அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய நாளை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம்.
Life is a trip. The only problem is that it doesn’t come with a map… we have to search our own routes to reach our destination.
*****
பாடும் நிலா – 25 செப்டம்பர் 2020
பாடும் நிலா!
எத்தனை எத்தனை பாடல்களால் நம்மை மகிழ்வித்தவர். இன்று நம்மை கலங்க வைத்துவிட்டார்!
ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
இளைய நிலா! – 26 செப்டம்பர் 2020:
புத்துணர்வு, உற்சாகம், மகிழ்ச்சி எல்லாவற்றையும் தந்த குரல். என்னவோ இவரின் இழப்பை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது மனம். அன்றாடம் வானொலி வழி இவரின் பாடல்களை கேட்டு வளர்ந்தவள்! நிச்சயம் தன் குரல் வழியே நம்முடன் தான் இருப்பார்.
இந்த கொரோனா எத்தனை உயிர்களைத் தான் எடுத்துக் கொள்ளப் போகிறதோ...:((
சென்று வாருங்கள் பாலு சார்!
கவிதாஞ்சலி – ஈ.சீ.சேஷாத்ரி – 26 செப்டம்பர் 2020
மேலே உள்ள முகநூல் இடுகைக்கு, பதிவர் திரு சேஷாத்ரி அவர்கள் அளித்திருந்த ஒரு பின்னூட்டம் – இங்கேயும்!
பாடும் வானம்பாடி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு கவிதாஞ்சலி!
பலர் உள்ளத்தைக்
கொள்ளை கொண்ட
பாடும் நிலாவே!
இயற்கையெனும்
இளைய கன்னி
ஏங்குகிறாள்
நின் பிரிவை எண்ணி!
ஆயிரம் நிலவை அழைத்தவனை
பாயிரம்பாட அழைத்தது
பட உலகம்!
தித்திக்கும் வகையினிலே
எத்தனையோ பாடல்கள்
எத்திக்கும் புகழ்பரப்பி
ஏற்றம் மிக தந்தனவே!
அரை நூற்றாண்டு
ஆட்சி செய்தாய் பாடகராய்!
பன்மொழியில் பாடியநீ
வென்றிட்டாய் பலவிருதை!
சின்னஞ்சிறு சிணுங்கல்கள்
மென்சிரிப்பு,
இழையோடும் சோகமென
எத்தனையோ விந்தைகளால்
எழில்சேர்த்தாய் பாடல்களில்!
செவிகுளிர்ந்த நின்கீதங்கள்
செப்புமென்றும் நின்புகழை
ஒப்பிலாப் பாடகனே
உம்மிடத்தை யார் நிரப்ப?
துன்பமிகு வேளைகளில்
துணையாகும் உன்பாட்டு!
இன்பவெள்ளம் என்றாலோ
எந்நாளும் உன்பாட்டு!
பாட்டுக்கொரு தலைவன் நீ!
விட்டெமை நீங்கி
வேறுலகம் ஏன் சென்றாய்?
மீளாத் துயரதனில்
ஆழ்த்திவிட்டாய்
எம்மையெல்லாம்!
உரைத்திட வார்த்தையில்லை
வழிகின்ற விழிநீரால்
வழியனுப்பி வைக்கின்றோம்!
எல்லோர் நெஞ்சத்தும்
எந்நாளும் நீவாழ்வாய்!
உன்பாடல் ஒலிக்கும்வரை
உன்புகழும் நிலைத்திருக்கும்!
- ஈ. சீ. சேஷாத்ரி
இந்த வார காணொளிகள்:-
இந்த வாரம் மகளின் Roshni's creative corner சேனலில் Silk thread jhumka making பற்றி பகிர்ந்துள்ளாள். முதல்முறையாக பின்குரலும் கொடுத்திருக்கிறாள்! பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்.
ஆதியின் அடுக்களையிலும் இன்று ஒரு காணொளி பகிர்ந்துள்ளேன்.. பார்த்து விட்டு கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் மகிழ்வேன்..
நேரம் கிடைக்கும் போது காணொளிகளைப் பார்த்து உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்களேன்.
பின்னோக்கிப் பார்க்கலாம் – அரிசி தேங்காய் பாயசம்:
இதே நாளில் 2011-ஆம் ஆண்டு எனது “கோவை2தில்லி” வலைப்பூவில் எழுதிய பதிவு ஒன்று உங்கள் பார்வைக்கு – இப்போது வலைப்பூவினை வாசிக்கும் பலர் இந்தப் பதிவினை வாசித்திருக்க வாய்ப்பில்லை என்பதால் இங்கே பகிர்ந்து கொண்டேன். “அரிசி தேங்காய் பாயசம்” செய்முறை – எப்படிச் செய்வது எனப் பார்க்கலாம் இந்தப் பதிவு வழி. பதிவுக்கான சுட்டி கீழே!
சிறுதானிய ஐஸ்க்ரீம் - 27 செப்டம்பர் 2019:
சமீபத்தில் எங்கு பார்த்தாலும் இந்த சுவரொட்டி தென்படுகிறது.. புதுமையான முயற்சியாக சிறுதானியங்களை வைத்து செய்கிறார்கள் போலும்.. சுவைத்தால் தான் தெரியும்...நாங்கள் ஐஸ்க்ரீம் சாப்பிட்டே பலகாலமாகி விட்டது..எல்லாம் இந்த கொரோனா பீதியால்... என்னவரின் கண்டிப்பான உத்தரவு! இல்லையென்றால் மாதம் ஒருமுறையாவது சுவைப்போம்..:))
55 க்கு ஹிந்தியில் என்னங்க?
தெரிந்த கடை ஒன்றில் இன்று வெற்றிலையும் சில பொருட்களும் வாங்கிய போது அந்தக் கடைக்காரரிடம் 'எவ்வளவு ஆச்சுங்க' என்றேன்.. Fifty five என்றார்! பர்ஸிலிருந்து பணத்தை எடுத்து கொடுக்கும் போது fifty fiveக்கு ஹிந்தியில் என்னங்க சொல்லணும் என்றார்..Pachpan என்றேன்! அடுத்து இருபதுக்கு, இருபத்தைந்து, ஐம்பது என எல்லாவற்றுக்கும் கேட்டுத் தெரிந்து கொண்டார்.. கோவில் அருகே கடை இருப்பதால் வடக்கிலிருந்து வருபவர்களிடம் சொல்லத் தேவைப்படுகிறதாம்!
சகஜநிலை??
இன்று நாங்கள் வெளியே சென்று பார்த்தவரையில் நாங்கள் மட்டும் தான் முகக்கவசம் அணிந்திருந்தோம்! வேலை, தொழில், வியாபாரம், வயிற்று பிழைப்பு என்று எந்த காரணமாக இருந்தாலும் அதை விட நம் ஆரோக்கியம் முக்கியமில்லையா?? முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளி பின்பற்றினால் நல்லது தானே!!!
நண்பர்களே, இன்றைய பதிவில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட விஷயங்கள் பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்...
நட்புடன்
ஆதி வெங்கட்
நலம் வாழ்க..
பதிலளிநீக்குநலமே வாழ்க!..
நலமே விளையட்டும்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.
கதம்பமலர் மாலை போல பதிவு ...மிகவும் இரசித்தும் படித்தேன்..பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துகள்..
பதிலளிநீக்குபதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ரமணி ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
இனிய காலை வணக்கம் ஆதி அண்ட் வெங்கட்.
பதிலளிநீக்குஅள்த்திருக்கும் காணொளிகளைச் சென்று
பார்க்கிறேன்.
இங்கே கவசம் அணியாமல்
பார்ட்டி நடத்திய மக்களால்
மீண்டும் தொற்று தலை எடுக்கிறது,.
வெளியில் செல்வது என்பது மறக்க வேண்டிய
விஷயமாகிவிட்டது.
காலை வணக்கம் வல்லிம்மா.
நீக்குபதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
கடைக்காரர்கள் விழித்துக் கொண்டுவிட்டார்கள். பிழைக்கும் வழியைப் பார்க்கிறார்கள்.
பதிலளிநீக்குமிக அருமை.
தேங்காய்ப் பால் பாயாசம் பார்க்கவே அருமையாக இருக்கிறது.
ஈ.சி. சேஷாத்ரி அவர்களின் கவிதை வரிகள் கண்ணீர்
வரிகளாக வந்திருக்கின்றன.
//கடைக்காரர்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள்// உண்மை வல்லிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
அவரது ஆன்மா இறைவனடியில் இளைப்பாறட்டும்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
நீக்குபாடல்கள் மூலம் மனதில் வாழ்வார்...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
நீக்குகதம்பம் அனைத்தும் படிப்பதற்கு நன்றாக உள்ளது. SPB, உடன் T.vயில் interaction சமீபத்தில் அதிகமாக இருந்தது. அது
பதிலளிநீக்குஅவர் மேல் கூடுதலான பிரியம் ஏற்பட காரணமானது. இச்சமயத்தில் நம்மை எல்லாம் விட்டு சென்றது மிக்க துயரம் ஏற்பட்டது. அவர் பாடல்கள் கேட்கும் போது அவர் இல்லை என்று நினைக்க முடியாது. நாம் முக கவசம் அணிந்தும் பலனின்றி செய்து விடுபவர்களை என்ன செய்ய முடியும்?
பதிவின் பகுதிகள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கயல் இராமசாமி மேடம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
//உன்பாடல் ஒலிக்கும்வரை
பதிலளிநீக்குஉன்புகழும் நிலைத்திருக்கும்! //
உண்மை.
அவர் பாடிய பாடல்கள் மூலம் எப்போதும் வாழ்வார்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.
நீக்குகதம்பம் அருமை! என்னுடைய கவிதையைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நண்பரே!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.
நீக்கு