செவ்வாய், 1 செப்டம்பர், 2020

You Tube Channel-இல் இந்த வாரம்… - ஆதி வெங்கட்

 


அனைவருக்கும் இனிய காலை வணக்கம்! 

சென்ற வாரத்தில் நாங்கள் துவங்கிய யூ ட்யூப் சேனல்கள் பற்றிய தகவலை உங்களுடன் பகிர்ந்து கொண்டது நினைவிருக்கலாம். “ஆதியின் அடுக்களை” என்ற பெயரில் ஒரு சேனலும், “Roshni's Creative Corner” என்ற பெயரில் ஒரு சேனலும் துவங்கி இருக்கிறோம். இவற்றில் இந்த வாரத்தின் சனிக்கிழமை அன்று வெளியிட்ட காணொளிகளைப் பார்க்கும் முன்னர் இதற்காக மகள் செய்த ஒரு க்ரியேட்டிவ் விஷயம் பற்றி பார்க்கலாம்! 

ரோஷ்ணி’ஸ் கார்னர்: 




சமையல் செய்வதை வீடியோவாக எடுப்பதோ, ஓவியம் வரைவதை வீடியோவாக எடுப்பதோ எதுவாக இருந்தாலும் அலைபேசியை ஒரு கையில் வைத்துக் கொண்டு எடுப்பது மிகுந்த சிரமமாக உள்ளது! அலைபேசியின் நடுவில் கேமரா இருப்பதால் ஒரு கையில் பிடித்துக் கொண்டு எடுக்கும் போது கைவிரல் கேமராவில் தெரிகிறது. 🙂 

கைகளில் வைத்திருந்து எடுப்பதால் வீடியோவில் நடுக்கம் மற்றும் அசைவு இரண்டுமே இருக்கும். Tripod வாங்கலாம் என்றால் எது நல்லது என்று புரியவில்லை! 

வீட்டில் செல்ஃபி ஸ்டிக் ஒன்று இருந்தது. மண்ஜாடி ஒன்றும் உபயோகமில்லாமல் இருந்தது. அதனுள் cardboard உருளை ஒன்றை வைத்து, செல்ஃபி ஸ்டிக்கை பொருத்தி மகள் செய்திருக்கும் புது Tripod இது. எப்படியிருக்கு என்று சொல்லுங்க நட்புகளே! 

ஆதியின் அடுக்களை – சிறுதானிய அடை: 

இந்த வாரம் எனது சேனலில், சிறுதானியம் கொண்டு அடை செய்வது எப்படி என்பதை பகிர்ந்து கொண்டிருக்கிறேன். காணொளியாக பகிர்ந்ததோடு அங்கேயே குறிப்புகளும் கொடுத்திருக்கிறேன். இணைப்பு கீழே! பார்த்துவிட்டு, உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள். ஸப்ஸ்க்ரைப் செய்து கொண்டால் ஒவ்வொரு புதிய காணொளி வெளிவந்ததும் நீங்கள் பார்க்க வசதியாக இருக்கும்! 



Roshni's Creative Corner: கணேஷா ஓவியம் – ஸ்டெப் பை ஸ்டெப்! 

மகளின் சேனலில் இந்த வாரம் வெளியிட்ட காணொளி ஒன்று – பாருங்களேன்!


சேனல்களை ஸப்ஸ்க்ரைப் செய்து கொண்ட அனைவருக்கும் நன்றி. ஸப்ஸ்க்ரைப் செய்து கொள்ளாதவர்களும் செய்து கொண்டால் மகிழ்ச்சி. முடிந்த வரை ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் ஒரு காணொளி வெளியிட எண்ணமிருக்கிறது. காணொளிகள் பற்றிய உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். தொடர்ந்து சந்திப்போம். 


நட்புடன், 


ஆதி வெங்கட்

36 கருத்துகள்:

  1. இளங் காலைப் பொழுதில் இனிமையெலாம் வாழ்க!..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நலமே விளையட்டும் துரை செல்வராஜூ ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. அருமை. வாழ்த்துகள் இருவருக்கும்

    பதிலளிநீக்கு
  3. மகிழ்ச்சி வாழ்த்துக்கள்... சிறுதானிய அடைகாண ஆவலுடன்.. குழந்தைகள் எப்போதும் படைப்பாளிகள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி கீதா சகோ.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  4. இருவருக்கும் வாழ்த்துகள் யூட்டியூப் செல்கிறேன்.
    புதிய முயற்சிகள் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிவபார்கவி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிவபார்கவி.

      நீக்கு
  7. இருவருக்கும் வாழ்த்துக்கள்.
    சனிக்கிளமையே நோட்டிஃபிகேஶன் வந்தவுடன் பார்த்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி அரவிந்த்.

      சப்ஸ்க்ரைப் செய்திருப்பது அறிந்து மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  8. Epic சேனலில் மஹாபாரதம் போன்ற கதைகளை கோட்டோவியமாக வரைவதை காண்பிப்பர்.  ரோஷ்ணி வரைவது அது போன்றே உள்ளது.
    https://www.youtube.com/watch?v=sn4eryjFHVo&t=29s


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேலதிகத் தகவலுக்கு நன்றி ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி தனபாலன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  10. காணொளிகள் சிறப்பு...
    சிறு தானிய அடை காலத்தின் அவசியம்...

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறுதானிய அடை - காலத்தின் அவசியம் - உண்மை. இப்போது மீண்டும் பயன்பாடு அதிகரித்திருக்கிறது.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஐயா.

      நீக்கு
  11. பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி அப்பாவி தங்கமணி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  12. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுப்ரேம் ஜி.

      நீக்கு
  13. மகள் செய்திருக்கும் புது Tripod இது. எப்படியிருக்கு என்று சொல்லுங்க நட்புகளே//

    மிக நன்றாக இருக்கிறது. ரோஷ்ணியின் கைத்திறமைக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.!

    இருவருக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி கோமதிம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  14. சிறப்பு. இருவருக்கும் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி ராமலக்ஷ்மி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  15. வடிவம்நல்ல நம்பிக்கையுடன் வரைகிறார் அதுதான் தும்பிக்கை ஐயனை தேர்ந்தெடுத்தாரோ பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜி.எம்.பி. ஐயா.

      நீக்கு
  16. எல்லாவற்றையும் முகநூலிலும் பார்த்தேன், ரசித்தேன். ரோஷ்ணியின் திறமைக்குக் கேட்கவே வேண்டாம். சுத்திப் போடுங்கள். சிறுதானிய அடை நானும் அநேகமாக எல்லாவற்றிலும் செய்து பார்த்திருக்கேன். உங்கள் செய்முறையும் நன்றாக இருக்கிறது. தொடர்ந்து மேன்மேலும் வெளியீடு நடக்க வாழ்த்துகள்.
    Epic is a good channel. I like it very much. But it is not coming here. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாழ்த்தியமைக்கு நன்றி கீதாம்மா.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....