செவ்வாய், 30 ஜூன், 2020

கதம்பம் – ஓவியம் – ஊரடங்கு – மைசூர் பாக் – Bread - தந்தையர் தினம்

நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.


நிம்மதியான வாழ்க்கை என்பது ஓடி ஆடி சம்பாதித்து ஆடம்பர வாழ்க்கை வாழ்வது இல்லை. இருப்பதை வைத்து நோய் நொடி இல்லாமல் வாழ்வது தான்.


ரோஷ்ணி’ஸ் கார்னர் – 10/14 ஜூன் 2020:

 

மகளின் கைவண்ணத்தில்… Tom and Jerry மற்றும் ஒரு இயற்கைக் காட்சி…


ஊரடங்கு-1 - 10 ஜூன் 2020:


பத்தாம் வகுப்பு தேர்வுகளை ரத்து செய்ததை அடுத்து மீம்ஸ்கள் வரத் துவங்கி விட்டன. ஒரு அலுவலகத்துக்கு நேர்முகத் தேர்வுக்கு செல்பவரிடம் 'உங்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் எவ்வளவு?' என்று கேட்டால், நான் கொரோனா பேட்ச்! என்று சொல்வதாக வருகிறது.


எங்கள் மகள் இந்த வருடம் தான் பத்தாம் வகுப்பில் நுழைந்திருக்கிறாள். ஆன்லைன் வகுப்புகளில் பாடங்கள் சொல்லித் தரப்படுகின்றன. இந்த வருடம் இப்படித்தான் செல்லுமா! நிலைமை சரியாகி பள்ளிக்குச் செல்வாளா! பொதுத் தேர்வு நடக்குமா! என்பதெல்லாம் கேள்விக்குறிகள் தான்!!


என்னுடைய பத்தாம் வகுப்பு 1997 இல். அப்போது இண்டர்நெட், செல்ஃபோன் என்று பரிச்சயம் இல்லாத நாட்கள்! அதற்கு முன்பு வரை பொதுத்தேர்வு முடிவுகளை செய்திதாளில் வெளிவந்த பின்பு இரண்டு, மூன்று நாட்கள் கழித்து பள்ளிக்குச் சென்று தான் மதிப்பெண்களை தெரிந்து கொள்ள முடியும் என்றிருந்தது.


என்னுடைய முடிவுகள் வந்த வருடம் தான் முதன்முறையாக இண்டர்நெட்டில் மதிப்பெண்களைத் தெரிந்து கொள்வது அறிமுகமானது! அப்பா கலெக்டர் ஆஃபீசில் வரிசையில் நின்று தெரிந்து கொண்டு வந்து பெருமையாகச் சொன்னார்.


துண்டுச் சீட்டில் எழுதி வந்திருந்தார். எல்லாவற்றிலும் 80க்கு மேலே எனவும், கணக்கில் மட்டும் 99 எனவும், மொத்தமாக 437 மதிப்பெண்கள் எடுத்திருப்பதாகவும் சொன்னார்.


பெரும்பாலான பெண் பிள்ளைகளைப் போல் அன்று நானும் இன்னும் மார்க் வந்திருக்கும்! குறைவாயிடுச்சு! என்று கவலைப்பட்டேன். அதேசமயம் என் தம்பி ஒருநாளும் அவன் மதிப்பெண்களை எண்ணி கவலைப்பட்டதில்லை.


இப்படி பத்தாம் வகுப்பு மதிப்பெண்களும், முடிவுகளும் பெரிதாக பேசப்பட்ட நாட்கள் இப்போது கொரோனாவால் மாறிவிட்டன.


வீட்டிலேயே இருப்போம். சமூகத்தொற்றை தடுப்போம்!


ஊரடங்கு-2 - 12 ஜூன் 2020:


யானை ஒன்று எதிர்புறத்திலிருந்து ஓடி வர, பதட்டத்துடன் அருகே இருந்த கோவிலுக்குள் சென்று விடலாம் என்று நினைத்து காலில் அணிந்திருந்த செருப்பை அவிழ்க்க நினைத்தால் அவ்வளவு எளிதில் வர மாட்டேன் என்கிறதே. கடவுளே!!!


மரம் ஒன்றில் இரு செண்பகப் பூக்கள் பூத்து மணம் பரப்பி அந்தச் சுற்றுப்புறத்தையே சுகந்தமாக்குகிறது! எனக்கு அந்தப் பூ வேணும் என்று பறிக்க நினைக்கிறேன். ஆனால் எனக்கு முன்பே தனது துதிக்கையால் யானை பறித்து எடுத்துச் செல்கிறது!!


இதென்னடா இது! சம்பந்தமில்லாமல் விஷயங்கள் இருக்கிறதே! என்று யோசிக்கிறீர்களா??? எனக்கும் அப்படித்தான் இருந்தது. இன்று பகலில் சற்று கண்ணயர்ந்ததில் வந்த கனவை எண்ணி.


அழகி!


எதிர்வீட்டு Ac outletல் கூடு கட்டியிருக்கும் புறாவைப் பற்றி முந்தைய பகிர்வுகளில் சொல்லியிருக்கிறேன் அல்லவா! அந்தப் புறாவிற்கு மகள் 'அழகி' என்று பெயர் சூட்டியிருக்கிறாள். இப்போதெல்லாம் அழகியை ஒருநாள் பார்க்கவில்லை என்றாலும், அதன் ம்ம்ம்ம்ம்ம்சப்தம் கேட்கவில்லை என்றாலும் என்னவோ போல் இருக்கிறது.


விருந்தாளி!

 

இந்த கொரோனா சமயத்தில் யாரும் யார் வீட்டுக்கும் செல்வதில்லை தான்! ஆனால் நான் வருவேன்! என்னை யாரும் ஒன்றும் சொல்லமுடியாது! என்று சொல்கிறதோ! இந்த வெட்டுக்கிளி! வடக்கிலும், இப்போது தமிழகத்திலும் அட்டகாசம் செய்கிறது என்று சொல்வது இது தானா??? அல்லது இதன் உறவினரா???

மைசூர்பாக்!


இனிப்பு சாப்பிட காரணம் வேண்டுமா என்ன?? எத்தனையோ முறை செய்திருந்தாலும் ஒரே மாதிரி வரும் என்பது உறுதியல்ல. நேற்று சின்ன கப் மாவு போட்டு செய்தேன். வீட்டில் எடுத்த வெண்ணெயில் காய்ச்சிய நெய் தான்! மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது!


ஆன்லைன் வகுப்பு பரிதாபங்கள்!


மகளுக்கு வாரம் ஒருமுறை டெஸ்ட் வைக்கப்படுகிறது. வீட்டிலேயே டெஸ்ட் எழுதி சரிபார்த்து, மதிப்பெண்கள் போட்டுக் கொண்டு டெஸ்ட் பேப்பரை ஃபோட்டோ எடுத்து டீச்சருக்கு அனுப்ப வேண்டும். இதுவரை வைத்த டெஸ்ட்களில் class topper ஆன மகள் தான் குறைவான மதிப்பெண்கள் எடுத்திருக்கிறாள்! மீதி எல்லோருமே முழு மதிப்பெண்கள். இதை மகள் என்னிடம் பகிர்ந்து கொண்ட போது " நீ! உண்மையா இருக்க தானே கண்ணா!" அது போதும்!" என்றேன்.


ஆதியின் அடுக்களையிலிருந்து - 14 ஜூன் 2020:


First bread! (Without oven!)


முதன்முறையாக செய்த முயற்சி. நன்றாகவே வந்துள்ளது.  செய்முறை இங்கே...   சாஃப்ட்-ஆக வந்ததை இங்கே காணலாம்….


உலக தந்தையர் தினம் - 21 ஜூன் 2020:


அப்பாக்கள் தான் தன் குழந்தைகளின் முதல் ஹீரோ. அப்பா என்பவரை நினைத்தவுடன் நம் கண்ணுக்குத் தெரிவது அவரின் கம்பீரமான, மிடுக்கான தோற்றம்!  தன் உழைப்பின் வியர்வையால் குழந்தைகளை சந்தோஷப்படுத்தும் ஜீவன்! தன் குழந்தை விரும்பிக் கேட்டதை எப்படியாவது செய்யத் துடிக்கும் மனசு! தன் பண்பால், குணத்தால், ஒழுக்கத்தால் உதாரணமாக இருக்க வேண்டிய பொறுப்பு அவருக்கு உண்டு.


பெண் பிள்ளைகள் என்றுமே அப்பாவோடு நெருக்கமானவர்கள். அன்பை செலுத்துபவர்கள். புகுந்த வீட்டிலும் தன் அப்பாவின் பெருமையை பேசுபவர்கள். தன் கணவனிடத்தில் அப்பாவை தேடுபவர்கள்! இந்த நாளில் நான் எனது அப்பாவையும், மகள் அவள் அப்பாவையும் நினைத்து பெருமை கொள்கிறோம்.


பின்னோக்கிப் பார்க்கலாம் - 30 ஜூன் 2011:


2011-ஆம் ஆண்டு இதே நாளில் எனது வலைப்பூவான கோவை2தில்லியில் எழுதிய “கோடை விடுமுறை – 2” பதிவிலிருந்து சில வரிகள்:


இத்தனை சாப்பிட்டால் வயிறு சும்மா இருக்குமா? இதற்கும் ஒரு வைத்தியம் உண்டு. நல்ல கொழுந்து  வேப்பிலையை பறித்து அரைத்து  எல்லா குழந்தைகளுக்கும் ஒவ்வொரு உருண்டை வாயில் போட்டு சிறிய டம்ளரில் மோர் விட்டு எங்கள் வாயில் ஊற்றி அழுத்தி மூடிவிடுவார்கள்.  எத்தனை ஆட்டமும் ஓட்டமும் காட்டினாலும் இந்த வேப்பிலை உருண்டை வைத்தியத்தில் இருந்து தப்ப முடிந்ததில்லை என்பதில் எனக்கு இன்னமும் வருத்தம் உண்டு.

 

முழுப் பதிவும் இங்கே படிக்கலாம்!


என்ன நண்பர்களே, இந்த நாளின் கதம்பம் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாமே!


மீண்டும் சந்திப்போம்… சிந்திப்போம்…


நட்புடன்

 

ஆதி வெங்கட்.

34 கருத்துகள்:

  1. நல்லதொரு வாசகம்.  பழைய குளிர்பான விளம்பரம் ஒன்றும் நினைவுக்கு வருகிறது.  புதிய Fonts  இறக்கி உபயோகிக்க ஆரம்பித்து விட்டீர்கள் போல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்.

      நீக்கு
  2. ரோஷ்ணியின் ஓவியம் டாப்.

    நாங்கள் எல்லாம் மாலை முரசு சிறப்புப் பாதிப்புக்காக காத்திருந்தோம் - ரிசல்ட் தெரிந்து கொள்ள!

    கனவு - எதை நினைத்து பயப்படுகிறோமோ, அதற்கு பயம் வேண்டாம் என்று அர்த்தம் போல...

    ரோஷ்ணி மதிப்பெண் - நான் நினைத்ததும் அதுவேதான்.  
    ஸ்வீட்ஸ் - சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் சார்..

      நீக்கு
  3. தஞ்சாவூர் கதம்பம் போல அழகான பதிவு..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜு சார்.

      நீக்கு
  4. ரோஷிணியின் ஓவியங்கள் நாளுக்கு நாள் மெருகேறி வருகின்றன! ரோஷிணிக்கு என் வாழ்த்துக்களைச் சொல்லவும்.
    மைசூர் பாக் அற்புதம்! பார்த்தாலே அதன் சுவையும் மிருதுத்தன்மையும் தெரிகிறது!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி மனோம்மா.

      நீக்கு
  5. //பொதுத் தேர்வு நடக்குமா!// - இது விவாதத்துக்கு உரியது என்று நினைக்கிறேன். இன்னும் 4-5 மாதங்களுக்குள் நிலைமை சரியாகி பள்ளிகள் ரெகுலராக திறக்கவில்லை என்றால், அடுத்த வருட இறுதியில் மாணவர்களோ இல்லை அவர்களது பெற்றோர்களோ கொடிபிடித்து பொதுத்தேர்வை கேலிக்குரியதாக ஆக்கிவிடுவார்கள் என்று நினைக்கிறேன். (ஒலிம்பிக் ஃபைனல் நடக்காமல், ஹீட்ஸில் வந்த வேகப்படி மெடல் கொடுப்பதுபோல)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம்..:) தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன் சார்.

      நீக்கு
  6. //பத்தாவது 1997ல்// - இதைப் படித்தவுடந்தான், இன்றைய இடுகை ஆதி வெங்கட் அவர்களோடது என்று நினைவுக்கு வந்தது. (வெங்கட்டோடது என்றால் நான் ஷாக்ட் ஆகியிருப்பேன்...ஹா ஹா)

    ஏசி அவுட்லெட்டில் குடியிருக்கும் புறா படத்தைக் காணோமே... இங்கு ஏசி இன்ஸ்டால் செய்வதற்கு முன்பு, புறாக்களுக்காக நெட் போட்டதில் (குடியிருப்புக்கான மெயிண்டெனன்ஸ் டீம்) எங்கள் ஷாஃப்டில் இருந்த புறா பறந்துவிட்டது, அது போட்ட இரண்டு முட்டை தங்கிவிட்டது. ரொம்ப வருத்தத்துக்குரியதா போய்விட்டது. என்ன செய்ய என்றும் தெரியாததால் அப்படியே விட்டுவிட்டேன்.

    படத்தில் உள்ளது வெட்டுக்கிளி அல்ல. இலைப்பூச்சி. இது பல நிறங்களில் இருக்கும். தொந்தரவு தராது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..ஹா..ஹா..புறா படம் முன்பே போட்டிருக்கிறேனே...மீண்டும் மீண்டும் படம் பிடிக்க அது விடுவதில்லை..:)தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன் சார்.

      நீக்கு
  7. கதம்ப விசயங்கள் இரசிக்க வைத்தன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி சார்.

      நீக்கு
  8. ஓவியங்கள் அழகு...

    அனைத்து பகுதிகளும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி தனபாலன் சகோ.

      நீக்கு
  9. கதம்பம் சிறப்பு, வழக்கம்போல. ஓவியத்தை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  10. ஆதி, வாசகமே அருமை. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!

    ரோஷினி நன்றாக வரைகிறாள். வாழ்த்துகள்! பாராட்டுகள்! டாம் அண்ட் ஜெட்டி க்யூட்.

    எனக்கெல்லாம் ரிசல்ட் வரும் முன் அதாவது பேப்பரில் வரும் முன் வந்திவுட்டது என்று அறிந்த என் மாமா நேரடியாக பள்ளிக்குச் சென்று கேட்டுக் கொண்டுவந்திவிட்டார்.

    நான் மகனிடம் சொல்லியதும் நீங்கள் உங்கள் மகளிடம் சொல்லியது போலவே. மார்க் பத்தி கவலை வேண்டாம்..உண்மையா இருந்தா போதும்.

    மைபா சூப்பரா இருக்கு. அதே பொல ப்ரெட்டும். நான் முன்பு அடிக்கடி செய்ததுண்டு. இப்போது எல்லாமே குறைந்துவிட்டது. ஆனால் செய்தது எல்லாமே ஓவனில். இப்படிப் பேனில் செய்ததில்லை.

    நன்றாகவே வந்திருக்கு உங்கள் ப்ரெட்டும்.

    அழகி// ஹா ஹா ஹா ஹா ரோஷினிக்கு ஹைஃபைவ்! நான் இப்படி எதைச் சொன்னாலும் அழகின்னு சேர்த்துச் சொல்லுவது வழக்கம்!! ஹா ஹா ஹா அழகியின் படம் காணலையே

    வெட்டுக் கிளி குடும்பம்தான்...வெட்டுக் கிளிகளில் நிறைய இருக்கு...பூச்சி நல்ல டிசைனோடு அழகா இருக்கு.

    பின்னோக்கி பதிவை வாசிக்கிறேன் ஆதி.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னிடம் அவன் இல்லாததால் தோசைக்கல்லிலோ, கடாயில் உப்பு சேர்த்தோ தான் செய்கிறேன்..அழகி படம் பிடிக்க அனுமதிப்பதில்லை..ஒளிந்து கொண்டு விடுகிறாள்..:)தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கீதா சேச்சி..:)

      நீக்கு
  11. கதம்பம் மிக அருமை.ரோஷிணியின் ஓவியம் அழகு, வாழ்த்துக்கள்.

    விரைவில் நிலைமை சீராகி பிள்ளைகள் பள்ளி சென்று படிக்கும் காலம் வர வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அம்மா..விரைவில் சரியாகணும்..தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா..

      நீக்கு
  12. முகநூலில் பார்த்த அதே கெட்டிக்கதம்பம். மருக்கொழுந்து வாசனையுடன் வாடாமல் இங்கேயும். எல்லாவற்றுக்கும் வாழ்த்துகள். இங்கே வந்திருக்கும் வெட்டுக்கிளிக்கும் வடக்கே இருப்பதற்கும் வித்தியாசம் இருக்குமோனு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கீதா மாமி.

      நீக்கு
  13. கதம்பம் மிக நன்றாக இருக்கிறது.

    வாசகம் அருமை. உங்கள் மகளின் ஓவியங்கள் நன்றாக வரைந்திருக்கிறாள்.

    விரைவில் எல்லாம் நலமாகி அடுத்த் வருட பள்ளிகள், கல்லூரிகள் எல்லாம் இயங்க வேண்டும். கேரளத்தில் 10, 12 ஆம் வகுப்புத் தேர்வுகள் முடித்துவிட்டார்கள். கட்டுப்பாடுடன். ஆசிரியர்களும் ஒத்துழைப்புக் கொடுத்தார்கள். சில நடைமுறைப் பிரச்சனைகள் இருந்தாலும் நடத்திமுடித்துவிட்டார்கள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கதம்பம் சூப்பர்.ரோஷிணியின் ஓவியம் வண்ணமயமாக உள்ளது.வெட்டுகிளி குருகிராம் வரை வந்துவிட்டதாக டிவியில் பார்த்தோம்.நோய்டா வந்துவிடுமோ என்ற பயம் ஏற்பட்டிருக்கிறது.

      நீக்கு
    2. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி துளசிதரன் சார்.

      நீக்கு
    3. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி ராமசாமி ஜி.

      நீக்கு
  14. வெங்கட், கொரோனா batch ரொம்ப ரசித்தேன்.

    தங்களின் 10ஆம் வகுப்பு மதிப்பெண்களை கண்டு வியந்தேன்.

    மகளின் ஓவியங்கள் சிறப்பு.

    கனவு என்றாலே சம்பந்தமில்லாமல் வருவதுதானே.எனினும் கனவில் யானை வருவது சுபீட்சம் என சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். மைசூர் பாகு பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறுகிறது. அனைத்து செய்திகளும் சிறப்பு, மகளின் பத்தாம் வகுப்பு பாடங்கள் நல்லமுறையில் ஆன் லைனில் நடத்தப்படுவது குறித்து மகிழ்ச்சி. சீக்கிரம் இந்த தொற்று ஒழிந்து சகஜ நிலைக்கு மாணவர்கள் பள்ளிக்கு திரும்புவர். என்னுடைய 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் குறித்து நீண்ட நாட்களுக்கு முன் ஒரு பதிவு எழுதி இருக்கிறேன் தேடி பார்த்து படித்து கருத்து கூறுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எல்லாப் பகுதிகளையும் வாசித்து கருத்திட்டமைக்கு நன்றி koilpillai ஜி..

      நீக்கு
  15. அன்பு ஆதி,
    எழுத்து வண்ணம் அழகாக ஆகி வருகிறது.
    ரோஷ்ணியின் கைவண்ணமும் தான்.
    ஆன்லைன் வகுப்புகளில் சில சமயம்
    கோளாறுகள் அதிகம்தான்.
    நமக்கு நம் குழந்தைகளின் மதிப்பு தெரியும் அல்லவா,.

    பத்திரிக்கையில் ரிசல்ட் பார்த்த அனுபவம்,படபடப்பு எல்லாமே நினைவுக்கு வருகின்றன.
    முக்கால்வாசி பள்ளியில் போய்ப் பார்த்தே
    தெரிந்து கொள்வோம்.
    வெட்டுக்கிளி அழகாகப் படம் எடுத்திருக்கிறீர்கள்.
    தங்கள் முதல் புத்தகத்துக்கு இனிய வாழ்த்துகள்.

    அப்பா என்றாலே அருமைதான். ரோஷ்ணியின் தந்தைக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அனைத்துப் பகுதிகளையும் வாசித்து கருத்து தெரிவித்ததற்கு மிக்க நன்றி வல்லிம்மா..

      நீக்கு
  16. Kadambum suberb. Roshni's drawing ideas are good. Mysore pak soft. I think amazing melt in mouth.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும், கருத்துக்களுக்கும் மிக்க நன்றி கயல் ராமசாமி ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....