புதன், 23 செப்டம்பர், 2020

வாசிப்பை நேசிப்போம் – ஏழைகளின் ஊட்டி – ராம தேவேந்திரன்

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்! இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

தவறுகளுக்கு மன்னிப்பு கேட்கலாம். மற்றவர்கள் தவறென்று நினைத்துக் கொண்டதற்கெல்லாம் மன்னிப்பு கேட்பது அவமானத்தையே கூட்டும்!

***** 

முகநூலில் “வாசிப்பை நேசிப்போம்” என்றோர் குழுமும் இருக்கிறது. அவ்வப்போது தொடர் வாசிப்பு போட்டிகளை நடத்துகிறார்கள். தவிர குழு உறுப்பினர்கள் பலரும் தாங்கள் படித்து ரசித்த, பல நூல்களை அறிமுகம் செய்து, நூல் பற்றிய தங்கள் வாசிப்பனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். குழு நிர்வாகத்தினரின் மட்டுறுத்துலக்கு உட்பட்ட பதிவுகள் என்பதால் நிர்வாகிக்கும் குழு ஒப்புதல் அளித்த பிறகே குழுவில் வெளியாகும். தொடர்ந்து பல நூல் விமர்சனங்களை அங்கே படித்து, அதன் மூலம் புதிய நூல்களை தெரிந்து கொள்ள முடிகிறது என்பதால் அந்தக் குழுவில் நானும் உறுப்பினராக இருக்கிறேன். அங்கே வாசிப்பனுபவங்களை இதுவரை பகிர்ந்தது கிடையாது என்பதையும் சொல்லிவிடுகிறேன்! தற்போது “வாசிப்பை நேசிப்போம்” குழுவில் #Reading_Marathon2020 என்ற தொடர் வாசிப்பு போட்டி ஒன்றினை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்தப் போட்டியில் பங்கு பெறும் விதமாக எனது “ஏழைகளின் ஊட்டி” என்ற மின்னூலை திரு ராம தேவேந்திரன் என்பவர் அறிமுகம் செய்திருக்கிறார். அவருக்கு எனது மனம் நிறைந்த நன்றி. அந்தத் தகவலை பகிர்ந்து கொண்ட சக பதிவர் தமிழ்முகில் பிரகாசம் அவர்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றி. திரு ராம தேவேந்திரன் அவர்கள் செய்த அறிமுகம் கீழே! 

******

#Reading_Marathon2020
#RM522 
#34/50 
கடிதம்/பயணம் 
நூல் : ஏழைகளின் ஊட்டி 
ஆசிரியர் : வெங்கட் நாகராஜ் 
பதிப்பு. : அமேசான் மின்நூல் 



ஆசிரியர் வெங்கட் நாகராஜ் பல பயண நூல்கள் வெளியிட்டுள்ளார். அதில் இதுதான் தமிழகத்தில் இருக்கும் ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காடு பற்றிதான் இதில் 7 தலைப்பில் விவரித்துள்ளார். 1. ஏழைகளின் ஊட்டி 2.​ரோஜாப் பூங்காவும் காதல் ராஜாக்களும் 3.​பட்டுப்பூச்சியும் பெண்கள் இருக்கையும் 4.​இயற்கை தரும் பகோடா! 5.​அண்ணா பூங்கா – மிளகாய் பஜ்ஜி! 6.​கிளியூர் நீர்வீழ்ச்சியும் மதிய உணவும்! 7.​ஏரிக்கரைப் பூங்காற்றே - படகுக் குழாம் 8.​ ஏ மானே மானே மானே – மான் பூங்கா 

படகில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இயற்கைக் காட்சிகளை ரசிக்கும் ஆர்வத்தில் அதற்காக படகோட்டி உழைப்பது கண்ணுக்குத் தெரிவதில்லை! ஒவ்வொரு முறையும் துடுப்பு போடும்போது எத்தனை பிரயத்தனப் படவேண்டியிருக்கிறது! சுற்றுலாவாக வருபவர்கள் கண்களுக்குத் தெரியும் அத்தனை காட்சிகளையும் ரசிப்பதில் அப்படகோட்டிக்கும் ஒரு பங்கு இருக்கிறதே! 

ஏரியைச் சுற்றி எத்தனை எத்தனை மரங்கள் அழகான இயற்கைக் காட்சிகள் – அத்தனையும் பார்க்கும்போது மனதில் அமைதியும் அமைதியும் ஒரு சந்தோஷமும் கிடைப்பது உண்மை தான்! என்ன ஒரு அமைதி. அந்த அமைதியைக் குலைக்கும் விதமாக ஸ்பீட் போட்டில் செல்லும் சிலர் மகிழ்ச்சியில் கூச்சல் போடுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது! சில பயணிகள் மற்ற படகுகளில் வருபவர்களைப் பார்த்து கைகளை அசைத்து தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்வதும் அழகு! 

தாங்களும் படகுப் பயணம் செய்கிறோம் என்ற எண்ணமே பலருக்கு மகிழ்ச்சியைத் தருகிறது! அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் அந்த ஏரியில் சில பயணிகள் பிளாஸ்டிக் குப்பிகளை வீசுவதும், கொண்டு வரும் தின்பண்டங்களின் ப்ளாஸ்டிக் குப்பைகளை ஏரியில் போடுவதும் பார்க்கும்போது, வெளி நாடுகளில் இருப்பது போல கடுமையான அபராதம் விதித்தால் தான் இவர்களை திருத்த முடியும் என்று தோன்றியது. 

சேர்வராயன் கோவில்: சேர்வாயன் மலையும் காவிரித் தாயும் இறைவன் – இறைவியாக இங்கே குடி கொண்டிருப்பதாக நம்பிக்கை. சேர்வராயன் மலைத்தொடரின் உச்சியில் இருக்கும் இக்கோவிலில் வருடா வருடம் மே மாதத்தில் இறைவன் மற்றும் இறைவிக்கு விழா எடுக்கிறார்கள். குறுகிய குகைக்குள் இருக்கும் இந்தக் குகைக் கோவில் பார்க்க வேண்டிய ஒரு இடம் தான். நான் பல வருடங்களுக்கு முன்பு இங்கே சென்றதுண்டு. இம்முறை நேரப் பற்றாக்குறையின் காரணமாக இங்கே செல்ல இயலவில்லை. இந்த மலைத் தொடரில் இருக்கும் அத்தனை கிராமங்களுக்கும் இக்கோவிலில் குடி கொண்டிருக்கும் சேர்வராயன் தான் காக்கும் கடவுள். இக்குகை மிகவும் ஆழமானது என்றும், அடிவரை சென்றால் காவிரி ஆற்றினையே தொட்டுவிட முடியும் என்பதும் இங்குள்ளவர்களின் நம்பிக்கை. 

நன்றி 

ராம தேவேந்திரன் 

***** 

வாசிப்பை நேசிப்போம் முகநூல் குழுவில் எனது மின்னூலை அறிமுகம் செய்திருக்கும் திரு ராம தேவேந்திரன் அவர்களுக்கு மீண்டும் ஒரு முறை எனது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ”ஏழைகளின் ஊட்டி” மின்னூலை அமேசான் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் – கிண்டில் அன்லிமிட்டட் கணக்கு இருப்பவர்கள் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மற்றவர்கள் ரூபாய் 70/- செலுத்தி தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தரவிறக்கம் செய்து கொள்ள இங்கே செல்லலாம்! 

உங்களுடைய கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்! நாளை மீண்டும் வேறோரு பதிவுடன் சந்திக்கும் வரை… 

நட்புடன், 



வெங்கட் நாகராஜ் 
புது தில்லி.

20 கருத்துகள்:

  1. நூல் மதிப்புரை யதார்த்தமாகவும், சிறப்பாகவும் உள்ளது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      நீக்கு
  2. காலை வணக்கம் ஐய்யா.
    நல்ல நூல் அறிமுகம்.
    தங்களின் நூல் பல இடங்களில் சென்று சேர்வது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. காலை வணக்கம் அரவிந்த்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. சந்தோஷமான அனுபவம், நம் நூல் புதிய நண்பரால் சிலாகிக்கப் படுவது.

    வாசகம் நன்று. ரொம்ப நல்லவனா இருக்க நினைக்கவும் கூடாது!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சந்தோஷமான அனுபவம் - உண்மை தான்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  4. வாசகம் நன்றாக இருக்கிறது.
    நூல் விமர்சனம் நன்றாக செய்து இருக்கிறார்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. நம் புத்தகம் இன்னொருவரால் வாசிக்கப்பட்டு விமர்சிக்கப் படுவதே மனதுக்கு மகிழ்ச்சியளிக்கும் விஷயம். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி நெல்லைத் தமிழன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. நூல் மதிப்புரை சுருக்கமாகவும் படிக்கும் ஆவலைத் தூண்டும்படியாகவும் உள்ளது..ராம தேவேந்திரன் அவர்களுக்கு வாழ்த்துகள்..நானும் வாசிப்பை நேசிப்போம் பக்கத்தில்இணைந்துள்ளேன்...பயனுள்ளதாக உள்ளது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாசிப்பை நேசிப்போம் பக்கத்தில் நீங்களும் இணைந்திருப்பது அறிந்து மகிழ்ச்சி ரமணி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. விமர்சனம் அருமை ஜி...

    தொடர் வாசிப்பு போட்டியில் அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  8. அருமையான விமர்சனம். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. சிறப்பான நூல் மதிப்புரை அண்ணா...
    வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி குமார்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. மின்னூல் விமர்சனம் அருமை
    வாழ்த்துகள் ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....