வியாழன், 2 ஜூன், 2022

யாரிவள் - தொடர் - ஆதி வெங்கட் - பகுதி முப்பத்தி மூன்று – சிறந்த மனிதர்

 

அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட நதிக்கரை நகரங்கள் பகுதி மூன்று பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


மகள்கள் கேட்பவற்றை முடிந்தவரை முடியாது என்று சொல்லிவிடக் கூடாது என்கிற வாழ்க்கையை தான் அப்பாக்கள் வாழ ஆசைப்படுகிறார்கள்.   


******


யாரிவள் - பகுதி ஒன்று இங்கே! பகுதி இரண்டு இங்கே! 

பகுதி மூன்று இங்கே!  பகுதி நான்கு இங்கே! 

பகுதி ஐந்து இங்கே! பகுதி ஆறு இங்கே!

பகுதி ஏழு இங்கே! பகுதி எட்டு இங்கே! பகுதி ஒன்பது இங்கே!

பகுதி பத்து இங்கே! பகுதி பதினொன்று இங்கே!

பகுதி பன்னிரெண்டு இங்கே! பகுதி பதிமூன்று இங்கே!

பகுதி பதினான்கு இங்கே! பகுதி பதினைந்து இங்கே! 

பகுதி பதினாறு இங்கே! பகுதி பதினேழு இங்கே!

பகுதி பதினெட்டு இங்கே! பகுதி பத்தொன்பது இங்கே!

பகுதி இருபது இங்கே! பகுதி இருபத்தி ஒன்று இங்கே! 

பகுதி இருபத்தி இரண்டு இங்கே! பகுதி இருபத்தி மூன்று இங்கே!

பகுதி இருபத்தி நான்கு இங்கே! பகுதி இருபத்தி ஐந்து இங்கே! 

பகுதி இருபத்தி ஆறு இங்கே! பகுதி இருபத்தி ஏழு இங்கே! 

பகுதி இருபத்தி எட்டு இங்கே! பகுதி இருபத்தி ஒன்பது இங்கே!

பகுதி முப்பது இங்கே! பகுதி முப்பத்தி ஒன்று இங்கே! 

பகுதி முப்பத்தி இரண்டு இங்கே!

 

யாரிவள்! பகுதி முப்பத்தி மூன்று - சிறந்த மனிதர்



சுட்டிப்பெண் அப்பாவின் அலுவலகத்துக்கு அருகே உள்ள ஹிந்தி வகுப்பில் சேர்ந்து விட்டாள். முழுநேர பள்ளியாக இருந்த போது மாலை பள்ளி விட்டு வந்ததும் உடை மாற்றிக் கொண்டு அம்மா தரும் ஸ்நாக்ஸையும், பாலையும் சுவைத்து விட்டு அவள் வசித்த ஏரியாவிலிருந்து பேருந்தைப் பிடிப்பாள். டவுன்ஹாலில் இறங்கி அப்பாவின் ஆஃபீசுக்குச் செல்வாள்.


அப்பா தன் இருக்கையில் அவளை அமரச் சொல்லி விட்டு தன் அலுவலக நண்பர்களிடம் உரையாடி விட்டு இவளை அழைத்துக் கொண்டு எதிரே இருக்கும் அரோமா பேக்கரிக்கு அழைத்துச் செல்வார். ஏதாவது சாப்பிடறயா! 'அம்மா என்ன சாப்பிடக் குடுத்தா!' என்று கேட்டுக் கொண்டே 'டீ கேக் சாப்பிடு! சூடா பால் குடிக்கிறியா! நீ கேக் சாப்பிடு! நா பாலை ஆத்தி தரேன்! என்று ஆற்றித் தருவார்.


பின்பு அங்கிருந்து இருவருமாக பேசிக் கொண்டே ஹிந்தி செண்டருக்கு வருவார்கள். வழியில் தென்படும் கடைகளைப் பற்றியும், அங்கு உலாவும் மக்கள் பற்றியும் பேசியவாறு வருவார் அப்பா. அது  இவளுக்கும் அப்பாவுக்குமான தனிப்பட்ட நேரமாக இருக்கும். 


இவளை விட்டுவிட்டு அப்பா சிலநாள் மீண்டும் அலுவலகத்துக்குச் சென்று விட்டு வகுப்பு முடிந்ததும் இவளையும் அழைத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்புவார். இல்லையென்றால் 'நா வீட்டுக்கு கிளம்பறேன்! நீ கிளாஸ் முடிஞ்சவுடனே பஸ் பிடிச்சுண்டு வந்துடு என்ன! இந்த ரோட்ல பஸ், கார்னு வண்டி நிறைய வந்துண்டு இருக்கும்! ஓரமா பார்த்து வா! கையில சில்லறை இருக்கா? இந்தாப் பிடி! ரோட்ல யார்ட்டயும் பேசாத! நேரா கிளம்பி வந்துடு! ஜாக்கிரதை! என்று சொல்லிச் செல்வார்.


பள்ளியில் இவளுக்கு மதிய ஷிஃப்ட் என்றான போது காலையிலேயே தயாராகி யூனிஃபார்முடன் பேருந்தைப் பிடித்து ஹிந்தி செண்டருக்கு சென்று விடுவாள். வகுப்பு முடிந்ததும் வீட்டுக்கு வந்து மதிய உணவை சாப்பிட்டு விட்டு பள்ளிக்கு நடந்து செல்வாள்.


அந்த ஹிந்தி வகுப்பில் இவள் மட்டும் தான் பள்ளி மாணவியாக இருந்தாள். மற்ற எல்லோரும் வேலைக்காகவும், அலுவலகத்தில் இன்க்ரிமெண்ட் கிடைக்கவும் படிக்க வந்த அக்காக்களும், அண்ணன்களும் தான்..🙂 இப்படியாக அந்த செண்டரில் கற்று விஷாரத்தின் முதல் நிலையை ஒருவழியாக பாஸ் செய்து விட்டாள்.


இவளைப் பொறுத்தவரை அவள் வாழ்வில் சிறந்த மனிதராக அப்பா தான் திகழ்ந்தார். அப்பாவைப் போல் அன்பு செலுத்தவும், இவளை பாதுகாக்கவும் இன்னொரு ஆண் மகனால் முடியுமா! அப்பாவைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதி விடுமளவு விஷயங்களை வைத்திருந்தாள். அதுபோல் அவள் வாழ்வில் வரப்போகும் அந்த மனிதரைப் பற்றியும் எழுதுவாளா? அவருக்காக யாரிடமாவது பரிந்து பேசுவாளா! என்பதெல்லாம் போகப் போகத் தான் தெரியும்! வாழ்க்கை மிகவும் புதிரானது!!


இன்னும் என்னவெல்லாம் செய்தாள் இந்த சுட்டிப்பெண்!! தொடர்ந்து பார்க்கலாம்!


*****

 

இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…

 

நட்புடன்

 

ஆதி வெங்கட்

18 கருத்துகள்:

  1. அப்பாக்களுக்கு மகள் என்றுமே ஸ்பெஷல். மகள்களுக்கும் அப்பாதான் முதல் ஹீரோ.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஶ்ரீராம்.

      நீக்கு
  2. அப்பா ஓர் காவியம் எல்லா மனிதர்களுக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  3. அப்பா உங்களுக்கு ஹீரோவாக இருந்திருப்பதில் ஐய்மே இல்லை. பொதுவாக எல்லாப் பெண் குழந்தைகளுக்குமே அப்பா ஹீரோதான். அது போல் அப்பாவிற்கு மகள்/கள்.

    நாங்கள் கூட்டுக் குடும்பத்தில் வாழ்ந்ததாலோ என்னவோ, எங்களுக்குத் தனிப்பட்ட கவனம் கிடைத்ததில்லை. பத்தோடு பதினொன்றாக என்று சொல்வது போலத்தான்!! அது ஒரு வகை அனுபவங்கள்.

    வல்லிம்மா கூடத் தன் அப்பாவைப் பற்றித்தான் இப்படிப் பெருமையாக எழுதியிருக்கிறார்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  4. அப்பா மகள் உறவு என்பது தனிதான். உங்கள் அப்பாவின் அன்பான கவனிப்பு அருமை.

    நான் ஆண்மகன் என்றாலும் கூட எனக்கும் என் அப்பாவுடன் நல்ல புரிதல் இருந்தது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் உளங்கனிந்த நன்றி துளசிதரன் ஜி.

      நீக்கு
  5. பதில்கள்
    1. தங்களின் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. சுவாரசியமான தொடர்.
    இயலும்போது திரமதி "arundati battachariya" வின் "Indomitable" நூலை வாசியுங்கள்.
    பின்னால், உங்கள் வாழ்வணுபவங்களை நூலாக படைக்கும்போது, அந்நூல் உற்ற துணையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூல் அறிமுகம் நல்ல விஷயம். அதற்கு நன்றி அரவிந்த். பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி.

      நீக்கு
  7. அப்பாதான் என்றுமே ஹீரோ .

    எங்கள் அப்பா சொல்வார் 'பெண்குழந்தைகளை முக்கியமான இடங்கள் எல்லாம் சென்று காட்டிட வேண்டும் வருபவர் கூட்டிச் சென்று காட்டுவாரோ தெரியாது 'என்று முதலில் அக்காவையும் (எனது எட்டு வயதில் அக்கா திருமணம் நடந்தது.) பின் என்னையும் பல இடங்களுக்கும் கூட்டிச் சென்று காட்டினார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் அனுபவங்களையும் இங்கே பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

      நீக்கு
  8. மகள், தந்தை உறவை மிகவும் அருமையாக பதிவு செய்ததற்காக வாழ்த்துக்கள.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி இராமசாமி ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  9. வணக்கம் சகோதரி

    தொடர் நன்றாகச் செல்கிறது. அப்பா மகளின் இருவருகிடையேயான பாசங்களை விளக்கி கூறி வருவதற்கு மிக்க நன்றி. தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவு குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....