ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2024

நிழற்பட உலா - சரஸ் ஆஜீவிகா மேளா 2024 - பகுதி நான்கு


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


கடந்த மூன்று வாரங்களாக ஞாயிற்றுக் கிழமைகளில் தலைநகர் தில்லியின் ஒரு பகுதியான நோய்டா பகுதியில் நடந்த சரஸ் ஆஜீவிகா மேளாவில் எடுத்த சில நிழற்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டது நினைவில் இருக்கலாம். அந்த பதிவுகளுக்கான சுட்டி கீழே…


சரஸ் ஆஜீவிகா மேளா - 2024 -  பகுதி ஒன்று 


சரஸ் ஆஜீவிகா மேளா - 2024 -  பகுதி இரண்டு


சரஸ் ஆஜீவிகா மேளா - 2024 -  பகுதி மூன்று


மேலே தந்திருக்கும் மூன்று பகுதிகளை இதுவரை வாசிக்கா/பார்க்காவிட்டால் பார்த்து விடுங்களேன்.   இந்த வாரம் இந்த மேளாவில் என்னைக் கவர்ந்த ஒரு விஷயம் பற்றி பேசுவோம். ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் தோல் பொம்மலாட்டம் மிகவும் பிரபலம்.  பதப்படுத்தப்பட்ட விலங்குகளின் தோலில் அழகழகாய் வண்ணம் தீட்டி பொம்மலாட்டத்திற்குத் தேவையான பொம்மைகளை செய்து அதனைக் கொண்டு பல்வேறு புராணக் கதைகளை பார்ப்பவர்கள் ரசிக்கும் வண்ணம் சொல்லும் கலை இன்றைக்கும் இந்த மாநிலங்களில் இருக்கிறது.  இந்த மாநிலங்களிலிருந்து வந்திருந்த கலைஞர்கள் தங்களது கைவண்ணத்தில் உருவான பொம்மைகளை காட்சிக்கு வைத்திருந்ததோடு விற்பனைக்கும் வைத்திருந்தார்கள். அங்கேயே வரைந்து கொண்டும் இருந்தார்கள். பார்ப்பதற்கே அத்தனை அழகு அந்த பொம்மைகள்.  மிகவும் பொறுமையுடன் வண்ணம் சேர்த்து தோலில் அழகழகாய் ஓவியம் வரைந்து விற்பனை செய்கிறார்கள்.  அதிலேயே மின்விளக்குகளுக்கான Shade போன்றவையும் தயாரித்து விற்கிறார்கள்.  அப்படியான கலைஞர்களுடன் பேசிக் கொண்டிருந்ததில் அதில் இருக்கும் உழைப்பும், அவர்கள் அதில் ஈடுபடும் அதிக அளவு நேரமும் தெரியவந்தது.  இப்படியான கலைஞர்களிடம், அவர்களை மதித்து பேசினால் அப்படி ஒரு மகிழ்ச்சி அவர்களிடம்.  முகத்தில் புன்னகையுடனும் மகிழ்ச்சியுடனும் தங்களைப் பற்றி அவர்கள் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்கவே நமக்கும் அவர்களது மகிழ்ச்சி ஒட்டிக் கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை. 


அவர்களிடமிருந்து ஒன்றிரண்டு தோல் பாவைகளை என்னுடன் வந்திருந்தவர்கள் வாங்கிக் கொண்டார்கள்.  எனக்கு அந்த தோல் பாவைகள் தேவைப்படாது என்பதால் வாங்கிக் கொள்ளவில்லை. ஆனாலும் அவர்களுடன் பேசியதிலேயே மகிழ்ச்சி அடைந்தார்கள். அவர்களை படம் எடுத்துக் கொண்டபோது அவர்கள் முகத்தில் அப்படி ஒரு சிரிப்பும் உற்சாகமும்!  இந்த நிகழ்வில் எடுத்த மேலும் சில நிழற்படங்கள்,   ஒரு உலாவாக இதோ இந்த வார ஞாயிறு அன்றும்! 






















******


இந்த வாரத்தின் நிழற்பட உலா பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லி

4 ஆகஸ்ட் 2024

20 கருத்துகள்:

  1. ஆம் ஜி, இப்படியான கலைஞர்களிடம் நாம்.பேசினால். அவர்களுக்கு மிகவும்.மகிழ்ச்சியாக இருக்கும். அது அவர்களுக்கு மிகுந்த ஊக்க்கம், உற்சாகம்.அளிக்கும் டானிக்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  2. அற்புதமான கலை. அழகாக இருக்கின்றன. ராமாயணம் சொல்லும் தோல் செய்யப்பட்ட பொம்மைகள்? அசாத்திய பொறுமையும் ஈடுபாடும் கைத்திற னு ம் தெரிகிறது.

    எல்லா படங்களும் சூப்பர்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.

      நீக்கு
  3. நுணுக்கமான ஓவியத்திறனும் அசத்தும் வண்னக்கலவைகளுமாய் அத்தனை புகைப்படங்களும் அப்படி ஓர் அழகு!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

      நீக்கு
  4. அழகிய படங்கள். கடந்த வாரம் ஒன்றில் வந்த படம் ஒன்று (நீங்கள் நிற்பது) ரிப்பீட் போல தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கோணம் கொஞ்சம் வேறுபட்டு இருக்கும் என நினைவு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  5. முதன்முறையாக பார்க்கிறேன்
    ,மகிழ்ச்சி,நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நண்பரே.

      நீக்கு
  6. ஆஹா ஆஹா அத்தனையும் அழகு !!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நண்பரே.

      நீக்கு
  7. வாசகம் அருமை
    அழகான தோல் பாவை சித்திரங்கள் . படங்கள் எல்லாம் அழகாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  8. பெயரில்லாமல் வந்து இருக்கிறது கடைசி கருத்து. என் கருத்து. அலைபேசி மூலம் பதிவு செய்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  9. கலைப் பொருட்கள் மற்றும் பொம்மலாட்டத்திற்கான தோல் பாவைகள் யாவும் அழகு. Lamp shade மிகப் பிடித்தது. கலைஞர்களை நீங்கள் பாராட்டி மகிழ்வித்தது சிறப்பு. வாசகம் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி ராமலக்ஷ்மி.

      நீக்கு
  10. கைவண்ணங்கள் அழகாக இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு வழி பகிர்ந்து கொண்ட படங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மாதேவி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....