ஞாயிறு, 7 ஜூன், 2020

கல்பேலியா எனும் பாம்பாட்டிகள் – இசையும் நடனமும்

அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.

கேட்ட இசை இனிது. கேளாத இசை அதினினும் இனிது - கீட்ஸ்.


நமது ஊரில் பாம்பாட்டிகள் பார்த்திருக்கலாம்.  அதே போல ராஜஸ்தானின் பாம்பாட்டிகள் என இந்த கல்பேலியாக்களைச் சொல்லலாம்.  தலைநகரிலும், ராஜஸ்தான் பயணங்களிலும் இப்படியான கல்பேலியா குழுவினரைப் பார்த்ததுண்டு. அவர்கள் இசை, நடனம், பாம்பு வைத்து தங்கள் பிழைப்பை நடத்துவது என்பது பற்றி உங்களுக்கும் சொல்லலாமே என்ற காரணத்தினால் இன்றைய ஞாயிறில் அவர்கள் பற்றிய ஒரு காணொளி.  காணொளி ஹிந்தி மொழியில் இருந்தாலும் ஆங்கிலத்தில் Sub title இருக்கிறது – அதனால் புரிந்து கொள்வது சுலபம் தான்.    அவர்கள் வாசிக்கும் வாத்தியத்தின் பெயர் பூங்கி! நம் ஊரில் மகுடி என்று சொல்வோமே அதே போன்ற ஒரு வாத்தியம்.  பெண்கள் ஆடும் நடனத்திற்கு விதம் விதமான பெயர்கள் – மட்கு என்று ஒரு நடனம்.  அவர்களின் பாரம்பரிய உடை, போட்டுக்கொள்ளும் நகைகள் என அனைத்தும் சிறப்பு. பாருங்களேன். UNESCO தயாரிப்பில் வெளிவந்த காணொளி இது.


காணொளியாக இணைத்திருந்தாலும், சில சமயங்களில் யூவில் சென்று தான் பார்க்க வேண்டும் என வரலாம். அதனால் கீழே யூட்யூப் சுட்டியும் கொடுத்திருக்கிறேன். அங்கேயும் சென்று பார்க்கலாம்!

Kalbeliya Folk Songs and Dances of Rajasthan

நண்பர்களே, இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்துj கொண்ட ராஜஸ்தானின் கல்பேலியாக்கள் குறித்த பகிர்வு உங்களுக்குப் பிடித்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட் நாகராஜ்

புது தில்லி

36 கருத்துகள்:

 1. இன்றைய வாசகம் 'சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை' எனும் கவிஞர் வரியை நினைவு படுத்தியது!

  காணொளி இங்கேயே இயங்குகிறது.   கண்டு ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   காணொளியை ரசித்தமைக்கு நன்றி.

   நீக்கு
 2. வணக்கம் சார்
  அறிவுப் பூர்வமான பதிவு. பாம்பை கண்டாலே படை நடுங்கும் என்பார்கள். இந்நிலையில் பாம்புகளுடனே வாழ்க்கை நடத்துவது ஆச்சர்யம் தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நவீன்.

   காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   நீக்கு
 3. காணொளியும் விளக்கமும் அருமை . நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காணொளியும், விளக்கமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நாகேந்திர பாரதி ஐயா.

   நீக்கு
 4. வாசகம் நன்று
  காணொளி கண்டேன்
  விளம்பரங்கள் நிறைய வருகிறது ஜி அலைபேசியில்தான் படிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   காணொளிக் கண்டதற்கு நன்றி.

   விளம்பரம் - நேற்று ஏதோ செட்டின்ங்ஸ் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது விளம்பரப் பக்கத்தினைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் மாறி இருக்கிறது. விளம்பரங்களை எடுத்துவிட்டேன் இப்போது. விளம்பரங்கள் வருவது அலைபேசியில் படிக்கும்போது ரொம்பவே தொந்தரவு தான். சுட்டியமைக்கு நன்றி கில்லர்ஜி.

   நீக்கு
 5. பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 6. பதில்கள்
  1. காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

   நீக்கு
 7. காணொளி அருமை ஜி... இசையும் இயற்கையாகவே இருக்கிறது...

  பதிலளிநீக்கு
 8. ஆம் கேட்காத இசையில் நம் கற்பனை கூடுதலாய் இருக்கும் என்பதால் அதன் சுவை நிச்சயம் கூடுதலாகத்தான் இருக்கும்..காணொளி அருமை..பகிர்ந்தமைக்கு நல்வாழ்த்துகள்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகமும் காணொளி வழி பகிர்ந்த இசையும் நடனமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ரமணி ஜி.

   நீக்கு
 9. ஆடு பாம்பே.. ஆடு...

  அழகான காணொளி... இப்படியும் நம் மக்கள் இருக்கிறார்கள்... புதிய விவரங்கள்...

  சில மாதங்களுக்கு முன் ஒரு காணொளியில் ஏதோ ஒரு பழங்குடி மணமக்கள் பாம்பையே மாலையாக மாற்றிக் கொள்கிறார்கள்...

  மொழி புரியவில்லை... விவரம் ஏதும் இல்லாத காணொளி அது... ஆனாலும் வேட்டி சேலை... நீலகிரி பக்கமாக இருக்கலாம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காணொளி - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஜி.

   சில வருடங்களுக்கு முன்னரே பாம்பு மாலை போட்டுக் கொள்ளும் காணொளி நானும் கண்டேன் ஜி. நீலகிரி பக்கமாக் இருக்கலாம்.

   நீக்கு
 10. சொல்லப்படாதவை என்றுமே கூடக் கொஞ்சம் வேல்யு பெறுமோ?!!!

  காணொலி மிக மிக ரசித்தேன் ஜி. இயந்திரம் எல்லாம் ஊரில் இருந்த வரை யூஸ் செஞ்சுருக்கேன் இப்ப பார்த்து எவ்வளவு வருஷம் ஆச்சு...அவர்கள் பாட்டும் நடனமும் மிக மிக நன்றாக இருக்கிறது. சில பெண்கள் வெடகப்பட்டுக் கொண்டு சிரிப்புடன் பாடுவது அழகு!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சொல்லப்படாத வார்த்தைகளுக்கு மதிப்பு அதிகம் தான் கீதாஜி.

   இயந்திரம் - நெய்வேலியில் எங்களிடம் இருந்தது. இப்போதும் திருச்சியில் இருக்கிறது. பயன்படுத்த முடிவதில்லை.

   //வெட்கப்பட்டுக் கொண்டே சிரிப்புடன் பாடுவது அழகு// - மேலே கொடுத்துள்ள படத்தில் வலது பக்கத்திலிருந்து இரண்டாவது இருக்கும் பெண் தானே. அழகு.

   நீக்கு
 11. அந்தக் கறுப்பு பாவாடை போட்டு குடை விரித்தது போல சுழன்று சுழன்று ஆடுவது ரொம்ப அழகு அப்படி ஆடிவிட்டு அப்படியே உட்கார்ந்து ஆடுகிறார்கள் ஹப்பா என்ன ப்ராக்டிஸ் இல்லை என்றால் உட்காரும் போது தலை சுற்றித் தடுமாறிவிடுமே

  மகுடி இசை போலவே தான் இருக்கு வாத்திய இசை.

  லம்பாடிகள் என்று சொல்லபப்டும் நாடோடி இனத்தவர் கூட மார்வார் பகுதியிலிருந்து வந்தவர்கள் என்று வாசித்த நினைவு இவர்களைப் பார்த்ததும் அவர்கள் நினைவுக்கு வந்தார்கள்

  ஒரு வரியில் கணவனை உன்னை யார் படிப்பாளியாக்கினார்கள் என்ற ஒரு கேள்வியும் பெண்கள் கேட்பது போல வருது...!!!!!!! இல்லை என் கண்களுக்கு அப்படித் தெரிந்ததோ அந்த வரி...ஹா ஹா ஹா

  அவர்கள் இருக்கும் இடம் எல்லாம் பார்த்தால் ...நாம் நல்ல ஊர்களில் இருந்து பழக்கப்பட்டதாலோ என்னவோ இவர்கள் எப்படி இது போன்ற பகுதியில் இருக்க முடிகிறது என்று ஒரு புறம் தோன்றினாலும் எதைப் பற்றியும் அதிகம் கவலைப்படாத வாழ்க்கை வெரி சிம்பிள் லைஃப் என்றும் தோன்றியது...எத்தனைவித மக்கள்!!! மிக மிக ரசித்தேன் ஜி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொடர்ந்து ஆடி, உட்கார்ந்து எழுந்திருப்பது ரொம்பவே கஷ்டம் தான் கீதாஜி. நான் நேரடியாக இவர்கள் ஆடும்போது அப்படி ஒரு எனர்ஜி.... பிரமிக்க வைக்கும் நடனம்.

   மகுடி இசை போலவே தான். லம்பாடிகள் இவர்களைப் போலவே தான். அவர்களும் ராஜஸ்தான் பகுதியினைச் சேர்ந்தவர்களே. ராஜஸ்தானில் இப்படி நிறைய பிரிவுகள் உண்டு.

   யார் உன்னை படிப்பாளி ஆக்கினார்கள் - ஆமாம் அந்த வரி வருகிறது பாடலில்.

   ரொம்பவே கஷ்ட ஜீவனம் தான் - அவர்களுடையது. நான் நேரடியாக பார்த்திருக்கிறேன். சப்பாத்தி உடன் மிளகாய் தொட்டுக் கொண்டு சாப்பிடும் பலர் அங்கே உண்டு!

   நீக்கு
 12. திரிக்கும் கல் இயந்திரம் எல்லாம் ஊரில் இருந்தப்ப பயன்படுத்தியிருக்கிறேன் இப்ப பல வருஷம் ஆச்சு..இதுல பார்க்கும் போது ஊர் நினைவுகள்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும் நெய்வேலியில் இயந்திரத்தில் அரைத்திருக்கிறேன். இனிய நினைவுகள் கீதாஜி.

   நீக்கு
 13. காணொளி மிக அருமை.
  கல்பேலியாக்களின் வாழ்க்கை முறை, பாடல், ஆடல் அனைத்தும் அறிந்து கொள்ள முடிகிறது.
  நன்றி பகிர்வுக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா...

   உங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 14. அன்பு வெங்கட்,
  முதலில் அளித்த வாசகம் மிக அருமை.
  ராஜஸ்தானின் ''கல்பேலியாக்களின்''
  வாழ்க்கை வீடியொ
  மிக மிக அருமை. உடைகளின் வண்ணங்களும், நடனமும்,
  ஒப்பனையும், உற்சாகமும் அப்படியே நம்மைக் கவர்கின்றன. அந்த வெய்யிலில் எப்படி இத்தனை உற்சாகமாக இருக்கிறார்கள்!!!!!!!

  நன்றி மா. அற்புதங்கள் எங்களைத் தேடி வருகின்றன.

  இத்தனை அற்புதமாகப் பேசுகிறாயே.
  நீ எங்கே படித்தாய் என்று கேட்கும் மகிழ்ச்சி அவர்கள் கண்களில் தெரிகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி வல்லிம்மா...

   காணொளி - உற்சாகம் நம்மையும் தொற்றிக் கொள்வது உண்மை தான் மா...

   நீக்கு
 15. இதோ காணொலியினைக் காணச் செல்கிறேன் ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காணொளியைக் கண்டு ரசிக்கப் போவதில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 16. வணக்கம் சகோதரரே

  வாசகம் அருமை. ராஜஸ்தான் கல்பேலியாக்கள் என்ற பாம்பாட்களின் வரலாறு படிக்க சுவாரஸ்யமாக இருந்தது. காணொளியில் அவர்களின் பாட்டும். நடனமும் அருமை. எப்படி சுழன்று சுழன்று ஆடுகிறார்கள்...! பாம்பு மாதிரியே சில சமயம் வளைந்து ஆடுவதும் சிறப்பு. நன்றாக உள்ளது. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   வாசகம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   காணொளி பற்றிய உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

   நீக்கு
 17. காணொளி அருமை. நடனம் குறித்த தகவல்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தகவல்களும், காணொளியும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....