ஞாயிறு, 14 ஜூன், 2020

Sleeveless - குறும்படம்


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை ஒரு இனிமையான வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.


உடையைப் பார்த்துப் பழகாதே… உள்ளத்தைப் பார்த்துப் பழகு.

பணத்தைப் பார்த்துப் பழகாதே… குணத்தைப் பார்த்துப் பழகு.

 

இந்த வாரம் மீண்டும் ஒரு குறும்படத்துடன் உங்களைச் சந்திக்கிறேன்.  பெண்கள் அணிந்து கொள்ளும் உடை எப்படி இருக்க வேண்டும் என்பதை ஆண்களும் பெண்களும் மாறி மாறிச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.  “முள்ளு வாழையிலையில் பட்டாலும், வாழியிலை வாழையிலை முள்ளுல பட்டாலும் – கிழியறது வாழையிலை தான்” எத்தனை அம்மாக்கள் தங்கள் பெண்களை இப்படி எச்சரிக்கை செய்கிறார்கள் என்பதை நீங்களும் அறிவீர்கள். எந்த மகனிடமும் இந்த மாதிரி எச்சரிக்கை செய்கிறார்களா என்றால் இல்லை என்பதே பெரும்பாலானவர்களின் பதிலாக இருக்கும்.  இந்த வாரத்தின் குறும்படமும் பெண்களின் உடை பற்றியது தான்.


ஒரு பெண்மணி – அவளது மகள் இருவரும் மட்டுமே இருக்கும் குடும்பம்.  மகள் அடுத்த நாள் கல்லூரிக்கு முதல் முறையாகச் செல்ல இருக்கிறாள்.  அந்த நேரத்தில் வீட்டிற்கு ஒரு பார்சல் வருகிறது. உறவுப் பெண்மணி ஒரு அழகான உடையை வாங்கி அனுப்பி இருக்கிறார் – அம்மா உனக்கு இது ரொம்பச் சின்னதா இருக்கும் என்று மகள் சொல்கிறார். ஆனால் துணியுடன் ஒரு சிறு கடிதமும் இருக்கிறது. நீண்ட வருடங்களுக்குப் பிறகு அந்த உறவினர் – மகளை சிறுவயதில் பார்த்த உறவினர் – மகளுக்கென வாங்கி அனுப்பிய உடை அது. ஸ்லீவ்லெஸ் உடை! அந்த உடையைப் போட்டுக் கொண்டு மகள் கல்லூரி செல்ல முடிவு எடுக்கிறார்.  அதைப் போட்டுக் காண்பிக்கும்போது அம்மாவிற்கு பயம்.  அய்யோ இந்த உடையை அப்படியே போட்டுக்கொண்டு போனால் என்னாவது? மகள் ஒரு பக்கம் அந்த உடையைப் போட்டுக் கொண்டு செல்வது போல கனவு காண, அம்மாவோ மகளுக்கு வரும் பிரச்சனைகளையும், சக மனிதர்கள் சொல்லும் வார்த்தைகளையும் கனவில் கண்டு பயப்படுகிறார்.


பயத்தில் அலறி எழுந்திருக்க, மகளும் எழுந்திருந்து ”அம்மாவிடம் தூங்கும்மா” என்று சொல்லி தூங்கிவிட, அம்மா அந்த இரவிலேயே அந்த உடையில் கைப்பகுதியை இணைத்துத் தைத்து வைக்கிறார். காலையில் எழுந்து உடையைப் பார்த்த பெண்ணுக்குக் கோபம் – அந்த உடையின் அழகே போய்விட்டதென. கோபத்தில் வாக்குவாதம் – பெண் அம்மாவிடம் வார்த்தைகளைக் கொட்ட அம்மா பெண்ணை அடித்து விட, பெண் தனது அறைக்குச் சென்று கதவைச் சார்த்திக் கொள்கிறாள்.  அம்மா யோசித்தபடியே, ஒரு முடிவுடன் சேர்த்துத் தைத்த கைப் பகுதிகளை பிரிக்கிறாள்.  பெண் அம்மாவிடம் என்ன சொன்னாள்? அம்மாவின் முடிவில் ஏற்பட்ட மாற்றம் ஏன் என்பதை எல்லாம் தெரிந்து கொள்ள குறும்படத்தினைப் பாருங்களேன்.  இந்தக் குறும்படம் மராட்டி/ஹிந்தியில் இருந்தாலும் ஆங்கிலத்தில் சப்-டைட்டில் உண்டு என்பதால் மராட்டி/ஹிந்தி மொழி தெரியாதவர்களும் பார்க்கலாம்!

காணொளியாக இணைத்திருந்தாலும், சில சமயங்களில் யூவில் சென்று தான் பார்க்க வேண்டும் என வரலாம். அதனால் கீழே யூட்யூப் சுட்டியும் கொடுத்திருக்கிறேன். அங்கேயும் சென்று பார்க்கலாம்!


Sleeveless - Shortfilm


நண்பர்களே, இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட குறும்படம் உங்களுக்குப் பிடித்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

46 கருத்துகள்:

 1. நல்ல சில குறும்படங்களை அறிமுகம் செய்து வருகிறீர்கள்.  பொருத்தமான வாசகமும் கவர்ந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   குறும்படம் - நன்றி.

   நீக்கு
 2. ஐ ஜாலி...சூப்பர் குறும்படம் சண்டே மார்நிங் அற்புதமாக்கி விட்டீர்கள் நன்றி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக அருமையான நடிப்புடன் நல்ல குறும்படம்.
   பெண்களுக்குத் தேவை நல்ல தைரியம்.
   இனிய காலை வணக்கம் வெங்கட்.
   அந்த அம்மாவை நினைத்து மனம் கசிகிறது.
   மகளின் கண்ணில் நிறைந்திருக்கும்
   வெகுளித்தனம் என்றும் அவளுடன் இருக்கட்டும்.

   இத்தனை நல்ல படங்களை தயாரிக்கும் வல்லுனர்கள்
   சமூகத்தின் வலிமையைக் கூட்ட வேண்டும்.
   நன்றி வெங்கட்.

   நீக்கு
  2. குறும்படம் - நன்றி நவீன். பார்த்து ரசிக்கலாம்!

   நீக்கு
  3. காலை வணக்கம் வல்லிம்மா...

   //பெண்களுக்குத் தேவை நல்ல தைரியம்// உண்மை தான்.

   நீக்கு
 3. குறும்படத்துடன் இன்றைய பதிவு அருமை...
  நலம் வாழ்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.

   நீக்கு
 4. வணக்கம்
  ஐயா

  குறும் படத்தை .ரசித்தேன் வாழ்த்துக்கள் ஐயா
  எனது பக்கம் ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: மனங்களில் நிறைந்தவனே.: எண்ணக்கவியோடு ஏழைகளின் மனதோடு நின்று உறவாடும் செந்தமிழ் புலவரே சொந்த தமிழில் செந்தமிழ் பாடி அகிலம் வாழும் தமிழர் மனங்களில் நிறைந...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ரூபன்.

   நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்கள் வருகை. மகிழ்ச்சி.

   குறும்படத்தினை ரசித்தமைக்கு நன்றி.

   நீக்கு
  2. வணக்கம்
   ஐயா

   இனி தொடர்ச்சியாக வருவேன் என்ன வேலை இருந்தாலும் எழுத்துக்கு முதலிடம்.
   29-06-2020 பாடசாலை ஆரம்பம்... இருந்தாலும் பதிவிட்டும் கருத்திட்டும் கற்பிப்பதற்கு செல்வதாக இனி முடிவு

   நீக்கு
  3. //இனி தொடர்ச்சியாக வருவேன்// மகிழ்ச்சி ரூபன்.

   தொடர்ந்து எழுதுங்கள்.

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 5. தாய் மனதின் தவிப்பு புரிகிறது... நல்லதொரு குறும்படம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   நீக்கு
 6. வாசகம் அருமை.
  குறும்படம் அருமையான பாடம். அந்த தாய் எனது சிந்தனை போலவே இருக்கிறாள். நன்றி ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் - பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.

   குறும்படம் - உங்கள் கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 7. குறும்படம் ரசித்தேன்.
  வாழியிலை..வாழையிலை என்றிருக்கவேண்டும்.தகவலுக்கு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் - ரசித்தமைக்கு நன்றி

   தவறைச் சுட்டியமைக்கு நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா. திருத்திவிட்டேன்.

   நீக்கு
 8. குறும்பட தகவலுக்கு நன்றி நண்பரே. கண்டு களிக்கிறேன்.
  ஒரு சிறிய திருத்தும் மேற்கொள்ளுமாய் உங்களை வேண்டி கேட்டு கொள்கிறேன். உயிரெழுத்துக்கள் வரும் போது ஒரு என்று வராது. ஓர் என்று தான் நம் இலக்கணப்படி வர வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் - முடிந்தால் பாருங்கள்.

   இலக்கணப் பிழைகள் - சுட்டிக் காண்பித்ததற்கு நன்றி குமார் ராஜசேகர் ஐயா.

   நீக்கு
 9. குறும்படத்தைப் பார்க்கிறேன். பார்த்துவிட்டுச் சொல்கிறேன். நல்ல பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 10. பதில்கள்
  1. குறும்படம் - ரசித்ததற்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 11. குறும்படம் பார்த்தேன். மகள் - தாய் இருவரின் நடிப்பும் அருமை. கருத்தும் தங்களின் பதிவும் படத்திற்கு மேலும் அழகு சேர்த்தன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி செந்தில்குமார்.

   நீக்கு
 12. வாசகம் அருமை வெங்கட்ஜி!!!! செம நான் அடிக்கடி சொல்வது..

  படம் பார்த்துவிட்டு வருகிறேன்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

   படம் - முடிந்த போது பாருங்கள்.

   நீக்கு
 13. பதில்கள்
  1. //அண்ணா// - ஆஹா... இது என்ன புதிதாக அண்ணா.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கஸ்தூரி ரெங்கன்.

   நீக்கு
 14. குறும்பப்டம் அருமை ஜி. மனம் நெகிழ்ச்சியும். பெண்களுக்கு எப்படி எல்லாம் ஆபத்துகள் வருகிறது. தாயின் மனம் புரிகிறது. தைரியம் பெண்களுக்கு மிக மிக அவசியம். நடிப்பு அபாரம். படம் எடுத்த விதமும் மிக மிக அருமை பாராட்டிற்குரியது.

  வாசகம் மிகவும் பொருத்தம் படத்திற்கு!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதாஜி.

   நீக்கு
 15. சமூகம் திருந்தட்டும். நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சமூகம் திருந்தட்டும் - அது தான் இன்றைய தேவையும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 16. படம் அழகாக எடுக்கப்பட்டிருக்கிற்து. நடிப்பும் மிகவும் நன்றாக இருக்கிறது.

  சப்டைட்டில் இருந்ததால் புரிந்து கொள்ள முடிந்தது. நீங்கள் சொல்லி இருப்பதையும் படித்துவிட்டதால் தெரிந்துகொள்ளவும் முடிந்தது. அந்த அம்மா பாவம். தன் பெண்ணைப் பற்றிய தவிப்பு. தனது பண்டு நிகழ்ந்ததை நினைத்து. பெண்கள் இப்படியான காலத்தில் எத்துணை தைரியமாக இருக்க வேண்டும்!

  நல்ல படம் வெங்கட்ஜி பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடிப்பதில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.

   நீக்கு
 17. வணக்கம் சகோதரரே

  வாசகம் அருமை. குறும்படம் பார்த்தேன். தன் மகள் நல்லபடியாக இருக்க வேண்டுமென்ற தவிப்பு ஒவ்வொரு தாய்க்கும் இருப்பதை அந்த தாயாக நடிப்பவர் அழகாக தன் நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கிறார். முக்கியமாக பெண்களுக்கு மனதைரியம் வேண்டுமென குறும்படத்தில் கடைசியில் முடிவாக கூறியிருப்பது நன்றாக உள்ளது.பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   குறும்படம் - உங்கள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 18. எப்போதும் தரும் விளம்பரப்படம் என்னாச்சு?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விளம்பரப் படம் - சனி காஃபி வித் கிட்டு பதிவிலோ அல்லது ஞாயிறுகளில் சில சமயங்கள் வெளியிடுவேன். எல்லா வாரமும் விளம்பரம் வெளியிடுவது இல்லை! இந்த வாரம் இப்படி ஒரு குறும்படம். அடுத்த வாரம் சனிக்கிழமை பதிவில் ஒரு விளம்பரம் உண்டு!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜோதிஜி.

   நீக்கு
 19. குறும்படம் சிறப்பு. தாயின் பதற்றம் நியாயமானதே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோயில்பிள்ளை.

   நீக்கு
 20. அருமையான வாசகம், குறும்படம் மிக அருமை.
  தாயின் மனநிலை தவிப்பு அவர் கனவு, குழந்தையின் இனிய கனவு எல்லாம் அவர் அவர் மனநிலையை சொல்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 21. இந்த குறும் படம் பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கும் படம்.

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....