காஃபி வித் கிட்டு – 85
அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இன்றைய நாளை நல்லதோர் வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
இந்த வாரத்தின் ஆட்டோ பயணங்கள்:
என்னதான் பேருந்துகள், மெட்ரோ போன்றவை இயங்க ஆரம்பித்து விட்டாலும் அவற்றில் இன்னும் பயணிக்கத் துவங்கவில்லை. காலையில் நண்பர் ரங்கராஜனுடன் அவரது இரு சக்கர வாகனத்தில் பயணம்! மாலை நேரத்தில் ஆட்டோ பயணங்கள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆட்டோ ஓட்டுனர் – சிலர் மோன நிலையில் இருப்பவர்கள்! சிலர் வளவளவென பேசிக் கொண்டே வருபவர்கள்! அப்படி பேசிக் கொண்டு வருபவர்கள் அரசியல் முதல் சினிமா வரை, கேஜரிவால் வரை ராகுல் காந்தி வரை, ஜிடிபி முதல் ஜிண்டல் தொழிற்சாலைகள் வரை, ட்ரம்ப் முதல் ரியா சவுத்ரி வரை என பல விஷயங்களைப் பற்றி பேசுவார்கள்! இல்லை என்றால் இருக்கவே இருக்கிறது தீதுண்மி! அதைப் பற்றி, அதனால் அவர்கள் படும் பாடு பற்றி எதையாவது பேசிக் கொண்டே வருவார்கள்! என் வேலை காது கொடுத்து கேட்பது மட்டுமே! அவ்வப்போது ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசினால் அதிகம்! எல்லோருக்கும் ஏதோ பேச விஷயம் இருந்து கொண்டே இருக்கிறது! மொத்தமே பத்து-பதினைந்து நிமிடப் பயணம் தான் – அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு! அதற்குள் பேசப்படும் விஷயங்களை பிறகு நினைத்துப் பார்த்தால் கொஞ்சம் வியப்பும் சிரிப்பும் தான்! நேற்று வந்த ஆட்டோவின் ஓட்டுனர் கேட்ட கேள்வி – “காங்க்ரஸ் கட்சி இன்னும் நாற்பது வருடத்திற்கு ஆட்சிக்கு வர முடியாதுன்னு அவங்க கட்சிக்காரங்களே சொல்லி இருக்காங்க பார்த்தீங்களா? அவங்க சொல்றதுலயும் நியாயம் இருக்கு! யாரையுமே வளர விட மாட்டேங்கறாங்களே?” என் பதில் என்னவாக இருந்திருக்கும்! ஆமாம் நீங்கள் நினைத்தது சரி தான் – ஒரு புன்னகை மட்டுமே பதிலாக இருந்தது!
இந்த வாரத்தின் கேள்வி - பதில்:
கேள்வி: நீங்கள் கடைசியாக மிகவும் ஈடுபாட்டோடு படித்த புத்தகம் எது? அது எதைப் பற்றியது மற்றும் அதை மிகவும் சுவாரஸ்யமானதாக ஆக்கியது எது?
இந்த கேள்வியை உங்களிடம் கேட்டால் உங்கள் பதில் என்னவாக இருக்கும்? பின்னூட்டம் வழி சொல்லுங்களேன். அந்தப் புத்தகத்தினை நானும் படிக்க ஏதுவாக இருக்கட்டும் உங்கள் பதில்கள்! நான் சமீபத்தில் படித்த புத்தகம் பற்றி இங்கே பகிர்ந்து கொண்டேன் – இமாலய ரைடு.
இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம்:
இந்த வாரத்தில் நாம் பார்க்கப் போவது ஒரு தாய்லாந்து விளம்பரம் – Land and Houses என்ற விளம்பரம் – அப்பாவுக்கும் மகனுக்குமான உறவு பற்றிய உணர்வுபூர்வமான விளம்பரம் – பாருங்களேன்!
இந்த வாரத்தின் தகவல் – கல்யாணக் கனவுகள்:
இந்திய நேரப்படி, வரும் வியாழக் கிழமை மதியம் 12.29 வரை எனது மின்னூல் “கல்யாணக் கனவுகள்”-ஐ அமேசான் தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். விருப்பம் இருப்பவர்கள் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்! மின்னூலை படிப்பவர்கள் நூல் பற்றிய உங்கள் கருத்துகளையும் மின்னஞ்சல் மூலமாக தெரிவித்தால் எனது வலைப்பூவில் பகிர்ந்து கொள்வேன்! தரவிறக்கம் செய்து கொள்ள சுட்டி கீழே.
பின்னோக்கிப் பார்க்கலாம்:
எனது வலைப்பூவில் இதே நாளில் 2012-ஆம் வருடம் எழுதிய ஒரு பதிவு – திரு & திருமதி இட்லி என்ற திருச்சியிலிருந்த உணவகம் பற்றி எழுதிய பதிவு. அந்த உணவகம் இப்போது இல்லை என்பதையும் சொல்லி விடுகிறேன்! அப்பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து திருவரங்கம் செல்லும் 1-ஆம் நம்பர் பேருந்தில் சென்று கொண்டிருந்தேன். நெடுஞ்சாலையின் வலப்பக்கத்தில் திருவானைக்கோவில் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தின் பெயர்ப்பலகை வித்தியாசமாக இருந்தது - MR AND MRS IDLY. சென்னையை தலைமையகமாக் கொண்டு இயங்கும் இந்த ஊர் Franchise இது.அட இட்லி மாதிரி குண்டான தம்பதிகளுக்கு மட்டும் தான் அனுமதியோ இல்லை, இட்லியில் பல வெரைட்டி கிடைக்குமோ என நினைத்து, ”எதுக்கு இந்த யோசனை, சென்றுதான் பார்ப்போமே” [”சாப்பாட்டு ராமன்” என்று குரல் கொடுப்பது யாரோ?] என மனைவி-மகளுடன் சென்றேன். திரு பத்மநாபன் என்பவரால் நடத்தப்படும் திருச்சி கிளை தான் இது. உணவகத்தின் உள்ளே சென்றவுடன் நம் கண்ணெதிரே தோன்றுவது “சங்ககால உணவு” என்ற பெயர்ப் பலகை தான்.
முழுபதிவும் படிக்க ஏதுவாக சுட்டி கீழே.
இந்த வாரத்தின் ரசித்த பாடல்:
இந்த வாரத்தின் ரசித்த பாடலாக ஒரு ஹர்யான்வி பாடல்! பாடல் ரசிக்கும்படியாக இருக்கிறதோ இல்லையோ, ஹரியானாவின் சில பழக்க வழக்கங்கள் இந்த காணொளி வழி உங்களுக்குத் தெரிய வரலாம்! பாருங்களேன்.
என்ன நண்பர்களே, இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு உங்களுக்குப் பிடித்திருந்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!
வேறு ஒரு பதிவுடன் மீண்டும் சந்திக்கும் வரை...
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
ஆட்டோ அரசியல் சுவாரஸ்யம் ஜி
பதிலளிநீக்குகாணொளி கண்டேன் அருமை.
மின்நூலுக்கு வாழ்த்துகள்.
ஹர்யான்வி பாடலை ரசித்தேன்.
பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குமின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மின்னூலுக்கு வாழ்த்துகள். ஆட்டோக்காரர்களிடம் பலவிதமான கதைகள் கிடைக்கும்! காணொளி சற்றுப் பொறுத்துப் பார்க்கணும்.
பதிலளிநீக்குமின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி கீதாம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அப்பா - மகன் காணொளி அருமை...
பதிலளிநீக்குகாணொளி உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துரை செல்வராஜூ ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
2012 பதிவு நன்றாக இருந்தது. உங்கள் பழைய பதிவுகளைப் படிக்கணும்.
பதிலளிநீக்குமுந்தைய பதிவினை படித்து கருத்துரைத்ததில் மகிழ்ச்சி நெல்லைத் தமிழன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஆட்டோ அனுபவம் ரசித்தேன். கல்யாண கனவுகளுக்கு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
பாடல் அருமை... படிக்க வேண்டிய மின்னூல் எண்ணிக்கை அதிகமாகக் கொண்டிருக்கிறது... Receiverindia ஒரு காரணம் என்பது உங்களுக்கும் தெரியும் ஜி...
பதிலளிநீக்குபதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி தனபாலன்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
” என் பதில் என்னவாக இருந்திருக்கும்! ஆமாம் நீங்கள் நினைத்தது சரி தான் – ஒரு புன்னகை மட்டுமே பதிலாக இருந்தது!
பதிலளிநீக்குDiplomatic handling of the Subject புரிந்தது என் கமெண்டும் ஒரு புன்னகையே
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அபயா அருணா ஜி.
நீக்குரசித்தேன்
பதிலளிநீக்குமின்னூலுக்கு வாழ்த்துகள் ஐயா
மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
ஆட்டோ அனுபவம் சுவாரிசயமாக இருந்தது.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராமசாமி ஜி.
நீக்குஇனிய காலை வணக்கம். வெங்கட்.
பதிலளிநீக்குபதிவின் ஆரம்ப கருத்திலிருந்து
முடிவு வரை மிக சுவாரஸ்யம்.
அப்பா மகன் காணொளியின் பரிவும்
பாசமும் உருக வைத்தது.
ஆட்டோ ட்ரைவர்கள் எப்போதும் பேச ஆரம்பித்தால் நிறுத்த
மாட்டார்கள்.
இங்கே டாக்சி ஓட்டுபவர்களும் அப்படித்தான்:)
நாம் பதிலே சொல்ல வேண்டாம்.
ஹரியானா பாடல்,நாட்டியத்தை ரசித்தேன்.
மிக நன்றி மா.
வணக்கம் வல்லிம்மா.
நீக்குபதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
மின்னூலுக்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குரசித்த பாடல் காணொளி அருமை.அப்பா, மகன் காணொளி நெகிழ வைத்து விட்டது.
மின்னூல் - வாழ்த்தியமைக்கு நன்றி கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.