அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட நிழற்பட உலா - சரஸ் ஆஜீவிகா மேளா 2024 - பகுதி நான்கு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
நமது பிறந்த நாள், முதன் முதலில் பள்ளிக்குச் செல்லும் நாள் (தேதி சரியாக நினைவில் இருக்காது என்றாலும்), திருமண நாள், அலுவலகத்தில் சேர்ந்து பணிபுரிய ஆரம்பித்த நாள் என சில நாட்களை நம்மால் மறக்கவே முடியாது. நான் முதன் முதலில் பணிக்குச் சேர்ந்த நாள் இன்றைக்கும் நினைவில் இருக்கிறது. மும்பை நகரில், முப்பத்தி நான்கு வருடங்களுக்கு முன்னர், முதன் முதலாக பணிக்குச் சேர்ந்த நாளான இன்றைய நாளைக் குறித்த நினைவுகளை இந்த நாளில் திருமதி விஜி வெங்கடேஷ் அவர்கள் இங்கே பதிவாக வெளியிடுகிறார். அவரது அலுவலக அனுபவங்களையும் ஒவ்வொன்றாக எழுதித் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அவையும் வரிசையாக இங்கே வெளிவர இருக்கிறது! - ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.
******
5 ஆகஸ்ட் 1990
வேலை வேண்டி Infab வாசல் மிதித்த நாள்:
வேலவனின் அருளால் வேலை கிடைத்த நாள்;
முப்பது வருட பயணத்தின் ஆரம்ப நாள்;
முடிவில்லா கல்வியின் முதல் நாள்;
கற்றது கைமண் எனினும் கற்பித்தது பெரும் கை;
வற்றாத மழையாக வளம் சேர் வாழ்க்கை;
பெற்றும் கற்றும் கழிந்தது வாழ்நாள்;
கழித்த பொழுதெல்லாம் பொன்னாள்;
சிறு சிறு நினைவுகள் சிரிப்பூட்டும்;
சில சில நினைவுகள் சிலிர்ப்பூட்டும்;
தோழிகள் நினைவுகள் களிப்பூட்டும்;
வாழி நீ என வாழ்த்த வைக்கும்;
மலரும் நினைவுகள் தொடர்ந்து வரும்;
தொடரும் கனவுகள் மகிழ்ச்சி தரும்;
ஞாபகப் பெட்டகம் திறந்து விடும்;
நினைவு மணிகள் சிதறி விழும்;
அசை போடும் மனதில் அலைகள் எழும்;
அவை அனுபவ நுரைகளைக் கரை சேர்க்கும்;
கால் நனைத்து மகிழும் ஆழி(கடல்) அது;
வாழ்நாள் முழுவதும் போதாது;
🙏🏻🙏🏻🙏🏻
மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
5 ஆகஸ்ட் 2024
அனுபவம் வரப்போகிறது என்று பார்த்தால் அருந்தமிழ்க்கவி மட்டும் தந்த கவிதாயினிக்கு வரவேற்புகள்! கவிதையிலேயே இனியும் கற்ற பெற்ற அனுபவங்கள் தொடருமோ?
பதிலளிநீக்குஅனுபவங்கள் தொடரும்! விஜி மனது வைத்தால்! :)
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.
நீங்கள் அனுப்பிய அனுபவப் பக்கங்களில்
பதிலளிநீக்குமுன்னுரை பக்கத்தை மட்டும்
முதலில் தந்திருக்கிறார் வெங்கட்
இனி அடுத்து
மதிப்புரை வருமா
பதிப்புரை வருமா
அடுத்த பக்கங்களில்
அலுவலகத்தில் உங்கள்
அனுபவப் பாடங்களை
படிக்கக் காத்திருக்கிறோம்
நாங்கள் ..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.
நீக்குநன்றி நண்பர்களே.விரைவில் கட்டுரை வடிவில் பலப் பல அனுபவங்களுடன் உங்களைச் சந்திக்கிறேன்.
பதிலளிநீக்குவிஜி வெங்கடேஷ்
தொடர்ந்து எழுதுங்கள் விஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
ஆஹா! கவி வடிவிலேயே பதிவுகள்!! ஓ இது Trailer! முன்னோட்டமா! சரி அப்ப இனி அனுபவங்கள் வரும்னு உங்க பதிலில் பார்த்துவிட்டேன்!
பதிலளிநீக்குஅனுபவம் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்! தொடர்கிறோம் உங்கள் அனுபவங்களைத் தெரிந்து கொள்ள.
கீதா
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
நீக்குகவிதை வாயிலாக தொடக்கம் சிறப்பு.....
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.
நீக்குஅடுத்து தொடரவிருக்கும் பதிவிற்காக ஆவலுடன் காத்துக்கிறோம்.தலைப்பே செம அசத்தல், அப்ப அடுத்தது .....!
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நண்பரே.
நீக்குகிருஷ்ணமூர்த்தி தாம்பரம் .(தற்போது நவம்பர் வரை அமெரிக்காவில் வாசம் ) அருமையான நினைவு கோர்வை . முதல் முதலாக மனதிற்கு பிடித்த எதுவும் மறக்க முடியாது என்பதை கவிதை வரியில் உரை நடையாக ஆக்கி ஒரு அறுசுவை விருந்து படைத்த திறமை சாலிக்கு வாழ்த்துக்கள் .
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கிருஷ்ணமூர்த்தி சித்தப்பா.
நீக்குSuperb Intro (Teaser ) Viji
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி உஷா ஜி.
நீக்குவாசகம் அருமை.
பதிலளிநீக்குவிஜி அவர்களின் கவிதை அருமை. தொடரட்டும் அனுபவ கட்டுரை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.
நீக்குகவிதை நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குகவிதை உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.