சனி, 6 ஜூன், 2020

காஃபி வித் கிட்டு – பெண்கல்வி – Sanitizer – சிரிப்பு – அருவிகள் நகரம் - நிழற்படம்

காஃபி வித் கிட்டு – பகுதி 70

அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

இந்த வாரத்தின் ரசித்த வாசகம்:

உன் மனம் வலிக்கும்போது சிரி – பிறர் மனது வலிக்கும் போது சிரிக்க வை – சார்லி சாப்ளின்.

இந்த வாரத்தின் சம்பவம்:

அலுவலகத்திலிருந்து வாகனம் கிடைக்காத நாள் ஒன்றில் தலைநகரில் ஓடத் துவங்கியிருக்கும் ஆட்டோ ஒன்றில் பயணிக்க நேர்ந்தது.  எப்போதும் போல ஆட்டோ ஓட்டுனரிடம் பேசினேன்.  ஓட்டுனருக்கு சந்தேகம் – “எப்பதாங்க இந்த கொரோனா நம்ம விட்டு போகும்? பெரிய பெரிய நாடெல்லாம் அதுக்கு முன்னாடி திண்டாடிட்டு இருக்கே! இதுக்கு ஒரு தடுப்பூசி/மருந்து கண்டுபிடிக்க இவ்வளவு நாளாகுதே?” என்று கேட்டுக் கொண்டு வந்தார்.  நானும் கஷ்டம் தான். முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.  மாற்று மருந்து கண்டுபிடிக்க கொஞ்சம் சமயம் எடுக்கும் – வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது என்று சொல்லிக் கொண்டிருக்க, அப்போது அந்த ஆட்டோ ஓட்டுனர் கேட்ட கேள்வி – “என்னங்க நீங்க, பேசாம இப்படி செய்தா என்ன? Sanitizer போட்டு கையைத் துடைச்சிக்கிட்டே இருக்க சொல்றாங்க! பேசாம அந்த Sanitizer-ஐ எல்லார் உடம்பிலும் Injection வழி செலுத்தினால் கொரோனா ஓடிப் போயிடாதா?” .  பதறிப் போய் அப்படியெல்லாம் செய்யமுடியாது என்பதை விளக்கமாகச் சொல்ல வேண்டியிருந்தது அவருக்கு! அதிலிருக்கும் ஆல்கஹால் இரத்தத்துடன் கலந்தால் என்னாவது?   

இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம்:

இந்த வாரத்தின் ரசித்த விளம்பரமாக தாய்லாந்து நாட்டின் ஒரு விளம்பரம் – (பெண்) கல்வி குறித்தது – அம்மா இல்லாத மூன்று குழந்தைகள்; அப்பாவோ சக்கர நாற்காலியில்! மூத்த பெண் பள்ளிக்குச் சென்று திரும்பும் வழியில் ஒரு கடையில் வேலை செய்கிறார். வீட்டு வேலைகளையும் பார்த்துக் கொண்டு படிக்கவும் படிக்கிறார்.  பள்ளியின் கடைசி நாள் – அதன் பிறகு மேற்கொண்டு படிக்க வேண்டாம் என முடிவு செய்கிறார் – அப்பாவிடம் தான் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததாகச் சொல்ல அப்பா கோபித்துக் கொண்டு பேசாமல் இருக்கிறார். நல்ல மதிப்பெண்கள் எடுப்பது தெரிந்த பிறகு தன்னையே கடிந்து கொள்கிறார்.  எந்த விதத்திலும் கல்வி தடைபடக்கூடாது என்பதைச் சொல்லும் விளம்பரம்.  மனதைத் தொட்டது – பாருங்களேன்.


 

அருவிகள் நகரம் - தரவிறக்கம்

 

அருவிகள் நகரம் என்ற தலைப்பில் வெளியான மின்னூல் – ஜார்க்கண்ட் மாநிலத்திற்குச் சென்ற போது கிடைத்த அனுபவங்கள் மற்றும் அங்கே பார்க்க வேண்டிய இடங்கள் விரிவாகச் சொன்ன மின்னூல் வரும் செவ்வாய் கிழமை மதியம் வரை அமேசான் தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்!

என்னுடைய அனைத்து மின்னூல்களின் பட்டியலுக்கான சுட்டி:

மின்புத்தகங்கள் பட்டியல்


இந்த வாரத்தின் ரசித்த நிழற்படம்:

 

எத்தனை அழகு இந்தப் படம்! பார்த்து ரசியுங்களேன். பால்ய கால தோழி ஒருவரின் முகநூல் தளத்திலிருந்து…

பின்னோக்கிப் பார்க்கலாம் வாங்க:

2016-ஆம் வருடம் இதே நாளில் என் வலைப்பூவில் எழுதிய பதிவு – ஏழு சகோதரிகள் என்ற தலைப்பில் வடகிழக்கு மாநிலங்கள் பயணத் தொடரில் எழுதிய பதிவு ஒன்றிலிருந்து சில வரிகள்…

கல்லறைகள் அமைந்திருந்த இடத்தில் பூச்செடிகளும் மரங்களும் வளர்க்கப்பட்டு அமைதியான சூழல் இருந்தது. கல்லறைகள் அமைந்திருந்தாலும் பல இளைஞர்கள் அவ்விடத்தில் தங்களது இணைகளுடன் வந்திருந்து அமர்ந்திருந்தார்கள். வாயிலில் சிலர் விளையாடிக் கொண்டிருந்தார்கள். போரில் இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு இது புனிதமான இடமாக இருந்தாலும், போர் முடிந்து 70 வருடங்களுக்குப் பின்னர் அந்த இடம் இன்றைய இளைஞர்களுக்கு புனிதமானதாகத் தோன்றாதது அதிசயமில்லை.

முழுப்பதிவும் படிக்க ஏதுவாய் சுட்டி கீழே...

இறந்த பின்னும் வித்தியாசம்

அடுத்த மின்னூல் வெளியீடு – ஏழு சகோதரிகள்-பாகம் 1:


மேலும் ஒரு மின்னூல் வெளியீடு பற்றிய தகவலுடன் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. பதினைந்து நாட்கள் பயணமாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு பயணித்து அங்கே கிடைத்த அனுபவங்களை எனது வலைப்பூவில் தொடராக எழுதி வந்தேன். ஏழு சகோதரிகள் என அழைக்கப்படும் மாநிலங்களில் ஆறு மாநிலங்களுக்கு அந்தப் பயணத்தில் செல்ல முடிந்தது - மிசோரம் மாநிலத்திற்கு மட்டும் செல்ல முடியவில்லை அப்போது - அதற்குப் பின்னர் வாய்ப்பும் இதுவரை அமையவில்லை. அந்தப் பயணத்தில் கிடைத்த அனுபவங்களில், பயணித்த முதல் இரண்டு மாநிலங்களான மணிப்பூர் மற்றும் நாகாலாந்தில் கிடைத்த அனுபவங்கள், பார்த்த இடங்கள், உணவு, கலாச்சாரம் குறித்த பல விஷயங்கள்ஏழு சகோதரிகள் - பாகம் 1” என்ற தலைப்பில் இன்று மின்புத்தகமாக, அமேசான் தளத்தில் வெளியிட்டு இருக்கிறேன். மற்ற மாநிலங்களுக்குச் சென்ற போது கிடைத்த அனுபவங்கள் தொடர்ந்து வரும் பாகங்களில் வரும்ஏழு சகோதரிகள்-பாகம் 1 மின்புத்தகத்தினை தரவிறக்கம் செய்ய சுட்டி கீழே....

 

ஏழு சகோதரிகள் - பாகம் 1


நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு சில செய்திகளோடு மீண்டும் [சி]ந்திப்போம்...

 

நட்புடன்

 

வெங்கட் நாகராஜ்

புது தில்லி


36 கருத்துகள்:

 1. சார்லி சாப்ளின் மாமனிதர்.

  அந்த ஆட்டோ ஓட்டுநர் சொன்னது போலத்தானே ட்ரம்ப் சொன்னார்?  ட்ரம்ப்பா, வேறு யாராவதா?  சொல்லி விட்டு மாற்றிக்கொண்டதாக நினைவு.

  விளம்பரங்கள் எல்லாம் நல்ல கர்ப்பினையுடன் வருகின்றன.

  உங்கள் அருவிகள் நகரம் மின்னூல் - வாழ்த்துக்கள்.

  அந்த புகைபபடத்தை நானும் ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் பதிவின் பகுதிகளை ரசித்தமைக்கும் நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 2. மின்னூலுக்கு வாழ்த்துகள்.

  சார்லி சாப்ளின் - கம்யூனிஸ்டோ என்ற சந்தேகத்தில் அமெரிக்காவின் அடக்குமுறைக்கு ஆளானவர்னு நினைவு.

  பதிலளிநீக்கு
 3. மின்னூல் - வாழ்த்துகளுக்கு நன்றி நெல்லைத் தமிழன்.

  பதிலளிநீக்கு
 4. தாய்லாந்து குறும்படம்..
  மனம் கலங்கி விட்டது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் - மனதைத் தொட்ட படம் - எவ்வளவு சிறப்பாக எடுக்கிறார்கள் இல்லையா துரை செல்வராஜூ ஐயா.

   நீக்கு
 5. படங்களும் தகவல்களும் வழக்கம் போல் அருமை. நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி ஐயா.

   நீக்கு
 6. ஆட்டோ ஓட்டுனர் சொன்னது ஹா... ஹா...

  மின்னூல் தரவிறக்கம் செய்கிறேன்... நன்றி ஜி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆட்டோ ஓட்டுனர் - :)

   மின்னூல் - தரவிறக்கம் செய்து கொள்வதற்கு நன்றி தனபாலன்.

   நீக்கு
 7. மின்னூலுக்கு வாழ்த்துகள் ஜி

  ஆட்டோ ஓட்டுனர் பயமுறுத்தி விட்டாரே...
  குறும்படம் காண்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி கில்லர்ஜி.

   ஆட்டோ ஓட்டுனர் - கொஞ்சம் அதிர்ச்சி தான் எனக்கும்.

   குறும்படம் - முடிந்த போது பாருங்கள்.

   நீக்கு
 8. ஆட்டோக்காரர் சொன்னது ஒரு புறம் ஆச்சர்யத்தையும், ஒரு புறம் வேதனையையும் தந்தது. புதிய மின்னூலுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆட்டோக்காரர் - இப்படியும் சிலர்.

   மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு

 9. இன்றைய வாசகம் சிறப்பு
  மின்நூல்களைப் பதிவிறக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   மின்னூல் - தரவிறக்கம் செய்ய இருபபதில் மகிழ்ச்சி யாழ் பாவாணன் ஐயா.

   நீக்கு
 10. மின்னூல் பதிவிறக்கிவிட்டேன் ஐய்யா. வாழ்த்துக்கள். ஆட்டோக்காரருக்கும் அமெரிக்க அதிபரின் அபார அறிவு இருப்பதர்க்கு அவரை தாங்கள் பாராட்டியிருக்கவேண்டும். வாசகமும் குரும்படமும் சூப்பர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மின்னூல் - தரவிறக்கம் செய்தமைக்கு நன்றி அரவிந்த்.

   ஆட்டோக்காரர் - பாராட்டிவிடலாம்! :)

   வாசகமும் குறும்படமும் - மகிழ்ச்சி.

   நீக்கு
 11. அதிலிருக்கும் ஆல்கஹால் இரத்தத்துடன் கலந்தால் என்னாவது? /// தனியா சரக்கு வாங்க அவசியம் இருக்காது. எல்லாரும் ஒருமாதிரி மிதப்புல இருக்கலாம்...

  ஒரு நாட்டோட அதிபரே கிருமி நாசினியை உடலுக்கு செலுத்தினால் என்னன்னு கேட்கும்போது நமக்கு ஏன் தோணாது?!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //தனியா சரக்கு வாங்க அவசியம் இருக்காது. எல்லாரும் ஒரு மாதிரி மிதப்புல இருக்கலாம்/// :)))

   வளர்ந்த நாட்டின் அதிபருக்கே தோன்றும்போது - அதானே.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 12. 'அந்த' ஆட்டோக்காரரை ஜனாதிபதியாக்குவதற்கு அமெரிக்கர்கள் ஆவலோடு இருப்பதை அவருக்குத் தெரிவியுங்கள்! செப்டம்பர் மாதத்தில் வேட்புமனு தாக்கல் செய்யவேண்டும்.

  (2) அருவிகளை இறக்கிவைக்க இடமில்லை என்பதால் 'அருவிகள் நகர'த்தை இறக்கிக்கொண்டுவிட்டேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆட்டோக்காரர் அடுத்த ஜனாதிபதியாக - ஹாஹா... அடுத்த முறை பார்த்தால் சொல்கிறேன்.

   மின்னூல் - தரவிறக்கம் செய்து கொண்டமைக்கு நன்றி இராய செல்லப்பா ஐயா.

   நீக்கு
 13. ஆட்டோ ஓட்டுநர் அதிகம் படிக்காதவர். பின் விளைவுகள் புரியாதவர். ஆனால் புரிந்தவர்களே சொல்லுகின்றனர். என்ன சொல்லுவது? அடுத்தடுத்த மின்னூல்களுக்கு வாழ்த்துகள். உங்களைக் கவர்ந்த நிழல்படம் என்னையும் கவர்ந்தது. விளம்பரங்கள் என்றாலும் நல்ல கருத்துடன் எடுப்பதற்கு வாழ்த்துச் சொல்லணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புரிந்தவர்களே சொல்லுகின்றனர் - ஆமாம்.

   மின்னூல் - வாழ்த்துகளுக்கு நன்றி கீதாம்மா...

   நிழற்படம், விளம்பரம் - நன்றி.

   நீக்கு
 14. வாசகம் அருமை.
  ஆட்டோ ஓட்டுநர் கேள்வி வேதனை தருகிறது.
  மின்னூலுக்கு வாழ்த்துக்கள்.
  நிழல் படம் மிக அழகு.
  குறும்படம் மிக நன்றாக இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் - பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

   ஆட்டோ ஓட்டுனர் - வேதனை தான்.

   மின்னூல் - வாழ்த்துகளுக்கு நன்றி.

   நிழற்படம், குறும்படம் -நன்றாக இருந்தது - நன்றிம்மா...

   நீக்கு
 15. Amazon Bestsellers Rank: #149 Free in Kindle Store (See Top 100 Free in Kindle Store)
  #1 in Travel & Tourism (Kindle Store)

  அருமை வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. # in Travel and Tourism (Kindle Store)

   தகவலைச் சொன்னதற்கு நன்றி ஜோதிஜி. நான் பார்க்கவில்லை. இப்படி தரவரிசை தருகிறார்கள் என்பதையும் அறிந்திருக்கவில்லை. நன்றி.

   நீக்கு
 16. ஆட்டோகாரரின் அறியாமை. அய்யோ பாவம் என்று இருந்தது.
  குறும்படம் மனதை தொட்டது.
  மின்னூலுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆட்டோக்காரர் - ஒரு புறம் பாவமாகவே இருந்தது.

   குறும்படம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

   மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி.

   நீக்கு
 17. வாசகம், விளம்பரம் நிழற்படம் எல்லாமே ரசித்தேன்

  புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துகள்

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன்.

   மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி.

   நீக்கு
 18. “என்னங்க நீங்க, பேசாம இப்படி செய்தா என்ன? Sanitizer போட்டு கையைத் துடைச்சிக்கிட்டே இருக்க சொல்றாங்க! பேசாம அந்த Sanitizer-ஐ எல்லார் உடம்பிலும் Injection வழி செலுத்தினால் கொரோனா ஓடிப் போயிடாதா?” .//

  ஆஹா ட்ரம்ப் சொன்னதை அப்படியே இவர் டிட்டோ செய்திருக்கிறாரே!!!

  சார்லி சாப்ளின் வாசகம் நல்ல வாசகம்.

  விளம்பரம் மிகவும் ரசித்தேன். எப்படி எடுக்கின்றார்கள் என்ற வியப்பும் கூடவே

  நிழற்படம் வாவ் போட வைத்தது..வண்டிற்கு எண்ணைய் தேய்த்து விட்டது போல பள பளப்பு...!!!!

  அருவிகள் நகரம் புத்தக வெளியிட்டிற்கு வாழ்த்துகள் ஜி!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விதம் விதமா யோசிக்கிறார்கள்.....

   வாசகம், விளம்பரம், நிழற்படம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

   மின்னூல்: வாழ்த்தியமைக்கு நன்றி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....