செவ்வாய், 15 செப்டம்பர், 2020

தீதுண்மி – ஆன்லைன் வகுப்புகள் - கொண்டக்கடலை வடை – மெஹந்தி - தற்கொலை தீர்வல்ல

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்! இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

ஒருவருக்கொருவர் உதவிட தயாராக இருந்தால், இவ்வுலகில் அனைவரும் வெற்றியாளர்களே! 

தீதுண்மி – தளர்வுகள்: 

தளர்வுகள் நிறைய இருப்பதனால் மக்கள் சகஜ நிலைக்கு திரும்பியது போல் தான் இருக்கிறது. சென்ற வாரம் வெளியே சென்ற போது கூட, இன்னமும் முகக்கவசம் அணியாத முகங்களை பார்க்க முடிந்தது. அவர்களின் அறியாமையோ, தைரியமோ, அலட்சியமோ ஏதோ ஒன்று பிரமிக்க வைக்கிறது. 

திருவரங்கத்திலும் தொற்று எண்ணிக்கை கூடிக் கொண்டே தான் இருக்கிறது. அவ்வப்போது, அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் முகாம்கள் நடத்தப்படுகின்றன! தயக்கம் அல்லது பயத்தால் அறிகுறி இருந்தாலும் வெளியே வருவதிலும் சிக்கல். 

ஆன்லைன் வகுப்புகள்: 

ஆன்லைன் வகுப்புகளைப் பற்றி ஒருபுறம் அன்றாடம் ஏதேனும் அறிவிப்புகள் வந்தபடியே இருக்கின்றன. இவை எல்லாவற்றையும் கடந்து வருவோம் என்ற நம்பிக்கை மட்டுமே மிச்சம் உள்ளது! நல்லது நடக்கும் என்று நம்புவோம். 

ஆதியின் அடுக்களை – கொண்டக்கடலை வடை: 


கடந்த சனிக்கிழமை அன்று ”ஆதியின் அடுக்களை” யூட்யூப் சேனலில் மாலை நேர ஸ்நாக்ஸ் ஒன்றாக “கொண்டக்கடலை வடை” செய்முறை பகிர்ந்துள்ளேன். இருப்பதிலேயே கடினமானது பின்குரல் கொடுப்பது தான் என்று சொல்வேன். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அனுபவம். 

மகள் கட்டை விரலை உயர்த்தி காண்பித்துக் கொண்டே இருக்கும் போது தான் "லைக் பண்ணுங்க" என்று சொல்லணும் என்று ஞாபகமே வரும். அதற்குள் வீடியோ முடிந்து விடும். 

இதோ இணைப்பு.... 


மெஹந்தி: 

மகளின் சேனலில் இந்த வாரம், மெஹந்தி போடுவதை அழகாக வீடியோவாக தந்திருக்கிறாள். 

இணைப்பு இதோ.... 


நேரம் கிடைக்கும் போது இந்த வாரத்தில் வெளியிட்ட வீடியோக்களை பார்த்து, உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்களேன். 

எதிர்பார்ப்பு இல்லா வாழ்வு!! 

என் சிறுவயது கனவு மருத்துவராக வேண்டும் என்பதே! பெற்றோர் எடுத்துச் சொல்லி "நம்ம குடும்பச் சூழ்நிலைக்கு நீ எவ்வளவு மார்க் எடுத்தாலும் எங்களால் படிக்க வைப்பது சிரமம்" என்றார்கள். ஏற்றுக் கொண்டேன்! 

பத்தாம் வகுப்பில் கடைசி மூன்று மாதங்கள் மட்டுமே ட்யூஷனுக்குச் சென்றேன். அந்த ஆசிரியரின் வழிகாட்டுதலில் பாலிடெக்னிக்கில் சேர்ந்தால் மூன்று வருட டிப்ளமோ முடித்தால் பார்ட் டைம் B.E பண்ணலாம் என்பதை புரிந்து கொண்டேன். 

அரசு பாலிடெக்னிக்கில் இடம் கிடைத்தது. ஆனால் ஒரு மார்க் வித்தியாசத்தில் நான் கேட்ட E.C.E (Electronic and Communication Engineering) கோர்ஸ் கிடைக்கவில்லை. Mechanical Engineering தான் கிடைத்தது. அதையும் ஏற்றுக் கொண்டு படித்தேன். 

டிப்ளமோவும் முடித்து வெளியே வந்தேன். B.E சேர முடியாத சூழல். அம்மாவின் எதிர்பாராத மருத்துவச் செலவுகள். சில இடங்களில் பணிபுரிந்தேன். Mechanical engineering சார்ந்து சில கோர்ஸ்களை முடித்தேன். குடும்பச் சூழல் காரணமாக இருபது வயதில் திருமணம்!! 

வாழ்க்கை வேறு ஒரு கோணத்தில் திசை திரும்பியது. குடும்பம், குழந்தை என நேரங்கள் கடந்து செல்கிறது! எதையும் ஏற்றுக் கொண்டு தான் இருக்கிறேன். எதற்காகவும் அடம் பிடித்தது இல்லை. ஆசைப்பட்டாலும் அது நிறைவேறாது என்பது தெரியும். என் பெற்றோரும் வற்புறுத்தியதில்லை. எடுத்துச் சொன்னால் நானே புரிந்து கொள்வேன். 

மாணவ மணிகளே மனஉறுதியோடு அதேசமயம் வளைந்து கொடுத்து வாழ்ந்தால், வாழும் நாட்களை இனிமையாக்கிக் கொள்ளலாம்! தற்கொலை என்பது முடிவே அல்ல! 

***** 

இன்றைய பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை பின்னூட்டமாக பகிர்ந்து கொள்ளலாமே! மீண்டும் ஒரு பதிவின் வழி சந்திக்கும் வரை… 

நட்புடன், 



ஆதி வெங்கட்

34 கருத்துகள்:

  1. கொண்டைக்கடலை வடை! ஹாஹாஹா, ஆதி செய்யணும்னு ஏற்பாடு பண்ணிப் பண்ணி இருக்காங்க. நாமதான் தனி ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ ரகமாச்சே. கொண்டைக்கடலை வீணாகிவிடுமோனு நீரில் நனைத்து முளைக்கட்டி வைத்திருந்ததைக் கொஞ்சம் எடுத்து ஃபலாஃபல் மாதிரிச் செய்ய நினைச்சுக் கடைசியில் வடைகளாக்கினேன். இதையும் ஒரு மாதிரி ஃபலாஃபல் எனலாம். இஃகி,இஃகி,இஃகி! ஆதியின் செய்முறையை முகநூலில் போட்டப்போவே பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கொண்டக்கடலை வடையை வீடியோவாக எடுத்து இரண்டு வாரங்களாச்சு மாமி..:) வாரம் ஒரு வீடியோ என்பதால் என்னிடம் இரண்டு வீடியோக்கள் கைவசம் இருக்கும்..அது போக இந்த வடையை முதல்முறையா செய்து பார்த்தது சில வருஷங்களுக்கு முன் ஒரு போகிப்பண்டிகை நாளில்..

      ஃபலாஃபல் என்றால் என்ன என்று புரியலை...நீங்க சமீபத்தில் இந்த வடை செய்தீர்களா என்றும் எனக்குத் தெரியலை..:)

      நீக்கு
    2. // ஃபலாஃபல்..//

      இதன் சரியான உச்சரிப்பு - Felafil...

      அரேபியர்களுக்கு பிடித்தமான பெருங்காராமணி வடை...
      இதற்குத் தாயகம் எகிப்து என்கிறார்கள்...

      இதற்கான செய்முறையை இன்னும் கொஞ்ச நேரத்தில் தருகிறேன்.. இப்போது வேலை நேரம்...

      நீக்கு
    3. துரை சரியான உச்சரிப்பு என்னனு சொல்லி இருக்கார் பாருங்க ஆதி. நான் செய்ததின் சுட்டி தரேன். நான் அரபு நாடுகளில் செய்யறாப்போல் எல்லாம் பண்ணலை. சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா கொஞ்சம் உப்பு, காரம் சேர்த்து! சுட்டி தேடித் தரேன்.

      நீக்கு
    4. Felafil! புதியதோர் உணவு பதார்த்தம் எனக்கு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
    5. உங்கள் செய்முறை பார்க்கிறேன் கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    6. சுட்டி தந்ததற்கு நன்றி. பார்க்கிறேன் கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. ஆதி படிப்பைப் பற்றி எழுதி இருப்பது போல் தான் கிட்டத்தட்ட எனக்கும். D.Com., படிப்பில் சேர மதுரையில் மகளிர் பாலிடெக்னிக்கில் முயற்சி செய்திருக்க அப்பா ஒத்துக்கொள்ளவில்லை. பின்னர் தனியாகப் படித்துக் கொண்டு வந்தேன். கட்டணம் இல்லாமல் சொல்லிக் கொடுத்தார் எங்க வாத்தியார். அதையும் பாதியில் நிறுத்தும்படி ஆச்சு! ஆதி போல எனக்கும் கல்யாணம் 19 வயதில் ஆனதால் அதற்குள் வேலையும் கிடைத்ததால் படிப்பை நிறுத்தும்படி ஆச்சு. பல ஆண்டுகள் கழிச்சுக் குழந்தைகள் வளர்ந்த பின்னால் ஹிந்தி படிச்சு அதில் பட்டமும், பிஜி டிப்ளமாவும் பண்ணினேன். அவரவருக்கு எது கிடைக்க வேண்டுமோ அது கூடாது. குறையாது. அதுக்கு மேலும் கிடைக்காது. இதை நன்கு உணர்ந்திருக்கேன் என்பதால் வருத்தமெல்லாம் இல்லை. கிடைத்தவரை சந்தோஷமே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டது சிறப்பு கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  3. கொண்டைக்கடலை வடை - பார்க்கிறேன். மகள் இங்கு இந்த வடையைத்தான் சப்பாத்தி நடுவில் வைத்து இன்னும் இலை, சட்னி போன்றவைகளோடு சேர்த்து ஃபிலாஃபில் என்று தருவாள்.

    எழுதி எழுதிச் செல்லும் விதி எழுதி எழுதி மேற் செல்லும் என நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சப்பாத்தி நடுவில் வைத்து! வடக்கில் வடை, போண்டா போன்றவற்றை இரண்டு ப்ரெட் ஸ்லைஸ்களுக்கு இடையில் வைத்து சாப்பிடுவது உண்டு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

      நீக்கு
  4. தளர்வுகளை நம் மக்கள் தவறாகப் பயன்படுத்துவது போலவே தெரிகிறது.
    வாழ்க்கை என்பதானது கிடைத்த சந்தர்ப்பம். தற்கொலை தீர்வல்ல. துணிவோடு எதிர்கொள்ளவேண்டும் இளைஞர்களே, மாணவ மாணவிகளே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தவறாகப் பயன்படுத்தும் மக்கள்! உண்மை தான் முனைவர் ஜம்புலிங்கம் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. கொண்டக்கடலை வடை இதுவரை சாப்பிட்டதில்லையே...

    கொரோனாவை இப்போது யாரும் மதிப்பதில்லை. காரணம் வயிற்றுப்பசியை போக்குவதே முக்கியம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கொரோனாவை இப்போது யாரும் மதிப்பதில்லை// உண்மை கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. உதவி செய்யும் மகளுக்கு பாராட்டுகள்... வாழ்த்துகள்...

    வறுமையான சூழலிலும் தன் குடும்பத்திற்காக மருத்துவம் படிக்க நினைப்பது சரியே... அவர்கள் மருத்துவரானால் தான் மருத்துவம் சேவையாக இருக்கும்...

    \!/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. நான் கொண்டைகடலை வடை செய்தேன் ஆதி.
    நன்றாக இருந்தது. வெங்காயம் போட்டு செய்தேன்.

    தேவகோட்டை ஜி சொல்வது போல் வீட்டில் இருந்து வேலை செய்ய முடியாதவர்கள் ஆபீஸ் போய் தானே ஆக வேண்டும். காய்கறி, இளநீர், கீரை விற்பவர்கள் குடியிருப்புகளுக்கு வருகிறார்கள் அவர்கள் எத்தனை நாளுக்கு கொரோனாவிற்கு பயபட்டுக் கொண்டு வீட்டில் இருக்க முடியும் வயிறு இருக்கே! என்பார்கள். மற்றவர்கள்
    அவசியமில்லாமல் வெளியே போவதை தவிர்க்கலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கொண்டக்கடலை வடை நீங்களும் செய்து பார்த்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.

      அவசியம் இல்லாமல் வெளியே போவதை தவிர்க்கலாம் - அது நிச்சயம் செய்ய வேண்டியது. அப்படி அவசியம் இல்லாமல் வெளியே சுற்றுபவர்கள் நிறையவே இருக்கிறார்கள்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. Felafil எனப்படும் அரேபிய வடை செய்முறை.

    காராமணி எனும் பயறு வகை Feva Beans..
    இது உடைக்கப்பட்டால் Split Feva Beans.. இணையத்தில் தேடி படம் பார்த்துக் கொள்க..

    இது ஒரு கிலோ என்றால் அரை கிலோ வெள்ளைக் கொண்டைக் கடலை.. கால் கிலோ கடலைப் பருப்பு..

    இவை குறைந்தது பத்து மணி நேரம் ஊற வேண்டும்..

    தண்ணீர் சுத்தமாக வடித்த நிலையில்
    கால் கிலோ அளவுக்கு Leeks எனப்படும் கோரைப் புல், அதே அளவுக்கு கொத்தமல்லித் தழை, கால் கிலோ வெங்காயம் (பெரிய வெங்காயம் தான் இஷ்டம்), கையளவு பூண்டு, தேவையான உப்பு - இவற்றை எல்லாம் போட்டு தண்ணீர் விடாமல் கரகரப்பாக அரைத்து எடுத்து 100 கிராம் கொத்தமல்லி விதைகளைப் போட்டுப் பிசைந்து கொண்டு

    இந்தக் கலவையை இதற்கான அச்சுகளில் பதிந்து வெள்ளை எள்ளில் புரட்டி கொதிக்கும் எண்ணெயில் இட்டு கருகாமல் எடுக்க வேண்டும்..

    ராணி வாராந்தரியில் வந்த மாதிரி -
    இதுவே ஃபிலாஃபில் எனப்படுவது... குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள்..

    அராபியர்களின் முக்கிய உணவுகளில் ஒன்று..
    ரொட்டிகளுக்கு இடையே பொதிந்து சாப்பிடுவார்கள்...

    நேற்று முன்தினம் கூட இங்கு சமையற் கூடத்தில் எகிப்திய சமையலர்கள் அவர்கள் தின்பதற்காக செய்து கொண்டார்கள்..

    அவர்களது குடல் நிறைந்ததும் மற்றவர்களை அழைத்தார்கள்...

    மஹாளய பட்சம் அனுசரிப்பு...நான் திரும்பிப் பார்க்க வில்லை..

    இருந்தாலும் எகிப்தியர் பங்களாதேஷிகளுடன் உணவருந்தப் பிடிக்காது..

    சும்மா ஒப்புக்குத் தான் அழைப்பார்களேயன்றி உள்ளார்ந்தபடிக்கு அழைக்க மாட்டார்கள்..

    அராபியர்களில் பெரும்பாலோர் இப்படித்தான்..

    அதெல்லாம் ஒருபுறம் கிடக்க -
    Feva Beans, Leeks நம் ஊரில் கிடைப்பது அரிது..

    இவை இல்லாமல் செய்து பாருங்கள்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதை ஏற்கெனவே ஒரு யூ ட்யூப் சானலில் பார்த்தேன். 3,4 வருஷங்கள் முன்னர். கிட்டத்தட்ட நம்ம ஊர் பட்டர் பீன்ஸ் என்று சொல்லலாம். கொடைக்கானலில் நிறையக் கிடைக்கும். இப்போதெல்லாம் பார்க்க முடியலை. ஆனால் லீக்ஸ் நம்ம ஊரில் கிடைக்குமா சந்தேகமே!

      நீக்கு
    2. leeks கிட்டத்தட்ட வெங்காயத் தாள் மாதிரி இருக்குமோ? அதுவும் ஒரு வகைப்பூண்டு இனம் தான் என நினைக்கிறேன்.

      நீக்கு
    3. ஆமாம்... Leeks வெங்காயத் தாள் மாதிரி நீர்ச் சத்து நிறைந்ததாக இருக்கும்...

      நம்ம ஊர்ப் பக்கம் கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை...

      நீக்கு
    4. சுவையான குறிப்பு. நீங்கள் சொல்லி இருப்பவற்றில் leeks இங்கே கிடைக்கிறது, இணையத்தின் வழி பெற முடியும். அவை இல்லாமல் செய்து பார்க்கலாம் துரை செல்வராஜூ ஐயா. குறிப்பினை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    5. Leeks இங்கே தில்லியில் கிடைக்கிறது - இணைய வழியும் கிடைக்கிறது கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    6. வெங்காயத் தாள் மாதிரி தான் இருக்கிறது கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    7. இணையத்தில் படம் பார்த்த பிறகு தெரிந்தது, தில்லியிலும் கிடைக்கிறது என!


      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரி

    நல்ல பதிவு. கதம்பம் அருமை. ஒவ்வொரு விஷயமும் தெளிவாக தந்துள்ளீர்கள். கொண்டைக் கடலை வடை நன்றாக உள்ளது. ஒரு நாள் செய்து பார்க்கிறேன். தங்கள் மகளின் உதவிகள் தங்களுக்கு பெருமிதம் தரக்கூடியது. அவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். தங்கள் கல்வி குறித்து கூறியதும் அறிந்து கொண்டேன். நம் இளவயது கல்வி கனவுகள் சில சமயம் கனவுகளாகவே போய் விடுகிறது. நம் வாரிசுகள் மூலம் அதை நிறைவேற்ற இறைவன் துணை புரிய வேண்டும் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      கதம்பம் பதிவின் வழி சொன்ன விஷயங்கள் பற்றிய உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. அதேசமயம் வளைந்து கொடுத்து வாழ்ந்தால், வாழும் நாட்களை இனிமையாக்கிக் கொள்ளலாம்! தற்கொலை என்பது முடிவே அல்ல
    இவை வைர வரிகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இனியன் ஐயா.

      நீக்கு
  11. தளர்வுகளை நம் மக்கள் தவறாகப் புரிந்துகொண்டார்களே எனத் தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....