கடலை மாவும்தான் போட்டிருக்கிறீர்கள்.
வாழ்க்கையை வாழ்வது என்றால் என்ன அர்த்தம்? இதன் அளவுகோலே ஒவ்வொருவருக்கும் மாறுபடும் அல்லவா?
ஆன்லைன் வகுப்பு எடுப்பதே கஷ்டம். நிறைய பிள்ளைகள் இருப்பதாக கற்பனை செய்துக்கணும். வகுப்புன்னா ஏதேனும் டவுட் கேட்பார்கள். ஆன்லைனில் அப்படி கேட்கிறார்களா? வீட்டுப்பாடம் செய்து வாட்சப்பில் டீச்சருக்கு அனுப்பச் சொல்கிறார்களா?
எப்போதும் எழுதுவதுதான் இது. வாய்ப்பு கிடைக்கும்போது சிரமம் பார்க்காமல் பெண்ணை, ஓவிய வகுப்பில் சேர்த்து, வண்ணம் குழைப்பது, முகங்கள் வரைவது என்றெல்லாம் பயிற்சி எடுத்துக்கொள்ளச் செய்யுங்கள். பிற்காலத்தில் மன அமைதிக்கும் நேரத்தைப் பயனுள்ளதாக அமைத்துக்கொள்ளவும் ஓவியம் வரைய முடியும்.
உளுந்து மாவுடன் பொட்டுக்கடலை மாவும் சேர்த்தே தேன்குழல் செய்வேன்..இதில் உளுத்த மாவு சேர்க்காமல் செய்துள்ளேன்..சுவையில் மாறுபாடில்லை..நன்றாகவே வந்தது..
நீக்குஆன்லைன் வகுப்பு என்றால் இவர்கள் பள்ளியை பொறுத்தவரை மாணாக்கர்களை பார்த்தே வீடியோ மூலம் வகுப்புகள் நடக்கிறது.. கேள்விகளும் கேட்கப்படுகின்றன..
மகளின் ஓவியப்பயிற்காக அறிவுரைகள் தந்ததற்கு மிக்க நன்றி நெல்லை சார்..
இப்போது பலரும் உளுத்தமாவு போடாமலே பண்ணுகின்றனர் என்பதைச் சில யூட்யூப் மூலமும் முகநூல் பதிவுகள் மூலமும் பார்க்கிறேன் நெல்லைத்தமிழரே! ஆனால் நான் உளுத்தமாவு தயாராக வைத்துக் கொண்டு அதைச் சேர்த்துத் தான் பக்ஷணங்கள் செய்து வருகிறேன். இல்லைனா நன்றாக இல்லைனு ஓர் நினைப்பு மனசில் இருக்கும்! :))))))
நீக்குமுள்ளுமுறுக்கு நேற்று பண்ணினேன் (தேன்குழலுக்கு 1க்கு 1/4 உளுந்து சேர்த்து அரவை மில்லில் அரைத்த மாவுடன், பொட்டுக்கடலை மாவும் சேர்த்துச் செய்தேன். கொஞ்சம் வெண்ணெய் ஜாஸ்தி சேர்த்தேன். பசங்களுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. நேற்றே காலியாகிவிட்டது.
நீக்குநீங்க எழுதறதுல எது எனக்கு மனசுக்குப் பிடிக்குதோ அதைச் செய்துவிடுவேன். பலா பணியாரம், உப்பு உருண்டை, முள்ளு முறுக்கு (அப்புறம் டோக்ளா மாதிரி எழுதியிருந்ததை மனைவி செய்தார்). அடுத்த வாரம் என்ன எழுதப்போறீங்கன்னு பார்ப்போம்.
கீசா மேடம்... என்னிடம் தனியாக உளுத்த மாவு இல்லை. அடுத்த முறை தயார் செய்து வைக்கணும். பஹ்ரைனில் 1/2 கிலோ பாக்கெட் என்று கிடைக்கும், வாங்கிவைத்துக்கொள்வேன். இங்கயும் கிடைக்கும் என்றே நினைக்கிறேன்.
நீக்குதேன்குழல் செய்து பார்த்து பகிர்ந்து கொண்டது குறித்து மிக்க மகிழ்ச்சி நெல்லை சார்..ஒரு தம்ளர் அரிசிமாவுக்கு 1 ஸ்பூன் உளுத்த மாவும், 1 ஸ்பூன் பொட்டுக்கடலை மாவும், 1 ஸ்பூன் வெண்ணெயும் சேர்த்துச் செய்வேன்..இதில் 2 கப் அரிசிமாவுக்கு 1 கப் பொட்டுக்கடலை மாவும் 2ஸ்பூன் வெண்ணெயும் சேர்த்து தான் செய்தேன்..வாயில் போட்டவுடன் கரைந்தது..
நீக்குஓஷாவின் தொடக்க வாசகம் அருமை. கதம்பத்தின் அனைத்து பகுதிகளும் சூப்பர்
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி இராமசாமி சார்.
நீக்குரோஷ்ணி ஓவியம் அருமை.
பதிலளிநீக்குகொரோனா தற்பாதுகாப்பு இல்லாமல் சிலர் இருப்பதுதான் கவலை.
தங்களது வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றி மாதேவி..
நீக்குஅன்பு ஆதி,
பதிலளிநீக்குசில பதிவுகளை முக நூலில் படித்தேன்.
ரோஷ்ணியின் ஓவியம் வண்ணத்திலும் முக உணர்ச்சியிலும்
அற்புதமாக இருக்கிறது. ரன் ஷூட்டிங்க் பார்த்தீர்களா. ஆஹா. தேரடி? வீதியில் பாடலோ.
வெங்கட் உயர்ந்த மனிதர்தான்.
அருமைத் தம்பதிக்கு வாழ்த்துகள்.
ரன் படத்தில் வரும் முதல் காட்சி..அனைத்துப் பகுதிகளையும் வாசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி வல்லிம்மா..
நீக்குதங்களின் அன்பு மகளுக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குஎன்னுடன் தான் 'என் ஹீரோ' வருகிறாரே!! இவரை விடவா மாதவன் எல்லாம்!! என்ன சொல்றீங்க??? சரி தானே //
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா ஹா ஹா...ஆதி ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பவே !!! சரிதான். அதானே வெங்கட்ஜியை விடவா மாதவன் எல்லாம்..
அது சரி ஆதி என்ன திடீர்னு என் கணவர் நு மாத்திட்டீங்க!! என்னவர் என்னவர்னு வாய் நிறைய பதிவு நிறைய எழுதுவீங்க...அதுதான் நான் ரொம்ப ரசிப்பேன்...இது என்னவோ ம்ம்ம்..
கீதா
ஹா..ஹா..ஹா..ஆமாம் என்னவர்னு தான் எழுதுவேன்..:) அது தான் பிடிக்கும்..சும்மா ஒரு மாறுதலுக்காக என் கணவர்னு எழுதிட்டேன்..இனி மாற்றி விடுகிறேன்..:)
நீக்குவழக்கத்துக்கு மாறாக செய்யும் போது வித்தியாசமாக தெரிகிறது..:)
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி..
புகை பிடித்தல் அதுவும் அவர்களுக்கும் நல்லதல்ல செகண்டரி ஸ்மோக்கிங்க் அவர்களால் மற்றவர்களுக்கும் நல்லதல்ல. சுற்றுப்புறத்தை நச்சாக்குகிறது. அதுவும் இப்போதைய சூழலுக்கு மிக மிக மோசமானது.
பதிலளிநீக்குரோஷினி குட்டி வழக்கம் போல அருமையாக வரைஞ்சிருக்கா வாழ்த்துகள்! பாராட்டுகள்!.
தேங்குழல்!! கீதாக்கு ஒரு பார்சல்!!
முகக்கவசம் பலரும் தாடையில் அல்லது மூக்குக்கு கீழ தான் போடுறாங்க. என்னவோ போங்க. எங்க ஏரியாவுல கிட்ட வரைக்கும் வந்தாச்சு.
கிளம்பி ஒரு இடத்துக்கு சென்று வருவதை விட கடினமானது வீடு திரும்பி குளித்து, வாங்கி வந்த பொருட்களை சுத்தம் செய்து எடுத்து வைப்பது தான்...//
யெஸ்ஸு
கூடியவரை வெளியில் செல்வதில்லை.
கீதா
தேன்குழல் பார்சல் பண்ணிட்டேன்..வந்து விட்டதா??
நீக்குஅனைத்துப் பகுதிகளையும் வாசித்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி கீதா சேச்சி..
வாசகம் மிக அருமை...சொல்ல விட்டுப் போச்சு
பதிலளிநீக்குகீதா
நன்றி சேச்சி.
நீக்குமுகநூலிலும் படித்தேன். நானும் இந்த முள்ளுத்தேன்குழல், ஓட்டு பக்கோடா எனப்படும் ரிப்பன் பக்கோடா, தட்டை, தேன்குழல்னு செய்தாச்சு! எல்லாம் கொஞ்சம் கொஞ்சம் தான். கடையில் வாங்க பயம். இப்போ ஸ்ரீரங்கத்திலேயே பதினைந்து பேர்களுக்குக் கொரோனா என்பதால் கவலையும், பயமும் இன்னமும் அதிகரித்திருக்கிறது. எல்லோருக்கும் நல்லபடியாகக் குணமாக வேண்டும்.
பதிலளிநீக்குஆமாம்..ஸ்ரீரங்கத்துக்கும் வந்தே விட்டது...:(
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கீதா மாமி.
ரோஷ்ணியின் திறமை நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது. நடிகர் "மாதவன்" அறுபது வயது ஆனவராமே! நான் ரொம்பவே இளைஞர்னு நினைச்சுட்டேன். :))))) ஆனாலும் இவர் நடிச்ச சில படங்கள் "அன்பே சிவம்"
பதிலளிநீக்கு"நளபாகம்" அல்லது நளச்சக்கரவர்த்தி, பாலக்காட்டுத் தமிழில் பேசுவார். சதாவோடு இன்னொரு படம். டெல்லி கணேஷ் அதில் வீட்டுக்காரராக வருவார். இவை எல்லாம் தொலைக்காட்சி தயவில் பார்த்திருக்கேன். இப்போத்தான் ஏழெட்டு வருஷங்களாகத் தொலைக்காட்சியில் படங்கள் பார்ப்பது இல்லை. என்னமோ தெரியலை, மனசும் பொருந்தலை, நேரமும் பொருந்தலை.
மாதவன் சமீபத்தில் தான் தன்னுடைய 50 வது பிறந்தநாளை ரசிகர்களோடு வீடியோ கால் மூலம் கொண்டாடினார்..
நீக்குதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கீதா மாமி..
அருமையான கதம்பம் மேடம் வாழ்த்துக்கள் ரோஷினி. நான் 7ஆம் வகுப்பு படிக்கும்போது தனலக்ஷ்மினு ஒரு சோஷிஅல் டீச்சர் வகுப்பு எடுத்தாங்க. அப்போ அவங்க வரும்போது சரியா நான் மின்சாரம் என்மீது பாய்கின்றதேனு பாடிட்டேன். பிள்ளைங்க எல்லாம் சிரிச்சிட்டாங்க. டீச்சர்கிட்ட சொன்னோம் அவங்களும் சிரிச்சிட்டாங்க. நீ பாடும்போது நான் சரியா வந்து பாய்ஞ்சிட்டனான்னு கேட்டாங்க. ரன் படம்னா எனக்கு இது மட்டும்தான் ஞாபகம் வரும்.
பதிலளிநீக்குஹா..ஹா..ஹா..உங்கள் நினைவு சூப்பரா இருக்கே..:) தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அபிநயா..
நீக்கு