அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.
எவ்வளவு கோபம் வந்தாலும் வார்த்தைகளை விட்டு விடாதீர்கள். அடிகளை விட அது தரும் வலி அதிகம். பின் எத்தனை முறை மன்னிப்பு கேட்டாலும் அந்த காயம் ஆறாது!
இந்த முறை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்வது ஒரு வெளிநாட்டு குறும்படம் தான். குறும்படம் என்பது கூடவே இது ஒரு விளம்பரமும் கூட – ஒரு வங்கியின் விளம்பரம்! மொழி புரியவில்லை என்ற கவலை உங்களுக்குத் தேவையில்லை – ஆங்கிலத்தில் சப்டைட்டில் உண்டு. செல்லங்கள் – குறிப்பாக நாய்களை வளர்க்கும் பலர் என்னுடைய நட்பு வட்டத்தில் உண்டு. பதிவுலகத்திலும் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்தக் குறும்படம் பிடிக்கலாம். பள்ளிக்குச் செல்லும் ஒரு பெண் – அவள் செல்லும் வழியில் ஒரு வீடு – அங்கே வசிக்கும் மூதாட்டி! மூதாட்டி வளர்க்கும் ஒரு நாய்! பள்ளிக்குச் செல்லும்போதெல்லாம் அந்த நாய் குரைப்பது பார்த்து அந்தச் சிறுமிக்கு பயம். ஒதுங்கிச் செல்வார். ஒரு நாள் மூதாட்டி இறந்து விட, அந்த நாய் சோகத்தில். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக நாயுடன் நெருங்குகிறார் பள்ளி செல்லும் சிறுமி. இருவரும் வளர்கிறார்கள். பிறகு என்ன நடக்கிறது, அந்தச் சிறுமி, வளர்ந்து என்னவாக ஆகிறார் என்பதைச் சொல்கிறது இக்குறும்படம். மனதைத் தொடும் இந்தக் குறும்படத்தினைப் பாருங்களேன்!
காணொளியாக இணைத்திருந்தாலும், சில சமயங்களில் யூவில் சென்று தான் பார்க்க வேண்டும் என இணையம் அடம் பிடிக்கலாம்! அதனால் கீழே யூட்யூப் சுட்டியும் கொடுத்திருக்கிறேன். அங்கேயும் சென்று பார்க்கலாம்!
நண்பர்களே, இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட குறும்படம் உங்களுக்குப் பிடித்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்...
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
படம் மனதை தொட்டது முடிவில் மாணவி நாய்க்கா(ன)க மருத்துவராவது அருமை.
பதிலளிநீக்குகுறும்படம் உங்கள் மனதைத் தொட்டத்தில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அன்பு வெங்கட் ,
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம்.
மிக அருமையான குறும்படம்.
சொல்ல வந்ததைச் சிறப்பாகச் சொல்லுகிறது.
அன்பு எப்பொழுதும் அன்பைத் திருப்பித் தரும்.
முதலில் குறித்திருக்கும் வாசகமும்
மிக உண்மை.
எல்லோர் மனதிலும் நல் எண்ணங்களும்,
எல்லோர் மொழியிலும் நல் வார்த்தைகளும் நிறைய இறைவன் அருளட்டும்.
வணக்கம் வல்லிம்மா..
நீக்குவாசகமும் குறும்படமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
முடிவில் அழும் போது அழ வைத்து விட்டார்கள்...
பதிலளிநீக்கு//அழ வைத்து விட்டார்கள்// அடடா... சில குறும்படங்கள் இப்படியே நம்மையும் கலங்கடித்து விடுகிறது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
வாசகம் அருமை.
பதிலளிநீக்குகுறும்படம் மனதை கனக்க வைத்து விட்டது.
அன்பு செல்லத்தை பிரிந்து அந்த பெண் குழந்தை அழும் போது மனது மிகவும் வருந்தியது.
வாசகமும், குறும்படமும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாசகம் அருமை
பதிலளிநீக்குஇதோ காணொலியினைக் காணச் செல்கிறேன்
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கரந்தை ஜெயக்குமார் ஐயா. முடிந்த போது குறும்படம் காணலாம்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வாசகம்.. வாழ்வின் நிதர்சனம்.
பதிலளிநீக்குகுறும்படம்.. நெகிழ்வு.
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ரமாலக்ஷ்மி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.