அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளை ஒரு வாசிப்பு பற்றிய ஒரு ஆங்கில மேற்கோளுடன்
ஆரம்பிக்கலாம்.
The more you READ the more things you will know. The more that you LEARN, the more places you will go – Dr.Seuss.
*****
முனைவர் பா. ஜம்புலிங்கம் என்ற பெயரை பார்க்கும்போதெல்லாம் எனக்கு பௌத்தமும், சமணமும் குறித்த ஆராய்ச்சிக்காக, முனைவர் ஐயா செய்த பயணங்களும் அவர் எழுதிய கட்டுரைகளும் நினைவுக்கு வரும். கூடவே கும்பகோணம், தஞ்சாவூர் சுற்றுப் பகுதிகளில் உள்ள திருத்தலங்களுக்குச் சென்று அவர் எழுதி வரும் சிறப்பான கட்டுரைகளும் நினைவுக்கு வருவதுண்டு. அந்த வரிசையில் இப்போது சேர்ந்திருப்பது முனைவர் ஐயாவின் ஒரு சீரிய தொண்டு – விக்கிப்பீடியா தளத்தில் அவர் எழுதி வரும் சிறப்பான கட்டுரைகள். விக்கிப்பீடியா – இணையத்தில் எந்த விஷயத்தினைப் பற்றித் தேடினாலும் முதலாவதாக வருவது ஒரு விக்கிப்பீடியா கட்டுரையாகவே இருக்கும் என்பது பலமுறை நான் கண்டு உணர்ந்தது. அந்த விக்கிப்பீடியா தளத்தில் ஆங்கிலத்தில் நிறைய கட்டுரைகள் இருந்தாலும், நம் தாய்மொழியாம் தமிழில் இருக்கும் கட்டுரைகள் ஓப்பீடு செய்யும்போது குறைவு என்று தான் சொல்ல வேண்டும்.
தற்பொழுது முனைவர் பா. ஜம்புலிங்கம்
ஐயா போன்றவர்களது நன்முயற்சியால் தமிழிலும் பல கட்டுரைகள் விக்கிப்பீடியா தளத்தில்
பதிவேற்றம் செய்து வரப்படுகிறது. முனைவர் ஜம்புலிங்கம்
ஐயா மட்டும் இதுவரை 1003 (இந்தப் பதிவினை தட்டச்சு செய்த நாள் வரை) கட்டுரைகளை விக்கிப்பீடியா
தளத்தில் எழுதி இருக்கிறார். அவர் இதுவரை விக்கிப்பீடியா
தளத்தில் எழுதிய கட்டுரைகளின் சுட்டிகளை இந்தத் தொகுப்பில் நீங்களும் பார்க்க
முடியும். அவர் எழுதிய கட்டுரைகள் பல பொருட்களில்
– கோவில்கள், வெளிநாட்டு நாளிதழ்கள், மனிதர்கள், அருங்காட்சியகங்கள், பௌத்தம், சமணம்,
சமயம், நிகழ்வுகள் என பல பொருட்களில் அவரது கட்டுரைகள் உண்டு.
புதுக்கோட்டை நண்பர்கள், 2014-ஆம் வருடம்
ஏற்பாடு செய்த இணையத் தமிழ் பயிற்சிப் பட்டறையில். விக்கிப்பீடியாவில் எழுதுவது எப்படி
என்பதை அறிந்து கொண்டவர் தொடர்ந்து கட்டுரைகள் எழுதி வந்து, தாம் பெற்ற பயிற்சி மற்றவர்களுக்கும்
பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பதற்காக, 2016-ஆம் ஆண்டும், அதைத் தொடர்ந்து 2019-ஆம்
ஆண்டும் கணினி தமிழ்ச் சங்கம் நடத்திய பயிற்சிப் பட்டறைகளில் மற்றவர்களுக்குப் பாடம்
நடத்தி இருக்கிறார் என்பதிலிருந்து விக்கிப்பீடியா கட்டுரைகள் மீது இவர் செலுத்தி வரும்
கவனமும் நாட்டமும் நமக்குப் புரியும். நமது வலைப்பூவில் நாம் எழுதுவதை, நம்மையும்
Blogger-ஐயும் தவிர வேறு யாரும் நீக்க முடியாது. ஆனால் விக்கிப்பீடியா அப்படி அல்ல,
யார் வேண்டுமானாலும் தகவலை சரி செய்யலாம் என்பதால் கட்டுரைகள் எழுதும்போது அதிக கவனம்
தேவை என்று தனது அனுபவங்களில் உணர்ந்தவர் முனைவர் ஐயா. அதனால் பயிற்சி சமயத்தில், தான் கற்றதையும், அவரது
அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு மற்றவர்களையும் அத்தளத்தில் எழுதுவதற்கு ஊக்கம் தரும்
நன்மனம் கொண்ட பண்பாளரை நட்பாக அடைந்திருப்பதில் நாமும் பெருமை கொள்வோம்.
இந்தக் கட்டுரைகளை விக்கிப்பீடியா தளத்தில்
எழுதிய போது அவருக்குக் கிடைத்த அனுபவங்கள், விக்கிப்பீடியா தளத்தில் எழுதும்போது நாம்
கவனமாக கருத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள், எப்படி எழுதினால் தளத்திலிருந்து அந்தப்
பதிவு நீக்கப்படும் என பலவற்றையும், தனது அனுபவத்திலிருந்து தொகுத்து ஒரு மின்னூலாக
அமேசான் தளத்தில் “விக்கிப்பீடியா
1000 – பதிவு அனுபவங்கள்” என்ற தலைப்பில் வெளியிட்டு இருக்கிறார். Kindle Unlimited கணக்கு வைத்திருப்பவர்கள் இந்தப்
புத்தகத்தினை இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். அது இல்லாதவர்கள் ரூபாய் 50/- செலுத்தி இந்த மின்னூலினை
தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். கிண்டில்
கருவி இல்லாதவர்கள், அவர்களது ஆண்ட்ராய்டு அலைபேசி வழியாகவோ அல்லது கணினி வழியாகவோ
படிக்க முடியும் என்பதனையும் சொல்லி விடுகிறேன்.
விக்கிப்பீடியா தளத்தில் கட்டுரைகள்
எழுத விருப்பம் இருந்தால், இந்த மின்னூல் உங்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக இருக்கும்
என்பதில் சந்தேகமில்லை.
இவரது தளத்தில் மட்டுமல்லாது மின்னூலிலும்
முடிந்தவரை ஆங்கிலத்தில் எழுதுவதைத் தவிர்த்து வருவது சிறப்பான விஷயம். தமிழகத்திலிருந்து வெளி மாநிலத்திற்கு வந்து பல
வருடங்களாக இருக்கும் எனைப் போன்றவனுக்கு சில தமிழ் வார்த்தைகள் புரிந்து கொள்ள சற்றே
கடினமாகத் தோன்றியது – அதற்குக் காரணம் எனது அறிவுப் பற்றாக்குறையே தவிர தமிழின் பற்றாக்குறையோ,
முனைவர் ஐயாவின் தவறோ அல்ல! இந்த மின்னூல் வழி அவர் சொன்ன கருத்துகள், விக்கிப்பீடியாவில்
எழுதுவதற்கான வழிமுறைகள் அனைவருக்கும் பயனுள்ளவை.
இப்போதைக்கு விக்கியில் எழுதுவதற்கான நேரமும் வாய்ப்பும் எனக்கு இல்லை. அப்படி
ஒரு வாய்ப்பு அமையும் சமயத்தில் இந்த மின்னூல் எனக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்
என்பதில் ஐயமில்லை. எழுதாவிட்டாலும் விக்கியில்
எப்படி கட்டுரைகள் எழுதப்படுகின்றன, எப்படியெல்லாம் அந்தத் தகவல்கள் சரிபார்க்கப்படுகின்றன,
அதற்கான தரவுகள்/இணைப்புகள் தரப்படுகின்றன போன்ற பல விஷயங்களை நீங்கள் அறிந்து கொள்ள
முடியும்.
முனைவர் பா. ஜம்புலிங்கம் ஐயாவின் இந்த மின்னூலை தரவிறக்கம் செய்து பயன் அடையலாமே! மேலும் கும்பகோணம்/தஞ்சாவூர் கோவில்கள் பற்றிய பதிவுகளையும் தொகுத்து அவர் மின்னூலாக வெளியிட வேண்டும் என்ற வேண்டுகோளை உங்கள் சார்பிலும் அவரிடம் இந்தப் பதிவு வழி கேட்டுக் கொள்கிறேன். தொடர்ந்து பல மின்னூல்களை வெளியிட வாழ்த்துகள் முனைவர் ஐயா.
******
என்ன நண்பர்களே, இந்த நாளின் கிண்டில் வாசிப்பு அனுபவம்/மின்னூல் அறிமுகம் பற்றிய பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா, உங்கள் கருத்துகள் என்ன என்பதையும் பின்னூட்டங்கள் வழி தெரிவித்தால் மகிழ்ச்சியடைவேன்.
நாளை வேறு ஒரு பதிவில் சந்திப்போம்…. சிந்திப்போம்….
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி.
முனைவர் அய்யாவின் ஆர்வம் என்னையும் வியக்க வைக்கும் ஒன்று. பௌத்த சமயம் பற்றி ஆராய்ச்சி, வலைப்பூக்கள், செய்தித்தாள்களில் கட்டுரை, விக்கிபீடியா வேலை என்று சோர்வில்லாமல் பாடம் கற்றுத் தருகிறார். அவருக்கு வணக்கங்களுடன் வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
பதிலளிநீக்குஅவரது ஆர்வம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று தான் ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
முனைவர் அவர்களின் பணி அளப்பெரிது அவரை பாராட்டும் அளவுக்கு நமக்கு தகுதியில்லை என்றே தோன்றுகிறது.
பதிலளிநீக்குஅவரது தேடுதல்கள் இன்னும் சிறக்க இறையருள் கிட்டட்டும்.
முதலில் உள்ள சுட்டிக்கு சென்று பதிவுப்பட்டியலை கண்டேன் சிலவற்றை படித்தேன் நன்றி ஜி
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
நீக்குமுனைவர் ஐயா அவர்களது பணியை நினைக்கையில் மிகவும் பெருமையாக உள்ளது...
பதிலளிநீக்குஐயா அவர்களது பணி மேலும் சிறப்புடன் தொடர வேண்டும்...
நலம் வாழ்க...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.
நீக்குவணகக்ம
பதிலளிநீக்குஐயா
முனைவர் ஐயா அவர்களுககு எனது வாழ்த்துக்கள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.
நீக்குஐயாவின் ஆர்வம் எனக்கு எப்போதும் வழிகாட்டியாகவும் வியப்பும் தரும்... அவரின் பல பகிர்வுகள் மின்னூலாக வரும்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குநன்றி ஐய்யா. முனைவர் அய்யாவைப் பற்றி இப்போதுதான் தெரிந்துகொண்டேன். அவரின் விக்கிபீடியா பதிவுகளையும் மின்னூலையும் வாசிக்க தொடங்குகிறேன். மேலும் பல நூல்களை ஐய்யாவிடமிருந்து எதிர்ப்பார்க்கிறேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அரவிந்த்.
நீக்குஎன் மின்னூலைப் பற்றிய உங்களின் மதிப்புரைக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். விக்கிப்பீடியாவில் 1000+ கட்டுரைகளை எழுதியதைவிட அதனால் பெற்ற அனுபவங்களைப் பதிய மிகவும் சிரமப்பட்டேன். அனைவருக்கும் அந்த அனுபவங்கள் சென்றடையவேண்டும் என்ற என்னுடைய எண்ணமே அதற்குக் காரணமாகும். பல சூழல்களில் உங்களின் கேமராப் பார்வையையும், எழுத்து நடையையும், குறிப்பாக ஊரின் பெயரைக்குறிப்பிடும்போது ba bha என்று வேறுபடுத்திக்காட்டும் உத்தியையும் கண்டு வியந்துள்ளேன்.
பதிலளிநீக்குஆங்கில விக்கிப்பீடியாவின் WikiProject India/The 10,000 Challenge (மே 1, 2020-ஜுலை 31, 2020) என்ற சவாலில் கலந்துகொண்டு நம் தமிழ்நாடு, குறிப்பாக கோயில்கள் குறித்த கட்டுரைகளை தமிழ் மொழி அறியாதோரும் தெரிந்துகொள்ளவேண்டும் என்ற நன்னோக்கில் எழுதிவருகிறேன். இதுவரை 25+ கட்டுரைகளை எழுதியுள்ளேன் என்ற செய்தியை இங்கே முதலில் பதிவதைப் பெருமையாகக் கருதுகிறேன். உங்களைப் போன்ற நல்லுங்களின் வாழ்த்துகள் என்னை மென்மேலும் எழுத வைக்கும். நன்றி.
ஆங்கில விக்கிப்பீடியாவின் சவால் - வெற்றி பெற வாழ்த்துகள் ஐயா.
நீக்குதங்களுடன் தொடர்பில் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி ஐயா.
முனைவர் பா. ஜம்புலிங்கம் ஐயாவின் மின்னூல் விமர்சனம் அருமை.
பதிலளிநீக்குஐயாவின் மின்னூலுக்கு வாழ்த்துக்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குஅருமை, இப்படி உங்களைப்போன்ற ஊக்குவிப்பாளர்கள் இருக்கும் வரை, முனைவர் ஐயா போன்றோர் இன்னும் பல ஆராட்சிகள் செய்து புத்தகங்கள் வெயிடுவர்.. வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அதிரா.
நீக்குபயனுள்ள பதிவு. கிண்டிலில் இருக்கும் புத்தகத்தை நிச்சயம் படிக்கிறேன். முனைவர் ஐயாவிற்கு என் வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் பதிவிற்காக உங்களுக்கு என் வாழ்த்துக்கள் சார்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபிநயா....
நீக்குமுனைவர் ஐயா என்றாலே நினைவுக்கு வருவது நீங்கள் குறிப்பிட்டிருக்கும் முதல் பாரா அப்படியே வழி மொழிகிறோம். அதே தான் கோயில்கள் உலா தகவல்கள் வெளிநாட்டு நாளிதழ்கள் பற்றியும். விக்கிபீடியாவில் எழுதுவ்து பற்றியும் நினைவுக்கு வரும். இப்போது மின்னூலாக வந்ததன் உங்கள் விமர்சனம் அருமை.
பதிலளிநீக்குஐயாவுக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள்
துளசிதரன் கீதா.
கூடவே எனக்கு மற்றொன்றும் நினைவுக்கு வரும். ஒரு வருடத்தில் சிறந்த ஆங்கிலச் சொற்கள், சிறந்த ஹிந்திச் சொற்கள் என்று எந்தெந்த அகராதிகள் தெரிவு செய்தன என்பது பற்றியும் அதன் பயன்பாடு பற்றியும் எழுதுவதுண்டு.
//தமிழகத்திலிருந்து வெளி மாநிலத்திற்கு வந்து பல வருடங்களாக இருக்கும் எனைப் போன்றவனுக்கு சில தமிழ் வார்த்தைகள் புரிந்து கொள்ள சற்றே கடினமாகத் தோன்றியது – அதற்குக் காரணம் எனது அறிவுப் பற்றாக்குறையே//
வெங்கட்ஜி நீங்க தமிழகத்திலிருந்து வெளிமாநிலத்தில் பல வருடங்கள் என்பதாலுனு சொல்லிக் கொண்டே அழகாகத் தம்ழில் எழுதுகின்றீர்கள். மிக மிக நன்றாக எழுதும் நீங்களே இப்படிச் சொன்னால் நான் என்ன சொல்ல என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்!! ஹா ஹா நிஜமாகவே பல சமயங்களில் பதிவு எழுதும் போது வழக்கத்தில் நாம் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தும் ஆங்கிலச் சொற்களுக்குத் தமிழ்ச் சொற்கள் டக்கென்று வராமல் கஷ்டபடுவதுண்டு!! ஹா ஹா...
எனக்கு நீங்கள் சொல்லியிருப்பது நிறையவே பொருந்தும். புரியாமல் விழிப்பதுண்டு.
வாழ்த்துகள்!
கீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி.
நீக்குவருடத்தின் சிறந்த சொற்கள் தெரிவு செய்வது பற்றி முனைவர் ஐயாவிடமிருந்தே தெரிந்து கொள்ள முடிகிறது நமக்கு.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.
அன்பு வெங்கட் ,
பதிலளிநீக்குபதிவுக்கு நன்றி.
விக்கிபீடியாவின் தமிழ்ப் பதிவுகளை அவ்வப் பொழுது படிப்பேன்.
முனைவர் ஐய்யாவின் ஆர்வமும் உழைப்பும் என்றும் நிகைத்திருக்கும்.
இவரைப் போல அறிஞர்கள் நம் தமிழுக்கு சொத்து சேர்க்கிறார்கள்.
எல்லோரும் பயன் பெறவேண்டும்.
//இவரைப் போல அறிஞர்கள் நம் தமிழுக்கு சொத்து சேர்க்கிறார்கள்// - உண்மை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வல்லிம்மா...
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. சகோதரர் முனைவர் ஜம்புலிங்கம் அவர்களின் சாதனைகளை தங்கள் பதிவில் பதிந்தது சிறப்பாக உள்ளது. எல்லாவற்றையும் படித்தேன். அவரது திறமைக்கும், தமிழார்வத்திற்கும் என் பணிவான நமஸ்காரங்கள். இத்தனை பெருமைக்குரியவர் என் பதிவுகளுக்கும் வந்து கருத்துக்கள் தந்து என் எழுத்தை ஊக்குவிக்கும் அவர் பெருந்தன்மைக்கு என் பணிவான நன்றிகளும். தங்களின் பகிர்வினுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குபதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
முனைவர் ஐயாவின் அயராத பணிக்கு வாழ்த்துகள். தொடரட்டும் அவர் பணிகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மாதேவி.
நீக்குஅவர் ஒரு சாதனையாளர்
பதிலளிநீக்கு//அவர் ஒரு சாதனையாளர்// - உண்மையே.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
ஜம்புலிங்கம் சார்...விக்கிபீடியா நூலுக்கும் 1000 இடுகைகளுக்கும் வாழ்த்துகள். ரொம்ப மெடிகுலஸ் பெர்சன். நிச்சயம் சந்திக்கவேண்டியவர்.
பதிலளிநீக்குஅந்த மின்னூல் பற்றிப் பகிர்ந்துகொண்டதற்குப் பாராட்டுகள்
/ரொம்ப மெடிகுலஸ் பெர்சன். நிச்சயம் சந்திக்க வேண்டியவர்/ - உண்மை நெல்லைத்தமிழன். தஞ்சையில் ஒரு முறை சந்தித்தேன்.
நீக்குNice and powerful review
பதிலளிநீக்குநன்றி ஃபெர்ணாண்டோ.
நீக்குமுனைவர் அவர்கள் தொடர்ந்து விக்கிபீடியாவுக்குத் தமிழ்க்கட்டுரைகளைத் தட்டச்சிச் செய்து வரும் தொண்டு அளப்பரியது. ஆயிரத்துக்கும் மேல் போனதுக்கு வாழ்த்துகள். அசராமல் தொடர்ந்து பணி செய்து வரும் அவருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள். மின்னூலுக்கும் வாழ்த்துகள். அவரின் பதிவைத் தொடர்ந்து படித்து வந்தாலும் எப்போதேனும் அங்கே கருத்துப் பதிவேன். பலரையும் ஊக்கம் கொடுத்து வருவதற்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
நீக்கு