புதன், 10 ஜூன், 2020

அந்தமானின் அழகு – பார்த்ததும் பார்க்காததும் – எவ்வளவு செலவு ஆகும்

 

அந்தமானின் அழகு பகுதி 42

முந்தைய பதிவுகள் – பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6  பகுதி 7 பகுதி 8 பகுதி 9  பகுதி 10 பகுதி 11 பகுதி 12 பகுதி 13 பகுதி 14 பகுதி 15 பகுதி 16 பகுதி 17 பகுதி 18 பகுதி 19 பகுதி 20 பகுதி 21 பகுதி 22 பகுதி 23 பகுதி 24 பகுதி 25 பகுதி 26 பகுதி 27 பகுதி 28 பகுதி 29 பகுதி 30  பகுதி 31 பகுதி 32  பகுதி 33 பகுதி 34 பகுதி 35 பகுதி 36 பகுதி 37 பகுதி 38 பகுதி 39 பகுதி 40 பகுதி 41


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம்.  இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

Life is full of challenges, seen and unseen, so to look and feel great, you must hold your head up each day and project your inner confidence - Cindy Ann Peterson.


 

கடந்த சில பகுதிகளாக குழுவில் எங்களுடன் பயணித்த சிலரின் அனுபவங்களை சேர்த்திருந்தேன்.  இனி தொடர்ந்து என்ன செய்தோம் என்பதை கவனிப்போம்.  எங்கள் பயணத்தில் கடைசியாக நாங்கள் சென்றது Bபாராடாங்க் தீவிற்கு! அங்கே சென்று போர்ட் Bப்ளேயர் திரும்பிய மாலையில் அபர்தீன் பஜார் சென்று சுற்றி வந்தோம்.  அந்தமானில் இறுதியாக ஒரு முறை இளநீர் குடிக்கலாம் என்றால் கடைத்தெருவில் கிடைக்கவில்லை. சரி நமக்கு வாய்த்தது அவ்வளவு தான் என திரும்பிவிட்டோம்.  ஆனால் குழுவில் இருந்த நண்பர் ஒருவர் மட்டும் நான் இன்னும் கொஞ்சம் சுற்றிவிட்டு வரேன் என்று சென்றவர் சில நிமிடங்கள் கழித்து ஆட்டோவில் தங்குமிடம் திரும்பினார்.  ஆட்டோவில் ஒரு மூட்டை நிறைய இளநீர்!  தேடிக் கண்டுபிடித்து வாங்கி வந்து விட, அவற்றை உணவகத்திலிருந்து ஒரு பெரிய கத்தி கொண்டு வந்து நாங்களாகவே வெட்டி, குழுவினர் அனைவருமாக பருகி மகிழ்ந்தோம்.  பயணத்தில் கிடைத்த அனுபவங்களை எல்லாம் மீண்டும் ஒரு முறை பேசி இன்பத்தில் திளைத்திருந்தோம். 


அடுத்த நாள் காலை புறப்பட்டு விமான நிலையம் சென்று விசாகப்பட்டினம் வழி தில்லி திரும்ப வேண்டும்.  நாங்கள் பேசித் திளைத்திருந்தோம் என்று சொல்லும் அதே நேரத்தில் இந்தப் பயணத்தில் பார்த்த, பார்க்காத இடங்களை ஒரு முறை பின்னோக்கிப் பார்த்து விடலாம்!  அந்தமான் பயணிக்க இருக்கும் உங்களில் சிலருக்கு பயனுள்ளதாக இருக்கலாம் அல்லவா?  வாருங்கள் பார்க்கலாம்.

போர்ட் Bப்ளேயர்:


பார்த்த இடங்கள்

பார்க்காத இடங்கள்

செல்லுலர் சிறை

கார்பின்’ஸ் கோவ் கடற்கரை

கடல்வாழ் உயிரினங்கள் காட்சியகம்

போஸ் தீவு (ராஸ் தீவு)

நார்த் பே தீவு

அருங்காட்சியகங்கள்

சிடியா டாப்பு

பாம்புத் தீவு


ஸ்வராஜ் த்வீப் தீவு (ஹேவ்லாக் தீவு)


பார்த்த இடங்கள்

பார்க்காத இடங்கள்

காலா பத்தர் கடற்கரை

ராதா நகர் கடற்கரை

எலிஃபண்ட் கடற்கரை

விஜய்நகர் கடற்கரை


ஷகீத் த்வீப் தீவு (நீல் தீவு)


பார்த்த இடங்கள்

பார்க்காத இடம்

இயற்கை பாலம் (Natural Beach)

லக்ஷ்மண்பூர் கடற்கரை – எண் 1 & 2

சீதாபூர் கடற்கரை

பரத்பூர் கடற்கரை

ராம்நகர் கடற்கரை


Bபாராடாங்க் தீவு

 

பார்த்த இடங்கள்

பார்க்காத இடங்கள்

அலையாத்திக் காடுகள்

சுண்ணாம்புக் குகைகள்

கிளித் தீவு

மண் எரிமலை



 

பார்க்காத இடங்களில் அதிகம் ஒன்றும் இல்லை என்றாலும் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் பார்த்து விட வேண்டும். இந்தப் பட்டியல் தவிர வேறு சில தீவுகளும் அந்தமானில் உண்டு – உதாரணத்திற்கு டிக்லிபூர் எனும் இடம்.  Bபாராடாங்க் தீவு வழி அந்த இடத்திற்குச் சென்று, பார்த்துத் திரும்ப குறைந்தது நான்கு நாட்கள் வேண்டும். அதனால் அதைத் தவிர்ப்பது நல்லது – நிறைய நாட்கள் பயணம் செய்ய முடியும் என்றால் அதையும் சேர்த்துக் கொள்ளலாம்.  நாங்கள் 7 நவம்பர் புறப்பட்டு 13 நவம்பர் திரும்பினோம் (அதில் கடைசி நாள் ஒன்றும் பார்க்கவில்லை) என்பதால் மொத்தம் ஆறு பகல் ஆறு இரவு பயணம் என்று கொள்ளலாம்.  இந்தப் பயணத்திற்கு என்ன செலவு ஆகும் என்பதையும் சொல்லி விடுகிறேன். தமிழகத்தின் சென்னையிலிருந்து அந்தமானின் போர்ட் Bப்ளேயர் வரை விமானம்/கப்பல் வழி பயணிக்கலாம். அதற்கு கட்டணம் நீங்கள் பயணிக்கும் நாட்களை/சீசனை பொறுத்தது என்பதை அறிக.


இதைத் தவிர தங்குமிடம், உணவு, தீவுகளுக்குக்கு இடையேயான பயணம் (Cruise/Ship), படகுச் செலவுகள், ஸ்கூபா, ஸ்னார்க்ளிங், போன்ற விஷயங்களுக்கான கட்டணம் என அனைத்தும் இருக்கிறது.  நீங்களாகவே இவற்றைச் செய்து கொள்ள முடியும் என்றாலும் அனைத்தும் நீங்கள் இறங்கி செய்ய வேண்டும் – Cruise பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்ய வேண்டியிருக்கும் (இணையதளம் முன்னரே தந்திருக்கிறேன் – என்றாலும் இங்கேயும் சுட்டி தந்திருக்கிறேன்). நாங்கள் நேரடியாக ஏற்பாடு செய்யாமல் எங்களுக்குத் தெரிந்த, சில நண்பர்கள் ஏற்கனவே பயன்படுத்தி வந்து நன்றாக இருப்பதாகச் சொன்ன நிறுவனம் -  Journey Andaman என்ற நிறுவனத்தின் மூலம் ஏற்பாடுகளைச் செய்து கொண்டோம்.  அவர்களது தளத்திலேயே மின்னஞ்சல் முகவரியும் இருக்கிறது. அவர்களுக்கு உங்கள் பயணத்திட்டத்தினை எழுதி அனுப்பினால் விவரங்கள் தருவார்கள். அவர்களுடன் பேசி என்னென்ன தேவை என்பதைச் சொன்னால் அதற்குத் தகுந்த கட்டணம் சொல்வார்கள்.  மின்னஞ்சல் வழி தவிர அலைபேசி/வாட்ஸ் அப் வழியாகவும் (0-8145128300, 0-9531953131) திரு சுமந்த் (பயண ஏற்பாடு செய்பவர்) அவர்களைத் தொடர்பு கொள்ளலாம்.


எங்களுக்கு எவ்வளவு செலவு ஆனது:  விமானக் கட்டணம் தவிர எங்களுக்கு ஒரு ஆளுக்கு சுமார் ரூபாய் 22000/- செலவானது (இதில் ஸ்கூபா/ஸ்னார்க்ளிங்க் போன்றவற்றுக்கான கட்டணம் இல்லை).  இதில் தங்குமிடம், உணவு, தீவுகளுக்கு இடையேயான பயணம், நுழைவுக் கட்டணங்கள் என அனைத்துமே அடக்கம்.  உங்களுடைய தேவை பொறுத்து, பார்க்க ஆசைப்படும் இடங்கள் பொறுத்து, நீங்கள் பயணத்தினை திட்டமிடலாம்.  சில நிறுவனங்கள் குறைவான கட்டணங்கள் வாங்கிக் கொண்டு செய்தாலும் அவர்களது சேவைத் தரம் அவ்வளவு சரியாக இல்லை.  வேறு சில நிறுவனங்கள் வழி சென்று வந்த நண்பர்கள் நிறையவே அவதிப் பட்டார்கள்.  நாங்கள் சென்று வந்த நிறுவனம் நல்ல சேவை அளித்தது.  இந்த மாதிரி பயணங்கள் செய்யும் போது, கொஞ்சம் செலவு அதிகமானாலும் பிரச்சனைகள் இல்லாமல் இருக்க வேண்டியது அவசியம் என்பது உங்களுக்குத் தெரியாதா என்ன?


இந்தப் பதிவின் வழி சொன்ன விஷயங்கள் உங்களுக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். அடுத்த பகுதியுடன் “அந்தமானின் அழகு” பயணத் தொடர் முடிவுக்கு வரும்.  அதன் பிறகு? இருக்கவே இருக்கிறது வேறு பதிவுகள்.  தொடர்ந்து பயணிப்போம்.


சந்திப்போம்…. சிந்திப்போம்…


நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லி

32 கருத்துகள்:

  1. நீங்கள் சொல்லி இருப்பதைப் பார்க்கும்போது பெரிய செலவாகத் தோன்றவில்லை.  விமானக்கட்டணம் சுமாராக எவ்வளவு வரும் என்று பார்த்தால் தெரியும்.  உங்கள் கட்டுரையைப் படிக்கும்வரை அந்தமானில் பார்க்க என்ன இருக்கிறது என்கிற எண்ணமே கொண்டிருந்தேன்.  அந்த எண்ணத்தை உங்கள் கட்டுரை மாற்றியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விமானக் கட்டணம் - சென்னையிலிருந்து போர்ட் Bப்ளேயர் சென்று திரும்ப (30 ஜூன் புறப்பட்டு 7 ஜூலை 2020) எட்டாயிரம் ரூபாய்க்குள் என இன்றைக்கு இணையத்தில் பார்த்தேன். முன்கூட்டியே பதிவு செய்தால் ஆறாயிரம் ரூபாய்க்குள் விமானச் சீட்டு கிடைக்க வாய்ப்புண்டு ஸ்ரீராம்.

      அந்தமானில் பார்க்க நிறையவே இடங்கள் உண்டு. முடிந்த போது சென்று வாருங்கள்.

      நீக்கு
  2. அன்பின் வெங்கட்..
    அந்தமானில் இத்தனை விஷங்களா.. என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு நல்ல விவரங்கள்...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  3. அலையாத்தி காடுகளை படித்திருக்கிறேன். அவற்றை பார்க்கனும்ன்னுதான் ஆசை. வாய்ப்பு கிடைக்கும்போது பார்க்கலாம். நானும் அந்தமானுக்கு போக லட்சக்கணக்கில் செலவு ஆகும்ன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அலையாத்திக் காடுகள் - பார்க்க உங்களுக்கும் வாய்ப்பு அமையட்டும் ராஜி.

      அந்தமான் செல்ல செலவு - இன்னும் கூட குறையலாம் - நமது தேவையைப் பொறுத்து!

      நீக்கு
  4. இந்த தகவல்களை மிகவும் எதிர்ப் பார்த்தேன்... நன்றி...

    மின்னூல் ஆக்க மறந்து விட வேண்டாம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் எதிர்பார்த்த தகவல்களை இங்கே தர முடிந்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

      மின்னூல் - விரைவில் வெளி வரும்.

      நீக்கு
  5. பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி ஜி.

      நீக்கு
  6. அந்தமான் செல்ல நினைப்பவர்களுக்கு அருமையான ஒரு வழிகாட்டியாய் தங்களின் பதிவுகள் அமைந்திருக்கின்றன
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தப் பதிவுகள் சிலருக்காவது பயன்பட்டால் மகிழ்ச்சி தான் கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. நல்ல விவரமான கட்டுரை. இதுவரை நீங்கள் எழுதிய பயணக்கட்டுரையில் இதுவே சிறந்ததாகத் தெரிகிறது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுவரை எழுதியவற்றில் சிறந்ததாகத் தெரிகிறது - நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  8. இந்த பதிவு அட்டவணை போல் அமைத்தது சிறப்பு ஜி மிகவும் பயனுள்ள தகவல்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவின் வழி சொன்ன தகவல்கள் பயனுள்ளவையாக இருந்தால் மகிழ்ச்சியே கில்லர்ஜி.

      நீக்கு
  9. விவரங்கள் அனைத்தும் தந்து மற்றவர்களையும் அவ்வாறு செல்ல ஆர்வத்தை உண்டாக்குகிறீர்கள்.இதற்கு தமிழ் சொல்  "ஆற்றுப்படுத்தல்" என்பது.ஆக இது ஒரு  ஆற்றுப்படை கட்டுரை. 

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆற்றுப்படை கட்டுரை - நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      நீக்கு
  10. அனைத்து விபரங்களும் அருமை. நன்றாகக் கொடுத்திருக்கிறீர்கள். புதிதாகச் செல்ல நினைக்கிறவர்களுக்கு நல்லதொரு வழிகாட்டியாக அமையும். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வழிகாட்டியாக அமையும்// - அடுத்தவருக்குப் பயன்பட்டால் மகிழ்ச்சியே கீதாம்மா...

      நீக்கு
  11. அந்தமான் தொடர் கட்டுரை அருமை.
    பகிர்ந்த படங்களும், விவரங்களும் போகும் ஆவலை ஏற்படுத்தியது.
    பார்த்தவை, பார்க்கதவை விவரங்கள் , எத்தனை நாள் தேவை படும் அனைத்தையும் கூறியது நல்லது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தமான தொடர் கட்டுரைகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

      பதிவில் சொன்ன விஷயங்கள் சிலருக்காவது பயன்பட்டால் நல்லதே...

      நீக்கு
  12. பயணத்திற்கான செலவு விவரங்கள் கொடுத்தமை சிறப்பு சிறப்பான பயனம் உங்கள் கட்டுரைகளும் சிறப்பானவை.

    படங்கள் எல்லாமே அழகாக விவரமாக இருந்தது

    மிக்க நன்றி வெங்கட்ஜி

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்கள், பதிவு என அனைத்தும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

      நீக்கு
  13. வெங்கட்ஜி செலவு அத்தனை பெரிதாகத் தெரியவில்லை.

    நாம் அங்கு சென்று தங்கி நாமே ரிலாக்ஸ்டாகச் சுற்றிப் பார்க்கப் போகிறோம் என்றால் அங்கு சென்று போட்டிங்க் ஷிப்பிங்க் எல்லாம் புக் செய்து கொள்ளலாம் ஆனால் குறைந்த நாட்கள் என்றால் இப்படிப் பயண ஏற்பாடு செய்து கொண்டு போவதே நல்லது. எப்படி இருந்தாலும் இதுவே நல்லது என்று தோன்றுகிறது. அனாவசிய டென்ஷன் இல்லாமல் நாம் சுற்றிப் பார்க்கலாம்.

    நல்ல விவரங்கள் வெங்கட்ஜி! தொடர்புக்கான விவரங்களையும் குறித்துக் கொண்டேன்.

    அருமையான பயணக் கட்டுரை ஜி. நாங்களும் அப்போது செல்ல நினைத்து இடங்கள் தேர்வு செய்து எல்லாம் வைத்திருந்தோம். என் உறவினர் ஒரு குடும்பம் சென்று ஆனால் 4 நாட்கள் தான் அவர்கள் இப்படி எல்லாம் செல்லவில்லை. அது இருக்கும் 20 வருடங்களுக்கு முன்.

    உங்கள் கட்டுரை பல தகவல்கள் செம ...

    மிக்க நன்றி ஜி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செலவு - அத்தனை அதிகமில்லை. இன்னும் குறைவாகக் கூட செல்லலாம் - சில வசதிகளைத் தவிர்த்தால்.

      நாமே எல்லா வேலைகளைப் பார்த்துக் கொண்டால் செலவு கொஞ்சம் குறையலாம் - ஆனால் டென்ஷன் உண்டாகலாம். இப்படி ஏற்பாடு செய்து கொண்டு போகும்போது எந்தவித டென்ஷனும் இல்லை - ஒழுங்கான பயண ஏற்பாட்டாளராக இருந்தால்!

      பயண விவரங்கள் அடுத்தவர்களுக்கும் உதவினால் மகிழ்ச்சியே.

      தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி கீதாஜி.

      நீக்கு
  14. அந்தமான் பயணக் கட்டுரை அருமை
    பயணம் செல்ல இருப்பவர்களுக்கு தேவையான முக்கிய தகவல்கள் அனைத்தையும் கொடுத்துள்ளீர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பயணக் கட்டுரை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      நீக்கு
  15. இந்த விபரங்களை மனதில் வைத்துக் கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விவரங்கள் உங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன் ஜோதிஜி.

      நீக்கு
  16. அன்பு வெங்கட், மிகத் தேவையான வாசகத்துடன் பதிவு ஆரம்பிக்கிறது.

    பயணம் மேற்கொள்ள வேண்டிய எண்ணம் வந்ததுமே
    கச்சிதமாகத் திட்டம் போட்டு,
    செலவழிக்க வேண்டிய விஷயங்களில்
    நிறையச் செலவழித்துப் பாதுகாப்பான
    பயணத்தை அனுபவிக்க வேண்டும்.
    நல்ல விதமாக உங்கள் பயணம் அமைந்தது
    மிக மிக மகிழ்ச்சிமா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசகம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா...

      பதிவின் பகுதிகளை நீங்களும் ரசித்தமைக்கு நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....