செவ்வாய், 6 ஆகஸ்ட், 2024

அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி மூன்று - விஜி வெங்கடேஷ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட முப்பத்தி நான்கு வருடங்கள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து முன்னர் இந்தப் பக்கத்தில் இரண்டு பதிவுகள் வெளிவந்தது.  அந்த இரண்டு பகுதிகளுக்கான சுட்டி கீழே! 


கண்கவர் படங்களும் அதற்கேற்ற சில வரிகளும் 


அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி இரண்டு


அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.



தாமரை இலைல தண்ணி திவலை தான் ஒட்டாது, மழைத் தண்ணி கிழிச்சுட்டு உள்ள வரும் கிருஷ்ணா.


தெரியும், அவசரத்துக்கு இதுதான் கெடெச்சுது, குடை தொலஞ்சத பத்தி மூச்சு விடாத.


*******




இன்னித்து கதையை அளந்தது போதும் சாப்பிட வா கிருஷ்ணா.


இரும்மா இன்னும் பாதி கூட முடியல.


பரவாயில்ல எல்லாம் ரீல் தான அப்புறம் கேட்டுக்கறேன்.


*******



கிருஷ்ணா இரு நான் வந்து சாதம் ஊட்டறேன்.


பரவாயில்ல மா உனக்கு எதுக்கு சிரமம்.


வெண்ணெய்ப் பானை நீ நினைக்கிற இடத்தில இல்ல கிருஷ்ணா 


*******



உன் இசைக்கு இந்த உலகமே மயங்கும்போது நான் எம்மாத்திரம் கிருஷ்ணா.


நான் இன்னும் வாசிக்க வே ஆரம்பிக்கலை ராதா.


சும்மா ஒரு trial பாத்தேன் கிருஷ்ணா அப்புறம் சொல்றதுக்கு

*******



Swiggy வர முடியாத இடத்துக்கு கூட்டிண்டு வந்துட்டீங்களே.


அப்படியாவது அடுப்பு மூட்டி சமைக்கிறியானு பாக்கத்தான் சீதா.


காய் கனி போதும்ங்க டயட் ல இருக்கேன்.


*******



என்ன கிருஷ்ணா முகத்துல ஒரு தனி ஒளி? என்னைப் பார்த்ததுனாலயா?

நீ வேற, அது கேமராவோட flash light ராதா.


*******



இந்த colour lipstick உனக்கு அழகா பொருந்துது. 

என்ன, இந்த குலாப்ஜாமூனை எல்லாம் நீ சாப்பிட முடியாது. நான்தான் தின்னு தீர்க்கணும். 

அந்த ரவா லாடுவையும் இப்படி குடு.


மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…


நட்புடன்


விஜி வெங்கடேஷ்


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

6 ஆகஸ்ட் 2024


16 கருத்துகள்:

  1. படத்திற்கான கற்பனை வரிகளை ரசித்தேன். குறிப்பாக ராமசீதா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. கற்பனை வரிகள் சூப்பர். ரசித்து சிரித்தும்விட்டேன்,

    ஸ்விக்கி - ஹாஹாஹா

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  3. Camera flash light!!! லிப்ஸ்டிக்! சிரித்துவிட்டேன்!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  4. விஜி வெங்கடேஷ்6 ஆகஸ்ட், 2024 அன்று 12:35 PM

    உங்கள் அனைவரின் ரசிப்புத் தன்மைக்கு நன்றி.மிக அழகான படங்களை ரசிப்பதுடன் கூட கொஞ்சம் கிச்சு கிச்சு மூட்டும் முயற்சி!

    விஜி வெங்கடேஷ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி விஜி.

      நீக்கு
  5. கற்பனை வரிகள் ரசிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கில்லர்ஜி.

      நீக்கு
  6. படங்களும் விஜியின் கற்பனை வரிகளும் அருமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  7. கிருஷ்ணா படங்களும் வாசகங்களும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படங்களும் வாசகங்களும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. நகைச்சுவை கலந்த வரிகள் அருமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....