ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

FRIENDS – குறும்படம்

அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பொழுதை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். 

முன்னேற்றம் இயற்கையின் விதிகளில் ஒன்றல்ல. மனித சமுதாயம் வாழுமா, வீழுமா என்பது வானிலுள்ள விண்மீன்களைப் பொறுத்தல்ல. நம்மைப் பொறுத்தே – டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன். 


இந்த வாரமும் நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு குறும்படம் வெளிநாட்டுக் குறும்படம் தான் – ஆங்கிலத்தில் சப் டைட்டில்கள் உண்டு! மொழி தெரியாது என்ற கவலை வேண்டாம். ஒரு இளைஞன். கையில் கிடாருடன் பள்ளிக்குச் சென்றாலும் அவன் அதை வாசித்துப் பார்த்ததில்லை. யாரிடமும் அவன் பேசுவதும் இல்லை. அவனை மற்ற மாணவர்கள் எப்போதும் கிண்டல் செய்வதே வழக்கம். ஒரு நாள் அவன் நடைபாதையில் இசைத்துக் கொண்டிருப்பதை இரண்டு சக மாணவர்கள் பார்க்கிறார்கள் – எதற்காக அப்படி இசைக்கிறான் அந்த மாணவன் – பின்னணியில் இருக்கும் சோகம் என்ன? என்பதை காணொளியினைக் கண்டால் உங்களுக்கும் புரியும். மனதைத் தொடும் இந்தக் குறும்படத்தினைப் பாருங்களேன்!

        

காணொளியாக இணைத்திருந்தாலும், சில சமயங்களில் யூவில் சென்று தான் பார்க்க வேண்டும் என இணையம் அடம் பிடிக்கலாம்! அதனால் கீழே யூட்யூப் சுட்டியும் கொடுத்திருக்கிறேன். அங்கேயும் சென்று பார்க்கலாம்! 


நண்பர்களே, இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொண்ட குறும்படம் உங்களுக்குப் பிடித்ததா? பதிவு பற்றிய உங்கள் கருத்துகளைச் சொல்லுங்களேன். விரைவில் வேறு ஒரு பதிவுடன் மீண்டும் ச[சி]ந்திப்போம்... 

நட்புடன் 



வெங்கட் நாகராஜ் 
புது தில்லி

22 கருத்துகள்:

  1. குறும்படம் கண்டேன் ஜி அவனது குடும்ப பின்ணணி வேதனையானது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வேதனையான நிலை தான் கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. வாரம் ஒருமுறை மனதை நெகிழ (அழவும்) வைத்து விடுகிறீர்கள் ஜி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாரம் ஒரு முறை அழவும் வைத்து விடுகிறீர்கள் - அடடா... மனதைத் தொடும் விதமான படங்கள் பார்க்கும்போது கொஞ்சம் தடுமாறித்தான் போகிறோம் இல்லையா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  3. பகிர்வுக்கு நன்றி. பார்க்கின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது பாருங்கள் நாகேந்திர பாரதி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  5. குறும்படம் கண்ணில் நீரை வரவழைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  6. குறும் படத்தின் செய்தி சொல்வது போல - நல்ல சம்பவங்கள் நாள்தோறும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன...

    நல்ல நண்பர்கள் இருக்கையில்
    நன்மைகள் தான் கூடுகின்றன...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //நல்ல நண்பர்கள் இருக்கையில் நன்மைகள் தான் கூடுகின்றன// உண்மை துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  7. வணக்கம் சகோதரரே

    குறும்படம் கண்டேன். மனதை கலங்க வைத்தது. அவனை புரிந்து கொண்ட நண்பர்கள் கிடைத்த சந்தோஷத்தில் அவன் அம்மா விரைவில் நலம் பெறட்டும். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      குறும்படம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. வரேன் அப்புறமா, அநேகமா நாளைக்கு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முடிந்த போது பாருங்கள் கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
    2. அடடா... சில படங்கள் நம்மை இப்படிச் செய்து விடுவதுண்டு.

      தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....