Scuba Diving - An experience |
அந்தமானின்
அழகு –
பகுதி 40
முந்தைய
பதிவுகள் – பகுதி 1 பகுதி
2 பகுதி
3 பகுதி
4 பகுதி
5 பகுதி
6 பகுதி
7 பகுதி
8 பகுதி
9 பகுதி
10 பகுதி
11 பகுதி
12 பகுதி
13 பகுதி
14 பகுதி
15 பகுதி
16 பகுதி
17 பகுதி
18 பகுதி 19 பகுதி
20 பகுதி
21 பகுதி
22 பகுதி
23 பகுதி
24 பகுதி
25 பகுதி
26 பகுதி
27 பகுதி
28 பகுதி
29 பகுதி
30 பகுதி
31 பகுதி
32 பகுதி
33 பகுதி
34 பகுதி 35
பகுதி 36
பகுதி 37
பகுதி 38
பகுதி 39
அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இந்த நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.
நமக்கானது எதுவும் நம்மை விட்டுப் போகாது. நம்மை விட்டுப் போனால் அது நமக்கானது அல்ல!
Bபாராடாங்க்
பகுதியில் அலையாத்திக் காடுகளையும், சுண்ணாம்புக் குகைகளையும் பார்த்து மதிய
உணவினை முடித்துக் கொண்ட பிறகு போர்ட் Bப்ளேயர் நோக்கிய பயணத்தினைத்
தொடங்கினோம். அனைவருக்குமே அங்கே ஒரு நாள்
தங்கி இன்னும் சில இடங்களை பார்க்கும் எண்ணம் இருந்தாலும், வேறு வழியில்லை –
தலைநகர் தில்லிக்குச் செல்ல வேண்டிய விமானம் அடுத்த நாள் காலை என்பதால் போர்ட் Bப்ளேயர்
சென்று சேர வேண்டிய கட்டாயம். தொடர்ந்து எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல், இலக்கே
இல்லாமல் பயணம் செய்து கொண்டே இருந்தால் நன்றாகத் தான் இருக்கும் – ஆனால் அதற்கான
வசதிகளும் நமக்குத் தேவை – அந்த வசதி வேண்டுமெனில் நாம் வேலைக்குச் சென்று தான் ஆக
வேண்டும் – ஆகவே எங்கள் மனதின் ஆசைகளை அடக்கி போர்ட் Bப்ளேயர் நோக்கிய எங்கள்
பயணத்தினை ஆரம்பித்தோம்.
ஓட்டுனர்
மார்ஷல் சிறப்பாக வாகனத்தினை இயக்கிக் கொண்டிருக்கிறார். போர்ட் Bப்ளேயர் சென்று சேர எப்படியும் சில மணி
நேரம் ஆகும். அந்த இடைவெளியில், இந்தப் பகுதி வழியாக இன்னும் ஒரு பயணியர் அனுபவம் –
பயணத்தின் சில பகுதிகள் மற்றும் ஸ்கூபா
அனுபவம் - குழுவிலிருந்த நண்பர் ரங்கராஜனின் மகள் – பார்கவி ரங்கராஜன் அவர்களின்
வார்த்தைகளில் – Scuba Experience - from the horse’s mouth – so to say!
ஆங்கிலத்தில் எழுதித் தந்ததை இங்கே அப்படியே தருகிறேன் – தமிழ் பிரியர்கள்
மன்னிக்க!
****
Scuba Dive - Learning the tricks...
Andaman
Islands was one of the most beautiful and memorable trip. From the very beginning,
that is deciding the place and then booking the tickets, to the very last day
at Andaman Airport, every member of our gang was in total excitement. The
journey itself had made so many memorable moments. Our flight was scheduled at
early morning 05.30 AM, so we reached airport by 03.30 am and made sure to not
be sleepy but chirpy. The gang, as usual
giggling and laughing at every place, be it the airport, the flight, the beach,
the hotel, the resort, the cruise, as if to leave an imprint of our visit. Morning flight made us witness the beautiful
sunrise, it was like a bright red ball emerging from dark grey clouds. Before
landing in Andaman, we had enough time to cherish its aerial view. After arriving we reached the hotel, had food
and refreshed ourselves and made a visit to Cellular Jail.
We
learnt some history about cellular jail, grieved over the sufferings and loss
of Indian soldiers. Then we took a bunch
of photos at the roof top and while returning back, one of our gang members
slipped and fell down at the staircase.
The funny part is, even though she was hurt and everyone was trying to
help, she had a random question, whether her cooling glasses were ok or not.
After she recovered a little we went to the nearby beach at Port Blair since we
had some time for the light show to begin.
After enjoying at the beach and the light show, we eagerly waited for
the next day. The second day was even more fun. Firstly we
were excited for the water activities and secondly, we had a fun 5-10 minutes
ride on speed boats to reach the Ross Island, followed by North Bay Coral
Island. The “deer” greeting in Ross
Island was wonderful. After petting the dears, we explored Ross Island a
little, then quickly moved to North Bay Coral Island.
In
North Bay Island, me and my fellow young members were into Scuba diving, while
others did snorkeling and went on glass bottom ride. As I heard from some of the gang members, the
glass bottom ride was just a terrible one; firstly the engines produced a lot
of smoke giving them nausea, secondly they couldn’t see anything clearly
through the glass bottom. Anyways, talking about snorkeling, I heard that it
was amazing, I don’t know much about it, but I assume it was similar to scuba
diving; just that the prior one is related to surface while later on involves
going deep in water. My scuba diving
experience was a thrilling one. This was
one thing from my bucket lists which I did. Why thrilling? Because I have a
fear of water and drowning in it, but anyway I signed up for it, because we don’t
get such opportunities again and again, and it was such a wonderful decision I made.
We were four of us and the last batch of the day.
Firstly
we filled a form and wore our suits and went inside water. Now, we had a 15-minutes training session,
wherein they taught us some communication signs, fixing goggles, adjusting ear
pressure and removing water from our mouth if it enters in any case. There were just 4 communication signs – (i)
OK if everything is fine; (ii) thumbs down if we want to go more deep down,
(iii) thumbs up, if we want to go up and (iv) shake our palm if there is any
problem. After all this we now had to
learn how to breathe through mouth using scuba tanks. It was my turn first; I wore
it, then kept the oxygen tube in my mouth and bent down to keep my face
underwater. Only after a few seconds I came back panting and thinking that it’s
not as easy as it looks. Then the guide
calmed me down a little, then I tried again, this time I was relaxed and stayed
inside till the guide told me to come up. After this we were ready for the main
activity.
To
start with, the guide tied weights around me and pulled a string to fill air in
the floating device and pulled me to the deeper side of the sea. Once we had reached the deeper side, he
turned me over to the water. The water
splashed into my ears and I already pressure in my ears. After this, I didn’t know what happened to
the floating device, may be the air was removed. I didn’t care much about it at that time
because I was busy calming myself a little.
After a few seconds everything seemed fine and now we went a little deep
where I could see my friends. We took
some photos near a big coral. After this,
we moved a little more deep to see more fishes and huge corals. Since it’s a habit to breathe through nose,
once or twice my nose would try to suck in air and ruin everything and cause of
mild inconvenience. The other problem
was the increasing pressure as we go more deep.
Often I had to adjust the ear pressure by closing the nose and try breathing
out by nose which helped to push the eardrums out and release a little
pressure. As we go deeper, we could just
see the corals and white sand at the bottom and rest was just plain blue clear
water. I don’t know how these scuba
divers have a track of where they are inside the water, if I were alone I would
easily get lost. Thanks to by guide who
safely brought me back. Once we had gone
as deep as possible, we gradually came to the surface and then the floating
device was there again, I don’t know how, I was turned back to air.
Immense
respect to all the scuba divers who do this job frequently and risking their
lives and making this activity fun and safe for everyone. Everything about this was worth it!
****
ஸ்கூபா டைவிங் பற்றி எழுதியபோதே இதைச் சேர்த்திருக்கலாம்! ஆனால் நண்பரின் மகளுக்கு இருந்த படிக்கும் வேலைகளுக்கு நடுவே இந்த அனுபவத்தினை எழுதி அனுப்ப இயலவில்லை. இப்பொழுது தான் அனுப்பி வைத்தார் – இந்தப் பயணத் தொடரிலேயே அதையும் சேர்த்து விட்டேன். இதோ போர்ட் Bப்ளேயர் நோக்கிய பயணமும் முடிவுக்கு வந்தது. தங்குமிடம் திரும்பிய பிறகு என்ன செய்தோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன். நண்பர்களே! இந்த நாளின் பதிவு பற்றிய உங்கள் என்ணங்கள் என்ன என்பதை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன். நாளை வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்...
நட்புடன்
வெங்கட்
நாகராஜ்
புது தில்லி
இன்றைய வாசகம் ரஜினி வசனத்தை நினைவு படுத்துகிறது!!!!
பதிலளிநீக்குஇவர்தான் எதையோ தொலைத்துவிட்டு நீங்களும் சென்று தேடியவரா? ஆமாம், தொலைத்த அந்தப் பொருள் கிடைத்ததா இல்லையா? நான்தான் படிக்க விட்டு விட்டேனா?
வாசகம் - மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குதொலைத்தது இந்தப் பெண் இல்லை ஸ்ரீராம். அவர் வேறு நண்பரின் பெண். தொலைத்த பொருட்கள் கிடைக்கவில்லை. போனது போனது தான்.
இன்றைய சிந்தனை அருமை
பதிலளிநீக்குபயண அனுபவம்
பலருக்கு வழிகாட்டல்
இன்றைய சிந்தனை - மகிழ்ச்சி யாழ் பாவாணன் ஜி.
நீக்குபதிவு பலருக்கும் பயன் தந்தால் நல்லதே.
சிறப்பான பயண அனுபவம் ஜி...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குஇன்றைய வாசகமும் பயண அனுபவமும் அருமை. நாமும் தங்களோடு இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம்.
பதிலளிநீக்குநமது வலைத்திரட்டி: வலை ஓலை
தொடர்ந்து பயணிப்பதில் மகிழ்ச்சி சிகரம் பாரதி.
நீக்குஇனி எப்போது இந்த வாய்ப்பு கிடைக்கப்போகிறதோ என்று எண்ணி பார்வதி ரங்கராஜன் அவர்கள் பகிர்ந்த அனுபவம் மெய் சிலிர்க்க வைத்தது. மூச்சுவிட சரிசெய்துகொள்ளல், வழிகாட்டியின் உதவி, ஆழத்தில் சென்றபோது மனதில் பட்டவை என்று எழுதியுள்ள விதம் நம்மை கடலுக்குள் அவர்களுடனேயே அழைத்துச்சென்றது. அவருக்கு வாழ்த்துகள். அதனை அப்படியே பகிர்ந்தமைக்கு உங்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குதங்களது வாழ்த்துகளுக்கு நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குவாசகம் மனதுக்கு ஆறுதலை தந்தது ஜி
பதிலளிநீக்கு//வாசகம் மனதுக்கு ஆறுதலை தந்தது// - நன்றி கில்லர்ஜி. நலமே விளையட்டும்.
நீக்குசிறுமியின் ஆங்கில அணுபவ பகிர்வு சிறப்பாக உள்ளது. அவரையும் ஒரு பிளாக் ஆங்கிலத்திலாவது ஆரம்பிக்க ஊக்குவியுங்கள்.
பதிலளிநீக்குBlog - அவருக்கு இப்போதைக்கு படிப்பு மட்டுமே முக்கியம் அரவிந்த். இன்னும் நாட்கள் இருக்கிறது. அவரிடம் சொல்லி விடுகிறேன் - எழுத்து நன்றாக இருப்பதை. கல்லூரியில் அடியெடுத்து வைத்த பிறகு எழுத ஆரம்பிக்கட்டும். அதற்கான முயற்சியில் தற்போது கவனம் செலுத்த வேண்டும் அவர்.
நீக்குதங்களுடன் பயணித்தது போல் இருந்தது...
பதிலளிநீக்குஆயினும் எனது சூழ்நிலையால் எல்லாப் பதிவுகளையும் படிக்க இயல வில்லை என்பதையும் சொல்லி விடுகின்றேன்...
நலம் வாழ்க...
உடன் பயணிப்பதில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.
நீக்குசூழல் - பரவாயில்லை ஐயா. முடிந்த போது படிக்கலாம். கவனமாக இருங்கள் ஐயா.
நம்மை நாம் இழக்காமல் இருக்க வேண்டும்..
பதிலளிநீக்குநம்மை நாம் இழக்காமல் இருக்க வேண்டும் - அது தான் இப்போதைய அத்தியாவசத் தேவையும் கூட துரை செல்வராஜூ ஐயா.
நீக்குஇனிய பயண அனுபவத்தை தந்துள்ளார்.
பதிலளிநீக்குபயணத்தில் தொடர்கிறோம்.
/இனிய பயண அனுபவத்தை தந்துள்ளார்/ - நன்றி மாதேவி.
நீக்குஅருமையான வாசகம்.
பதிலளிநீக்குஸ்கூபா அனுபவ பகிர்வு அருமை.
தொடர்கிறேன்.
வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...
நீக்குசேர்ந்து பயணித்தோம். நன்றி
பதிலளிநீக்குஉடன் பயணிப்பது அறிந்து மகிழ்ச்சி நாகேந்திர பாரதி ஐயா.
நீக்குஅந்தமானில் ஸ்கூபா டைவ் அனுபவம் பற்றி உங்கள் நண்பர் மகளின் பதிவு அருமையாக இருந்தது.
பதிலளிநீக்குபதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.
நீக்குஸ்கூபா அனுபவம் அருமை
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குரஜினி ரசிகரா ஆகிவிட்டீங்க போலிருக்கே.
பதிலளிநீக்குஸ்கூபா அனுபவம் ரொம்ப நல்லா எழுதியிருக்காங்க. நீங்களும் தமிழ்ப்படுத்தியிருக்கலாம்.
ரஜினி ரசிகர் - ஹாஹா.... :)
நீக்குதமிழ்ப்படுத்தியிருக்கலாம்! - லாம் - ஆனால் அவரது வார்த்தைகளிலேயே இருக்கட்டும் என ஆங்கிலத்தில் தந்தேன் நெல்லைத் தமிழன்.
அன்பு வெங்கட், அந்தக் குழந்தை எழுதி இருப்பது
பதிலளிநீக்குமிகவும் அருமை.
It is fresh and enjoyable. please convey our thanks.
வாசகம் அருமை.
நாங்கள் படிப்பதற்காகவே நீங்கள் இன்னும் பயணங்கள் செல்ல இறைவன்
அருள வேண்டும்.
நன்றி வெங்கட்.
இப்போதைய குழந்தைகள் - ஆமாம். திறமைசாலிகள் தான்மா...
நீக்குவாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா...
இன்னும் பயணம் செல்ல இறைவன் அருள வேண்டும் - ஆமாம் அம்மா... முடிந்தபோது பயணிக்கதான் ஆசை. பார்க்கலாம்.
நன்றி வல்லிம்மா...
"நமக்கானது எதுவும் நம்மை விட்டுப் போகாது. நம்மை விட்டுப் போனால் அது நமக்கானது அல்ல"! .... ஆஹா ஒரே ஒரு வாசகத்தால் இதுவரையில் எனக்குள் இருந்த மனக்கவலைகளையெல்லாம் நீக்கிவிட்டீர்கள் !!! நன்றி !!!
பதிலளிநீக்குவாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி சிவா.
நீக்குவாசகம் அருமை. ஆங்கில ஆசிரியர் நான் மிக மிக ரசித்தேன். நல்ல மொழி நடைய்ல் எழுதியுள்ளார். அவருக்கு வாழ்த்துக்ள் மற்றும் பாராட்டுகளைச் சொல்லிவிடுங்கள்.
பதிலளிநீக்குதுளசிதரன்
வாசகம் உங்களுக்கும் பிடித்த்தில் மகிழ்ச்சி.
நீக்குஉங்கள் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் எழுதிய பார்கவியிடம் சொல்லி விடுகிறேன் துளசிதரன் ஜி.
வெங்கட்ஜி, பார்கவி ரொம்ப அழகா எழுதியிருக்காங்க. வாழ்த்துகள் பாராட்டுகள்.
பதிலளிநீக்குவாசகம் அருமை. நான் இதை ஆங்கிலத்தில் இருந்ததை எழுதி வைத்திருந்தேன்.
கீதா
பார்கவியிடம் உங்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து விடுகிறேன் கீதாஜி.
நீக்குவாசகம் - மேலதிகத் தகவலுக்கு நன்றி.
அதற்குள் 40 பகுதிகளோ.. கட்டுரை அருமையாக இருக்கிறது.. வாகனத்தில் ஓம் பொறிச்சிருக்கே.. அங்கும் சைவ சமயத்தவர் அதிகமோ?
பதிலளிநீக்குஇன்னும் சில பகுதிகளில் முடிவுக்கு வந்து விடுவோம் அதிரா...
நீக்குவாகனத்தில் ஓம் - எல்லா சமயத்தினரும் இருக்கிறார்கள் இங்கே.
வெங்கட்,
பதிலளிநீக்குபயண அனுபவம் அருமையாக இருந்தது , hats off to your friend's daughter , the way she described her experience is poetic, great job.
பயணம் தொடரட்டும் வேறு பாதையில் , அனுபவம் பகிர்ந்தமை நன்று.
மீண்டும் ச(சி)ந்தியுங்கள்.
கோ.
பயண அனுபவம் உங்களுக்கும் பிடித்தில் மகிழ்ச்சி கோ.
நீக்குஉங்கள் பாராட்டுகளை அவரிடம் தெரிவிக்கிறேன். நன்றி.
தொடர்ந்து பயணிப்போம்.
அருமையான அனுபவம். அவர் எழுதி இருப்பதைப் படிக்கும்போதே பக் பக் என மனசு அடிச்சுக்கறது. எனக்கெல்லாம் குளத்தில் முங்கிக் குளிப்பதே பெரிய விஷயம். கங்கையில் குளித்தது அதைவிடப் பெரிய விஷயம். இதை எல்லாம் நினைச்சுக் கூடப்பார்க்க முடியாது. நன்றாக எழுதி இருக்கிறார் அந்தப் பெண் பார்கவி! அவருக்கு வாழ்த்துகள். நல்ல மறக்க முடியா அனுபவம். படங்கள் எப்போதும் போல் சிறப்பு!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
நீக்கு