அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட நிழற்பட உலா - சரஸ் ஆஜீவிகா மேளா 2024 - பகுதி ஆறு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து முன்னர் இந்தப் பக்கத்தில் சில பதிவுகள் வெளிவந்தது. அந்தப் பகுதிகளுக்கான சுட்டி கீழே!
கண்கவர் படங்களும் அதற்கேற்ற சில வரிகளும்
அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி இரண்டு
அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி மூன்று
அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி நான்கு
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.
குருவியண்ணா disturb பண்ணாதீங்க ராதாகிட்ட முக்கியமான விஷயம் சொல்லிக்கிட்டிருக்கேன்.
தெரியும்,அதான் பாக்கறேனே கிருஷ்ணா
*******
சே correct ஆ அம்மா வர நேரத்துல வெண்ணெய் பானை கவுந்து நம்மள கவுத்துடுத்து
*******
அம்மா நான் விளையாட ரயில், கார், கப்பல் மாதிரி
பொம்மைதான் வேணும்.இதை showcase ல வை.
*******
என்ன சீதா?
ஒண்ணுமில்லை என் சீப்பை தேடினேன் கிடைச்சுடுச்சு.
*******
நேத்து ஏன் வரலைன்னு கேட்டதுக்கு எனக்கு வந்த ஜுரம் என் கண்மணியான உனக்கு என் கண் வழியே pass ஆகிடுமொன்னுதான் வரலைன்னு சொன்ன பாரு, எப்படி கிருஷ்ணா உன்னால மட்டும் இப்படி கம்பி சுத்த முடியுது
*******
நீ குடுத்த ரோஜாப்பூ எடுப்பா தெரியணும்னு என்னை black & white ஆ எடுக்கச் சொல்லிட்டயா கிருஷ்ணா
*******
மூஞ்சூரண்ணா நான் குடுத்த லட்டுவ சாப்பிட்டுட்டு சமத்தா இருக்கணும்.நான் dance ஆடும்போது காலுக்கு குறுக்க குறுக்க வரப்படாது, ok?
மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
19 ஆகஸ்ட் 2024
படங்கள் அழகு. வாசகங்கள் புன்னகைக்க வைத்தன.
பதிலளிநீக்குபடங்களும் வாசகங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
எனக்குத் தோன்றியவைகளையும் கொடுக்கிறேன். எசப்பாட்டுக்கு மன்னிக்கவும்!
பதிலளிநீக்கு1. "நீயும் தலைல பூ வச்சிருக்கே... நானும் தலைல பூ வச்சிருக்கேன்... இந்தா ஸேம் ஸேம் கிஸ்...."
"ஓகே குடு... ஆனா உதட்டுல மட்டும் வேணாம்"
2. "ச்சே... வெண்ணெய்னு எடுத்து வாயில போட்டா தயிர்... அம்மா விவரமா வெண்ணெயை வேற எங்கேயோ ஒளிச்சு வச்சுருக்காங்க..."
3. "AI பொம்மை வாங்கிக்கொடுன்னா ஏதோ ஒரு பொம்மை வாங்கி கொடுத்திருக்கியேம்மா..."
4. "இவ்வளவு முடி இருந்தா பின்ன பேன் வராம என்ன செய்யும்? ராமா... ராமா..."
5. "கண்ணா உன்னைத் தேடுகிறேன் வா... காதல் குயில் பாடுகிறேன் வா..."
6. முடி பறக்கக் கூடாதுன்னு தலைல எதையோ சொருகி வச்சுக்கிட்டு பூ வை ன்னா நான் பூவை எங்கே வைக்க?"
ஹாஹாஹாஹா ஸ்ரீராம்! உங்க வரிகளும் சூப்பர்!
நீக்குநானும் பேன் வரி நினைச்சேன் உங்க வரி கண்ணுல பட்டிருச்சு அதனால கொடுக்காம விட்டுட்டேன்!!!!
கீதா
படங்களுக்கான உங்கள் வரிகளையும் ரசித்தேன் ஸ்ரீராம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
நிறைய முடி இருந்தால் பேன் - ஹாஹா... எனக்கும் தோன்றியது கீதா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
வாசகங்கள் இரசிக்க வைத்தது.
பதிலளிநீக்குவாசகங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கில்லர்ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
படங்கள் செம அழகு! யாரப்பா இப்படி அழகா வரையறது! ஓவியர் யாரோ? கிருஷ்ணர் குழந்தை செமையா கவர்கிறார்!
பதிலளிநீக்குஉங்க வரிகள் சிரிக்க வைத்துவிட்டன!
கீதா
ஓவியங்கள் AI உபயம் கீதா ஜி - இணையத்தில் இப்படி நிறைய ஓவியங்கள் கிடைக்கின்றன இப்போது. படங்களுக்கான வரிகளும் உங்களை கவர்ந்ததில் மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
4 - அட! உங்களுக்கு 6 pack எல்லாம் எடுக்க தெரியுமா!! தலைலயும் இருக்குமோன்னு பார்க்கிறேன்.
பதிலளிநீக்குகடைசி படம் - இத்துனூண்டா இருக்கற நீ கிட்ட இருந்தா என் கால் ல மிதிபட்டிடாம இருக்கணுமே கொஞ்சம் தள்ளி இருந்து நான் டான்ஸ் ஆடறத பாருப்பா....
கீதா
6 Pack - ஹாஹா... கடைசி படத்திற்கான வரிகளும் சிறப்பு கீதா ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
பொம்மை படம் - ...நல்ல காலம் அம்மாக்கு லேட்டஸ்ட் டெக்னாலஜி தெரியலை. ஐடியா.......இப்பலாம் க்ளோனிங்க், ஏ ஐ ந்னு இருக்காமே க்ளோனிங்க் ஏ ஐ ஒண்ணு வாங்கிட்டா அதை இங்க வைச்சுட்டு நான் பாட்டுக்கு ஜாலியா வெண்ணை திருடி ஃப்ரென்ட்ஸோட ஊர் சுத்திட்டிருக்கலாம்!!!
பதிலளிநீக்குகீதா
க்ளோனிங் ஐடியா - நல்லா இருக்கு கீதா ஜி. இதையே எல்லாரும் பயன்படுத்த துவங்கினால் என்ன ஆகும் என்று கற்பனை ஓடுகிறது!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
நன்றி.உங்கள் பங்களிப்பும் ரசிக்க வைக்கின்றது.keep it up.
பதிலளிநீக்குவிஜி.
நீங்களும் தொடர்ந்து எழுத வாழ்த்துகள் விஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
படங்கள் எல்லாமே அற்புதம்! தெய்வீகமும் அழகும் கலந்த கலவை!! ஓவியர் யாரோ தெரியவில்லை!
பதிலளிநீக்குஇது போன்ற படங்கள் AI மூலம் இப்போது நிறைய கிடைக்கின்றன. அழகாகவும் இருக்கின்றன மனோ சாமிநாதன் மேடம்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
வணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபதிவு அருமை. படங்கள் ஒவ்வொன்றும் மிக அழகாக இருக்கிறது. அதற்கேற்ப சகோதரி விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வாசகங்கள் படிக்க மிக அருமையாக உள்ளது. ஒவ்வொன்றையும் ரசித்துப்படித்தேன். சகோதரர் ஸ்ரீராம் அவர்களும், சகோதரி கீதாரெங்கன் அவர்களும் படத்திற்கேற்ற எழுதிய வாசகங்களும் சூப்பர். அனைவருக்கும் வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி. பதிவு உங்களுக்கும் பிடிக்கும் விதத்தில் இருந்ததில் மகிழ்ச்சி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
படங்கள் எல்லாமே மிக அழகாக இருக்கின்றன கூடவே அதற்கான வரிகள் பொலிவூட்டி சிரிக்கவும் வைத்தன.
பதிலளிநீக்குதுளசிதரன்
படங்களும் படங்களுக்கான வரிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி துளசிதரன் ஜி.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
வாசகம் அருமை.
பதிலளிநீக்குபடங்களும், அதற்கேற்ற வரிகளும் அருமை.
விஜி, ஸ்ரீராம், கீதா எழுதியது நன்றாக இருக்கிறது.
வாசகம், படங்கள், படங்களுக்கான வரிகள் உங்களுக்கும் பிடித்திருந்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.