அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். அனைவருக்கும் மனம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த புத்தாண்டினை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
THIS YEAR - BREAK A BAD HABIT; LEARN A
NEW SKILL; DO A GOOD DEED; VISIT A NEW PLACE; READ A DIFFICULT BOOK; WRITE AND
SEND A LETTER; TRY A NEW FOOD; TAKE A RISK!
******
சென்ற ஞாயிறு அன்று அலுவலக நண்பர் திரு ப்ரேம் பிஷ்ட் அவர்களின் நந்தி குண்ட் மலையேற்றத்தின் போது எடுத்த சில படங்களை பகிர்ந்து கொண்டிருந்தேன். நந்தி குண்ட் - எங்கே இருக்கிறது? உத்திராகண்ட் மாநிலத்தில் Gகட்வால் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4800 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது நந்தி குண்ட். மத்யமஹேஷ்வர் - கல்பேஷ்வர் என்ற இடங்களுக்குச் செல்லும் பாதையில் அமைந்திருக்கிறது இந்த இடம். ஒன்றரை கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து இருக்கும் இந்த நந்தி குண்ட், மத்யமஹேஷ்வர் கங்கை என அழைக்கப்படும் நதியின் பிறப்பிடமாக இருக்கிறது. மலையேற்றம் செய்து அங்கே செல்வது வழக்கமாக இருக்கிறது. மலையேற்றத்திற்கான ஏற்பாடுகள் செய்யும் பல நிறுவனங்கள் இருந்தாலும் மலையேற்றத்தில் அதிக ஈடுபாடு கொண்ட நண்பர் ப்ரேம் Bபிஷ்ட் போன்றவர்கள் வழிகாட்டிகளின் உதவியுடன் அவர்களாகவே சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.
சென்ற வாரத்தில் பகிர்ந்து கொண்ட நிழற்படங்களின் தொடர்ச்சியாக, அங்கே எடுத்த மேலும் சில நிழற்படங்கள் இந்த ஞாயிறில் நிழற்பட உலாவாக உங்கள் பார்வைக்கு!
******
இந்த வாரத்தின் நிழற்பட உலா பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லியிலிருந்து….
மனிதனால் கொடுக்கப்படாத, கெடுக்கப்படமுடியாத இயற்கையின் அழகு. இயற்கையின் பிரம்மாண்டம். வணங்கத்தொன்றும் இயற்கை இறை.
பதிலளிநீக்குமனிதனால் கெடுக்கப்படாத, கெடுக்கப்படமுடியாத இயற்கையின் அழகு. இயற்கையின் பிரம்மாண்டம். வணங்கத்தொன்றும் இயற்கை இறை.
நீக்குகெடுக்கப்பட முடியாத..... சில ஆண்டுகளுக்கு முன் பத்ரி பகுதியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள், கிராமங்களை கபளீகரம் செய்தது நினைவுக்கு வருகிறது
நீக்குஅதே ஸ்ரீராம்.....அங்கு கெடுக்க முனைந்தால் நெல்லை சொல்லியிருப்பது போல எதிர்வினைகள் நடக்கும்....கண்டிப்பாக இயற்கையோடு மோதி விளையாடக் கூடாது...மனுஷங்களே எங்கிட்ட மோதாதீங்க எனும் இடங்கள் இவை...எந்த கார்ப்பரேட் நிறுவனமும் கை வைக்க முடியாது என்று நினைக்கிறேன்....
நீக்குகீதா
அனைவருக்கும் மனம் நிறைந்த ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்
பதிலளிநீக்குபடங்கள் மிக அழகு. குளிர் காலத்தில் பனி படர்ந்து இருக்கும்.
பதிலளிநீக்குநடக்கும் வழியில் தண்ணீர், தேநீர் போன்றவற்றிர்க்கு வழி உண்டா?
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்
படங்கள் எல்லாமே மிகவும் அழகாக இருக்கிறது.
பதிலளிநீக்குஇனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.
படங்கள் அருமை...
பதிலளிநீக்குஅனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்...
மனதைக் கட்டிப் போடும் இடங்கள்.... படங்கள். மலைகளின் நடுவே பனிச்சிகரம். இருட்டில் சூரியனின் உதய ?வெளிச்சக் கீற்று வாவ்!!! மலைப்பகுதி படங்கள் அனைத்தும் ரசித்தேன் ஜி. நண்பர் பிரேம் Bபிஷ்டுக்குப் பாராட்டுகள் சொல்லிடுங்க...
பதிலளிநீக்குகீதா
நண்பர் வழிகாட்டியின் உதவியுடன் செல்வது நல்ல விஷயம் என்று தெரிகிறது வழிகாட்டிக்கு உள்ளூர் விஷயங்கள் தெரிந்திருக்கும் இல்லையா....கதைகள் உட்பட...
பதிலளிநீக்குமலையேற்றத்தை தொடர்ந்து செய்து வரும் நண்பரை, அவரது நண்பர் குழுவை வியந்து பார்க்கிறேன் பாராட்டுகள். இப்படியான பிரம்மாண்ட இமய மலைத் தொடரையும் நதிகளையும் படங்களில் பார்த்தே வியக்கிறோம் நேரடியான அனுபவம் எனும் போது மனமும் உடலும் புத்துணர்வுடன் இருக்கும்.
கீதா
பில்ட் பாராட்டப் பட வேண்டியவர். அலுவலகப் பணிகளில் கூட அவரது ஈடுபாடு பாராட்டப்பட கூடியது.
பதிலளிநீக்குஉங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபடங்கள் அனைத்தும் அழகு. பார்த்து ரசித்தேன். இயற்கை கொட்டிக் கிடக்கிறது இங்கே.