ஞாயிறு, 28 ஜூன், 2020

My Brother – குறும்படம் - விளம்பரம்


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, இந்தக் குறும்படத்தில் வரும் ஒரு வாசகத்துடனேயே ஆரம்பிக்கலாம்.


To live side by side with someone you love, is a life worth living.Brother என்று ஒரு Printer/Scanner நிறுவனம் இருக்கிறது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். அதற்கான ஃப்லிப்பைன்ஸ் நாட்டு விளம்பரம்/குறும்படம் தான் நாம் இன்றைக்குப் பார்க்கப் போவது.  அம்மா அப்பா இருவருமே இளம் வயதிலேயே இறந்து போக அண்ணனும் தங்கையும் மட்டுமே இருக்கிறார்கள்.  வயதான பாட்டி அண்ணனுடன் இருப்பது தான் நல்லது என்று சொல்கிறாள் – ஏனெனில் அவளால் அந்தச் சிறுமியைப் பார்த்துக் கொள்ள முடியாத தள்ளாமை.  தன் தாயின் நிழற்படத்தினை வைத்து அழுது கொண்டிருக்கும் தங்கையைப் பார்த்து மனம் கலங்குகிறான் அண்ணன்.  அவளுக்கு ஒரு பொம்மையை வாங்கலாம் என்றால் கூட அதற்கும் பணம் தேவை ஆயிற்றே.  கடைத்தெருவில் ஒரு விளம்பரத்தினைக் காண நேர்கிறது.  குத்துச் சண்டை போட்டிக்கான விளம்பரம் – தோற்றாலும் காசு கிடைக்கும் என்று தெரிய அதில் – குத்துச்சண்டையின் “அ, ஆ” தெரியாத - அந்த அண்ணன் பங்கு கொள்கிறான். கிடைத்த பணத்தில் பொம்மை வாங்கி வந்து தங்கையை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறான். 


வயதான காலத்தில் அண்ணனுக்கு பார்கின்ஸன் வியாதி – முடியாத நிலையில் தங்கை தான் பார்த்துக் கொள்கிறார் – தங்கையின் மகன் “இவரை ஏதாவது ஹோமில் சேர்த்து விடலாம் எனச் சொல்லும்போது தங்கை கலங்குகிறாள். தனக்காக எத்தனை கஷ்டப்பட்டு இருக்கிறார் அண்ணன் என நினைக்கும் தங்கையினால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கண் கலங்கி வெளியே அமர்ந்திருக்கும் தங்கையை ஆறுதல் படுத்த வருகிறார் அந்த அண்ணன் – தள்ளாடியபடியே! மிகவும் சிறப்பாக எடுக்கப்பட்ட விளம்பரம் – குறும்படம் போலவே. தனக்கு அடிபட்டிருந்தாலும் அழும் தங்கையைச் சிரிக்க வைக்க செய்யும் ஒரு நடிப்பு - தலையை கொஞ்சம் கொஞ்சமாக பின்னால் கொண்டு சென்று ஒரு சிரிப்பு சிரிப்பார் அது மிகவும் பிடித்தது -  பாருங்களேன்.


 

காணொளியாக இணைத்திருந்தாலும், சில சமயங்களில் யூவில் சென்று தான் பார்க்க வேண்டும் என இணையம் அடம் பிடிக்கலாம்! அதனால் கீழே யூட்யூப் சுட்டியும் கொடுத்திருக்கிறேன். அங்கேயும் சென்று பார்க்கலாம்!


My Brother


நண்பர்களே, இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட விளம்பரம்/குறும்படம் உங்களுக்குப் பிடித்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் [சி]ந்திப்போம்...


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

37 கருத்துகள்:

 1. சகோதரத்துவத்தை முன்நிறுத்தும் கதையம்சம். பாசமலர் நினைவுக்கு வருகிறது. வாசகம் நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாசகம் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.

   பாசமலர் நினைவுக்கு வருகிறது - :)))

   நீக்கு
 2. வணக்கம்
  ஐயா
  மனதை விட்டு அகலாத கதைக்களம் கொண்ட குறும்படம் பகிர்ந்தமைக்கு நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ரூபன்.

   //மனதை விட்டு அகலாத கதைக்களம் கொண்ட குறும்படம்// உண்மை தான். உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   நீக்கு
 3. பதில்கள்
  1. உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 4. கற்பனைகள் மிக அழகானவை.நிஜத்திலும் கிடைக்கப்பெற்றவர்கள் பாக்கியவான்கள்.கண்ணீருடன்😊🙏

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //கற்பனைகள் மிக அழகானவை// உண்மை தான்.

   இப்படியான சகோதரன் நிஜத்திலும் கிடைத்தவர்கள் பாக்கியவான்களே....

   தங்களது முதல் வருகை எனத் தோன்றுகிறது நஸ்ரத் சலீம். நெஞ்சார்ந்த நன்றி.

   நீக்கு
  2. //நஸ்ரத் சலீம்// - நுஸ்ரத் சலீம்! பெயரைத் தவறாக எழுதியமைக்கு மன்னிக்க வேண்டுகிறேன். தற்போது தான் உங்கள் “தந்தையர் தினம்” பதிவு படித்தேன். சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்டுகள்.

   நீக்கு
  3. மிக்க நன்றி.முதல் வருகைதான் .my brother தலைப்பின் ஈர்ப்பு😊

   நீக்கு
  4. தங்களது மீள் வருகைக்கு நன்றி நுஸ்ரத் சலீம். முடிந்தால் தொடர்ந்து படியுங்கள்....

   நீக்கு
 5. இனிய காலை வணக்கம் வெங்கட்ஜி!

  வாசகம் மிகவும் பிடித்தது

  காணொளி பற்ரிய உங்கள் விவரணத்தை வாசித்துவிட்டேன். அதுவே மனதை நெகிழ்ச்சிவிட்டது.

  காணொளி கண்டுவிட்டு பின்னர் வருகிறேன் ஜி.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் கீதாஜி.

   வாசகம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   நெகிழ்ச்சியான காணொளி தான். முடிந்த போது பாருங்கள்.

   நீக்கு
 6. பாசமலர் கதை போல இருக்கு காணொளி பார்த்துவிட்டு வருகிறேன்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாசமலர் கதை போல - ஹாஹா... ஸ்ரீராமும் இதே கருத்தைச் சொல்லி இருக்கிறார் கீதாஜி.

   நீக்கு
 7. குறும்படம் மிகவும் பிடித்தது... எடிட்டிங் சிறப்பு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.

   நீக்கு
 8. பதில்கள்
  1. காணொளி உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 9. பாசம் வைப்பவர்களுக்கு எதிப்புறமிருந்தும் கிடைக்க வேண்டும் அதுதான் உண்மையானது அது இந்த குறும்படத்தில் இருப்பது கண்டு சிலிர்த்தேன்.

  பகிர்வுக்கு நன்றி ஜி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //பாசம் வைப்பவர்களுக்கு எதிர்புறமிருந்தும் கிடைக்க வேண்டும்// உண்மை தான் கில்லர்ஜி.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 10. குறும்படம் அழ வைத்து விட்டது.
  மிக அருமையாக இருக்கிறது.
  உண்மையான பாசம். நடித்தவர்கள் எல்லோரும் ந்ன்றாக நடித்து இருக்கிறார்கள்.
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் - அழ வைத்து விட்டது - அடடா..... மனதைத் தொடும் குறும்படம் தான் மா...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 11. படம் மனதை மிகவும் நெகிழ்த்தி விட்டது. படத்தின் இறுதியில் வருவதுதான் இன்றைய வாசகம்! அருமையான் படம் ஜி. எவ்வளவு அழகாக ஒரு விளம்பரத்தை இத்தனை உணர்வு பூர்வமாக எடுக்கறாங்க!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படம் நெகிழ்த்தியது - உண்மை தான் கீதாஜி. முதல் முறை பார்த்தபோது கொஞ்சம் நேரம் வேறு எதையும் யோசிக்கத் தோன்றவில்லை.

   உணர்வு பூர்வமாக எடுக்கப்படும் விளம்பரங்கள் என்பது உண்மை.

   தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாஜி.

   நீக்கு
 12. வெங்கட், பாச பறவைகளின் சிறப்பை விளக்கும் குறும்படம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தஙக்ளது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோயில்பிள்ளை.

   நீக்கு
 13. குறும்படம் மனதை நெகிழ்த்தியது! வேரூன்றிய பாசத்தை மிக அழகாக படம் பிடித்திருக்கிறார்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் - உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மனோம்மா.

   நீக்கு
 14. வணக்கம் சகோதரரே

  வாசகம் அருமை. குறும்படத்தின் கதையை தங்கள் எழுத்துக்களே நெகிழ்சியுறுமாறு செய்தன. காணொளியும் கண்டேன். பாசம் நிறைந்த அண்ணன் தங்கை படம் மனதை கலங்க வைத்து விட்டது. நடிப்பவர்கள் சின்ன வயதிலும், பெரியவர்கள் பாத்திரத்தில் நடிப்பவர்களும் மிகவும் இயற்கையுடன் உருக்கமாக நடித்துள்ளனர். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

   வாசகமும், குறும்படமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. நடித்தவர்கள் நன்றாக நடித்திருக்கிறார்கள் என்பதும் உண்மை.

   நீக்கு
 15. குறும்படம் மனத்தை உறைய வைத்து விட்டது. பாசமலர் படம் நினைவிற்கு வருகின்றது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறும்படம் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

   நீக்கு
 16. அன்பு வெங்கட்,
  இது போல அருமையான படம் பார்த்ததில்லை. அண்ணன் ,தம்பி என்றால் இப்படி
  அல்லவா இருக்க வேண்டும்.
  உத்தமமான அண்ணன். பாசம் மிக்க தங்கை.
  உணர்ச்சிகள் அலைமோதும் அழகு குறும்படம்.
  மிக நன்றி வெங்கட். எங்கிருந்துதான்
  இப்படிப் படங்களைத் தேர்ந்தெடுக்கிறீர்களோ.
  நன்றி மிக நன்றி.
  ஆமாம் பிடித்தவர்களுடன் வாழ்வது ஒரு அதிர்ஷ்டம் தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வல்லிம்மா... குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

   அவ்வப்போது இப்படித் தேடிப் பார்ப்பது வழக்கம் மா... அதில் பிடித்ததை இங்கேயும் பகிர்ந்து கொள்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   நீக்கு
 17. வணக்கம் சகோ....மனசு நெகிழ வைக்கும் படம்....அன்பு எத்தனை வலியானது.... மிக்க நன்றி சகோ

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா... நீண்ட இடைவெளிக்குப் பிறகு எனது வலைப்பூவில் உங்கள் வருகை. மகிழ்ச்சி சகோ.

   குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி. தொடர்ந்து சந்திப்போம்... சிந்திப்போம்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....