அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட நிழற்பட உலா - சரஸ் ஆஜீவிகா மேளா 2024 - பகுதி ஐந்து பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
வாட்ஸப்பில் வரும் அழகிய வண்ணச் சித்திரங்களுக்கு தகுந்தாற்போல சில வரிகளை முயன்றது குறித்து முன்னர் இந்தப் பக்கத்தில் மூன்று பதிவுகள் வெளிவந்தது. அந்தப் பகுதிகளுக்கான சுட்டி கீழே!
கண்கவர் படங்களும் அதற்கேற்ற சில வரிகளும்
அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி இரண்டு
அழகிய படங்களும் சில வரிகளும் - பகுதி மூன்று
அந்த வரிசையில் மேலும் சில படங்களும் அதற்கு விஜி வெங்கடேஷ் அவர்கள் எழுதிய வரிகளும் உங்கள் பார்வைக்கு! எப்படி இருக்கிறது இந்த முயற்சி என்று சொல்லுங்களேன்! படம் பார்த்து உங்களுக்குத் தோன்றும் எண்ணங்களையும் எழுதுங்களேன். ஓவர் டு விஜி வெங்கடேஷ் - வெங்கட், புது தில்லி.
ஹும் 3 மணிநேரம் ஆச்சு இன்னும் உன்னோட ஃபோட்டோ ஷூட் முடியல. பசிக்குது சீதா
*******
போதும் கிருஷ்ணா போதும் இனிமே நேத்து எங்க போயிருந்தன்னு கேக்க மாட்டேன். ரொம்ப சிரமப்படாத. முடியல.
*******
நீ pink colour ல புடவை, பூ எல்லாம் வெச்சிருக்கறதுனால அதே colour ல தான் மருதாணி சிவக்கணும்னு சொல்றது சரியில்ல ராதா
*******
இந்தப் படுக்கையில் படுத்துண்டு சிரிச்சா மாதிரி எப்படித்தான் pose குடுக்க முடியுதோ உங்களால
*******
இந்த நகையை எல்லாம் அவுத்து வெச்சிட்டு நிம்மதியா தூங்கலாம்னு உள்ள போனா அம்மா இன்னையோட வெண்ணெய் கதையை கேட்டு பேஜார் பண்ணுவா.பேசாம இப்படியே தாச்சிக்க வேண்டியதுதான்
*******
கன்னுகுட்டி செல்லம், கிருஷ்ணன் எங்கல்லாம் போறான்னு பாத்துண்டு வந்து சொல்லு என்ன?
எனக்கு ரொம்ப தேவை! ஆள விடு!
*******
நன்னா முங்கிக் குளிப்போம்,எப்படி நனைஞ்சேன்னு கேட்டா மழை மேல பழியப் போடவேண்டியதுதான்
மீண்டும் வேறு ஒரு பதிவு வழி சந்திப்போம்…
நட்புடன்
விஜி வெங்கடேஷ்
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
புது தில்லி
12 ஆகஸ்ட் 2024
படத்துக்கு பொருத்தமான வரிகளை படித்து ரசித்தேன்.
பதிலளிநீக்குபடங்களுக்கான வரிகள் தங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம்.
நீக்குசிரித் து விட்டே ன். பொருத்தமான வரிகள். ரசித்தேன்.
பதிலளிநீக்குகீதா
படங்களுக்கான வரிகள் உங்களையும் ரசிக்க வைத்திருக்கிறது - மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குரொம்பவும் அழகான படங்கள்! அதுவும் அந்த கடைசி படம்- அந்த சிரிப்பு எத்தனை அழகு!!
பதிலளிநீக்குபடங்கள் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி மனோ சாமிநாதன் மேடம்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇன்றைய பதிவு அருமை. அழகான படங்களும், அதற்கு பொருத்தமாக வாசகங்களும் ரசித்துப்படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
அருமையாக பதிவுகளை தொகுத்துத் தரும் சகோதரி விஜி வெங்கடேஷ் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். பாராட்டுக்கள். நன்றி சகோதரி.
நீக்குநன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குபடங்களும் அதற்கான விஜி அவர்களின் வரிகளும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
விஜி அவர்களை வாழ்த்திய உங்களுக்கு மனம் நிறைந்த நன்றி கமலா ஹரிஹரன் ஜி.
நீக்குவாசகம் அருமை.
பதிலளிநீக்குபடங்கள் அழகு, அதற்கேற்ற வரிகள் மேலும் அழகு.
வாசகமும் பதிவும் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கோமதிம்மா.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
படங்களையும் வாசகங்களையும் படித்து ரசித்த & பாராட்டிய அனைவருக்கும் நன்றிகள்.
பதிலளிநீக்குதொடர்ந்து எழுதுங்கள்...
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி விஜி.