திங்கள், 1 ஜூன், 2020

அந்தமானின் அழகு – Bபாராடாங்க் – சுண்ணாம்பு குகை

அந்தமானின் அழகு பகுதி 38


முந்தைய பதிவுகள் – பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6  பகுதி 7 பகுதி 8 பகுதி 9  பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30  பகுதி 31 பகுதி 32  பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37

அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

The very cave you are afraid to enter turns out to be the source of what you are looking for – Joseph Campbell.

 


அலையாத்திக்காடுகளை பார்த்து ரசித்துக் கொண்டே படகுப் பயணத்தினை முடித்து நாம் சென்று சேரும் இடம் ஒரு அழகிய மரப்பாலம்.  படகிலிருந்து மரம் பாலம் வழி வெளியே வந்தால் நாம் வந்த அலையாத்திக் காடுகளைத் தாண்டி ஒரு அழகிய கிராமம். மரங்கள் – விதம் விதமான மரங்கள் – பல்வேறு மரங்களை நாம் வாழ்க்கையில் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை – அப்படியான மரங்கள் – அதுவும் இயற்கையாகவே பல வித வடிவங்களில் நெளிந்து வளைந்த மரங்கள் அடர்ந்த பாதைகள் வழி நடந்து சென்றால் ஒரு அழகிய கிராமம் – பத்து பன்னிரெண்டு வீடுகளுக்கு மேல் அங்கே இல்லை என்றே தோன்றுகிறது.  இயற்கையும், விவசாய நிலங்களும், வாத்து, கோழி போன்றவையும் இருக்க சிலர் கிராமிய மக்கள் கடைகளை வைத்து அங்கே எலுமிச்சை பழரசம், குளிர்பானங்கள் போன்றவற்றை விற்கிறார்கள்.  சின்னச் சின்ன கடைகள் என்றாலும் அங்கே அந்த இடத்தில் அதன் தேவை ரொம்பவே அதிகம்.

படகுப் பயணத்தினை முடித்த களைப்பு தீர ஒரு எலுமிச்சை பழரசம் அருந்தலாம் – இல்லை எனில் நாம் பார்க்கப் போகும் இடத்தினை பார்த்து விட்டு வந்து அங்கே இருக்கும் பலகைகளில் அமர்ந்து கொண்டு பழரசம் அருந்தலாம்.  நாம் இரண்டாவதாகச் சொன்னதைத் தான் செய்யப் போகிறோம்.  எங்களுடைய குழுவினரில் முதல் படகில் வந்தவர்கள் முன்னே நடந்து சென்று விட்டார்கள்.  இரண்டாம் படகில் வந்த ஆறு பேரும் நின்று நிதானித்து மரங்களின் பெயர்களை படித்தபடியேயும், நாம் பார்க்கப் போகும் சுண்ணாம்புக் குகைகள் பற்றிய தகவல் பதாகைகளை படித்துக் கொண்டும், ஆங்காங்கே சில நிழற்படங்களை எடுத்துக் கொண்டும் மெதுவாக பயணிக்கிறோம்.  நம் உடன் படகில் வந்த இருவரில், ஒரு இளைஞர் மட்டும் நமக்கு வழிகாட்டியாகவும் வருவதோடு விளக்கங்களும் தந்து கொண்டே வருகிறார்.


 

வழியில் இருக்கும் இயற்கையை ரசித்தபடியே நாம் சுண்ணாம்புக் குகைகளின் வாயிலை அடைகிறோம். பொதுவாக சுண்ணாம்புக் குகைகள் உருவாக பல ஆண்டுகள் ஆகும்.  இயற்கையாக உருவாகும் குகைகள் என்பதால் பல வருடங்கள் கழித்து தான் அந்த குகைகள் உருவாகின்றன.  மேலும் தொடர்ந்து குகைகளுக்கு உள்ளே பல உருவங்களும்  உருவாகியபடியே இருக்கின்றன.  ஏற்கனவே அரக்குப் பள்ளத்தாக்கு பயணத்தில் Bபோரா குகைகளையும்,  தியு பயணத்திலும், கொடைக்கானல் மற்றும் மேகாலயாவிலும் இப்படியான குகைகளை பார்த்து ரசித்திருக்கிறேன். Bபாராடாங்க் தீவில் உள்ள இந்த சுண்ணாம்பு குகைகள், நான் பார்க்கும் ஐந்தாவது  குகைகள் – கொடைக்கானலின் குணா குகைகளை வெளியிலிருந்து தான் பார்த்தேன் – அதையும் கணக்கில் கொண்டதால் ஐந்தாவது.  அது சரி இந்த சுண்ணாம்பு குகைகள் எப்படி உருவாகின்றன என்பது தெரியுமா? இணையத்தில் தேடியபோது குங்குமம் இதழ் குழுமத்திலிருந்து வெளிவந்த முத்தாரம் இதழின் கேள்வி பதில் பகுதியில் வந்தது கிடைத்தது… அது கீழே…

 

குகைகள் எப்படி உருவாகின்றன? - ஆர்.ரமேஷ். 8ம் வகுப்பு, கே.வி.எஸ்.பள்ளி, விருதுநகர்.

மழை நாட்களில், காற்றிலுள்ள கார்பன்-டை-ஆக்சைடு வாயு மூலம் வீரியம் குறைந்த கார்பானிக் அமிலம் உருவாகிறது. அது இன்னும் கொஞ்சம் கார்பன்-டை-ஆக்சைடு வாயுவையும், ஆர்கானிக் அமிலங்களையும் மண் வழியாக வடிகட்டி சேகரித்துக் கொள்கிறது. சுண்ணாம்புக்கல் பாறைகளோடு தண்ணீர் வினைபுரியும்போது, அமிலங்கள் சிறிதளவு சுண்ணாம்பை கால்சியம் கார்பனேட்டாக மாற்றிவிடுகின்றன. அது நீரில் கரைந்து அமிலங்களை சமநிலைப்படுத்தி விடுகிறது. அடுத்த மழைத்துளி விழுந்து சுண்ணாம்புக்கல்லை கரைக்கும் முன்பே, அது அரிமான சக்தியை இழந்து விட்டிருக்கும். படுகை அடுக்குகளிலும் சுண்ணாம்புக்கல் பாறை இணைப்புகள் மற்றும் வெடிப்புகளிலும் நீர் வெகு வேகமாகக் கசிந்துகொண்டே இருக்கும். அதனால் அவை ஸ்லாப்புகள் போல வெட்டுப்படும். தண்ணீரின் ஆக்ஷன் அவதாரத்தால் பாறை இணைப்புகள் படிப்படியாக அரிக்கப்படும். இப்படி தண்ணீரின் மாயாஜாலத்தால் உருவானவையே கொடைக்கானல் குணா குகையும், இன்னபிற உலகப்புகழ் இருள் குகைகளும்!


மேலே பாறையிடுக்குகள் வழி கீழே வழியும் நீரானது மேலே சில உருவங்களையும், கீழே விழும் துளிகள் வளர்ந்து சில உருவங்களும் உண்டாகி இருப்பதை பார்க்க முடிந்தது.  இரண்டு பக்கமும் வளர்ந்து கிட்டத்தட்ட தொடும் நிலைக்கு வந்திருந்த ஒரு பகுதியையும் பார்க்க முடிந்தது. அது தொடுவதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம் என எங்களுடன் வந்திருந்த வழிகாட்டி இளைஞர் சொல்லிக் கொண்டிருந்தார்.  சிறு குகைகள் என்பதால் கொஞ்சம் கொஞ்சமாகத் தான் உள்ளே சென்று வெளியே வரமுடியும். நிறைய மக்கள் ஒரே சமயத்தில் சென்று விட்டால் பார்ப்பது கடினம்.  கூடவே டார்ச் லைட் அல்லது மொபைலில் இருக்கும் டார்ச் லைட் பயன்படுத்தி வடிவங்களைப் பார்ப்பது நல்லது! ஏனெனில் இருட்டில் உங்களால் சில உருவங்களை பார்க்க முடியாமல் போகலாம். படகில் வந்த வழிகாட்டி கையில் டார்ச் லைட் வைத்திருந்ததால் எங்களுக்கு சில உருவங்களை – இப்படி இருக்கிறது பாருங்கள் எனச் சுட்டிக் காண்பித்தபடியே வந்தார். 


குகையைப் பார்த்து முடிக்க உங்களுக்கு 15 முதல் 30 நிமிடங்கள் போதுமானது. ஆனால் அங்கிருந்து திரும்பும்போது இயற்கையை ரசிக்கவும் சில நிமிடங்கள் ஒதுக்கினால் நல்லது. மூங்கில் பாலங்கள் அமைத்து நடுவே சில மேடைகளையும் அமைத்திருக்கிறார்கள். அங்கே அமர்ந்து நிழற்படம் எடுக்கலாம் – அழகான அலையாத்திக் காடுகளை ரசிக்கலாம்.  அதனுள் புகுந்து வரும் படகுகளை கண்டு ரசிக்கலாம்! அங்கே சில நிமிடங்கள் அமர்ந்து இருந்த பிறகு கடைகளில் எலுமிச்சை ரசம் அருந்தி சுண்ணாம்பு குகைகள் பார்த்த அனுபவங்களை பேசிக் கொண்டிருந்தோம். அந்த கிராமிய சூழல் ரொம்பவே பிடித்துப் போக, அங்கேயே இருந்துவிடலாம் எனத் தோன்றியது எனக்கு. “வேலை, வீடு, குழந்தை, குட்டி என எல்லாவற்றையும் மறந்து இங்கேயே இருந்துடலாம்” என சற்றே உயர்ந்த குரலில் சொல்லிவிட்டேன் போலும்! ஒரு தமிழர் “இப்படிச் சொல்பவர்கள் யாரும் செய்வதில்லை” என்று சிரித்தபடி சொல்லி எங்களைக் கடந்து சென்றார்!




எங்கள் படகில் வந்த மற்ற மூன்று பேரும் – கொஞ்சம் வயதானவர்கள் என்பதால் நின்று நிதானித்து வந்து சேர்ந்தார்கள். அவர்களையும் அழைத்துக் கொண்டு படகில் அமர்ந்து கொள்ள மீண்டும் அலையாத்திக் காடுகள் வழி முப்பது நிமிட படகுப் பயணம்.  இயற்கையை ரசித்தபடியே Bபாராடாங்க் தீவின் படகுத் துறைக்கு சென்று சேர்ந்தோம். காலை ஐந்தரை மணிக்கு ப்ரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டது. அனைவருக்கும் பசி துவங்கியிருந்தது. எங்கே சாப்பிடலாம் என யோசித்தபடியே சிலர் பயணித்துக் கொண்டிருந்தார்கள்! எங்கே சாப்பிட்டோம், என்ன உணவு போன்ற விஷயங்களையும், மற்ற தகவல்களையும் அடுத்த பகுதியில் சொல்கிறேன். அடுத்த பகுதியில் இன்னும் சில விஷயங்கள் வரலாம்! நண்பர்களே! இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் என்ணங்கள் என்ன என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட் நாகராஜ்

புது தில்லி

48 கருத்துகள்:

  1. உண்மையிலேயே இந்த இடம் மிக அழகாய் இருக்கும் என்று தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அழகான இடம் தான் ஸ்ரீராம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. சுண்ணாம்பு குகைகள் பற்றிய உருவாக்கம் தகவல்களும் அருமை ஜி...

    இயற்கையின் அதீத அழகு நம்மை மீறி பேச வைத்து விடுகிறது...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்களும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      நீக்கு
  3. குகைப்படங்களின் பிரமாண்டம் பயமுறுத்துகிறது ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குகைகள் - பயம் தேவையில்லை கில்லர்ஜி. இதை விட பெரிய குகைகள் உண்டு.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. சுண்ணாம்புக் குகைகள்
    தகவல்களும் படங்களம் அருமை
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தகவல்களும், படங்களும் உங்களுக்கும் பிடித்தமைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  5. படங்கள் எப்போதும்போல் அழகு, //வழியில் இருக்கும் இயற்கையை// க்கு மேலே வந்துள்ள படம் ப்ளர்ட் ஆகிவிட்டது. அதுபோல சூரிய ஒளி படமும்.

    சுண்ணாம்புக் குகைகளை நான் மெக்சிகோவில் பார்த்திருக்கிறேன். ஓமானிலும் அதிகம் உண்டு.

    தகவல்கள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில படங்கள் - எனக்கும் திருப்தியாக இல்லை. இருந்தாலும் சேர்த்த்திருக்கிறேன் நெல்லைத் தமிழன்.

      மெக்சிகோவில் பார்த்த சுண்ணாம்புக் குகைகள் - மேலதிகத் தகவலுக்கு நன்றி.

      நீக்கு
  6. 'இயற்கையாக நெளிந்து வளைந்த மரங்கள் அழகிய கிராமம் வாத்து,கோழி' கேட்கவே மகிழ்ச்சி. அமைதியும் இயற்கையும் கொளித்து இருந்தால் ஆனந்தமே.
    சுண்ணாம்பு குகைகளும் அழகு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இயற்கை எழில் என்றுமே ரசிக்கக் கூடிய விஷயம் தானே மாதேவி.

      பதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  7. கடைசிப்படம் அருமை. சுண்ணாம்புக்குகைகள் பார்த்திருந்தாலும் கொடைக்கானலில் பார்க்கவில்லை. ஆனால் குணா படத்தின் குகை என்கிறீர்கள். அங்கே கூட்டிச் சென்றார் வாகன ஓட்டி. நாங்கள் இறங்கிப் பார்க்கவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாம்மா... குணா குகை தற்போது கம்பிக் கதவு கொண்டு அடைத்துவிட்டார்கள். வெளியே இருந்து தான் பார்க்கமுடியும்.

      நீக்கு
  8. பாலம் மாதிரியான அந்தப் பாதையும் அதற்கு மேலுள்ள படமும் சொர்க்கம்! அந்த நிறமே கண்ணுக்கு அழகாக, மிதமான பச்சையாகக் காணப்படுகிறது. சுண்ணாம்புப் பாறைகளின் விதவிதமான உருவங்களை நிறையப் பார்த்திருக்கோம். இங்கேயும் அழகாய்க் காணப்படுகின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தப் பாதை வழி செல்லும்போது அப்படி ஒரு குளிர்ச்சி கீதாம்மா... படங்கள் உங்களுக்குப் பிடித்ததில் மகிழ்ச்சி.

      ஆமாம் விதம் விதமான உருவங்கள் - நாம் நினைத்த உருவத்தில்!

      நீக்கு
  9. உங்கள் புளொக்கின் செட்டிங் உள்ளே சென்று, மேலே இருக்கும் ஃபலோவேர்ஸ் லிஸ்ட்டைத்தூக்கி சைட் பார் இல் போடுங்கோ வெங்கட்... மேலே போஸ்ட் க்கு மேலே மிக நீண்ட இடைவெளி வருகிறது... கவனியுங்கோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் கவனிச்சேன், எனக்குத் தான் இப்பூடித் தெரியுதோனு நினைச்சுட்டேன். உடனே சொல்லி இருக்கணும்.

      நீக்கு
    2. முதலில் Side Bar-ல் தான் இருந்தது. ஏதோ மாற்றம் செய்த போது மேலே வரும்படிச் செய்திருந்தேன். இப்போது மீண்டும் Side Bar-க்கு கொண்டு வந்து விட்டேன் அதிரா.

      தங்களது கருத்திற்கு நன்றி. இடைவெளி சில சமயங்களில் வரும், சில சமயங்களில் வராது! பரவாயில்லை இருக்கட்டும் என விட்டுவைத்தேன். தற்போது மாற்றி விட்டேன்.

      நீக்கு
    3. நீங்களும் இந்த பிரச்சனையைக் கவனித்திருப்பததற்கு நன்றி. இப்போது மாற்றி விட்டேன் கீதாம்மா...

      நீக்கு
  10. அழகிய இடம், குகையைப் பார்க்க, இதேபோல ஒரு குகை பிரான்ஸ் இலும் இருக்கு, அது மலைக்குகை.. உள்ளே சென்று வெளியே வர ஒரு மணி க்கு மேல் எடுக்கும்.. உள்ளேயே படகுச் சவாரியும் இருந்தது... அதை நினைவுபடுத்துகிறது உங்கள் சில படங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஃப்ரான்ஸ்-இலும் இப்படி ஒரு குகை - மேலதிகத் தகவலுக்கு மிக்க நன்றி அதிரா.

      நீக்கு
  11. சுண்ணாம்புக் குகைகளைப் பற்றிய தகவல்கள் புதியவை.. படங்களுடன் பதிவு அருமை..

    வாழ்க் நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி சொன்ன தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  12. //வேலை, வீடு, குழந்தை, குட்டி என எல்லாவற்றையும் மறந்து இங்கேயே இருந்துடலாம்”//

    ஆதி, ரோஷ்ணியை அழைத்துக் கொண்டு நிம்மதியாக அலுவலகத்தை மறந்து இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்ளுங்கள் வேண்டுமென்றால்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹா.... அப்படி எல்லாம் தனியாக இருந்து விடமுடியாது. எல்லோரும் அங்கேயே தங்கி விடுவதும் சுலபமல்ல கோமதிம்மா....

      நீக்கு
  13. அமெரிக்காவில் இரண்டு குகைகள் பார்த்து இருக்கிறோம்.
    சுண்ணாம்புக்குகைகள் உருவாகும் வரலாறு அருமை.
    படங்கள் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அமெரிக்காவில் பார்த்த குகைகள் - மேலதிகத் தகவலுக்கு நன்றி கோமதிம்மா...

      படங்களும், பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      நீக்கு
  14. கொடைக்கானலின் குணா குகைகளை வெளியிலிருந்து தான் பார்த்தோம் நாங்களும்.
    போகும் வழியில் வேர் முடிச்சுக்கள் , தொங்கும் வேர்கள் எல்லாம் மிக அருமையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொடைக்கானல் குணா குகைகள் - வெகு காலத்திற்கு முன்னர் திறந்திருந்தது. குணா படம் வந்த பிறகு அங்கே செல்ல பலரும் நினைத்ததால் மூடி விட்டார்கள் எனத் தெரிகிறது.

      அங்கே இருக்கும் வேர் முடிச்சுகள் - ஆமாம் கோமதிம்மா - ரொம்பவே அழகு தான் அவை.

      நீக்கு
  15. சுண்ணாம்புக்குகைகள் அழகாக இருக்கிறது. அனைத்து படங்களும் மற்றும் உங்கள் வர்ணனையும் மனதை கவர்ந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.

      நீக்கு
    2. அன்பு வெங்கட், முக்கியமான விவரம் சுண்ணாம்புப் பாறைகள் உருவாகுவது.
      மிக அருமை. ஜியாலஜி வகுப்பு நடத்துவது போலச் சொல்லி இருக்கிறார்.
      படங்களின் அருமைகளைச் சொல்லி முடியாது.
      அற்புதமாகப் படம் பிடித்திருக்கிறீர்கள்.

      மிக மிக நன்றி மா.

      நீக்கு
    3. பதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா...

      படங்கள் - நன்றிம்மா...

      நீக்கு
  16. அழகான சுண்ணாம்பு குகைகள். இதுவரை நேரில் பார்த்ததில்லை. உங்கள் படங்கள் மிக அம்சமாக இருக்கின்றன. உருவாகும் விதத்தையும் அறிந்து கொண்டேன். விவரணங்களும் அருமை. மிக அழகான இடம்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி சொன்ன தகவல்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      நீக்கு
  17. வெங்கட்ஜி! ஹையோ முதல் படத்தைப் பார்த்ததுமே bபோரா கேவ்ஸ் பார்த்தது நினைவுக்கு வந்தது. அதுவே நான் வியந்து போனேன்.

    ஆனால் கொடைக்கானல் கேவ்ஸ் பார்த்ததில்லை. தியு வும்..

    அட்டகாசமான படங்கள் ஜி! அதுக்கு ஏற்ற வாசகம் மேலே!! கரெக்ட் தான் இல்ல?

    ரொம்ப ரொம்ப அழகான இடமா தெரியுது. நீங்க ரொம்பவெ எஞ்சாய் செஞ்சுருப்பீங்க உங்க கேமராவுக்கு குஷியா இருந்திருக்கும்!!! குகைப் படங்களை மிகவும்ர் ரசித்தேன்

    சுண்ணாம்புக் குகைககள் உருவாவது தெரிஞ்சிக்க முடிந்தது. ஏற்கனவே வாசித்திருக்கிறென் மகனுக்குச் சொல்லிக் கொடுத்த போது. சுண்ணாம்புப் பாறைகள் உருவாவது பற்றி.

    மரங்கள் அந்த வீடுகள் இருக்கும் இடம் ஹையோ செமையா இருக்கு. சுற்றிலும் காடுகள் தான். விலங்குகள் எதுவும் வருமோ?

    கீதா

    கீதா



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா... நீங்களும் Bபோரா குகைகள் பார்த்தது அறிவேன். அதைவிட இது சிறிய குகை தான் கீதாஜி.

      படங்கள், வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      மரங்கள், வீடுகள், நிலம் என ரொம்பவே அழகான இடம் தான் கீதாஜி. மனதே இல்லை அங்கிருந்து புறப்பட. விலங்குகள் - இருப்பதாகத் தெரியவில்லை.

      நீக்கு
  18. சுண்ணாம்புக்குகைகள்..இப்போதுதான் கேள்விப்படுகிறேன். நீங்கள் எங்களை புதுப்புது உலகிற்கு அழைத்துச்செல்கின்றீர்கள், நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி சென்ற இடங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  19. "ஆனால் அங்கிருந்து திரும்பும்போது இயற்கையை ரசிக்கவும் சில நிமிடங்கள் ஒதுக்கினால் நல்லது. மூங்கில் பாலங்கள் அமைத்து நடுவே சில மேடைகளையும் அமைத்திருக்கிறார்கள். அங்கே அமர்ந்து நிழற்படம் எடுக்கலாம்"

    இந்த "மூங்கில் பாலங்கள் அமைத்து நடுவே சில மேடைகளையும்" நிழற்படங்களை பகிரலாமே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேடைகளை தனியாக படம் எடுக்க முடியவில்லை - பயணிகளும், எங்கள் குழுவினரும் அமர்ந்து இருந்தார்கள் என்பதால்....

      உங்களது முதல் வருகையோ? மகிழ்ச்சி சண்மகம்.

      நீக்கு
  20. அப்படியா. பதிலுக்கு நன்றி. தினமும் உங்கள் வலைத்தளத்தை வாசிப்பேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பொதுவாகவே எல்லா பின்னூட்டங்களுக்கும் பதில் அளித்து விடுவேன். தினமும் எனது தளம் வாசிப்பது அறிந்து மகிழ்ச்சி சண்முகம்.

      நீக்கு
  21. சுண்ணாம்பு குகைகள் பற்றி பள்ளிப் பருவத்தில் படித்திருக்கிறேன் ... நேரில் பார்த்ததில்லை ... ஆனால் உங்கள் புண்ணியத்தில் நேரில் பார்ப்பதுபோன்ற பிரமிப்பு ஏற்பட்டது .. நன்றி !!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிவா.

      நீக்கு
  22. சுண்ணாம்புக் குகைகள் வித்தியாசம் ...

    அழகான காட்சிகள் ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி அனுப்ரேம் ஜி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....